வன்னியில் இருந்து வவுனியாவுக்கு வரும் தமிழர்கள் கைதிகள் போன்று சுற்றிவர முள்ளுக்கம்பிகளால் அடைத்து வைக்கப்படுகின்றனர்.

வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களை சிறிலங்கா படையினர் வவுனியாவிலுள்ள பாடசாலைகளை நலன்புரி மையங்களாக மாற்றி தங்க வைக்கப்படுகின்றனர்.
அங்குள்ள மக்கள் பல சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் வெளியில் சென்று வரவோ தமது உறவினருடன் தொடர்பு கொள்ளவோ முடியாமல் இருக்கின்றனர்.

அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதி சிறை கைதிகள் போன்று சுற்றிவர முள்ளுக்கம்பிகளால் அடைக்கப்பட்டுள்ளது. கம்பிகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளதாக நம்பத்தகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.









0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.