இலங்கைப்பிரச்சினை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் - பான் கீ மூன்
இலங்கை சமூகத்தில் மேலும் பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்கும் முகமாக அவசரத்தேவையாக பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ முன் கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத்துறை பிரதிச்செயலாளர் ஜோன் ஹோம்ஸ் இலங்கைக்கு சென்று திரும்பியுள்ளார் வன்னியில் சுமார் இரண்டாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் காப்பகம் தெரிவித்துள்ளது. ஐரொப்பிய ஒன்றியம் இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றை கோரியுள்ளது. இந்தநிலையில் இலங்கையி;ல் என்ன முனைப்புகள் மேற்கொள்ளப்படவேண்டும் என நேற்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே பான் கீ மூன் இந்த கோரிக்கையை விடுத்தார்.
இலங்கைக்கு ஜோன் ஹோம்ஸ் மேற்கொண்ட விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தநிலையில் இரண்டு தரப்பு மோதல்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மோதல் நிறுத்தப்பட்டு தேவையற்ற பொதுமக்களின் இழப்புகளை தவிர்க்க்கப்படவேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என பான் கீ மூன் தெரிவித்தார்
அத்துடன் இலங்கையின் அனைத்து தரப்பினரும் அரசியல் தீர்வு ஒன்றுக்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் பான் கீ மூன் குறிப்பிட்டார்.
தலைப்புகள்
மனித உரிமைகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.