தமிழர்கள் படுகொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர்கள் படுகொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மெனிக் பாமில்

இருமருங்கிலும் அச்சிடப்பட்ட பதாகைகளுடன் நின்றுகொண்டிருந்த தமிழ் பிள்ளைகள் "தாய் நாட்டிற்கு' ஐ.நா. வின் பான் கீ மூனை வரவேற்பதற்கு அணிவகுத்து நின்றனர். சனிக்கிழமை இலங்கைக் கொடிகளுடன் நின்று கொண்டிருந்த அந்தச் சிறுவர்கள் உச்சஸ்தாயில் பாடினர். "பான் கீ மூன், பான் கீ மூன்' என்று அவர்கள் பாடினர். அதேசமயம், அவர்களில் பலர் பரிதாபமான நிலையில் காணப்பட்டனர். இந்தப் பிள்ளைகள் ஐ.நா. நிதியுதவியுடனான முகாம்களில் தமது குடும்பங்களுடன் கொண்டு வரப்பட்டவர்கள். அவர்களை புன்சிரிப்புடன் பான் கீ மூன் பார்த்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இராணுவ மயமாக்கப்பட்ட முகாமிற்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார் என்று அவருடன் வருகை தந்த இன்னர் சிற்றி பிரஸின் மத்யூ ரஸல் லீ மெனிக்பாமில் இருந்து செய்தி ஆய்வை எழுதியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்லப்பட்டார். அங்கு கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த முதியவர்கள் வலியினால் துடித்துக்கொண்டிருந்தனர். இலையான்கள் அவர்களுக்கு மேலாகப் பறந்துகொண்டிருந்தன. பான் கீ மூன் வளைந்து ஒரு பெண்ணின் கரத்தைப் பிடித்தார். அதேசமயம், பக்கத்திலிருந்த பெண்ணொருவர் இறந்திருந்தார். இந்தக் கொடூரமான பயணத்தின் போது வந்திருந்த புகைப்படப் பிடிப்பாளர் ஒருவரும் கவனிக்காத விதத்தில் படம் பிடித்து விட்டார். பான் கீ மூன் பி.பி.சி. க்கு பேட்டி கொடுத்தார். நாங்கள் இன்னும் போக வேண்டிய தேவையுள்ளதென்று பாதுகாப்பு அதிகாரி மெதுவாகக் கூறினார்.

அவர் "ஊடகங்களுடன் பேசிக்கொண்டிக்கிறார்' என்று பான் கீ மூனின் உதவியாளர் பதிலளித்தார். இப்போது நாங்கள் போவதற்கு இந்த மக்கள் வெளியேறியிருந்த வெற்றுநிலம் காத்துக்கொண்டிருக்கக் கூடும். அடுத்ததாக கணவர் ஒருவர் ஊடகத்துறையினரை நிறுத்தி தனது மனைவியின் தொடையைக் காட்டினார். ஆட்லறி ஷெல்லினால் துண்டாடப்பட்டிருந்தது. எமக்கு உதவி தேவையென்று அவர் வேண்டிக்கொண்டார். அவரின் பெயரைக் குறிப்பிடுவது அதிக பிரச்சினைகளுக்கு இடமளிக்கக்கூடும். முற்கம்பி வேலிகளினூடாக நிருபர்களுக்கு ஒரு பெண்ணொருவர் பேட்டி கொடுத்தார். அதனை நியூயோர்க்கைச் சேர்ந்த ஐ.நா. அதிகாரியொருவர் தமிழில் மொழி பெயர்த்தார். அவர் தமிழில் பேசக்கூடியவர்.

அந்தப் பெண் தனது பெயரைக் கூறினார். தாங்கள் முகாமை விட்டு வெளியே போக முடியாது என்று முறைப்பாடு செய்தார். பின்னர் அந்தப் பெண்ணையும் அங்கிருந்த கூட்டத்தினரையும் திரும்பிப் போகுமாறு தெரிவிக்கப்பட்டது. உங்களது இறுதிப் பெயர் என்ன என்று அந்தப் பெண்ணிடம் நிருபர் ஒருவர் கேட்டார். அதனைக் கூறுவதற்கு முன் அப்பெண் கவலையுடன் பார்த்தார். அதனால், அதனை இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிடவில்லை.

இந்த முகாம்களில் ஐ.நா.வின் பங்களிப்பு என்ன? பான் கீ மூனினதும் ராஜபக்ஷவினதும் ஐ.நா. படங்களை இலங்கை அரசாங்கம் பிரசார பதாகைகளுக்கு உபயோகிக்க ஏன் அனுமதியளிக்கப்பட்டது. தனது பெயரை பலவந்தமாகப் பாடுவதற்கு பான் கீ மூன் எவ்வளவு தூரம் பிரதிபலிப்புகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்?

சனிக்கிழமை காலை பான் கீ மூனிற்கும் அவரது அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து ஒரு வழி மார்க்கமாக விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. சந்திப்பறையில் இரண்டு மின் விசிறிகள் மெதுவாகச் சுற்றிக்கொண்டிருந்தன. ஆயுதம் தரித்த பாதுகாவலர்கள் நின்று கொண்டிருந்தனர். பான் கீ மூனிற்கும் அவரது உயர்மட்ட மனிதாபிமான விவகார அதிகாரிக்கும் மூவர் இடம்பெயர்ந்த மக்களுக்காக தாங்கள் எவ்வளவைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றித் தெரிவித்தார்கள்.

மேற்குலகிலிருந்து உதவி பற்றாக்குறையாக இருப்பதாக அவர்கள் கூறினர். இந்தியா மட்டும் மருத்துவ உதவி வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சில நீல நிறக்கூடாரங்களைக் காட்டி அவை சீனாவால் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்திற்கு நாம் உதவி செய்ய வேண்டியிருக்கிறது என்று பான் கீ மூன் பின்னர் தெரிவித்தார். விடயங்களை ஒருவழிமார்க்கமாகத் தெரிவித்த போது நாங்கள் கேள்விகளைக் கேட்க முடியுமா என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டுக்கொண்டது. பான் கீ மூனின் அதிகாரிகள் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால், அரசாங்கம் தனது விடயங்களை கூறிக்கொண்டிருந்தது. வங்கிக் கிளைகள் , புத்தக விற்பனை பற்றி தெரிவித்தனர்.

பின்பு மண்டபத்தை விட்டு வெளியேறுமாறும் மினி பஸ்ஸுக்குப் போகுமாறும் இன்னர் சிற்றி பிரஸுக்கு கூறப்பட்டது. வெளியே வைத்திருந்த கமராக்களை உள்ளே வைக்குமாறு புகைப்படப் பிடிப்பாளர்களுக்கு படைவீரர்கள் கூறினர். முள்ளுக்கம்பி வேலிக்குள்ளே நின்றவர்களை ஒருவர் அணுகி கதைக்க முயன்றார். அவ்வாறு செய்ய வேண்டாமென ஐ.நா. பிரதி நிதியொருவர் கூறினார். இது சில சமயம் புத்திசாலித்தனமானதாக பாதுகாப்பான விடயமாகவும் இருக்கக்கூடும். ஆனால், ஐ.நா. ஏன் இந்த முகாம்களுக்கு நிதியுதவி அளிக்கின்றது?

வன்னியில் நேற்றும் (புதன்கிழமை) சிறிலங்கா படையினரின் எறிகணை தாக்குதலில் 13 தமிழர் பலி; 36 பேர் காயம்

தகவல் : தமிழ்வின்
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று புதன்கிழமை நடத்திய எறிகணை தாக்குதல்களில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை, வன்னியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொல்லப்பட்ட தமிழர்களின் உடலங்கள் தொடர்ந்து வந்து குவிவதாகவும் அங்கிருந்து கடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



வன்னி பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறிலங்கா படையினரின் பரவலான எறிகணை வீச்சுக்கள் காரணமாக படுகொலையான 22 தமிழர்களின் உடலங்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரத்துறை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேற்று புதன்கிழமை நான்காவது நாளாக நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலால் மருத்துவமனையின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டு விட்டன.

மருத்துவமனையின் முதன்மைப் பகுதிகளான வெளிநோயாளர் பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதிகள் என்பன எறிகணைத் தாக்குதல்களில் நாசமாகிவிட்டன. இதனால் அந்த மருத்துவமனை இனி இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க குழுப் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நிலைகொண்டிருந்த போதிலும் கூட மருத்துவமனை மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளைத் தாக்கக்கூடாது என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழு மற்றும் அனைத்துலக நாடுகள் வலியுறுத்திய பின்னரும் சிறிலங்கா படையினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

300 மீற்றர் பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த பின்னரும் மருத்துவமனை மீது தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தாக்குதல்களின் போது, ஏற்கனவே சிறிலங்கா படையின் எறிகணைத் தாக்குதலில் காயமடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். அ.வசந்தகுமார் (வயது 26) மற்றும் ப.மதன்ராஜ் (வயது 19) ஆகிய இருவருமே படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர். அறுவைச் சிகிச்சைக் கூடம் மீது வீழ்ந்த சிறிலங்கா படையின் பீரங்கி குண்டிலேயே இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த ஜனவரி 30 ஆம் நாள் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் படுகாயமடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமலச்செல்வன் கஸ்தூரி (வயது 26) நேற்றைய தாக்குதலின் போது அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

அதேநிலையில் வன்னியில் நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினரின் இந்த எறிகணை வீச்சுக்களின் போது காயமடைந்த பெருமளவிலான பொதுமக்கள் ஆங்காங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திரபுரம் மருத்துவமனைக்கு நேற்று மாலை 5:00 மணி வரையிலும் காயமடைந்த 44 பொதுமக்களும், உடையார்கட்டு மருத்துவமனைக்கு 14 பொதுமக்களும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஏராளமானோர் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதில் ஒரு வயதுடைய குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும், அந்த குழந்தையின் தாய் முன்னரே எறிகணை வீச்சில் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இறந்துவிட்டார். அவரது மற்றுமொரு குழந்தையும் ஏற்கெனவே பீரங்கி தாக்குதலில் இறந்து விட்டது எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அம்பலவன்பொக்கணை பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலின் போது 4 சிறுவர்கள் உட்பட 10 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 36 பேர் காயமடைந்துள்ளனர்.

சா.சுதாஸ் (வயது 05)
பாலசேகரம் கஜேந்திரன் (வயது 10)
பாலசேகரம் கஜானா (வயது 13)
செல்வநாயகம் கிளி (வயது 31)
சின்னப்பு இராசமலர் (வயது 56)
சின்னப்பு கெங்காதரன் (வயது 45)
பொ.ஜீவமலர் (வயது 53)
ஆகியோரே படுகொலை செய்யப்பட்டோர் ஆவர்.

கொல்லப்பட்ட மேலும் மூவரின் உடலம் சிதறிக் கிடப்பதினாலும், அவர்கள் இடம்பெயர்ந்து வந்தவர்களாய் இருப்பதனாலும் அவர்களின் பெயர் விபரங்களை உடனடியாக பெறமுடியவில்லை. அத்துடன்

மதன் மபிசன் (வயது 04)
தமிழ்மாறன் சர்மிகா (வயது 09)
கெங்காதரன் பாலதரணி (வயது 06)
கெங்காதரன் தர்மேஸ் (வயது 08)
சிவநேசன் (வயது 30)
த.சாந்தநேசன் (வயது 37)
கோ.மகேந்திரம் (வயது 47)
மகேந்திரம் இராசமலர் (வயது 47)
சௌந்தரராசா சறோஜினிதேவி (வயது 45)
அன்ரன் மேரிமலர் (வயது 30)
புஸ்பராசா ரேணுகாதேவி (வயது 28)
செல்வராசா புஸ்பராஜா (வயது 30)
தினகரன் சின்னத்தம்பி (வயது 55)
வல்லிபுரம் கோமதி (வயது 30)
தமிழ்மாறன் மேனகா (வயது 29)
தர்மராசா வாகீசன் (வயது 23)
யோசப் டில்லிமலர் (வயது 63)
செபமாலை விக்ரர் (வயது 72)
சின்னத்துரை தனராசா (வயது 50)
தனராசா புஸ்பராணி (வயது 45) ஆகியோர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.