ம.தி.மு.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ம.தி.மு.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஈழத்தமிழர்களை காக்க கள்ளத்தோணியில் செல்வோம்: கலைஞருக்கு வைகோ பதில்


முதல்வர் கருணாநிதி நேற்று முன் தினம் இலஙகை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பற்றி விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு மதிமுக பொதுச்செயலாளரும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கியஸ்தருமான வைகோ பதில் அளித்து பேசியுள்ளார்.

அவர், ‘’வீரமானவர்கள் என்றால் கள்ளதோணியில் செல்லுங்கள் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அவசியம் இருந்தால் ஈழத்தமிழர்களை காக்க செல்வோம்.

முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் இப்படி பேசலாமா? வரும் தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து நாங்கள் பிரசாரம் செய்வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.


பிரதமர் பொய் சொல்வது அவமானமாக இருக்கிறது:வைகோ
டெல்லியில் உள்ள ஜெர்மனி தூதரகத்தின் அரசியல் பிரிவு கவுன்சிலர் எரிக்கோசைல், டெல்லியில் உள்ள சுவீடன் நாட்டு தூதரகத்தின் அரசியல் பிரிவை கவனிக்கும் 2-வது நிலை செயலாளர் ஆஸ்கார் ஸ்கைட்டர் ஆகியோர் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேற்று சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின் மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.\


அப்போது, ‘’இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் ராஜபக்சே எடுத்து வருகிறார். இதை கண்டித்து ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்தார். ஆனால் இலங்கை அரசு அவரின் கண்டனத்தை மறைத்து விட்டது.

வாஜ்பாய் அரசு இருந்தபோது இலங்கைக்கு ஆயுதங்களையோ, ராணுவத்தையோ அனுப்பவில்லை. தொடர்ந்து 5 ஆண்டுகாலம் இந்த நிலை நீடித்தது.

ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அரசு வந்த போது தான் இலங்கைக்கு ராணுவ உதவிகள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் அரசு தமிழ் மக்களுக்கு கெடுதல் விளைவித்துள்ளது.அவர்களின் இந்த துரோகம் தேர்தலில் முக்கிய பிரச்சனையாக இருக்கும்.

போரை நிறுத்துங்கள் என்று இதுவரை இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம், பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியது இல்லை. ஆனால் இதுகுறித்து பிரதமர் பொய் சொல்வது அவமானமாக இருக்கிறது.

இலங்கையில் செத்து விழும் ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் இந்திய அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று இந்திய அரசு எங்களை வற்புறுத்தவில்லை என்று இலங்கை மந்திரி கூறியிருக்கிறார்.

ஆனால் போரை நிறுத்த இலங்கை அரசுடன் பேசி வருவதாக பிரதமர் கூறியிருக்கிறார். ஆனால் இந்த நிமிடம் வரை இலங்கையில் போர் நிறுத்தப்படவில்லை’’ என்று தெரிவித்தார்.

போர் நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தினால் 100நாடுகள் வலியுறுத்தும்: வைகோ


இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
தமிழகம், புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் செலுத்த உண்டியலில் நிதி செலுத்தினர்.

சென்னையில் ஜெயலலிதா உண்ணாவிரத மேடைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்து அங்கே வைக்கப்பட்டிருந்த உண்டியலில் 5லட்சம் நிதி செலுத்தினார்.

பின்னர் அவர் பேசியபோது,’’அலைபாயும் கடலுக்கு அப்பால் கண்ணீர் சிந்தும் ஈழமக்களுக்கு ஆதரவு அளிக்காத மத்திய,மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உண்ணாவிரதம் இருந்து வரும் என் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு நிமிடமும் கொத்துயிரும் குலையுயிருமாக ஆகிக்கொண்டிருக்கும் நம் தமிழர்களுக்கு ஆதரவாக அதிமுகவினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

ஈழத்தமிழரின் இருட்டிலே ஒரு வெளிச்சம் வருகிறது. எங்களுக்கு நம்பிக்கை வருகிறது’’ என்று தெரிவித்தார்.

‘’ இந்தியா போர் நிறுத்தத்தை வலியுறுத்தினால் உலகில் 100நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும்.

ஆனால் இந்தியாவே போர் நிறுத்தத்தை வலியுறுத்தாத போது மற்ற நாடுகள் எப்படி போர் நிறுத்தத்தை வலியுறுத்தும்” என்று தெரிவித்தார்.

‘’வாஜ்பாய் இந்திய பிரதமராக இருந்த போது அவரிடம் இலங்கை அரசு பணம் கொடுத்தால் ஆயுத உதவி அளிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பணம் கொடுத்தாலும் ஆயுதம் கொடுக்க மாட்டேன் என்றார். அதன்படியே நடந்து கொண்டார்.

ஆனால் இந்த காங்கிரஸ் அரசு ஆயுத உதவி அளிக்கிறது. 5 ரடார்கள் கொடுத்திருக்கிறது.

போரை நிறுத்துங்கள் என்று உலக நாடுகள் எல்லாம் சொல்கிறது.

இந்திய அரசு ஏன் சொல்லவில்லை. இந்திய அரசுதானே ஈழத்தமிழர்கள் மீது போரை நடத்துகிறது. பின்பு எப்படி போரை நிறுத்தச்சொல்ல முடியும்’’ என்று தெரிவித்தார்.
’’ஈழத்தமிழர் பிரச்சனைக்கு யார் காரணம்? இந்திய அரசுதான் காரணம். இந்தியாவில் ஆட்சி நடத்தும் கட்சி காரணம். அக்கட்சியிலே கூட்டணி வைத்திருப்போர் காரணம்.

ஈழத்தமிழர் படுக்கொலைக்கான கூட்டுச்சதியில் கருணாநிதிக்குதான் முதலிடம்’’ என்று தெரிவித்தார்.

வைகோ வின் வன்னி பயணம்

தன்னை சிறையில் அடைத்ததை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்: மதிமுக தொண்டர்களுக்கு வைகோ வேண்டுகோள்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தன்னை சிறையில் அடைத்ததை கண்டிக்கும் வகையில் எந்தவிதமான போராட்டங்களிலும் கட்சியினர் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக தூத்துக்குடியில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 2 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 195 பேரை பொலிசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில்,

மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தனது குடும்பத்தினரை கோடீஸ்வரர்கள் ஆக்கியும், ஆட்சி அதிகார சுயநலவெறிக்கு ஆளாக்கியும், தமிழக மக்களை வஞ்சித்து வருகின்ற கருணாநிதி இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்யும் சிங்கள அரசுக்கு ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கிடும் காங்கிரஸ் சதித்திட்டத்தின் பங்குதாரராக ஆகிவிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவை இழந்துவிட்டால் தமிழகத்தில் ஆட்சியை பறிகொடுக்கும் நிலை ஏற்படும் என்று பயந்து அந்த காங்கிரஸ் கட்சிக்கு பாதபூஜை செய்வதற்கும் தயாராகிவிட்டதால் காங்கிரஸ் மேலிடத்தை திருப்தி படுத்துவதற்காக என்னையும், தோழர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கச் செய்து விட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் நமது கதவைத் தட்டுகிறது. ஈழத்தமிழர்களுக்கு மன்னிக்க இயலாத துரோகத்தைச் செய்த காங்கிரசையும், திமுகவையும் படுதோல்வி அடையச் செய்யவும், நாம் அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யவுமான கடமையும் நம் கண் முன்னால் காத்திருக்கிறது.

எனவே நானும், தோழர்களும் பிணையில் வெளிவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மதிமுகவினர் என்னைச் சிறையில் அடைத்ததை கண்டிக்கும் வகையில் எவ்வித போராட்டத்தில் ஈடுபட்டாலும் கருணாநிதி அடக்குமுறைகளை ஏவுவார். அதற்கு இடம் கொடுக்காத வகையில், எவ்விதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

பிரபாகரனை பிடித்தால் இலங்கையே அழியும்: நாஞ்சில் சம்பத் ஆவேசம்

இந்திய அரசை வழிநடத்தும் காங்கிரஸ்காரர்களின் ஒரே நோக்கம் பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்பதுதான். தவிர இலங்கை தமிழர்களை பற்றி கவலைப்படவில்லை. பிரபாகரனை பிடித்தால் இலங்கையே அழியும். அதில் சந்தேமே இல்லை. மதி.மு.க. கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.


இலங்கை தமிழர் இனப்படுகொலையை கண்டித்து மதி.மு.க. சார்பில் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி தமிழ் ஈழத்தை தவிர வேறொன்றும் சரியான தீர்வாக இருக்க முடியாது. உலக நாடுகள் அனைத்தும் போரை நிறுத்துங்கள் என்று வலியுறுத்துகின்றன. ஆனால் இந்தியா மட்டும் நேரடியாக போரை வலியுறுத்துமாறு சொல்லவில்லை.

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் பேசவே மறுக்கிறார். போரை நிறுத்துமாறு மத்திய அரசை நிர்ப்பந்திக்க கருணாநிதியால் முடியவில்லை. ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அடிக்கடி புலம்புகிறார். நாங்களோ (ம.தி.மு.க.), அல்லது பா.ம.க., கம்யூனிஸ்டுகள் நினைத்தாலோ தி.மு.க. அரசை கவிழ்க்க முடியாது. காங்கிரஸ் நினைத்தால் மட்டும்தான் முடியும். அவர்கள் அப்படி நினைப்பதாக தெரியவில்லை.

இந்திய அரசை வழிநடத்தும் காங்கிரஸ்காரர்களின் ஒரே நோக்கம் பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்பதுதான் தவிர இலங்கை தமிழர்களை பற்றி கவலைப்படவில்லை. பிரபாகரனை பிடித்தால் இலங்கையே அழியும். அதில் சந்தேமே இல்லை.

மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த கோட்சே சுட்டுக் கொன்றவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒருவன் செய்த தவறுக்காக ஒரு இயக்கத்திற்கு தடை விதிப்பது சரியல்ல என நினைத்த அப்போதைய காங்கிரஸ் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்க அரும்பாடுபட்டார். அதேபோல் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க இன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முயற்சி எடுப்பாரா?

அங்கே ஒரு இனம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே இருப்பவர்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள் என்கிறீர்கள். ஆயுதத்தை கீழே போட்டு விட்டால் அடுத்து விநாடியே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விடுவார்கள்.

விரைவில் இலங்கையில் தனி நாடு பிறக்கும். அதன் பெயர் தமிழ் ஈழமாக இருக்கும். தமிழின தலைவனாக பிரபாகரன் இருப்பார். தமிழ் ஈழம் வெல்லட்டும் என்று பேசினார்.