பத்திரிக்கை செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்திரிக்கை செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள மற்றும் ஒரு போர்க்குற்றக் காட்சிகள்!
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட காணொளியை வெளியிட்ட சனல் - 4 தொலைக்காட்சி, அவ்வாறு இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் இலங்கை படைச்சிப்பாய் ஒருவரினால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட காணொளி தொடர்பாக மேலும் ஆதாரங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரினதும் போர் முனையில் கடமையிலிருந்த இராணுவ தளபதிகளில் ஒருவரினதும் கருத்தினையும் சனல் - 4 தொலைக்காட்சி மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.
"எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்" - என்று படுகொலைகளை மேற்கொண்ட இராணுவ சிப்பாய் ஒருவர் சனல் - 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார் என்றும் - "விடுதலைப்புலிகளின் முக்கியமானவர்கள் எவரையும் வைத்துப் பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லாததால், அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்கவேண்டும்" - என்று இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர் சனல் - 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்று கேட்டபோது, குறிப்பிட்ட இலங்கை இராணுவ சிப்பாய் பதிலளிக்கையில் -
முதலில் நாங்கள் அவர்களை கைது செய்தோம். பின்னர் சித்திரவதை செய்தோம். பின்னர் கொலை செய்தோம். போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம். பெருந்தொகையான சடலங்கள் அங்கு காணப்பட்டன. அவ்வாறு கொலை செய்யுமாறு எமது தளபதி எங்களுக்கு உத்தரவிட்டார்" - என்று கூறினார்.
சனல் - 4 தொலைக்காட்சியினால் தொடர்பு கொள்ளப்பட்ட குறிப்பிட்ட இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதி மேலதிக தகவல் ஒன்றினை தெரிவிக்கையில் - விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 13 வயது மகன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அவரது தந்தையார் - தலைவர் பிரபாகரன் - எங்கு உள்ளார் என்று விசாரணை செய்யப்பட்டு பின்னர் சுடப்பட்டார் என்று கூறியுள்ளார்.
இந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்து பிரிட்டனில் உள்ள இலங்கை தூதரகத்திடம் சனல் - 4 செய்தி நிறுவனம் கேட்டபோது -
இலங்கை படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர் அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் எற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை.
சனல் - 4 தொலைக்காட்சியினால் தற்போது வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து தற்போது நான் எந்த பதிலும் கூறமுடியாது. இது தொடர்பான காணொளியை அனுப்புங்கள். அதன் பின்னர்தான் அது குறித்து கருத்து கூறமுடியும்.
இலங்கைப் படையினர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை அரச அதிபர் குழு ஒன்றினை நியமித்துள்ளார் - என்று பிரிட்டனுக்கான இலங்கை தூதுவர் பதிலளித்துள்ளார்.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
பழியைத் துடைக்க பகீரதப் பிரயத்தனம் கலைஞரின் முயற்சி பலிக்க வாய்ப்பில்லை
ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழக முதல்வர் கலை ஞர் கருணாநிதியின் "அங்கிடுதத்தி"த் தனத்தால் அவ ருக்குத் தீராப்பழி ஏற்பட்டுவிட்டது. "உலகத் தமிழினத் தின் தலைவர்" என்று தன்னைத் தமிழினம் மதிக்கும் என்றுதான் இதுகாறும் கருதி வந்தார் கலைஞர் கருணா நிதி. ஆனால் ஈழத் தமிழர்கள் வரலாற்றில் பேரவலத்தை மிக மோசமான போரியல் அழிவுகளை சந்தித்துக் கொண்டிருந்தபோது, தன்னுடையதும் தனது குடும்பத் தினதும் சுயநல அரசியலுக்காகத் தமிழர்களை நட்டாற்றில் விட்டு, பெரும் பழியைச் சுமந்து கொண்ட அவரை "தமிழினத்தின் தலைவிதி" என்று நொந்து சபிக்கும் நிலையிலேயே உலகத் தமிழர்கள் உள்ளனர்.தமிழ்நாட்டில் அரசியல் அணிகள் தொடர்பான கணக்கு வழக்குகள், கூட்டல் கழித்தல்கள், இன்றைய நிலையில் கலைஞர் கருணாநிதியின் காட்டில் நல்ல மழை என்ற நிலைமையை ஏற்படுத்தினாலும் ஈழத் தமிழர்களை அந்தரிக்க விட்டு அதற்காகத் தமது அரசியலில் "அந்தர் பல்டி" அடித்த கலைஞரை உலகத் தமிழினம் எந்தக் கட்டத்திலும் மன்னிக்காது என்பது அவருக்கு நன்கு தெரியும்; புரியும்.
எப்படியும் தமது இறுதிக் காலத்துக்கு முன்னர் அந்தப் பழியைத் துடைத்து அழித்துவிடலாம் என்ற நப்பாசை யில் அவ்வப்போது சில ஆரவாரங்களைப் பண்ணுவது இவரது அரசியல் தகிடுதத்தமாக இருந்து வருகிறது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சர்வதேச செந்தமிழ் மாநாடு என்றெல்லாம் "கப்ஸா"பண்ணிப் பார்த்தார். ஈழத் தமிழர் விடயத்தில் தம்மீது விழுந்துள்ள பழியைத் துடைப்பதற்கு அவர் நடத்தும் கபட நாடகமே இந்த மாநாடு என்பது பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டமையை அடுத்து சற்று அடங்கிப்போனார்.
இப்போது "நம் மௌன வலி யாருக்குத் தெரியப் போகின்றது?" என்ற தலைப்பில் ஈழத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்து ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரவலத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவரையும் குற்றம் சுமத்தி அவர் வெளியிட்ட அறிக்கையும் இதேமாதிரியில் விவகாரத்தைத் திசை திருப்பும் எத்தனமின்றி வேறில்லை.
இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்து கொண்டிருந்தபோது கொன்றொழிக்கப் பட்டுக் கொண்டிருந்தபோது அத்தகைய கொழும்பு அரசின் அத்துமீறிய போக்கை ஆதரித்து, அங்கீகரித்து, அதற்கு உதவி, ஒத்தாசை வழங்கி, உறுதுணையாகச் செயற்பட்டது இந்திய மத்திய அரசு புதுடில்லி நிர்வாகம்.
இலங்கை விவகாரத்தில், அப்படி இந்திய மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளே தனது மாநில அரசின் முடிவும் கூட என்றும் பகிரங்கமாக அறிவித்ததன் மூலம், இலங்கையின் தமிழின அழிப்புக்குத் துணைபோன, இந்திய மத்திய அரசுக்கு முழு அளவில் முண்டு கொடுத்து, அந்த மத்திய அரசின் பழி பாவத்தில் தன்னையும், தனது இயக்கத்தையும், கட்சிக்காரர்களையும் பங்குதாரர் ஆக்கிக் கொண்டார் கலைஞர்.
இப்போது அதிலிருந்து வெளியே வர பழியைத் துடைக்க பகீரதப் பிரயத்தனம் பண்ணுகின்றார். ஆனால் அவை எல்லாம் எடுபடாமல், அவரின் கோமா ளித்தனங்களாக அர்த்தம் பண்ணப்படுகின்றமைதான் அவருக்கு இன்று நேர்ந்துள்ள அவலமாகும்.
இலங்கைத் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட போது, அதற்குத் துணைபோன புதுடில்லி ஆட்சிப் பீடத்துக்கு முண்டு கொடுத்து, தனது அரசியல் பிழைப்பை லாபகரமாக நடத்திய கலைஞர், அச்சமயம் மறுபக்கத்தில், மனித சங்கிலிப் போராட்டம், தமிழக எம்.பிக்கள் கூண்டோடு இராஜிநாமா என்ற கபட நாடகம், மூன்று மணி நேரம் நடத்திய சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்ட நடிப்பு, இலங்கையில் யுத்த நிறுத்தம் வந்துவிட்டது என்ற பித்தலாட்ட அறிவிப்பு, பல கட்சிப் பிரதிநிதிகளையும் புதுடில்லிக்குக் கூட்டிச் சென்று இந்திய மத்திய அரசை மிரட்டுவது என்ற கோணங்கித்தனம் என அவ்வப்போது அடித்த அரசியல் "பல்டி"கள் அல்லது "ஸ்டண்ட்"கள் பலப்பல.
அவை எவையுமே அப்போதும் சரி, பின்னரும் சரி எடுபடவேயில்லை என்பதுதான் யதார்த்தம்.
இப்படித் தீராப்பழி தம்மீதும், தமது குடும்பம் மீதும் விழுந்திருப்பதால், அதையெண்ணி இப்போதாவது நொந்து அழுவதற்கான மனச்சாட்சியை அவருக்கு இறைவன் கொடுத்திருக்கின்றான் போலும். அதனால்தான், தமது பிந்திய இந்த அறிக்கைக்குள் வேறு ஏதோ உளறிக்கொட்டியிருந்தாலும் கூட, அதன் தலைப்பை "நம் மௌன வலி யாருக்குத் தெரியப் போகின்றது?" என்று வரைந்திருக்கின்றார் அவர்.
வன்னியிலே தமிழினம் கதறக் கதறக் கொன் றொழித்து அழிக்கப்பட்டபோது, அதன் கதறலை செவி மடுக்கத் தவறி அதன் அவலத்தை உணரத் தவறி சுயலாப அரசியல் நடத்திய இத்தகைய தலைவர்களுக்கு உண்மையில் மனச்சாட்சி இருந்து, அதில் ஏற்படக்கூடிய மௌனவலியை உணரும் பக்குவம் அவர்களின் பிரக்ஞைக்கு உண்டா என்பது சந்தேகமே. அப்படி அவர் களுக்கு மௌன வலி நேர்ந்தாலும் அதைத் தமிழினம் உணர்ந்து, புரிந்து கொள்வதற்கு அதில் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
"ஜி.எஸ்.பி." வரிச்சலுகையை ஒரேயடியாக விலக்குமா ஐரோப்பிய ஒன்றியம்?

கிடைக்குமா அல்லது தடைப்படுமா என்று எதிர் பார்க்கப்பட்ட சர்வதேச நாணய நிதியக்கடன் கடைசியில் அரும்பொட்டில் கொழும்பு அரசுக்குக் கிடைத்தபோது தென்னிலங்கை துள்ளிக்குதித்து ஆரவாரித்தது. தன்னு டைய சர்வதேச இராஜதந்திரத் தொடர்பாடல் சிறப்புத் தோற்றுப்போய் விடவில்லை எனக் குறிப்பிட்டு கொழும்பு தனக்குத்தானே புகழாரம் சூட்டிக்கொள்ளவும் தவறவில்லை.
இப்போதும் அதேபோன்ற ஓர் இக்கட்டு புதிதாக வந் திருக்கின்றது. ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதிக் கான வரி விலக்குச்சலுகை "ஜி.எஸ்.பி. பிளஸ்" சலுகை இலங்கையின் கையை விட்டுப் போய்விடும் ஆபத்து ஏது நிலை ஏற்பட்டிருக்கின்றது.
மனித உரிமையைப் பாதுகாப்பது தொடர்பில் சர்வ தேசத் தரத்தை சர்வதேசம் எதிர்பார்க்கும் தர நிலையை பேணத் தவறியமைக்காக இந்தச் சலுகையை இலங்கை இழக்கும் நிலைமை வந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இந்தச் சலுகை தொடர்பான கால அவகாசம் கடந்த வருடமே முடிவுற்ற போதிலும், அதனை ஐரோப்பிய ஒன்றியம் அப் போது நீடிக்கவில்லை. நீடிப்பது தொடர்பான முடிவு எடுப்பதை ஒத்திவைத்துவிட்டு, அந்த சலுகையை ஒரு வருடத்துக்கு இந்த ஒக்ரோபர் வரை தற்காலிகமாகத் தொடர்வதற்கு மட்டுமே அது தீர்மானித்தது.அதன்படி, இப்போது இறுதி முடிவு எடுக்கும் காலம் நெருங்கிவிட்டது. இது விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கக்கூடிய தீர்மானம் கொழும்புக்குச் சாதகமாக அமையாது என்று பூர்வாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
இந்தச் சலுகையை இலங்கை இழக்குமானால் அது இலங்கைக்குப் பொருளாதாரத்தில் பலத்த அடியை பின்னடைவை கொடுக்கும் என்பது திண்ணம்.தைத்த ஆடைகளை இறக்குமதி செய்வதற்கு வரி ஏதும் விதிக்காமல் ஊக்குவிக்கும் சலுகையை ஐரோப் பிய ஒன்றியம் இலங்கை உட்பட ஒருசில நாடுகளுக்கு மட்டும் வழங்கியமையால், சர்வதேச சந்தையில் ஏனைய நாடுகளுடன் போட்டிபோட்டுக்கொண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கைத் தொழிலதிபர்களால் தாராளமாகத் தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ய முடிந்தது; முடிகிறது. இந்த ஏற்றுமதி வாய்ப்பை நம்பி பெரும் பொருளாதாரக் கட்டமைப்பே வலையமைப்பே இலங்கையில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக் கின்றது. மேற்படி சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொள்ளுமானால் அந்த முழு வலையமைப்பே ஒரேயடியாகப் படுத்துவிடும்.
கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இவ் வாறு தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் சுமார் 350 கோடி அமெரிக்க டொலரை (சுமார் 35 ஆயி ரத்து 500 கோடி ரூபாவை) இலங்கை சம்பாதித்தது.
வெளிநாட்டிலிருந்து இலங்கையர்கள் வருடாந்தம் உழைத்து இலங்கைக்கு அனுப்பும் 300 கோடி அமெரிக்க டொலருக்கும், தேயிலை ஏற்றுமதி மூலம் வருடாந்தம் கிடைக்கும் 120 கோடி டொலருக்கும் அதிகமாக இலங் கைக்கு அந்நிய செலாவணியை கூடியளவில் ஈட்டித் தரும் துறையாக இந்தத் தைத்த ஆடை ஏற்றுமதியே அமைந்துள்ளது.
அதுமட்டுமல்ல. இலங்கையின் ஏற்றுமதித்துறை யில் அதிக சந்தை வாய்ப்புத் தரும் மையமாக ஐரோப் பிய ஒன்றியமே விளங்குகின்றது. மொத்த ஏற்றுமதியில் 36 வீதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் செல்கின் றது. அடுத்தது அமெரிக்காவுக்கு; 24 வீத ஏற்றுமதி அந்த நாட்டுக்கு.
இந்தப் பின்புலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மேற்படி வரிச்சலுகையை விலக்கிக் கொள்ளுமானால், அந்த ஏற் றுமதியை நம்பி நாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான ஆடைத் தொழிற்சாலைகளை இழுத்து மூடவேண்டியதுதான். பல லட்சம் தொழிலாளர்கள் குறிப்பாக இளம் யுவதிகள், இளைஞர்கள் ஒரேயடி யாக வேலை இழப்பர். அவர்களை நம்பியிருக்கும் குடும் பங்கள் வீதிக்கு வரவேண்டியதுதான்.
மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் மிக அசிரத்தையாகவும், மிதப்பு மற்றும் தடிப்புடனும் செயற் பட்டுக்கொண்டு, மேற்குலகையும் உதாசீனப்படுத்தி, தூக்கியெறிந்தபடி முன்னெடுக்கப்படும் இராஜதந்திரம், காலம் தாழ்த்தியாவது கெடுவினையைத் தேடித்தரும் என்று கொழும்பு உணரவேண்டிய வேளை நெருங்கி வருகின்றது என்றே தோன்றுகின்றது.
ஒருபுறம், மேற்குலகைக் கரித்துக்கொட்டியபடி மறுபுறம், லிபிய அதிபருடன் தோளில் கைபோட்ட படி, வெனிசூலா அதிபருடன் தொடர்பாடல்களை நெருக்கமாக்கிக் கொண்டு, ஈரானுடனும், பாகிஸ்தானுட னும், சீனாவுடனும், பர்மாவுடனும் உறவைப் பலப்படுத் தியபடி
நாட்டை வழிப்படுத்தும் இராஜதந்திரம் எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானது என்ற அமிலச் சோதனை யைக் கொழும்பு முன்னெடுப்பதாகவே தோன்றுகின்றது.
அந்தப் பரீட்சார்த்த களத்தின் முக்கிய கட்டமே "ஜி.எஸ்.பி.பிளஸ்" வரிச்சலுகை விவகாரமாகும். இந்த நெருக்கடியைக் கொழும்பு எப்படி வெற்றிகரமாகத் தாண்டப் போகின்றது? விரைவில் தெரியவரும்.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
கானல் நீராகும் 13 ஆவது திருத்தம்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசுவெற்றியீட்டியதான அறிவிப்பு வெளி யான கையோடே தென்னிலங்கையில் பேரினவாத சக்தி கள் கிளர்ந்தெழுந்து ஆடும் என்பது எதிர்பார்க்கப்பட்டது ஒன்றே.
அதை இப்போது நடைமுறையில் காணும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
இதுவரை, அரசுடன் இணைந்து நின்ற இந்தச் சக்தி கள், இப்போது அரசுக்கு எசச்ரிக்கை விடுத்து, சவால் உரைக்கும் அளவுக்கு எகிறுகின்ற கள நிலைமை ஏற் பட்டிருக்கின்றது.
தமிழர் பிரதேசங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்த ளிக்கும் எத்தனத்தில் அரசுஇறங்குமானால் அரசிலிருந்து வெளியேறி, அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவோம் என அரசுப் பங்காளிக்கட்சியான ஹெல உறுமய அரசுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் சாயலில் அறிவிப்புச் செய்துள்ளது.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதைக் கடுமையாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, தமிழருக்கு இருப்பிடம், உணவு, உடை, சுய கௌரவம் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்றும் தானே வரையறை செய்து அறிவித்திருக்கின்றமை வேடிக்கையானது.
நலன்புரி மையங்கள் அல்லது அகதி முகாம்கள் என்ற பெயரில் குறித்தொதுக்கப்படும் இடங்களில் வாழ்ந்து கொண்டு, அங்கு அரசும், ஏனைய உதவி நிறுவனங்க ளும் போடும் உணவு மற்றும் உடை போன்ற உதவிப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு வாழ்வதுதான் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்வு என இத்தரப்பினர் எண் ணிக்கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை.
தமிழர்களைப் பொறுத்தவரை தமது தாயக மண்ணில், தமது நலன்களைத் தாமே பேணும் வகையில், தங்களைத் தாங்களே நிர்வகித்துக்கொண்டு, இந்தத் தேசத்தில் மற்றெல்லாப் பிரஜைகளுக்கும் உரிய உரிமைகளையும் வசதிகளையும் தாமும் சமமாகப் பகிர்ந்து அனுபவித் துக்கொண்டு, எந்தவித இன ஒதுக்கல் மற்றும் அடக்குமுறை, ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு உட்படாமல் சுய திருப்தியுடன் வாழ்வதையே தமது கௌரவமான வாழ்க்கை முறையாகக் கருதுகின்றார்கள்.
அத்தகைய கௌரவ வாழ்க்கை முறையை சிறு பான்மையினரான தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுப் பதற்கான முதல் அடியே அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் என்று பல தரப்பினராலும் கூறப்பட்டு வந்தது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வான இடைக்கால ஏற்பாடாக அரசமைப்பின் 13 ஆவது திருத் தத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்ற யோசனையை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியிடம் கையளித்தபோது, "இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முதல் அடி" என்று குறிப்பிட்டே அதனை வரவேற்றது இந்தியா. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலம் தீர்வு ஒன்றைக் காண்பதற்கான நீண்ட தூர பயணத்தில் இது ஒரு முதல் காலடி என்றுதான் இந்தியா அச்சமயம் இதனை விமர்சித்தது.
அது மாத்திரமல்ல, அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று தீர்வு காணப்படும் என்ற நிலைப்பாட்டையே அரசுத் தரப்பு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அவ்வப்போது பரப்புரைகள் மூலம் வெளிப்படுத்தி வந்தது.
ஆனால் இப்போது முதலுக்கே மோசம் வந்துவிடும் என்ற நிலைமை. பதின்மூன்றாவது திருத்தத்தையே நிராகரித்து போர்க்கொடி தூக்கியிருக்கின்றது அரசுக்குள் வலுவான சக்தியாகச் செயற்பட்டு வரும் ஜாதிக ஹெல உறுமய.
அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் அரசமைப்புக்குச் செய்யப்பட்ட பதின்மூன்றாவது திருத்தமே போதுமான தல்ல தமக்குத் திருப்தி தரக்கூடியதல்ல தமது நீதி, நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்யக்கூடிய தல்ல என்று தெரிவித்து நிற்கின்றார்கள் தமிழர்கள். தற்போதைய ஒற்றையாட்சிக் கட்டமைப்பு அரசுக்குள் பதின்மூன்றாவது திருத்தம் மூலம் வழங்கப்படும் அதி காரப் பரவலாக்கல் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தக்கதல்ல என்பதைத் தமிழர்கள் தரப்பு தொடர்ந்து பிரதிபலித்தே வந்துள்ளது.
எனினும் நம்பகத்தன்மையையும், நல்லெண்ண சுமுக நிலையையும் கட்டி வளர்ப்பதற்கான முதல் முயற் சியாக ஆரம்பக்கட்ட எத்தனமாக அதனை ஏற்றுச் செயற்படுங்கள் என்பதே தென்னிலங்கையுடன் சமர சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் நிரந்தர அமைதியை எட்டவைக்கச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் தலைவர்கள் மற்றும் தரப்புகளின் வாதமாக இருந்து வருகின்றது.
ஆனால் அந்த முயற்சிகளுக்கும் அடியோடு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றது போலும் ஹெல உறுமய.
நாட்டுக்குள் பிரிவினை கோருவது அரசமைப்புக்கு முரணானது என்று தெரிவித்து, அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றால்
அரசமைப்பில் தெளிவாக உள்ள 13 ஆவது திருத் தத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று தடுப் பதும் கூட அரசமைப்பு விரோதச் செயற்பாடாகவே அர்த் தப்படுத்தத் தக்கது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய தாகும்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விவகாரத்தில் தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலு நொறுக்கப்பட்டு விட்டது என்ற சூழலில் இப்போது பதின்மூன்றாவது திருத்தம் கூட கானல் நீராகி வரும் சூழ்நிலை. சுருங்கச் சொல்வதானால் அதிக உரிமைகள் கேட்ட தமிழர்கள் இன்று "பிச்சை வேண்டாம்; நாயைப்பிடி!" என்ற திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
தமிழ்ப் பகுதிக் காணிகளின் உரிமையின் எதிர்காலம்......

விடுதலைப் புலிகளின் பகுதிகளில் சிங்களவர் களால் விற்கப்பட்ட காணிகளின் உரிமைகள் ரத்துச் செய்யப்பட வேண்டும்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த சிங்கள மக்கள், அச் சம் காரணமாகத் தமது காணிகளை விற்றுவிட்டுப் போய்விட்டனர். இப்போது அந்த நிலங்களின் உரிமையை ரத்துச் செய்துவிட்டு, அவற்றை அர சாங்கம் கையேற்க வேண்டும்.
இவ்வாறு அர சாங்கத்திற்கு, அதன் அருமைத் தோழமைக் கட்சியின் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் இலங்கைத் தேசியத்தின் சொந்தக்காரக் கட்சியின் தலைவர் வண.எல்லாவல மேத்தானந்த தேரர் ஆலோ சனை (அல்லது சிபார்சு என்று கூடச் சொல்லலாம்) வழங்கியுள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் உள்ள சகல நிலப்பகுதி களையும் அர சாங்க நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரு வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்தது. மேற்குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களி லும் உள்ள சகல நிலப்பகுதிகளையும் அவ சரகாலச் சட்டத்தின்கீழ் அரசின் உரிமையாக்கும் திட்டம் குறித்து உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல் கூறியது.
மேற்குறிப்பிட்ட இரண்டையும் அதாவது ஜாதிக ஹெல உறுமயவின் யோ சனையையும் அர சாங்கத் தரப்பின் உத்தே சத்தையும் பொருத்திப் பார்த்தால் உள்ளூர ஒரு பெரும் சதி வலைப்பின்னல் உருவாகி வருகிறதோ என்று ஊகிக்க வைக்கிறது.
தமிழர்கள் தமக்கென்று ஒரு தாயகப் பகுதி உண்டு என்று உரிமை கொண்டாடாமல் செய்துவிடவேண்டும் என்ற பேரினவாதம் பரகசியமாக அர சாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான முத்தாய்ப்புக்களே, மேலேசுட்டிக்காட்டப்பட்ட ஆலோ சனையும் திட்ட மும் இரண்டுமாகும் என்பது புலப்படுகிறது.
தமிழர்களை இந்த நாட்டின் சம பிரஜைகளாக சம உரிமை உள்ள பிரஜைகளாக வைத்திருக்காமல் செயல் ரீதியாகவும் சட்டரீதியாகவும் இரண்டாந்தரப் பிர ஜைகளாக வைத்திருக்க வேண்டும் என்ற பேரின வாதத்தின் மூளையம் பெரும்பான்மைச் சமூகத்தின ரிடம் இன்று நேற்றுக் கருக்கொண்டதல்ல. இலங்கைக் குப் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கிடைத்த ஒரு சில வருடங்களிலேயே அது முளை விட்டு, இலை வந்து, கிளை பரப்பி, மரமாகி, பெரு விருட் சமாகி நிற்பது விவரித்து விளக்க வேண்டிய ஒன்றல்ல.
அது மீண்டும் ஒரு மலர்ச்சி காணப் போகிறது என்பதற்கான முகிழ்ப்பாகவே ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்ட இரண்டும் அமைகின்றன.
1983 ஆம் ஆண்டில் தென்னிலங்கையில் கொழுந்து விட்டு எரிந்த இனக் கலவரத்தின் இன அழிப்பின் பின்னர், சிங்கள மக்களுடன் சகோதரர்களாக வாழ்ந்த தமிழர் அழிப்பில் இருந்து எஞ்சிய தமது சொத்துகளையும் வர்த்தக நிலையங்களையும், நிலங்களையும் சொற்ப பணத்துக்கு விற்றுவிட்டுத் தமிழ்ப் பகுதிகளுக்குத் திரும்பினார்கள். ஆனால் நிலைமை சீரான பின்னர் அவை அர சாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டனவா? நியாய மான விலை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதா? இல்லையே.... இப்போது.....
தமிழ்ப் பகுதிகளில் வாழ்ந்த சிங்கள மக்கள் தமிழர் களுக்கு விற்றுவிட்டுச் சென்ற காணிகளின் உரிமை களை ரத்துச் செய்துவிட்டு அரசு கையேற்க வேண்டும் என்று கூறப்படுவதில் சமன்பாடு எதுவும் உண்டா?
அதேபோன்று, போரிலிருந்து தப்பி தமது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அர சாங்கத்தின் அகதி முகாம்களில் போய்த் தஞ் சம் அடைந்து அவலப்படும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்ட வன்னி மக்களின் நிலங்களை அர சாங்கம் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுவீகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களும் உள்நோக்கம் ஒன்றுடன், வன்னிப் பகுதியைத் தமிழர் பிரதே சம் என்று அடையாளப் படுத்தப்படு வதைத் தவிர்ப்பதற்கான உள்நோக்கம் கொண்ட சூழ்ச்சியுடன் முன்வைக்கப்படும் திட்டம் என்றே தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.
மேற்படி மூன்று மாவட்டங்களிலும் உள்ள காணி களுக்கு அந்தந்த மாவட்டக் காணிப் பதிவகத்தில் உரிய ஆவணங்கள் பேணப்பட்டன. அவற்றின் பிரதிகள் கொழும்பில் உள்ள இலங்கை முழுவதற்கு மான தலைமைக் காணிப் பதிவகத்தில் இருக்கும். அவ்வாறிருக்க அகதி முகாம்களில் வாழும் மக்களின் நிலங்களை மற்றொருவர் அபகரித்து வைத்து உரிமை கொண்டாட வாய்ப்பில்லையே!
அவ்வாறெனின் காணிச் சொந்தக்காரர்களுக்கு உதவும் பொருட்டே மூன்று மாவட்டங்களிலும் உள்ள தனியார் காணிகளை நிலங்களை அர சாங்க நிர் வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற திட்டம் எதற்கு?
இதிலும் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று கொள்ளமுடியுமா? கூறமுடியுமா?
தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு காணப் பட வேண்டும் என்ற குரல், போர் ஓய்ந்த பின்னர், சர்வ தே சரீதியாக ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இவ் வேளை யில்
இப்போதைக்கு வேண்டாத மேற்கூறிய செயற் பாடுகள் அவசியம் தானா? சிவபூசைக்குள் கரடி உட் புகும் கதை ஆரம்பமாகிறது என்பதற்கான முன்னோட் டமா கவே இந்தச் செயற்பாடுகளைக் கொள்ளலாம். வேறெப் படிக் கூறுவது....!
தலைப்புகள்
ஆய்வு கட்டுரைகள்,
பத்திரிக்கை செய்திகள்
இறுதி மோதல் உயிரிழப்புக்களுக்குஇந்தியாவுக்குத் தொடர்பு உண்டு! அமைதிப்படைத் தளபதியின் கருத்தை ஆதாரம் காட்டிக் குற்றச்சாட்டு

வன்னியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின்போது ஆயிரக்கணக் கான மக்கள் கொல்லப்பட்ட விடயத்தில் இந்தியாவுக்கும் தொடர்புள்ளது எனக் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்திய அமைதிப்படையின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தாவும் இரு சர்வதேச அமைப்புகளும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன என்று லண்டனில் இருந்து வெளிவரும் "த ரைம்ஸ் " பத்திரிகை தெரிவித்துள்ளது.
"த ரைம்ஸ் " மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்ட இறுதிக்கட்டத் தாக்குதலில் இந்தியா தொடர்புபட்டிருந்தது என மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா "த ரைம்ஸ் "இற்குத் தெரிவித்துள்ளதுடன், இது ஆழ்ந்த கவலையையும் மனக்குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைக்கு ஆதரவளிப்பது என இந்தியா முடிவெடுத்தது. பின்னர் முழுமையாக ஆதரவளித்ததுடன் மோதல் பகுதிகளில் என்ன நடைபெறுகின்றது என்பதை அலட்சியம் சேய்து விட்டது எனவும் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார்.
தமது சேல்வாக்கை இலங்கையில் அதிகரித்துக் கொண்டுள்ள சீனா மற்றும் பாகிஸ்தானை முறியடிக்க நினைத்து, காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசுகடந்த சில வருடங்களாக இலங்கைக்கு அதிகளவு ஆயுதங்களை வழங்கியுள்ளது. இதன்மூலம் 1991 இல் ராஜீவ் காந்தி கொலைக்காக காங்கிரஸ் கட்சி விடுதலைப் புலிகளைப் பழிவாங்க நினைத்ததென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கற்பனை சேய்முடியாத மனிதாபிமான பேரழிவு குறித்து சேஞ்சிலுவை சர்வதேசக் குழு எச்சரித்த போதிலும் இந்தியா அதனைத் தடுக்க முடியாமல் போனதற்கு இந்த இரு காரணங்களையும் வைத்து நியாயப்படுத்த முடியாதென மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்தியா உரிய நடவடிக்கையை எடுத்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். யுத்தத்தின் முடிவை இது பாதித்திருக்காது என்றும் அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.
புலிகளைத் தோற்கடிப்பதற்காக பொதுமக்களை கொல்லலாம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்காக எவ்வளவு பொதுமக்களைக் கொல்லவேண்டுமோ அவ்வளவு பொதுமக்களைக் கொல்லலாம் என்ற இலங்கை அரசின் கருத்தை இந்தியா எவ்வித ஆட்சேபனையும் இன்றி ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை நம்பவேண்டியுள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் இயக்குநர் சாம் ஜரிவி குறிப்பிட்டுள்ளார்.
6 கோடி தமிழர்கள் வாழ்கின்ற தேசம் என்கின்ற போதிலும், இந்தியா இலங்கைக்கு இராணுவ உபகரணங்கள், பயிற்சிகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளது என இராஜதந்திர வட்டாரங்கள் "த ரைம்ஸ் " பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளன.
மேலும் சர்ச்சைக்குரிய விதத்தில் இந்தியா இலங்கைக்கு தளர்வற்ற இராஜதந்திர ஆதரவை வழங்கியதுடன் பொதுமக்கள் தப்புவதை உறுதி சேய்வதற்காக யுத்தநிறுத்தம் ஒன்றுக்கு ஏற்பாடு சேய்யத் தவறிவிட்டது என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தியா தனது முழுமையான இராஜதந்திர பலத்தையும் பயன்படுத்தாத அதேவேளை, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முழுமையான ஆதரவையும் அனுமதியையும் வழங்கியது எனவும் இராஜதந்திரிகள், மனித உரிமைப் பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மோதல் காரணமாகப் பெருமளவு அகதிகள் தமிழ்நாட்டுக்கு வருவது குறித்து மாத்திரம் இந்தியா கவலையடைந்திருந்தது எனத் தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள் பான் கீமூனின் பிரதிநிதி விஜய் நம்பியாரின் பணி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளன.
இப்படி "த ரைம்ஸ் " பத்திரிகை தெரிவித்துள்ளது.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
தலைவர்களைத் திணிக்கும் எத்தனமா?

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமை தொடர்பான வெற்றிக் கொண்டாட்டங்கள் தலைநகர் கொழும்பில் இன்று கோலாகலமாக நடைபெறுகின்றன.
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமை தொடர்பாகத் தாம் ஏற்கனவே வெற்றிப் பெருமிதத்தில் நாட்டுக்கு ஆற் றிய உரையில் "இது புலிகளின் தோல்வியே தவிர, தமிழர் களின் தோல்வியே அல்ல!" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ கூறியிருந்தார். இன்று நடைபெறும் தமது படை களின் வெற்றித் திருவிழாக் கொண்டாட்டங்களின் போது நாட்டு மக்களுக்குத் தாம் ஆற்றும் உரையில் இதை மீண்டும் அவர் குறிப்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனாலும், இராணுவ ரீதியில் தோற்றவர்கள் புலிகளாக இருந்தாலும், அரசியல் ரீதியிலும் முற்றாகத் தோற்றுப் போய், தூக்கி வீசப்பட்டு விட்டோமோ என்ற வெறுப்பு நிலை வெறுமை நிலை இலங்கைத் தீவின் தமிழர்கள் மனதில் ஆழமாகப் பற்றிப் பீடித்து நிற்காமல் இல்லை என் பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.
தென்னிலங்கையில் சிங்களத் தலைமைகளிடமிருந்து அதிகாரவர்க்கத்தவரிடமிருந்து வரும் செய்திகள், அறிவிப்புகள், பிரகடனங்கள் அப்படித்தான் தோன்றுகின்றன.
"போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் புலிகளே; தமிழர் கள் அல்லர்" என்று ஜனாதிபதியும் அவரது அரசின் ஏனைய தலைவர்களும் வாயால் கூறும் வார்த்தைகள் உண்மை யானவையாக இருக்குமானால், நாதியற்றிருக்கும் ஈழத் தமிழ் இனத்தைப் பெரும்பான்மையினர் வெளிப்படை யாகவே அரவணைத்துக் காட்டவேண்டிய மிகப் பொருத் தமான அவசியமான சமய, சந்தர்ப்பம் இதுவாகும். ஆனால் அதற்கு மாறாக, அவர்களைப் புறமொதுக்கி, மனக் கிலேசத் துக்கு உள்ளாக்கும் விடயங்களே இப்போதும் வெளிப்படுத் தப்படுகின்றன.
இராணுவ வெற்றிக் களிப்பில் மிதக்கும் பேரினவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய "தமிழ்த் தேசியக் கூட் டமைப்பினரை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்!" என்ற கூக்குரலைத் தீவிரப்படுத்தியிருக் கின்றது.
நாட்டில் பாதுகாப்பு விடயங்களில் ஜனாதிபதிக்கு அடுத்து மிகச் செல்வாக்கு மிக்கவராக விளங்குபவரும், ஜனாதி பதியின் சகோதரரும், இலங்கைப் படைகளின் இன்றைய வெற்றி நிலைக்குக் காரணமான கதாநாயகன் என்று தென் னிலங்கையால் போற்றப்படுபவரும், பாதுகாப்பு அமைச் சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷவும் இக்கருத் தையே வலியுறுத்தியிருக்கின்றார்.
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நாடாளுமன்றத் திலிருந்து வெளியேற்றவேண்டும் என்பதே எமது நிலைப் பாடாகும். இதனைப் பலமுறை வலியுறுத்தியிருக் கிறேன்." என்று அவரே அண்மையில் பகிரங்கப் பேட்டி ஒன்றில் கூறியிருக்கின்றார்.
இந்த நாடாளுமன்றத்தில் முடியாவிட்டால் அடுத்த நாடாளுமன்றத்திலாவது இதைச் செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
ஒருபுறம் தமிழ் அரசியல் கட்சிகளை ஆளும் கட்சி யுடன் சேருமாறு வெளியே புலப்படாத அழுத்தம் அவற் றுக்கு. மறுபுறம் சுயாதீனமாகச் செயற்படும் தமிழ்க் கட்சிக ளையும் புலிகளை ஒழிப்பது போன்று அழித்தொழிக்கும் எத்தனம்.
தமிழர்களின் நியாயமான தேசியக் கோரிக்கைகளைப் பிரதிபலிப்பனவாகக் காட்டிக்கொண்ட வெகுஜன ஊடகங் கள் கூட அழுத்தங்களுக்கு இரையாகி ஆளும் தரப்புக்கு ஜால்ரா போடும் நிலைமை இன்னொருபுறம்.
இவற்றுக்கு மத்தியில் "தோற்றது புலிகள்தான்; தமிழர் கள் அல்லர்! என்ற கருத்து எடுபடக் கூடியதே அல்ல.
தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்யக்கூடிய தீர்வு எட்டப்படுவதன் மூலம் அமைதியும், சமாதானமும் ஏற்படுத்தப்பட வேண்டும் என யாரும் கருது வார்களேயானால், அதற்கு அத்தகைய அபிலாஷைகளை நேர்மைத் திறத்துடன் பிரதிபலிக்கக்கூடிய தமிழ்த் தலை மைகளுடன்தான் பேசவேண்டும்.
தென்னிலங்கை ஆட்சித் தலைமைகளின் அதிகாரத் துக்குள் ஈர்க்கப்பட்டவர்களுடனோ அல்லது அதிகாரத் தரப்பின் விருப்புக்கு இசைவாக ஆடுபவர்களுடனோ மட் டும் பேசி இணக்கத் தீர்வு காண்பது என்ற எத்தனத்தின் மூலம் இலங்கை அரசுத் தலைமை தான் விரும்பும் அல்லது தனக்குப் பிடித்தமான ஒரு திட்டத்தைத் தீர்வாகத் தமிழர் கள் மீது திணிக்க முயல்கிறது போலும்.
ஆனால் அதன் மூலம் இணக்கமான உண்மையான நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானமும் அமைதியும் ஏற் பட்டு விடாது; மாறாக, அடக்குமுறையின் மீது கட்டப் படும் போலி அமைதி மட்டுமே அதன்மூலம் எட்டப்படக் கூடும்.
ஈழத் தமிழர்களின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதிகள் தாமே என்பதைப் பிரகடனப்படுத்தி, முன்னிறுத்திச் செயற் பட்ட புலிகள் இயக்கத்தை, இராணுவ நடவடிக்கைகள் மூலம் அழித்தொழிப்பதில் வெற்றி கண்டுள்ளதாகக் கரு தும் கொழும்பு, அதனால் ஏற்பட்டிருக்கும் பிரதிநிதித்துவ வெற்றிடத்துக்குத் தான் விரும்பும் தனக்குப் பிடித்தமான தரப்புக்களைக் கொண்டுவந்து நிறுத்தும் தந்திரோபாய எத்தனத்தில் இப்போது ஈடுபட முயல்கிறது. அதன் முதல் கட்டமாகவே தனக்குப் பிடித்தமில்லாத தரப்புக்களை ஓரம்கட்டி, ஒதுக்கி, இல்லாமல் செய்யும் தந்திரத்தை அது இப்படி ஆரம்பித்திருக்கின்றதோ என்ற சந்தேகம் எழு கின்றது.
புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கும் ,அந்த இறுதிக் கட்டப் போரில் பல்லாயிரம் பொதுமக்கள் கொன்றொழிக்கப்பட்டமை தொடர்பாக சர்வதேசம் நடத்த எத்தனித்த விசாரணைகளை முட்டுக்கட்டை போட்டுத் தடுப்பதற்கும்
இலங்கைக்கு நேரடியாக ஒத்துழைத்து, உதவி, பங் களித்த பாரதம் இப்போது தமிழர்கள் தரப்பின் சுயாதீனப் பிரதிநிதிகளைக் கொழும்பு தன் விருப்புக்கேற்ப களை யெடுத்து நீக்கி, இசைவானவர்களை மட்டும் தேர்ந் தெடுத்து முன்நிறுத்தும் எத்தனத்துக்கு உடந்தையாகிப் போகும் வாய்ப்புகளும் உள்ளன.
அதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முந்திக்கொண்டு போய்சென்னையினதும் புதுடில்லியினதும் காலில் விழுந்து இறைஞ்ச முயல்கின்றதோ என்று அரசியல் அவதானிகள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
உத்தேச தீர்வுத் திட்டம் 13 ஆவது திருத்தம்

இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரதம ஆசிரியருக்கு அளித்த பேட்டியில் - ராஜபக்ஷ
உத்தேச அரசியல் தீர்வானது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலானதாக அமையும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சகலருமே அதனை அமுல்படுத்துவதற்கு அவசியம் இணங்குவதாக இந்த 13 ஆவது திருத்தத்திலும் கூடுதலான தீர்வு விளங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்த உத்தேச யோசனைகள் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் ஒன்றுசேர்ந்து தீர்மானிக்க வேண்டியது அவசியமென்றும் தான் இந்த விடயத்தில் அவர்களை நிர்ப்பந்திக்கப் போவதில்லை என்றும் தீர்வுத் திட்டமானது ஒவ்வொரு மக்கள் மத்தியில் இருந்தும், தலைவர்களிடமிருந்தும் வெளிவர வேண்டியது அவசியம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
"இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆசிரியர் சேகர் குப்தாவிற்கு என்.டி.ரி.வி.யின், "வோக் த ரோக்' நிகழ்ச்சியில் பேட்டியளித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்திலிருந்து, விடுதலைபெற்ற நிலையில் சேகர் குப்தாவுடன் தற்போது தான் உரையாடுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.
பேட்டியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது;
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இழைத்த பாரிய தவறு ராஜீவ் காந்தியை கொன்றதாகும். ஏனெனில், இந்தியாவின் முழு அனுதாபத்தையும் அவர்கள் பகைத்துக்கொண்டனர். அந்த நேரத்தில் அவர் செய்த பாரிய தவறு இதுவென நான் நினைக்கிறேன். இரண்டாவதாக அவர் தெற்கின் சக்தியைப் பற்றி அளவிட்டிருக்கவில்லை. அவர் இழைத்த மற்றொரு தவறாகும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் அவர் விரும்பியிருக்கவில்லை. முழு நாட்டையுமே அவர் கைப்பற்ற விரும்பியிருந்தார். அவருடைய திட்டம் முழு நாட்டையும் கைப்பற்றுவதாகும். பயங்கரவாதத்தினாலும், துப்பாக்கியினாலும் சகலரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று அவர் நினைத்திருந்தார். 30 வருடங்களில் அவருடைய பாரிய தவறு ராஜீவ் காந்தியின் படுகொலையாகும். அதுவே அவரது வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது என்பது உண்மையாகும்.
இந்தப் பிரச்சினையை யார் உருவாக்கியது என்பது உங்களுக்கு தெரியும். இந்த மனிதர் எப்பொழுது இதனை ஆரம்பித்தார் மற்றும் இந்தியாவில் அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது என்பது யாவருக்கும் தெரியும். இறுதியாக அவர்கள் இந்திய மக்களால் அன்பு செலுத்தப்பட்ட தலைவரை கொன்றனர். தமிழ் மக்களால் மட்டுமன்றி முழு இந்தியாவுமே அன்பு செலுத்தியவரை அவர்கள் கொன்றனர். தமிழ்நாட்டில் அவரைக் கொன்றனர். தமது ஜாக்கெட்டை அவர் (ராஜீவ்) கொடுத்தார் என்று நான் கேள்விப்பட்டேன். இது சரியானதா என்பது எனக்கு தெரியாது. அவர் இந்த மனிதருக்கு தமது சொந்த குண்டு துளைக்காத ஜாக்கெட்டை கொடுத்தார். எமது அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தீர்வொன்றை ஏற்படுத்த அவர் (ராஜீவ் காந்தி) முயற்சித்தார். அதனை நாம் இப்போது வைத்திருக்கின்றோம். இந்திய சமாதானப்படை இலங்கைக்கு வந்தபோது நாம் மகிழ்ச்சியடையவில்லை. நானும் கூட சந்தோஷப்படவில்லை. நான் எதிர்த்தரப்பில் இருந்தேன். அந்த நேரத்தில் நாம் எதிர்த்தோம். ஆனால், இப்போது அவர்கள், அல்லது நாம் இந்திய அமைதி காக்கும் படையை மேலும் ஓரிரு மாதங்களுக்கு தங்கியிருக்க அனுமதித்திருந்தால் இதனை அவர்கள் முடித்து வைத்திருப்பார்கள்.
இந்திய அமைதி காக்கும் படையுடன், போரிட பிரேமதாஸா புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்ததாக லலித் அத்துலத் முதலி தமக்கு கூறியதாக சேகர் குப்தா கேள்வியெழுப்பியபோது, சரி என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார். 5 ஆயிரம் ரி56 ரக துப்பாக்கிகளை புலிகளுக்கு அவர் கொடுத்ததாக கேள்வியெழுப்பப்பட்டபோது, ஆம் என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் எப்போதுமே யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தியோ அல்லது இந்தியாவையோ அல்லது மேற்கு சக்திகளையோ பயன்படுத்த முயன்றதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார்.
புலிகள் பிரேமதாஸாவை கொன்றனர், அவர்களுக்கு உதவியவர்களை கொன்றனர், ராஜீவ் காந்தியை கொன்றனர், காமினி திசாநாயக்காவை கொன்றனர், அமிர்தலிங்கம், லக்ஷ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வன் போன்ற அவர்களின் சொந்த தலைவர்களையே கொன்றனர். சமாதானத்தை விரும்பியவர்களை கொன்றனர்.
ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் அவர் ஏன் இந்த மாதிரியான பாரிய தவறினை செய்தார். அதுபற்றி நீங்கள் ஆராய்ந்துள்ளீர்களா? ஏதாவது தகவல்களை பெற்றுள்ளீர்களா? என்று ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டபோது, ராஜீவ் காந்தி அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முயன்றார் என்றும், அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்ததால் ராஜீவ் காந்தியை அவர் வெறுத்தார் என்றும், தான் கருதுவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அவர் (பிரபாகரன்) எந்த தீர்வையும் விரும்பவில்லை. தான் மன்னனென கருதினார். இந்தியா தமிழ்நாட்டின் மனநிலை குறித்து அவர் கவலைப்படவில்லை. அவருடன் அனுதாபம் கொண்ட சில தலைவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களைப் பற்றி குறிப்பிட நான் விரும்பவில்லை. அவர்களின் பெயரை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் யாவரும் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய வாக்காளர்கள் புத்திசாலிகள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
இறுதி நாட்களைப் பற்றி கூறுமாறும் இறுதியாக எவ்வாறு அவரையும் ஏனைய முக்கியமான தலைவர்களையும் கண்டுபிடித்ததாகவும் சேகர் குப்தா கேள்வியெழுப்பியபோது பதிலளித்த ஜனாதிபதி, அவர்கள் தப்பிச்செல்ல முயற்சித்ததாகவும், சிறிய நிலப்பகுதியில் ஓரங்கட்டப்பட்டிருந்த அவர்கள் 3 குழுக்களாக இருந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அந்த 3 குழுக்களில் ஒரு சாரார் வடக்கு பக்கமாகவும், மற்றவர்கள் தெற்கு பக்கமாகவும் இடையில் ஏரிப் பக்கமாகவும் சென்றதாகவும், பிரபாகரனும் ஏனையவர்களும் முன்னோக்கி நகர்ந்ததாகவும், அச்சமயம் இராணுவத்துடன் மோதல் ஏற்பட்டதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார். அப்போது அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கட்டாரில் ஜனாதிபதி இருந்தபோது பிரபாகரனின் மரணம் குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டதாக தாங்கள் கேள்விப்பட்டதாக சேகர் குப்தா குறிப்பிட்டபோது, இல்லை எனவும் 19 ஆம் திகதியே தாம் செய்தியை பெற்றுக்கொண்டதாகவும், ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, இந்தியாவிடமிருந்து அதிகளவிலான பிரதிபலிப்புகள் வெளிப்படுத்தப்பட்டதா, உதாரணமாக ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு இடம்பெற்ற போது, என்று சேகர் குப்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அவ்வாறான ஒன்றுமே நடைபெறவில்லை என்றும் அது ஒரு பிரசாரம் என்றும் மருத்துவர்கள் தங்களுடன் இருப்பதாகவும் இந்த மாதிரியாக அறிவிக்குமாறும், தங்களுக்கு கூறப்பட்டதென அவர்கள் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு இடம்பெறவில்லை எனவும், இது முற்றுமுழுதான பிரசாரம் எனவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்களின் இழப்புகள் குறித்து கேட்கப்பட்டபோது 100 இலும் குறைவானவர்களே இறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எந்தவொரு பொதுமக்களுக்கு எந்தவொரு இழப்புகளும் ஏற்படக்கூடாது என தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அவர்கள் செய்தது போன்று நாம் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை எனவும் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது செய்மதி மூலமான பிரதிமைகளைப் பெற உதவியை பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்கப்பட்டபோது, எங்கிருந்தும் நாங்கள் செய்மதி புகைப்படங்கள் தொடர்பாக உதவியைப் பெற்றிருக்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்தியாவின் தேர்தல் வேளையில் அதாவது ஆறு கிழமைகள் தொடக்கம் பிரபாகரனின் மரணம் வரை இந்தியாவுடனான தொடர்பாடல் எவ்விதம் அமைந்திருந்தது என்று கேட்கப்பட்டபோது, நாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம். ஆரம்பத்தில் அவர்கள் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக கவலையடைந்திருந்தனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார். அவர்கள் ஏதாவது அழுத்தத்தைக் கொடுத்தார்களா எனக் கேட்டபோது, அவ்வாறான அழுத்தம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், நண்பர்கள் மத்தியில் அழுத்தங்கள் இருக்க முடியாது என்று கூறினார்.
நீங்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளீர்கள். சமாதானத்தை எவ்வாறு இப்போது தோற்றுவிக்கப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, முதலாவதாக நாங்கள் அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும். முகாம்களுக்குள் இருந்தவாறு மக்களால் அரசியலைப் பற்றி சிந்திக்க முடியாது உடனடியாக நாம் மேற்கொள்ளப்படவேண்டியது அந்தப் பகுதிகளை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். அப்பகுதிகளில் உள்சார் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர் அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும். இதற்கு 180 நாட்கள் திட்டத்தை வைத்திருக்கின்றோம். அந்த நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். அதற்கான பணத்தை கண்டுபிடிக்கவேண்டும். ஒன்றிரண்டு பில்லியன் தேவைப்படுகிறது. இந்தியா எமக்கு உதவவேண்டும். அவர்கள் அதனைச் செய்வார்கள் என நினைக்கிறேன். மீளக் கட்டியெழுப்ப அவர்கள் உதவவேண்டும்.
தமிழ் மக்களை சமனான பிரஜைகளாக நீங்கள் நடத்துவீர்களா என்றும் உங்களது முறைமையில் சமத்துவம் உள்ளதா எனவும் இப்போது தாங்கள் தோற்கடிக்கப்பட்டதாக அவர்கள் உணர்வதாகத் தென்படுகிறதெனவும் கேட்கப்பட்டபோது எனது பாராளுமன்ற உரையை நீங்கள் பார்த்தால் இனிமேல் இங்கு சிறுபான்மையினர் இல்லையென்று நான் கூறியுள்ளேன். இங்கு இரண்டு வகையான மக்களே இருப்பார்கள். ஒன்று இலங்கையை நேசிப்பவர்கள் மற்றவர்கள் இலங்கையை நேசிக்காதோர். இதுவே மக்கள் மத்தியில் உள்ள வேறுபாடாக அமையும். சகல மக்களும் எனது மக்கள். அவர்கள் தமிழரோ, சிங்களவரோ, முஸ்லிம்களோ மலாயர்களோ, யாராகவிருந்தாலும் அவர்கள் எமது மக்கள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
யாவரையும் தான் சமமாகவே நடத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
1983 இல் இது தொடர்பாக வரலாறு உள்ளது என்று கேட்கப்பட்டபோது, வரலாற்றை நாம் மறந்துவிட வேண்டும். நாம் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் நீங்கள் வேறுபாட்டைக் காண்பிப்பதில்லையா என்று கேட்டபோது, இல்லை, நான் அவ்வாறு செய்யமுடியாது. ஏனெனில், எனது உறவினர்களில் சிலர் தமிழர்கள். எனது பெறாமகள் ஒரு தமிழரைத் திருமணம் செய்துள்ளார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
உங்களது விருப்பத்துக்குரிய கிரிக்கெட் கதாநாயகன் தமிழரான முத்தையா முரளிதரனா என்று கேட்கப்பட்டபோது, எவ்வாறு அதை நான் கூறமுடியும். எனது சொந்த வீட்டிற்குள் அதனை அவ்வாறு கூறமுடியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
சிங்கள மேலாதிக்கவாதம் என்பது யதார்த்தமானதாக இருந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, நான் அதனைக் கூறமாட்டேன். ஏனென்றால், சகல அரசியல்வாதிகளுமே அதனைத் தொடக்கியிருந்தனர் என்று தெரிவித்தார். நீங்கள் கிராமத்துக்குச் சென்றால் தமிழர்களுடன் பேசினால் அவர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அதிகாரத்திற்காக இதனைச் செய்கிறார்கள் என்றும் அதிகாரத்திற்கு வருவதற்கான ஒரே வழியாக அது இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு அந்தமாதிரியாக செயற்படும் நோக்கமில்லை என்று தெரிவித்திருந்த ஜனாதிபதி, முழு நாடுமே தமக்கு வாக்களிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். துரிதமாக தேர்தல் இடம்பெறும் சாத்தியம் பற்றி குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி, நவம்பர் மாதத்தில் அது தொடர்பாக தம்மால் தீர்மானம் எடுக்க முடியுமென்று கூறியுள்ளார்.
நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த முடியுமென்று குறிப்பிட்ட அவர், தேர்தலில் தமிழ் மக்களையும் உள்ளீர்த்துக் கொள்வதை ஏற்கனவே செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன:

தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போர்க் குற்றச் செயல்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன என்று இந்திய ஊடகமான ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட போர்க் குற்றச்செயல்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன.
சுவிற்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மனித உரிமை சபையின் சிறப்பு விவாத்தில் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் பிரித்தானியாவும் டென்மார்க்கும் தீவிரமாக உள்ளன.
சிறிலங்காவுக்கு எதிரான விவாதத்தை மேற்கொள்ளும் பொருட்டு 17 நாடுகளின் ஆதரவுகளை டென்மார்க் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் குறைந்தது 16 நாடுகளின் ஆதரவுகளாவது தேவை.
வன்னிப் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. சபை தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்தே இந்த விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆனால், தனது நட்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், ரஸ்யா, சீனா, கியூபா, எகிப்து, சவூதி அரேபியா, நிக்கரகுவா, பொலிவியா ஆகிய நாடுகளின் ஆதரவுகளுடன் இந்த தீர்மானத்தை முறியடிக்கப் போவதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவிலும் கனடாவிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்வதால் அவர்கள் சிறிலங்காவுக்கு எதிரான தீவிர போக்கை கொண்டுள்ளனர்.
மோதல்களில் சிறிலங்கா படையினர் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை படுகெலை செய்ததாக அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இந்தியா இனியும் நாடகம் ஆடக்கூடாது

* ஆனந்த விகடன் ஆசிரியர் தலையங்கம்
ஈழத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது என்று தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார இதழான "ஆனந்த விகடன்' வலியுறுத்தியிருக்கின்றது.
இது தெடார்பாக "இரக்கமற்ற இறையாண்மை' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இந்திய பாராளுமன்றத்துக்கான தேர்தல் முடிந்து, வாக்குகளை எண்ணிக்கொண்டு இருந்த அதேநேரம், இலங்கை மண்ணில் செத்து விழுந்த தமிழர்களின் சடலங்களைக் கணக்குப் பார்த்துக்கொண்டே முன்னேறியது இலங்கை இராணுவம்.
"முந்தைய தேர்தலை விட வலுவாக வென்றுவிட்டோம்' என்று ஆளும் கூட்டணியினர் இங்கே வெடி போட்டுக் கொண்டாடிய அதேவேளை... "இறுதி வெற்றியை நெருங்கி விட்டோம்' என்று பீரங்கிகள் வெடித்துக் கரும் புகையால் விண்ணை நிரப்பின.
"விரும்பிய இலாகாவைக் கேட்டுப் பெறுவோம்' என்ற மகிழ்ச்சியில் இங்கே இனிப்புப் பரிமாற்றம் தொடங்கிய அதேசமயம், "பிரபாகரனைக் கொன்றுவிட்டோம்' என்று இனிப்பு ஊட்டிக்கொண்டார்கள் சிங்கள மக்கள்! "விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களைப் பிணைக் கைதிகளாக முன்னிறுத்தி யுத்த களத்தில் பலி கொடுக்கிறார்கள் என்று இனிமேலும் இலங்கை அரசு சொல்லமுடியாது.
இனி ஒரே ஒரு தமிழன் அங்கே துப்பாக்கியாலோ பசியாலோ உயிர்நீத்தாலும் அதற்கான முழுப்பொறுப்பும் இலங்கை அரசைத்தான் சாரும் என்று உறுதியான குரலில் இந்தியா உடனே எச்சரிக்கவேண்டும். அது அடுத்த நாட்டு விவகாரம் என்று சொல்லி இனியும் நம் நாடு பதுங்கு குழிக்குள் முடங்கியிருக்கக்கூடாது.
குண்டு மழையால் விளைந்த காயங்களாலும் குடலைச் சுருட்டும் பசியாலும் வாட்டி வதைக்கும் நோயாலும் உயிரோடு செத்துக்கொண்டு இருக்கும் மிச்சம் மீதித் தமிழர்களுக்கான புனரமைப்பில் இந்தியா முக்கியபங்கு வகிக்க வேண்டும்.விரைவில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை பெற்றுத் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும்.
உலக நாட்டுப் பிரதிநிதிகளும் பத்திரிகையாளர்களும் தொண்டு நிறுவனங்களும் அங்குள்ள தமிழர்களை நேரில் சந்திப்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகளை அகற்றுவதும் கூட இந்திய அரசின் பொறுப்புத்தான். இதற்கெல்லாம் இலங்கை அரசை உடன்பட வைக்க முடியாது என்றால் இலங்கையோடு சேர்ந்துகொண்டு இத்தனை நாளும் இறையாண்மை என்கிற பெயரால் இந்திய அரசு இரக்கமற்ற நாடகம்தான் ஆடிக்கொண்டு இருந்தது என்கிற பழிச்சொல் உறுதிபட்டுவிடும்.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
தமிழினப் படுகொலையினது முக்கிய ஆதாரங்களை ஐ.நா. மறைத்து வைத்திருந்தது ஏன்? - இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் கேள்வி

சிறிலங்கா அரசாங்கம் அப்பாவித்தமிழ் மக்கள் மீது ஏவிவிட்டிருக்கும் போரில், உயிர் இழந்தவர்கள் மற்றும் காயப்பட்டவர்களின் எண்ணிக்கையையும, பாதுகாப்புவலயம் மீது இராணுவம் நடாத்திய தாக்குதல்கள் குறித்து ஐ.நா. பிடித்த அந்தரங்க செய்மதிப்படங்கள் போன்ற ஆதாரங்களையும் ஐ.நா. மறைத்தது ஏன் என இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதேபோன்ற தகவல்களை காசாப்பிரச்சினையின்போது உடனேயே வெளியிட்ட ஐ.நா., இலங்கையில் மட்டும் அதை வெளியிடாமல் விட்டதன் நோக்கமென்ன என்பதை இன்னர் சிற்றி பிறஸ், ஐ.நா. செயலாளர் நாயகம், பான் கி மூனை கேட்டுள்ளது. இதற்கு பான் கி மூன் பதில் வழங்காமல், மாறாக இலங்கை அரசாங்கத்துடன் தான் தொலைபேசியில் பேசிய, மக்களைப் போர் வலயத்தில் இருந்து மீட்பது போன்ற விடயங்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. உதவிக்குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பிவைக்க தாமதிப்பதும், தமிழ்மக்களுக்கு நடந்துகொண்டிருக்கும் அவலங்கள் பற்றிய ஆதாரங்களை மறைத்து வைத்திருப்பதும், தமிழ் வட்டாரங்கள் இடையே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மேலும், இலங்கையின் உண்மை நிலவரங்களை ஆராய வேறொரு விசேட பிரதிநிதியை அனுப்புவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டபோது, அதற்கு பான் கி மூன் அவர்கள் அதைப்பற்றி பிறகு முடிவுசெய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
ஐ.நா. பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்படுவது அவசியம்
* வவுனியா அகதி முகாமிலிருந்தவேளை மில்லிபான்ட் கருத்து இலங்கை யுத்தமானது குறிப்பிட்டதொரு பகுதியை பூகோள சமூக ரீதியாக பாதித்துக்கொண்டிருப்பதுடன் ,பரந்துபட்ட விளைவுகளையும் ஏற்படுத்துவதால் இந்த விவகாரம் ஐ.நா. பாதுகாப்புச்சபை நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரிட்டிஷ் அரசாங்கம், இதற்கான முயற்சிகளில் பிரிட்டனும் பிரான்ஸும் அமெரிக்காவும் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை பிரெஞ்சு வெளி விவகார அமைச்சர் பேர்னாட் குச்னருடன் இணைந்து விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் வவுனியாவிலுள்ள அகதிகள் முகாமுக்கு சென்று பார்வையிட்ட வேளையில் அங்கிருந்துகொண்டு பி.பி.சி.க்கு வழங்கிய பேட்டியிலேயே மேற்கண்ட கருத்தை தெரிவித்திருக்கிறார்.
பி.பி.சி.யின் நிருபர் மார்தாகர்ணிக்கு அமைச்சர் மில்லிபான்ட் தெரிவித்திருப்பதாவது;
பாதுகாப்பு வலயமென அழைக்கப்படும் பகுதியானது பாதுகாப்பானதாக இல்லை. அங்கு மோதல் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இனிமேல் அங்கு கடுமையான ஷெல் தாக்குதல் இருக்காது என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அதனை நடைமுறைப்படுத்துவது அவசியம். ஆனால், இது நிச்சயமாக யுத்தத்தை நிறுத்துவதாகும்.
ஐரோப்பிய ஒன்றியமும் ஜி8 நாடுகள் அமைப்பும் இதற்கான அழைப்பை விடுத்திருந்தன. தற்போதைய தருணத்தில் பொதுமக்கள் புலிகளால் அகப்பட்டுள்ளனர். இந்த மோதல் சூன்யப்பகுதிக்குள் இருந்து அவர்கள் வெளியேறவிடாமல் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அரசாங்கம் பொறுப்பை பெற்றுள்ள தொன்றாகும். அது ஐ.நா.வின் ஜனநாயக ரீதியான உறுப்பினரென்ற முறையில் செயற்படுவதற்கும் சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை பிரயோகிப்பதற்குமான தேவைகள் உள்ளது என்று மில்லிபான்ட் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவாக நீங்களும் பிரெஞ்சு அமைச்சர் குச்னரும் சென்றுள்ளீர்கள், இலங்கை அரசாங்கத்திடம் உடனடி யுத்தநிறுத்தம் தொடர்பாக முயற்சிசெய்யவும் வலியுறுத்தவும் சென்றுள்ளீர்கள். அதுதொடர்பாக நீங்கள் எவ்வளவு தூரம் இலக்கை எட்டியுள்ளீர்கள் என்று மார்தாகேர்ணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மில்லிபான்ட் இந்த விஜயத்தின் மூலம் இன்று யுத்தநிறுத்தம் ஏற்படப்போவதில்லை. இந்த நாட்டில் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 25 வருடங்களில் 80 ஆயிரம் பேரை இந்த யுத்தம் பலியெடுத்து விட்டது.
நாங்கள் இங்கு மோதல் பகுதியிலுள்ள பொதுமக்கள் தொடர்பாகவே கவனத்தை செலுத்தியுள்ளோம். உணவுக்கும் நீருக்கும் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு தொடர்பாகவும் விரக்தியான நிலையிலுள்ள மக்கள் தொடர்பாகவே நாம் எமது கவனத்தை செலுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
சர்வதேச அபிப்பிராயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவில்லையா? உங்களைப் போன்ற தூதுக்குழுக்கள் தொடர்பாக சிரத்தை கொள்ளவில்லை என்பது உண்மையான விடயம் இல்லையா?
ஐ.நா.பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேற்றுவதற்கு இது நேரம் இல்லையா? என்று மார்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மில்லிபான்ட் இப்போது முதலாவது தூதுக்குழு அனுமதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வட கிழக்குப்பகுதிக்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை இது கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாம் சரியாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறோமென நான் நினைக்கிறேன். இந்த விடயத்தை கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா.பாதுகாப்பு சபையில் எழுப்பவிருந்தோம்.
இது ஐ.நா.பாதுகாப்பு சபை நிகழ்ச்சி நிரலை சார்ந்த விடயமாகும் இந்த உள்நாட்டு யுத்தமானது பூகோள சமூகம் சார்ந்ததும் பரந்துபட்ட விளைவுகளை ஏற்படுத்துவதாகும். அத்துடன் பாரியளவில் பொதுமக்கள் அவசரமான நிலைமை குறித்ததுமாகும் என்று கூறியுள்ளார்.
போர்க்குற்றங்கள் இங்கு இழைக்கப்பட்டிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இப்போது நிறுத்திவிட்டாலும் இலங்கை அரசு கனரக ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது.
அத்துடன் பொதுமக்களை தமிழ்ப் புலிகள் மனிதக்கேடயங்களாக வைத்துள்ளனர் என்று மார்தா கேள்வி எழுப்பிய போது பதிலளித்த மில்லிபான்ட் உண்மை குறித்து எமக்கு தெரியாது மோதல்பகுதியிலிருந்து பொது மக்களை வெளியேற விடாமல் புலிகள் தடுத்து வைத்து பொதுமக்களின் உரிமைகள் மீறுவது தொடர்பான கேள்விக்கு இடமில்லை. அதேசமயம் மோதல் பகுதிக்குள் கடுமையான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பது குறித்தும் நாம் மிகவும் கவலையடைந்துள்ளோம்.
அங்கு செல்வதற்கு இடமளிக்கப்படவேண்டும் என்பதற்கான ஒருகாரணமானது இதன் மூலம் பொதுமக்கள் நலன்களை மேம்படுத்த முடியும் என்பது மட்டுமல்லாமல் என்ன நடக்கிறது என்பது தொடர்பாக சகல தரப்பினரதும் பதிலளிக்கும் கடப்பாட்டையும் உரிய முறையில் மேம்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் அமைச்சர் மில்லிபான்ட் மேலும் கூறியதாவது;
இலங்கை நிலைவரம் தொடர்பாக உலகம் பூராமுவுள்ள மக்கள் கவலையடைந்துள்ளனர். 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரை இடம் பெயர்ந்துள்ளனர்.
சர்வதேச சமூகத்தின் கவலையானது பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் வெளிப்படுத்தப்பட்டிருப்பது மாத்திரமன்றி வீதிகளிலும் அமைதியான ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றன.
பொது மக்களை பணயக் கைதிகளாக வைத்திருக்க வேண்டாமெனவும் அவர்கள் வெளியேறிச் செல்ல அனுமதி வழங்க வேண்டுமெனவும் புலிகளை நாம் வலியுறுத்துகின்றோம். இது உள்நாட்டு யுத்தம் என்பதையும் பயங்கரவாத அமைப்பானது இலங்கை பூராவும் பஸ்கள், வர்த்தக நிலையங்களில் குண்டுகளை மக்கள் மீது வெடிக்க வைத்திருப்பது குறித்தும் நாம் மறக்கவில்லை. ஆனால், தமிழ் மக்களின் உண்மையான கோரிக்கையானது கண்ணியமான உரிமைகள், உரிய அங்கீகாரம் என்பன இலங்கையில் சமாதானமான வழியில் கிடைக்க வேண்டும் என்பதாகும்.
மிகத் தீவிரமான அரசியல் நெருக்கடியானது பிரதிநிதித்துவம் மற்றும் அங்கீகாரம் பற்றியதாகும். நிச்சயமாக அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் மில்லிபான்ட் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டுமா என்று மார்தா கோர்னி கேட்டபோது, வன் செயல்களை கைவிடுமாறு நாம் அவர்களை கோரியுள்ளோம். ஜனநாயக நாடொன்றில் அரசியல் ரீதியில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு வன்முறையானது ஒரு போதும் வழிமுறையல்ல. இந்த நாட்டிற்கு சர்வதேச சமூகம் தேவையாகவுள்ளது. சர்வதேச சமூகம் அதற்குரிய செயற்பாட்டில் ஈடுபடும் ஆனால், தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்குரிய அங்கீகாரமும் அவர்களின் தேவைகளுக்கான அங்கீகாரமும் ஏற்படுவதை பார்க்க சர்வதேச சமூகம் விரும்புகிறது.
ஐக்கிய இலங்கைக்குள் இவை அமையமுடியும். ஆனால், தெளிவான அரசியல் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டதாக அது இருக்க வேண்டும். மோதலின் பெறுபேறாக இருப்பது இலங்கை அரசு யுத்தத்தில் வெற்றி பெற்றதாக இருக்கக் கூடும். அதே சமயம் சமாதானத்தை இழப்பது அபாயமானதாகும். ஏனெனில், நாம் 25 வருடங்களுக்கும் அதிகமான காலப் பயங்கரவாதத்தை கொண்டுள்ளோம். ஏனெனில், இலங்கை பூராவும் உள்ள தமிழ்ச் சமூகங்கள் அவர்கள் பார்த்ததையிட்டு அதிர்ச்சியும் திகிலும் அடைந்துள்ளனர் என்று மில்லிபான்ட் கூறியுள்ளார்.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
போர் முடிகிறது, அதற்குப் பின்....?

வடக்கில் வன்னியில் நடத்தப்பட்ட போர் முடிவுற்றுவிட்டதாக, விடுதலைப் புலிகள் தோற் கடிகக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர். அதனையொட்டி சிங்களப் பிரதேசங்கள் குதூகலிக் கின்றன. அது இயற்கையானது; எதிர்பார்க்கவேண்டியது.
ஆனால் அடுத்தது என்ன? என்ற கேள்வி நாட்டு நல னில் அக்கறையுள்ள, நிதானமாகச் சிந்திக்கும் பிர சைகளின் மனதில் எழுவது இயல்பு.
அரசியல்வாதி என்பதால், நாட்டு நலனிலும் தமிழ்மக்களின் நலன்களிலும் அக்கறை உள்ளவர் என்ற வகையில், மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் மேற்குறிப்பிட்ட கேள்விக்குப் பதில் காண விழைந்திருக்கின்றார்.
தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பொருத்தமான அரசியல் தீர்வு ஒன்று உடனடியாக முன்வைக்கப்படவேண்டும். அவ்வாறு உகந்த தீர்வு ஒன்று முன்வைக்கப்படாவிட்டால், எதிர் காலத்தில் போர் வேறு வடிவத்தில் வெடிக்கும் என்று எடுத்துக்காட்டியுள்ளார் மனோகணேசன்.
அவர் மட்டும் இதனைக் கூறவில்லை. அரசி யல் விமர்சகர்கள், அரசியல் விவகாரங்களில் ஈடு பாடுடையவர்கள், சர்வதேச அரசியல் நோக்கர்கள் என்று பல தரப்பினரும் இந்தக் கேள்வியைத் தொடுத்துப் பதிலையும் கூறுகின்றனர்.
அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு, அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கு வதாக அமையவேண்டும் என்றும் வலியுறுத் தியிருக்கிறார் மனோகணேசன்.
போர் இப்போது முடிவுக்கு வரலாம். ஆனால் தமிழர் பிரச்சினைக்குப் பொருத்தமான அரசியல் தீர்வு முன்வைக்கப்படாவிட்டால், போர் வேறு வடி வத்தில் மீண்டும் வரும். இன்னுமொரு பிரபா கரன் தோன்றுவார் என்ற யதார்த்தத்தை விளம்பி யுள்ளார் மனோகணேசன். இது அவருக்கு மட்டு மல்ல, நியாயமாகச் சிந்தித்தால் அரசாங்கத் தரப்பில் உள்ளவர்களும் நிச்சயம் இந்தக் கருத்தை யதார்த் தத்தை உணர்வர்.
அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலை மையில் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாகக் கூடிக் கலைந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, மிக மிகக் கஷ்டப்பட்டு, இந்தியாவைச் சமா ளிக்கும் உள்நோக்குடன் மட்டும் தயாரித்த தீர்வு யோசனையும் "அம்போ" ஆகிவிட்ட சங்கதியும் வெளிப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தம் சட்டத்திற்கு அப்பாலான தீர்வு யோசனையை அனைத்துக் கட்சிக் குழு தயாரித்ததாகவும் அதனை ஜனாதிபதி சரிபார்த்துவிட்டார் என்ற தகவலையும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
யோசனையைச் சரிபார்த்த பின்னர், புதிய யோச னையைக் கிழித்து எறிந்துவிட்டார் என்ற தகவல் புதியது. இதுவரை வெளிவராத விடயம். இப்போது அது அம்பலமாகியிருக்கிறது.
75 சதவீதமான சிங்களப் பிரதிநிதிகளையும் 25 சதவீதமான தமிழ்ப் பிரதிநிதிகளையும் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு தயாரித்த தீர்வு யோச னையையே ஜனாதிபதி கிழித்து எறிந்தார் என்றால், இனிப் புதிதாக எந்தவித யோசனையை உட்புகுத்தி தீர்வு நகல் தயாரிக்கப்படும் என்று அர்த்தமுள்ள கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இவ்வேளை இன்னொரு கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது.
இந்தியத் தலைவர்கள், வெறுமனே 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று நம்பகமான அதி காரப் பகிர்வு வழங்கப்படவேண்டும் என்று அடிக்கடி வாய் கிழியக் கத்துகிறார்கள். அவர்களால் போருக்கு உதவ முடியுமே அன்றி அரசியல் தீர்வு ஒன்றுக்கு உதவமுடியாது; உதவ விரும்பவில்லை என்ற நிலைமை இப்போது கலங்கித் தெளிகின்றது. அவ்வாறெனின் போர் முடிந்த பின்னரான காலப்பகுதியில் அரசு முன்வைக்கவுள்ள தீர்வு தமி ழர்களின் உரிமைகளை வழங்குவதாக, அவர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக அமையும் என்று எவ்வாறு எதிர்பார்ப்பது?
போர் முடிந்த பின்னர் அரசியல் தீர்வு பற்றி முயற்சிக்கலாம் என்று ஐ.நா.அதிகாரிகளும் மேற் குலக அரசியல்வாதிகள் சிலரும் அண்மைக் கால மாகக் கூறிவந்தனர். ஆனால்
தமிழ் மக்கள் வன்னியில் மனிதப் பேரவலத் தில் சிக்கியிருந்தபோது அவர்களுக்கு உதவ முடி யாத சர்வதேசம் வக்கற்று நின்கும் சர்வதேசம் தமிழர்களின் உரிமைகள் கிடைக்க உழைக்கும் என்று நம்புவது, காத்திருப்பது, எதிர்பார்ப்பது அர்த் தமற்றதே!
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
தமிழகத்திற்கும் இலங்கைக்கும் 6000 ஆண்டு தொடர்பு

தமிழக வரலாற்றுக்கு அடிப்படையான தொல்லியல் சான்றுகளை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழ்வாராச்சிகள் அளிக்கின்றன. கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவை பண்டைய மன்னர்கள் பற்றியும், அவர்கள் முன்னோர்கள் பற்றியும், மற்றும் அவர்களது வீரச் செயல்கள், நாட்டு பரப்பு பற்றியும் அறிந்து கொள்ள பெரும்பாலும் உதவி செயகின்றன எனலாம்.
நமது வரலாற்றை, வரலாற்றுக்கு முந்தைய காலம் (PRE HISTORIC PERIOD ) மற்றும் வரலாற்றுக் காலம் (HISTORIC PERIOD ) எனப் பிரித்து ஆய்வு செய்கிறோம். பழைய கற்கால மனிதன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, திருவள்ளுர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் அருகில் உள்ள குடியம் குகை மற்றும் அத்திரம்பாக்கம், வடதுரை போன்ற இடங்களில் ஆற்றின் கரைகளிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கற்கால மனிதன் பற்றிய சான்றுக் கிடைத்துள்ளன.
அண்மையில், பூண்டிக்கு அருகில் பரிக்கும் என்ற இடத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வினை மேற்கொண்டது. இங்கு கற்கால மனிதன் கல் ஆயுதங்களை தயாரிப்பதற்குரிய இடமாக (Factory Site ) விளங்கியிருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது. அடுத்து வரும் நுண்கற்காலக் கருவிகள் (Microlithic Tools ) தமிழகத்தின் தென்பகுதியில் "தேரி' எனப்படும் கடற்கரையை ஒட்டிய சிறப்பு நிற மணற்பகுதியிலும், தாமிரபரணி ஆற்றின் கரையிலும் கிடைத்துள்ளன.
கற்கருவிகளின் அமைப்பு ஒற்றுமையை ஆய்வு செய்த பொழுது தமிழகத்திற்கும், இலங்கைக்கும் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு கொண்டிருந்ததை அறிய முடிந்தது. தமிழகத்தில் திருத்தங்கள், டிகல்லுப்பட்டி, தேரிருவேலி, மாங்குடி, மயிலாடும் பாறை போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் மூலம் இக்கால பண்பாடு பற்றி அறிய முடிகிறது.
மனிதன் முதலில் உணவினை சேகரிக்க தொடங்கினான். பின் ஓரிடத்தில் நிலையாகத் தங்கி உணவு உற்பத்தி செய்ய தொடங்கிய மனித நாகரிகத்தின் வளர்ச்சியை புதிய கற்காலத்தில் (Neolithic Age ) காணலாம். தமிழகத்தில் தர்மபுரி, சேலம், வேலூர் போன்ற மாவட்டங்களில் புதிய கற்கால பண்பாட்டுக்கான சான்றுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன.
பைம்பள்ளி, அப்புக்கல்லு, மல்லப்பாடி, குட்டூர் மலை, மோதூர் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் புதிய கற்காலத்தைச் சேர்ந்த மனிதன் வாழ்ந்த வீடு, பயன்படுத்திய கற்கருவிகள், முதன் முதலாக கைகளால் செய்த பானைகள், விளைவித்த தானியங்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
மனித சமுதாயத்தின் உன்னத வளர்ச்சியை அடுத்து வரும் உலோகக் காலத்தில் காண்கிறோம். இதை இரும்புக் காலம் (Iron Age) என்றும் அழைப்பர். இக்காலத்தின் சிறப்பினை அறிந்து கொள்ள ஈமச்சின்னங்களிலிருந்து கிடைக்கும் சான்றுகளால் அறிய முடிகிறது. இறந்த மனிதனை புதைத்து அந்த இடத்தில் வட்ட வடிவமாக பெருங்கற்களை வைத்து விடுவர்.
இதை பெருங்கற்காலம் (Megalithic Age) எனவும் அழைப்பர். இக்கால ஈமச் சின்னங்களில் கல் திட்டை, கற் குவை, முதுமக்கட் தாழி போன்ற பல வகைகள் காணப்படுகின்றன.தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இத்தகைய ஈமச்சின்னங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சானூர், குன்றத்தூர், சித்தன்னவாசல், மோட்டூர், கல்லேரி மலை, தாண்டிக்குடி, கொடு மணல் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் வழியே உலோக கால மக்களின் வாழ்க்கையைப் பற்றி அறிய முடிந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம் தாண்டிக்குடி பகுதியானது சங்க காலத்தில் வாழ்ந்த, புறநானூற்றுப் பாடல் (399) குறிப்பிடும் "தோன்றிக்கோன்' மற்றும் "கோடைப் பொருநன்' ஆகியோருடன் தொடர்பு படுத்தப்படுவது சிறப்பானது. ஈரோடு மாவட்டம் "கொடுமணல்' என்ற ஊரில் நடைபெற்ற அகழாய்வு மிகவும் முக்கியமானது.
தமிழ் இலக்கியமான திற்றுப்பத்து குறிப்பிடும் "கொடுமணம்' என்ற ஊரே இன்று கொடுமணல் என அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற ஆதிச்ச நல்லூர், கோவன்பொட்டல், அமிர்தமங்கலம் போன்ற இடங்களில் நடைபெற்ற முதுமக்கட் தாழிகளின் ஆய்வு தொடர்பான அகழாய்வுகள் பல அரிய சான்றுகளை தந்துள்ளன. அடுத்து வரும் சங்க காலத்தில், தமிழகத்தின் பண்பாட்டுச் சிறப்பினை எடுத்துக் கூறும் பல இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. திருநெல்வேலி மாவட்டம் "மாங்குடி' என்ற ஊரில் அகழாய்வு கடந்த 2002 ஆம் ஆண்டில் நடைபெற்றது. "மதுரைக் காஞ்சி'யின் ஆசிரியரான மாங்குடி மருதனார் பிறந்து சிறப்பித்த ஊர் இதுவே ஆகும்.
இங்கு கிடைத்த தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், படகு குறியீடு பொறிக்கப்பட்ட பானைகள், காசுகள் போன்றவை இவ்வூரின் தொடர்ச்சியான தொன்மைச் சிறப்பினை அறிய அகழாய்வு பெரிதும் உதவியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் "தேரிருவேலி' என்ற ஊரில் நடைபெற்ற அகழாய்வில் "நெடுங்கிள்(ளி)' என்று சங்க கால மன்னன் பெயர் பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. சில நேரங்களில் அகழாய்வுகளின் மூலம் அவ்வூரின் தொன்மைச் சிறப்பினை அறிய இயலும். ராமநாதபுரம் மாவட்டத்தின் வைகையாறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ள "அழகன்குளம்' என்ற ஊரில் அகழாய்வில் கிடைக்கப் பெற்ற ரோமானிய காசுகள், எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சங்கு வளையல்கள், ரோமானிய பானை ஓடுகள் போன்றவை இவ்வூர் ஒரு தொன்மையான துறைமுகப் பட்டினம் ஆக இருந்திருக்க வேண்டும் எனக் கருத முடிந்தது.
மேலும், மாமல்லபுரம் அருகே வசவசமுத்திரம், மரக்காணம், தொண்டி, பூம்புகார், பெரியபட்டிணம் போன்ற அகழாய்வுகள் மூலம் கிழக்கு கடற்கரையில் வணிகச் சிறப்பினை அறிய முடிந்தது. பூம்புகாரில் கோவா ஆழ்கடல் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப் பெற்ற ஆழ்கடல் அகழாய்வு மூலமாக பூம்புகாரில் கடல் கொண்ட பகுதிகளைப் பற்றி அறிய முடிந்தது சிறப்பானது.
பல்லவ மன்னர்களின் காஞ்சிபுரம், மாமல்லை ஆகிய இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மாமல்லபுரத்தில் படகுத் துறை, சங்ககால முருகன் கோவில் போன்றவை வெளிபடுத்தப்பட்டன. சோழர் கால கோவில்கள் இருக்கின்றன. அகழாய்வில் கிடைத்த தொல்லியல் கலைப் பொருட்கள் கங்கை கொண்ட சோழபுரம் வரலாற்றுக் காட்சியகத்தில் உள்ளன. மேலும், சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கிய பழையாறை, தாராசுரம், போசள மன்னர்களின் தலைநகராக விளங்கிய கண்ணனூர் (சமயபுரம் அருகில்) சம்புவராயர்களின் தலைநகரான படைவீடு ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அரிய வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் இதுவரை 100 க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்றாலும், சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள ஊர்கள், சங்க கால மன்னர்களைப் பற்றி குறிக்கும் கல்வெட்டுகள் உள்ள இடங்கள், தொன்மைச் சிறப்பு வாய்ந்த பொதிகைமலை, கொல்லி மலை போன்ற ஊர்களில் கள ஆய்வு மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ளலாம்.
இதுவரை நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த தொல்லியல் சான்றுகள், பானை ஓடுகள், எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கலைப் பொருட்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்து ஒப்பிட்டு நோக்கி ஆய்வினை மேற்கொண்டால் தமிழக வரலாறு உரிய சான்றுகளுடன் மேலும் செம்மை அடையும் என்பதில் ஐயமில்லை!
தினமலர்
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
காலம் கடந்த ஞானமா, தேர்தல் நாடகமா?

தமிழகத்தில் இப்போது உருண்டு திரண்டிருக்கும் ஈழத்தமிழர் ஆதரவு அலையை முதலாக்கிக் கொண்டு, அங்குள்ள அரசியல் தலைவர்கள் பல அரசியல் அசிங்கங்களைக் கட்டவிழ்த்து விடும் சாத்தியம் குறித்து இரண்டு நாள்களுக்கு முன்னர் இப்பத்தியில் எழுதியிருந்தோம். இப்போது என்னவென்றால், தமிழகத்து மக்களிடம் எழுந்துள்ள ஈழத்தமிழர் ஆதரவு அலையை, மத்தியில் புதுடில்லியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கையில் வெண்ணெய்யாக எடுத்து உண்டு களிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி திட்டம் போடுவது வெளிப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் அவருக்கு ஆதரவாகவுள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் தமது காங்கிரஸ் கட்சியும் சேர்ந்த கூட்டணி மொத்தம் உள்ள 39 ஆசனங்களையும் கைப்பற்றினால், வேறு மாநிலங்களில் தொய்வு ஏற்பட்டாலும், மத்தியில் அரசை அமைப்பதற்கு பேருதவியாக இருக்கும் என்ற கணக்கை அவர் போட்டிருக்க வேண்டும்.
ஆதலால், தமிழகத்தில் கருணாநிதியின் தரப்பு தடக்கியேனும் விழுந்துவிடக்கூடாது என்று சோனியா எண்ணுகிறார். முதலமைச்சர் கருணாநிதிக்கு அவர் இம் மாதம் முதலாம் திகதி எழுதிய கடிதத்தின் உள்நோக்கம் அதுவே என்பதை எந்தச் சாமானியனும் ஊகித்துக் கொள்வான்; புரிந்து கொள்வான்!
இலங்கையில் முல்லைத்தீவில் தமிழர்கள் அனுபவிக்கும் மனிதப்பேரவலத்தைத் தடுக்க உதவு மாறு திராவிட முன்னேற்றக் கழகம் கேட்டதும், நாடாளுமன்ற எம்.பி. பதவிகளை இராஜினாமாச் செய்யப் போவதாக கடிதம் எழுதிக் கருணாநிதியிடம் கையளித்ததும் ஆறு மாதங்களுக்கு முந்தி அரங்கேறிய காட்சிகள்.
அதோ பார், இதோ பார், புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் அரசு இலங்கை அரசு மீது அழுத்தம் போட்டு போர் நிறுத்தத்தை கனவாக அன்றி நனவாக்கிவிடும் என்ற கலைஞரின் பம்மாத்துத் தொடங்கியது கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் பதின்நான்காம் ஆம் திகதி என்பது இப்போது ஆவணப்பதிவாகிவிட்டது. அவ்வளவுதான்!
புதுடில்லி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை தமிழக எம்.பிக்கள் 39 பேரும் பூண்டோடு இராஜினாமாச் செய்வர். அவ்வாறு செய்வது தெரிந்தால் காங்கிரஸ் அரசு விழுந்தடித்துக் கொண்டு இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய அழுத்தம் கொடுக்கும் என்று கதைகள் அளக்கப்பட்டன.
ஆறு மாதங்கள் கடந்து விட்டன. போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசிடம் நேரடியாகச் சொல்லாமல், எழுத்தில் உத்தியோகபூர்வமாக இடித்துக்கூறாமல், உள்நோக்கம் கருதிய இலக்கு ஒன்றை வைத்துச் செயற்பட்டு ஈழத்தமிழினம் அழிந்து கொண்டிருப்பதற்கு மனிதப்பேரவலத்தை அனுபவிப்பதற்கு பின்னணியில் உதவிக்கொண்டு காலத்தைப் போக்கிய பின்னர் போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா தம்மிடம் கேட்கவில்லை என்றும் போரில் வெற்றியீட்டுவதற்கு இந்தியா பல உதவிகளைச் செய்தது என்றும் கொழும்பில் அரசாங்க அமைச்சர்கள் பலரும் பகிரங்கமாகக் கூறிய பின்னர்
இப்போது புதிதாகக் கதை அவிழ்க்கிறார் இப்போதைய காங்கிரஸ் அரசின் இயக்குநர், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி.இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற உடனடிப் போர் நிறுத்தம் அவசியம். அங்கு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இந்திய அரசு இலங்கையை வலியுறுத்தும்
அங்கு நடைபெற்று வரும் போரின் காரணமாக அங்குள்ள தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவித் தமிழர்கள் அனுபவித்து வரும் துயரங்கள் நம்மை மிகுந்த கவலை அடையச் செய்திருக்கின்றன
அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களைப் பேணவும் தேவையான முயற்சிகள் அனைத்தையும் இலங்கையின் அதிகார வர்க்கம் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்
இந்திய அரசு பல்வேறு வகையான கருத்துகளுடன் தொடர்பு கொண்டு வருகின்றது. குறிப்பாகப் போர் நிறுத்தத்தைப் பற்றியும் தொடர்பு கொண்டு வருகிறது. போர் நிறுத்தம் ஏற்பட்டால் தான் அப்பாவி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயரமுடியும் என்றவாறு சோனியா காந்தி அம்மையார் தமிழக முதல் வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கடிதத்தை வாசிக்கும் எவருக்கும் சோனியா தாய் அன்பும் இரக்க உணர்வும் பொங்க இந்தக் கடிதத்தை எழுதியிருப்பதாகவே எழுந்தமானத்தில் தோன்றும்.
எனினும் இது காலம் பிந்திய ஞானம் என்ற வாசகத்துக்கே மிகப் பொருந்துகிறது. காங்கிரஸ் ஆட்சி பீடத்தில் இருந்தபோது (இப்போது இருப்பது காபந்து அரசாங்கமே) உறுதியாகவும், நல்விளைவை நோக்கிய தாகவும் இந்தக் கருத்தை வெளியிட்டு, எழுத்தில் உள்ளது போலவே செயற்படுத்தி இருந்தால் அவர் இப்போது "கழிவிரக்கக் கற்பனை" செய்வதுபோன்று நல்லது நடந்தேறி இருக்கலாம்.
குதிரை லாயத்தை விட்டு ஓடியபின்னர் அதனைப் பூட்டியதுபோன்ற இப்போதைய விருப்பமும் முயற்சியும் தமிழகத்தில் தமது கட்சிக்கும் கருணாநிதி கட்சிக்கும் வாக்கு வங்கிகளைப் பலமாக்குவதற்கான துரும்புச் சீட்டு என்றே கொள்ளமுடியும்.அவ்வாறில்லை எனினுங்கூட காலம் பிந்திய ஞானம் செயலுருப்பெறும் சாத்தியம் உண்டா என்றால், அப்போதும்கூட பாதகமான பங்கே தராசில் கீழே தாழ்ந்து நிற்கும்!.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
அகதிகளின் நடமாடும் சுதந்திரம் ?????

வவுனியாவில் அரசாங்கம் அமைத்துள்ள நலன்புரி நிலையங்களில் அகதி முகாம்களில் உள்ள நிலைமைகளை வெளிப்படுத்த அரசாங்கம் விருப்பம் கொண்டிருக்கவில்லை. ஆனால், அங்குள்ள மக்களை சர்வதேச நியமங்களுக்கு ஏற்பக் கவனிக்காவிட்டால், அவர்களின் நலன்கள் பேணப்படாவிட்டால், ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் நிதியுதவிகளை நிறுத்த நேரிடும் என்று வெளிவந்த அறிவித்தலைத் தொடர்ந்து அரசாங்கம் உசார் அடைந்திருப்பதை அவதானிக்கமுடிகிறது.
வன்னியில் இருந்து முல்லைத்தீவில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வரும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அகதிமுகாம்கள் சர்வதேசதரத்துடன் இருக்கவேண்டும் என்று இம்மாத மத்தியில் கருத்துத் தெரிவித்திருந்தார் ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ்.
அந்த எச்சரிக்கை வந்த பின்னர், அரசாங்கமும் அமைச்சர்களும் அதிகாரிகளும், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் அகதிகளாகக் தஞ்சம் அடைந்துள்ள தமிழ்மக்களை தாம் நினைத்தவாறு, தமது மனம்போன போக்கில் பராமரிக்க இயலாது என்று எண்ணி இருக்கவேண்டும்.
அதனால் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களை ஏற்பாடு செய்யப்பட்ட விஜயத்தில் அழைத்துவந்து, எல்லாம் நல்லனவாகவே, சர்வதேச மட்டத்தில் எதிர்பார்க்கப்படும் விதிமுறைகள் நியமங்களுக்கு ஏற்பவே நடை பெறுகின்றன என்று "நிறம்பூசி"க் காட்டப்பட்டது. வெளிநாட்டு ஊடகங்களின் பிரதிநிதிகள் பலரும் தாம் அங்கு சென்றவேளை சீர்ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலைமைகளைப் பார்த்துவிட்டு திருப்திகரமான தகவல்களை வெளியிட்டிருந்தார்கள். அவற்றால் அரசாங்கத் தரப்புகளின் மனங்கள் "குளிர்ந்த" போதிலும் சிலர் உண்மையான, அங்கு நிலவும் யதார்த்தமான நிலமையை வெளிப்படுத்தாமல் இல்லை.
குறிக்கப்பட்ட சார்பு நிலை அறிக்கைகள், செய்திகளின் மத்தியிலும் மறு பக்கங்களும் திட்டுத் திட்டாக வெளிவந்தன, வந்துகொண்டிருக்கின்றன.
நலன்புரி நிலையங்களைப் பராமரிப்பதற்குத் தேவைப்படும் நிதியைப் பெறுவதற்கு அவை குறித்து மினுமினுக்கும் அறிக்கைகள் தேவை என்பதனை மனித உரிமைகள் அமைச்சரும் அரசாங்கமும் நன்றாகப் புரிந்துகொண்ட நிலையில்
ஊடகவியலாளர்களை மட்டுமன்றி சர்வதேச தொண்டு அமைப்புக்களின் நற்சான்றுப் பத்திரங்களையும் பெற்றுக் கொண்டால் தமது பக்கம் நிமிர்வுறும் என்ற "கணக்கோடு"
சர்வதேச மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் வவுனியா அகதி முகாம்களுக்கு விஜயம் செய்து பார்வையிட அனுமதி வழங்கி வருகிறது.
அந்த வகையில், செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் ஐரோப்பிய அலுவலரான எஸ்கோ ஹென்ட்ரஸ் கின்ஸ்கிஜ் வவுனியா நலன்புரி நிலையங்களைப் பார்வையிடுவதற்கு அரசாங்கம் அவருக்கு விசேட அனுமதி வழங்கியிருந்தது.
கின்ஸ்கிஜ் புதுடில்லியில் வெளியிட்டிருக்கும் தகவல் கருத்து உண்மைநிச்சயமாக அரசுக்கு ஓர் "அதிர்ச்சி வைத்தியம்" என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
வவுனியா அகதிமுகாம்களில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையினர் தங்கவைக்கப்பட்டுள்னர். சுகாதாரம், சுற்றாடல், நிலைகளில் மோசமான பிரச்சினைகள் காணப் படுகின்றன .
அகதி முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஏராளமான இராணுவத்தினர் காணப்படுகின்றனர். இடம்பெயர்ந்த அகதிகள் வெளியேசென்றுவர அனுமதி வழங்கப்படுவ தில்லை. சுதந்திரமாக நடமாடுவதற்கான சூழ்நிலையும் காணப்படவில்லை என்று
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் வைத்து கின்ஸ் கிஜ் தாம் பார்த்ததை, உண்மையைக் கூறியதைக் கேட்டதும் அரசாங்கத் தரப்பினருக்கு உடன் ஒவ்வாமை (அலர்ஜி) உண்டாகியிருக்கும்.
இன்றோ நாளையோ மறுப்பு அறிக்கையொன்று சாதகமான பிரசார உக்திகளுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். அதுமட்டுமன்றி, ஜோன் ஹோம்ஸ் போலவே இவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று விமல் வீரவன்ச "ரெடிமேட்" முத்திரை குத்தி விடுவார்!
வன்னியில் உலக உணவுத் திட்டமும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவும் மட்டுமே பணியாற்ற இப்போது அனு மதிக்கப்பட்டிருக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஆகும். குறிப்பாக அளப்பரிய மனிதாபிமான சேவைகளை ஆற்றிவருகிறது செஞ்சிலுவை ஐ.சி.ஆர்.சி.
அது தெற்கின் பலரின் கண்களைக் குத்தியிருக்கும். இதோ ஒரு சந்தர்ப்பம் வந்துவிட்டது, விட்டுவைக்கலாகாது, என்று எண்ணிக்கொண்டு கணக்குப்போட்டு செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவை வன்னியில் இருந்து வெளியேற்றவேண்டும் என்ற சுலோகம் ஏந்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இடமில்லை!
அகதி முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஏராளமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதும், அகதிகள் வெளியே செல்வதற்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கான சூழ்நிலையும் இல்லையென்று கின்ஸ்கிஜ் கூறியிருப்பதும் கவனிக்கப்படவேண்டியவை.
மனிதாபிமான அடிப்படை உரிமைகளில் மிகுமுக்கி யமானவற்றில், இன்றியமையாதவற்றில் நடமாடும் சுதந்திரமும் ஒன்று. உறவினர்கள் அகதி முகாம்களில் தங்கியிருப் போரை சந்திப்பதற்கு அனுமதித்தால் விடுதலைப் புலிகள் அதனைப் பயன்படுத்தி அங்குசென்று குண்டுத் தாக்கதல் நடத்துவார்கள் என்று அரச தரப்பில் ஒரு காரணம் காட்டப்பட்டது; நியாயம் தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று அகதிகளின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான தடைக்கும் அரச தரப்பினர் ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறக்கூடும்; கூறுவர். ஆனால் ஒருவரின் நடமாடும் சுதந்திரம் தடுக்கப்படுவது அவரது அடிப்படையான வாழ்வுரி மையை மறுப்பது என்பதனை கருத்திற்கொண்டு, அரசு தனது நோக்கையும் போக்கையும் மாற்றிக்கொள்ளுமா?
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
அதியுச்ச மயான பயங்கரத்தை எட்டும் இலங்கைப் போர்: மனித உரிமை போராளி அருந்ததி ராய்
சுற்றும் புறமும் மயான மெளனம் காக்கும் காரணத்தையே சாதகமாக்கிக்கொண்டு அதி பயங்கர உலுக்குங்கொடுமையொன்று இலங்கையில் நிகழ்ந்தே விடும் சாத்தியத்தில் இருக்கிறது. உலகப்புகழ்பெற்ற எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான அருந்ததி ராய் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலகப்புகழ்பெற்ற எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான அருந்ததி ராய் இந்திய நாளேடான டைம்ஸ் ஒஃப் இன்டியா இதழில் எழுதியுள்ள ஆய்வில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதன் முழுவடிவம் இதோ:-
அனேகமாக அங்கே நடக்கிற இந்த பாரிய கொடுமைகள் பற்றி இந்திய ஊடகங்கள் வாயே திறப்பதில்லை என்றால் உலக ஊடகங்களும் இவ்விசயத்தில் இவற்றிற்கு
சளைத்தவைகளாக இல்லை. ஏன் இந்த அதர்ம மெளனம்?. இது மிகவும் கவலைக்குரியது.
மெல்லக்கசிந்துவரும் தகவல்கள் புலப்படுத்துவது யாதெனில் இலங்கை அரசு "பயங்கரவாதத்துக்கெதிரான போர்" என்ற தொனியில் நாட்டின் மொத்த ஜனநாயக
கட்டமைப்புக்களையும் உடைத்து நொருக்கிவிட்டு தமிழ் மக்களுக்கெதிரான சொல்லவொண்ணாத கொடுமைகளை தாராளமாக நிகழ்த்திகொண்டிருக்கிறது.
தாங்களே தங்களை நிரூபித்துக்காட்டும்வரை தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே என்னும் கொள்கையுடன் அவர்களின் வாழ்விடங்கள், மருத்துவமனைகள், தஞ்சமடைந்த தலங்கள் என பேதமின்றி குண்டுமழை பொழிந்து யாவற்றையும் போர்க்களமாக சிதைத்து வைத்திருக்கிறது.
200,000-க்கும் மேலான மக்கள் இத்தகு அவலக்களங்களில் சிக்குண்டுள்ளார்கள் எனவும் அவர்களை நோக்கி பல்குழல் உந்திகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் தரித்து வானூரும் படையுதவ இலங்கை இராணுவம் முன்னேறிக்கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடயில் இடம்பெயரும் மக்களை குடியமர்த்த மன்னாரிலும் வவுனியாவிலும் "நலன்புரி இல்லஙகள்" அமைத்திருப்பதாக அரசு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவ்வகை மையங்கள் யாவும் உயிருக்கு பயந்து தப்பிக்க நினைத்த மக்களை பலவந்தமாக தடுத்து அடைத்து வைக்கப் பயன்படும் வதை மையங்கள் எனவும். இந்தக்கொடும் வதை மையங்களுக்கு அரசு சூட்டியுள்ள கவர்ச்சிப்பெயர் தான் "நலன்புரி மையங்கள்' என டெய்லி டெலெக்ராஃப் நாளேடு(ஃபெப் 14,2009) சுட்டிக்காட்டுகிறது.
அதே டெய்லி டெலிக்ராஃப் நாளேட்டில் இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கூறுகையில்" அரசு சில மாதங்களுக்கு முன் கொழும்பில் வசித்து
வரும் அத்தனை தமிழர்களின் விவரங்களையும் பதிவு செய்தது, இந்த நடவடிக்கைகள் நாஜிகள் 1930-ல் நடத்தியதியதைப்போன்று ஒரு கொடும் நோக்கத்துடனேயே நடந்துள்ளன. அவ்வாறு பதியப்பட்ட விவரங்களைக் கொண்டே அவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என எதிர்காலத்தில் அறிவிக்கும்
நோக்கிலேயே இப்பதிவானது நிகழ்த்தப்பட்டிருக்கிறது" என்றார்.
புலிகளை ஒழித்துக்கட்டுவது என்ற போக்கில் புலிகளோடு சேர்த்து உடனுறையும் இலட்சக்கணக்கான மக்களையும் கொலைபுரியும் கொடும் மதி நோக்கில் முழுவளவிலான இனப்படுகொலையை நடத்தி முடித்திடும் ஏற்பாட்டின் கடையெல்லையில் நிற்கிறது இலங்கை அரசு.
பல்லாயிரகணக்கில் மக்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் ஐ. நா கூறுகிறது. நேரில் பார்த்த ஒரு சில சாட்சிகளோ நரகத்தின் கொடுங்கனவே அங்கு நிகழ்வதாக பதைத்தோய்கின்றனர் . இவ்வாறு நேரில் பார்க்கப்படுவதுவுமாக, செய்திகளாய் கேட்கப்படுவதுமாக,முழு உலகின்
கண்களையும் திறமையாக மறைத்து அந்த நாட்டில் நடத்தப்படுவது பச்சையான, வெளிப்படையான பேரினவாதப்போரேதான்.
தண்டிக்கப்படும் பயம் ஏதுமின்றி தமிழ் மக்களின் மேல்கட்டவிழ்த்துவிடப்படும் இத்தகைய கொடுங்குற்றங்கள் மற்றும் அநீதிகள் தமிழர்களின் மீது சிங்களவரின் அடிமனத்தில் புதைந்து கிடக்கும் வெறுப்பையும் காழ்ப்பையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன். இதே காழ்ப்புண்ர்வுகள்தான் முதற்கட்டமாக தமிழ் மக்களின் உரிமையை மறுத்து அவர்களை ஒதுக்கி அந்நியயப்படுத்தக் காரணமாக இருந்தன. இப்பேரினவாதம் சமூக வெறுப்புகளில் தொடங்கி பொருண்மிய மறுப்புகளாக வளர்ந்து திட்டமிட்ட படுகொலைகளாகவும் சித்திரவதைகளாகவும் ஒங்கி நின்றது.
அமைதிவழியில் அஹிம்சைப் போராட்டமாக தொடங்கி இன்று உச்சக்கட்ட ஆயுதப்போராக வெகுண்டிருக்கும் இந்த யுத்தம் மேற்சொன்ன பேரினவாததில்தான்
வேர்பிடித்தது என்றால் அது சாலவும் உண்மை. நம் அண்டையில் இவ்வன்கொடும்செயல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது இந்திய மக்கள் மத்தியில் ஏன் இந்த கண்டுகொள்ளாத மயான மௌனம்?!.
இன்னொரு செவ்வியில் இலங்கையில் சுதந்திர ஊடகம் என்ற ஒன்று முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு இல்லாத ஒன்றாக (Non-Existent) ஆக்கப்பட்டுவிட்டது என
வெதும்புகிறார் சமரவீர. இது பற்றியான (ஊடக சுதந்திரம்) துளி கவலை கூட இந்தியாவில் பரவவேயில்லையே?! மேலும் கொலைப்படையணிகள்(Death Squads) பற்றியும் வெள்ளை வான் கடத்தல்கள்(White Van abductions) பற்றியும் ஆன கலவர நிலவரங்களை பற்றியும் சமரவீர பேசுகிறார். அனர்த்தஙளை எதிர்த்த தலைவர்கள்,அநியாயங்களை
தட்டிகேட்ட ஊடகவியலார்கள் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் கதை முடிக்கப்பட்டுவிட்டார்கள். ஒட்டு மொத்த சமூகமும் உயிர் பயத்தில் உறைந்து
போயிருப்பதாக அவர் கூறுகிறார்.
மேலும் பயரங்கரவதத்துக்கெதிரான கறுப்பு சட்டங்கள்,காணாமல் போகச் செய்தல், படுகொலைகள் ஆகிய ஒருங்கிணைந்த மிரட்டல்கள் மூலம் இலங்கை அரசு
ஊடகவியலாளரின் குரல்வளைகள் நெரிப்பதாக அகில உலக ஊடகவியலார் அமைப்பு குற்றம் சாட்டுகிறது.
இதேவேளை இந்திய அரசு ஆயுதங்களையும் தளபாடங்களையும் கொடுத்து மேலும் கொள்ளல் மற்றும் வினியோக பணிகளில் உற்றுதவிவருவதாயும் கண்காணிப்பு மற்றும் தொழினுட்பங்கள் வழங்கி இலங்கையின் மேற்சொன்ன அத்துமீறல் மற்றும் மனித குலத்துக்கெதிரான போர்க்குற்ற்ஙக்ளுக்கு பங்குதாரர்கள் திகழ்வதாகவும்
அறியப்படுகிற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன். அவை உண்மையாயின் மரபழிந்த, கீழ்மை தங்கிய, பழி சுமக்கும், கொடூர செயல்களாக
குறிக்கப்படும்.
பாகிஸ்தானும், சீனாவும் கூட போட்டி போட்டுக்கொண்டு இந்த தகாத பாதக செயல்களுக்கு துணைபோவதை எப்படி ஜீரணிப்பது. இந்தப்போரின் தாக்கத்தால் தமிழ்நாடு தன் உறவுகள் கேட்பாரின்றி அழிக்கப்படுவதில் கொதித்து குமுறியதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் தம்மைத்தாமே தீயிட்டு எரித்து மாய்ந்திருக்கின்றனர்.உண்மையான உள்ளக்கொதிப்பும் உணர்வுகளும் மதிக்கப்படாமையினால் அடங்காத கொதிப்பு தேர்தலில் முக்கிய காரணியாக ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது
இந்நிலை பற்றி சற்றும் கரிசனமோ கவலையோ இந்த நாட்டின் ஏனைய பகுதியில் பரவாதது ஆச்சரிய அசாதாரணம்!. இங்கு யாரும் வெள்ளை வானில்
கடத்தப்படுவதில்லையே பிறகேன்?.இந்தப்பிரச்சனையை பேசினால் அப்படி என்ன ஆகிவிடும்?
இலங்கையிலே நடக்கின்ற கொடும்செயல்களின் தன்மையையும் மிகப்பெரும் தாக்குதல்களையும் மனிதப்பேரவலங்களையும் உணர்கிறபோது இந்த நாட்டில்
நிலவுகிற மௌனம் மன்னிக்க முடியாதது. அதிலும் கடந்த காலங்களில் இலஙகை தமிழ் மக்களின் வாழ்வியல் பிரச்சனயில் இவர்கள் இப்பக்கம் அப்பக்கம் என தாவித்தாவி பொறுப்பே இல்லாமல் இழைத்த சேதாரஙகளும் மன்னிக்க முடியாதவை.
இதே வேளையில் நிறைய பேசி செயல்பட்டிருக்கவேணடிய என்னைப்போன்ற பலரும் கூட போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை என்ற அற்ப காரண்த்தினாலேயே
ஏதும் செய்யாமல் இருந்தது வேதனையானது.
ஆக அருகில் உள்ள ஒரு நாட்டில் ஆயிரக்கணக்கில் படுகொலைகள் நடந்துகொண்டிருக்கிறபோதும், பத்தாயிரக்கணக்கில் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு வதைக்கப்படுகிறபோதும். மேலும் 200, 000-க்கும் அதிகமான மக்கள் பட்டினியை எதிர் நோக்கும்போதும், எந்த நிமிடமும் அவர்கள் மீது பாரிய - Show quoted text -
இனப்படுகொலை நிகழ காத்திருக்கும்போதும் பேசாத கவலைப்படாத, பதைக்காத பரிதாபப்படாத பிணம் போன்ற ஒரு அமைதி, மௌனம் கடைப்பிடிக்கப்படுகிறது
இந்தப்பெரு நாட்டில். இது மாபெரும் மனிதப்பேரவலம். ஒரு கணம் கூட தாமதம் ஆகாது.உலகம் இதில் உடனே தலையிட வேண்டும்.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
நக்கீரனுக்கு மிரட்டல்:பத்திரிக்கையாளர்கள் கண்டனம்
இலங்கையில் உள்நாட்டுப்போரை தொடர்ந்து அங்கு அப்பாவிகள் கொல்லப்பட்டும் மனித உரிமைகள் மீறப்பட்டும் வருகிறது.
தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதை கண்டித்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் அனைத்து பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 4மணியளவில் நடந்தது.
100க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் இதில் கலந்துகொண்டனர். ராஜபக்சேவுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்ட முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1,இலங்கையில் போரை எதிர்த்து எழுதியதாக கொலை செய்யப்பட்ட 16 பத்திரிக்கையாளர்கள் மரணம் குறித்து ஐநா மன்றம் விசாரிக்க வேண்டும்.
2, இலங்கையில் மக்கள் தொலைக்காட்சி மற்றும் தமிழன் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
3, ராஜபக்சேவை விமர்சித்து நக்கீரன் பத்திரிக்கையில் வெளியான முகப்பு அட்டை குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக சென்னையில் இயங்கும் இலங்கை துணைத்தூதரர் அம்சா மிரட்டல் அனுப்பியதை வன்மையாக கண்டிப்பததோடு அக்கடிதத்தை திரும்பப் பெற வேண்டும்.
5, உதயன் நாளிதழ்,சுடரொளி நாளிதழ் ஆசிரியர் வித்யாதரனை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் சிறிலங்கா : தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் கண்டனம்
அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டிய கடமை சர்வதேச சமூகங்களுக்கு உண்டு. ஜனநாயகப் படுகொலைகளைச் செய்யும் சிறிலங்கா அரசை கண்டிப்பான முறையில் சர்வதேச நாடுகள் அணுக வேண்டும் என 'ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர்' மன்றம் கூறியுள்ளது.
'ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர்' மன்றத்தின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்களான டி.அருள்எழிலன், சரவணன் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
இலங்கையில் எழுந்துள்ள போர்ச்சூழல் என்பது அங்கு வாழும் தமிழ் மக்களின் இயல்பான சமூக வாழ்வை முற்றிலுமாக சீர்குலைத்திருப்பது நீங்கள் அறிந்ததே!
இலங்கையை ஒரு ஜனநாயக நாடாக அனைத்துலக சமூகம் அங்கீகரித்திருக்கும் சூழலில் சிறிலங்காவின் போர் வெறி மிக மோசமான அளவுக்கு பரவி வருகின்றது.
மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தினர் போன்றோர் கூட போர் பூமிக்குள் எப்பக்க சார்புமற்று பணி செய்ய முடியாத சூழல்.
ஒட்டுமொத்தமாக இந்தப் பிரிவினர் அனைவரும் சிறிலங்கா அரசால் அச்சுறுத்தப்படுகின்றனர். இம்மாதிரி மனித உரிமையாளர்களையும் சமூகப் பணியாளர்களையும் அச்சுறுத்த சட்டவிரோதக் குழுக்களை சிறிலங்கா அரசு உருவாக்கி வைத்திருக்கின்றது.
வெள்ளை வான் எனப்படும் சட்டவிரோத ஆயுதக்குழுவால் அரசியல் பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கடத்திக்கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இலங்கை, பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நாடாக மாறிவிட்டது. போருக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டே அரசியல் கருத்துக்களை வெகு மக்களிடையே பகிர்ந்து கொள்ள நினைக்கும் பத்திரிகையாளர்கள் மிகக் கோரமாக கொல்லப்படுகின்றனர்.
2006 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை இருபதுக்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கை சுட்டிக்காட்டியும் விமர்சித்தும் எழுதியவர்களே!
இன்று கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு முல்லைத்தீவுக்குள் சிறிலங்கா இராணுவம் நுழைந்திருக்கும் சூழலில் பெரும் இராணுவ அடக்குமுறை இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் பத்திரிகையாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
நீண்டகால கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதன் அடையாளமாக, ஜயாத்துரை நடேசன், மயில்வாகனம் நிமலராஜன், ரிச்சர்ட்டி டி சொய்ச, தேவிஸ் குருக, தர்மரத்தினம் சிவராம், ரேலங்கி செல்வராஜ், நடராஜா அற்புதராஜா, ஐ.சண்முகலிங்கம், சுப்ரமணியம் சுகிர்தராஜன், சின்னத்தம்பி சிவமகாராஜ், சம்பத் லக்மால் சில்வ, இசைவிழி செம்பியன், ரி.தர்மலிங்கம், சுரேஸ், கேதீஸ் லோகநாதன், சந்திரபோஸ், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி எனப் பலரும் படுகொலையாகி வீழ்ந்திருக்கின்றனர்.
அறம் சார்ந்து எழுத நினைக்கும் ஒரு படைப்பாளி இன்று சிறிலங்கா அரசின் பேரினவாதத்திற்கு பலியாகும் சூழல் உருவாகி இருக்கிறது.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் 8 ஆம் நாள் புகழ்பெற்ற 'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியரும் வழக்கறிஞருமான லசந்த விக்ரமதுங்க கொழும்பில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
சமீபத்தில் அவரது மனைவி தனது மூன்று குழந்தைகளுடனும் இலங்கைத் தீவை விட்டு வெளியேறி உள்ளார். 'இதுவரை தன் கணவரின் கொலைக்கான விசாரணையை சிறிலங்கா அரசு தொடங்கவில்லை' என்று குற்றம் சுமத்தியும் இருக்கின்றார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக எப்படி சோனாலி சமரசிங்க வெளியேறினாரோ அதுபோல சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் அரசியல் அடைக்கலம் கேட்டு தலைமறைவாக இலங்கையில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகையாளாரான இக்பால் அத்தாஸ் கூட இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறி இருக்கின்றார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (26.02.09) யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' பத்திரிகையின் ஆசிரியரும் கொழும்பில் இருந்து வெளிவரும் 'சுடரொளி' பத்திரிகையில் ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் (வயது 51) கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
மூன்று வெள்ளை வான்களில் வந்த ஆயுததாரிகளும், காவல்துறை சீருடையில் வந்தவர்களும் இவரை கல்கிசையில் பொதுமக்கள் முன்னிலையிலேயே கடத்தியதாக தெரியவந்துள்ளது.
சிறிலங்கா அரசு நடத்தும் போர் தொடர்பாகவும் பாதிக்கப்படும் மக்கள் பற்றியும் செய்திகளை வெளிக்கொண்டு வருவதில் சுடரொளியும், உதயனும் மிக முக்கிய ஊடகப்பங்களிப்பை ஆற்றி வந்தன.
இந்நிலையில்தான் இந்த ஜனநாயக விரோத நிகழ்வு நடந்திருக்கின்றது.
இந்நிலையில் வித்தியாதரன் கடத்தப்படவில்லை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் என்று இலங்கையின் ஊடகப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்திருக்கின்றார்.
இலங்கைக்குள் வாழும் சிங்கள தமிழ் பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது, தமிழகத்திலும் துணைத் தூதுவர் அம்சாவின் நடவடிக்கைகள் ஊடகச் சுதந்திரத்துக்கு எதிரான ஒன்றாக மாறிவருகின்றது.
அக்கிரமான போரில் மடிந்து வரும் தமிழ் மக்கள் சார்ந்து செய்தி வெளியிட்ட 'நக்கீரன்' இதழை மிரட்டும் வகையிலான அம்சாவின் அறிவிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
'மக்கள்' தொலைக்காட்சியை ஒளிபரப்பு செய்ய விடாமல் அச்சுறுத்தும் சிறிலங்கா அரசு ஊடகங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
ஒரு ஊடகவியலாளரை அரசே கடத்திக் கைது செய்து விசாரிக்கும் விசாரணை முறைகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.
சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரணைக்கு உட்படுத்த வென்று நீதிமன்ற நடைமுறைகள் இருக்கும் போது இவ்விதமான நடவடிக்கைகள் அச்சமூட்டுகிற ஒன்றாக இலங்கையில் வளர்ந்து வருவது கவலையளிக்கின்றது.
சிறிலங்கா அரசின் இவ்விதமான ஊடக ஒடுக்குமுறைகளை, பத்திரிகையாளர்களின் படுகொலைகளைகளை ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் என்ற முறையில் ந.வித்தியாதரனின் கைது அல்லது கடத்தல் குறித்து மிகந்த கவலை அடைகின்றோம். மனித உரிமைகள் மீறப்பட்டு பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சுழலில், இந்தக் கைதும் சிறிலங்கா அரசின் போர் வெறியை நமக்கு உணர்த்துகிறது.
ஏனைய பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த கதி வித்தியாதரனுக்கும் நடந்து விடுமோ என்று அச்சப்படுகின்றோம்.
அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டிய கடமை அனைத்துலக சமூகங்களுக்கு உண்டு. ஜனநாயகப் படுகொலைகளைச் செய்யும் சிறிலங்கா அரசை கண்டிப்பான முறையில் அனைத்துலக சமூகம் அணுக வேண்டும்.
உடனடியாக ந.வித்தியாதரன் விடுதலை செய்யப்பட வேண்டும். வித்தியாதரன் மற்றும் அவரது உறவினர்களின் பாதுகாப்பை அனைத்துலக சமூகங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாக இலங்கையில் வாழும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்துக்கும் அனைத்துலக சமூகங்கள் ஒரு உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என கோருகின்றோம்.
சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகளுக்கு எதிராக நாம் பேசுவோம்! எழுத்து உரிமைக்காக குரல் கொடுப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர்' மன்றத்தின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்களான டி.அருள்எழிலன், சரவணன் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
இலங்கையில் எழுந்துள்ள போர்ச்சூழல் என்பது அங்கு வாழும் தமிழ் மக்களின் இயல்பான சமூக வாழ்வை முற்றிலுமாக சீர்குலைத்திருப்பது நீங்கள் அறிந்ததே!
இலங்கையை ஒரு ஜனநாயக நாடாக அனைத்துலக சமூகம் அங்கீகரித்திருக்கும் சூழலில் சிறிலங்காவின் போர் வெறி மிக மோசமான அளவுக்கு பரவி வருகின்றது.
மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தினர் போன்றோர் கூட போர் பூமிக்குள் எப்பக்க சார்புமற்று பணி செய்ய முடியாத சூழல்.
ஒட்டுமொத்தமாக இந்தப் பிரிவினர் அனைவரும் சிறிலங்கா அரசால் அச்சுறுத்தப்படுகின்றனர். இம்மாதிரி மனித உரிமையாளர்களையும் சமூகப் பணியாளர்களையும் அச்சுறுத்த சட்டவிரோதக் குழுக்களை சிறிலங்கா அரசு உருவாக்கி வைத்திருக்கின்றது.
வெள்ளை வான் எனப்படும் சட்டவிரோத ஆயுதக்குழுவால் அரசியல் பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கடத்திக்கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இலங்கை, பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நாடாக மாறிவிட்டது. போருக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டே அரசியல் கருத்துக்களை வெகு மக்களிடையே பகிர்ந்து கொள்ள நினைக்கும் பத்திரிகையாளர்கள் மிகக் கோரமாக கொல்லப்படுகின்றனர்.
2006 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை இருபதுக்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கை சுட்டிக்காட்டியும் விமர்சித்தும் எழுதியவர்களே!
இன்று கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு முல்லைத்தீவுக்குள் சிறிலங்கா இராணுவம் நுழைந்திருக்கும் சூழலில் பெரும் இராணுவ அடக்குமுறை இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் பத்திரிகையாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
நீண்டகால கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதன் அடையாளமாக, ஜயாத்துரை நடேசன், மயில்வாகனம் நிமலராஜன், ரிச்சர்ட்டி டி சொய்ச, தேவிஸ் குருக, தர்மரத்தினம் சிவராம், ரேலங்கி செல்வராஜ், நடராஜா அற்புதராஜா, ஐ.சண்முகலிங்கம், சுப்ரமணியம் சுகிர்தராஜன், சின்னத்தம்பி சிவமகாராஜ், சம்பத் லக்மால் சில்வ, இசைவிழி செம்பியன், ரி.தர்மலிங்கம், சுரேஸ், கேதீஸ் லோகநாதன், சந்திரபோஸ், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி எனப் பலரும் படுகொலையாகி வீழ்ந்திருக்கின்றனர்.
அறம் சார்ந்து எழுத நினைக்கும் ஒரு படைப்பாளி இன்று சிறிலங்கா அரசின் பேரினவாதத்திற்கு பலியாகும் சூழல் உருவாகி இருக்கிறது.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் 8 ஆம் நாள் புகழ்பெற்ற 'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியரும் வழக்கறிஞருமான லசந்த விக்ரமதுங்க கொழும்பில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
சமீபத்தில் அவரது மனைவி தனது மூன்று குழந்தைகளுடனும் இலங்கைத் தீவை விட்டு வெளியேறி உள்ளார். 'இதுவரை தன் கணவரின் கொலைக்கான விசாரணையை சிறிலங்கா அரசு தொடங்கவில்லை' என்று குற்றம் சுமத்தியும் இருக்கின்றார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக எப்படி சோனாலி சமரசிங்க வெளியேறினாரோ அதுபோல சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் அரசியல் அடைக்கலம் கேட்டு தலைமறைவாக இலங்கையில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகையாளாரான இக்பால் அத்தாஸ் கூட இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறி இருக்கின்றார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (26.02.09) யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' பத்திரிகையின் ஆசிரியரும் கொழும்பில் இருந்து வெளிவரும் 'சுடரொளி' பத்திரிகையில் ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் (வயது 51) கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
மூன்று வெள்ளை வான்களில் வந்த ஆயுததாரிகளும், காவல்துறை சீருடையில் வந்தவர்களும் இவரை கல்கிசையில் பொதுமக்கள் முன்னிலையிலேயே கடத்தியதாக தெரியவந்துள்ளது.
சிறிலங்கா அரசு நடத்தும் போர் தொடர்பாகவும் பாதிக்கப்படும் மக்கள் பற்றியும் செய்திகளை வெளிக்கொண்டு வருவதில் சுடரொளியும், உதயனும் மிக முக்கிய ஊடகப்பங்களிப்பை ஆற்றி வந்தன.
இந்நிலையில்தான் இந்த ஜனநாயக விரோத நிகழ்வு நடந்திருக்கின்றது.
இந்நிலையில் வித்தியாதரன் கடத்தப்படவில்லை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் என்று இலங்கையின் ஊடகப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்திருக்கின்றார்.
இலங்கைக்குள் வாழும் சிங்கள தமிழ் பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது, தமிழகத்திலும் துணைத் தூதுவர் அம்சாவின் நடவடிக்கைகள் ஊடகச் சுதந்திரத்துக்கு எதிரான ஒன்றாக மாறிவருகின்றது.
அக்கிரமான போரில் மடிந்து வரும் தமிழ் மக்கள் சார்ந்து செய்தி வெளியிட்ட 'நக்கீரன்' இதழை மிரட்டும் வகையிலான அம்சாவின் அறிவிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
'மக்கள்' தொலைக்காட்சியை ஒளிபரப்பு செய்ய விடாமல் அச்சுறுத்தும் சிறிலங்கா அரசு ஊடகங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
ஒரு ஊடகவியலாளரை அரசே கடத்திக் கைது செய்து விசாரிக்கும் விசாரணை முறைகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.
சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரணைக்கு உட்படுத்த வென்று நீதிமன்ற நடைமுறைகள் இருக்கும் போது இவ்விதமான நடவடிக்கைகள் அச்சமூட்டுகிற ஒன்றாக இலங்கையில் வளர்ந்து வருவது கவலையளிக்கின்றது.
சிறிலங்கா அரசின் இவ்விதமான ஊடக ஒடுக்குமுறைகளை, பத்திரிகையாளர்களின் படுகொலைகளைகளை ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் என்ற முறையில் ந.வித்தியாதரனின் கைது அல்லது கடத்தல் குறித்து மிகந்த கவலை அடைகின்றோம். மனித உரிமைகள் மீறப்பட்டு பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சுழலில், இந்தக் கைதும் சிறிலங்கா அரசின் போர் வெறியை நமக்கு உணர்த்துகிறது.
ஏனைய பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த கதி வித்தியாதரனுக்கும் நடந்து விடுமோ என்று அச்சப்படுகின்றோம்.
அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டிய கடமை அனைத்துலக சமூகங்களுக்கு உண்டு. ஜனநாயகப் படுகொலைகளைச் செய்யும் சிறிலங்கா அரசை கண்டிப்பான முறையில் அனைத்துலக சமூகம் அணுக வேண்டும்.
உடனடியாக ந.வித்தியாதரன் விடுதலை செய்யப்பட வேண்டும். வித்தியாதரன் மற்றும் அவரது உறவினர்களின் பாதுகாப்பை அனைத்துலக சமூகங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாக இலங்கையில் வாழும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்துக்கும் அனைத்துலக சமூகங்கள் ஒரு உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என கோருகின்றோம்.
சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகளுக்கு எதிராக நாம் பேசுவோம்! எழுத்து உரிமைக்காக குரல் கொடுப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
1 லட்சம் தமிழர்களை கொல்ல இலங்கை அரசு திட்டம்: ராமதாஸ்
மிகப்பெரிய தாக்குதலுக்கு இலங்கை ராணுவம் திட்டமிட்டுள்ளதாகவும், 1 லட்சம் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் ஆபத்து நிலவுவதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை போர்ப்படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதல்களால், இடம் பெயர்ந்து போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களின் அவல நிலைமை குறித்த விவரங்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. மருத்துவமனைகள், பாதுகாப்புப் பகுதிகள் என்று அழைக்கப்படும் பகுதிகள் மீது இலங்கைப் படைகள் குண்டுவீசித் தாக்கி வருகின்றன. அங்குள்ள அப்பாவித் தமிழ் மக்களை அழித்து வருகின்றன'' என்று நிழூயார்க்கில் இருந்து செயல்படும் மனித உரிமைக் கண்காணிப்பகம்' என்ற பன்னாட்டு அமைப்பு இப்போது வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் கூட்டமாக இருக்கும் பகுதிகளில்கூட இலங்கைப் படைகள் தொடர்ந்து, கண்மூடித்தனமாகக் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன. அரசு அறிவித்துள்ள பாதுகாப்புப் பகுதிகள்' மற்றும் வன்னிப் பகுதியில் எஞ்சியுள்ள மருத்துவமனைகள் மீதும் எண்ணற்ற குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன'' என்று மனித உரிமைக் கண்காணிப்பகம்' அமைப்பின் சட்டம் மற்றும் கொள்கை இயக்குநர் ஜேம்ஸ் ராஸ் கூறியிருக்கிறார்.
அப்பாவித் தமிழ் மக்கள் கூட்டமாக இருக்கும் பகுதிகளில்கூட இலங்கைப் படைகள் தொடர்ந்து, கண்மூடித்தனமாகக் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன என்றும் கடந்த இரண்டு மாதங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது என்றும் பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பகத்தின்' அறிக்கை கூறுகிறது.
முல்லைத் தீவு மாவட்டத்தில் ஏறக்குறைய 100 சதுர கி.மீ. பரப்புள்ள பகுதிக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் பின்வாங்கியதில் இருந்தே, இலங்கைப் படையினரால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்புப் பகுதிகள்', எஞ்சியுள்ள மருத்துவமனைகள் மீதும் எண்ணற்ற குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இரண்டு, மூன்று வாரங்களில், 2 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் உள்பட மொத்தம் 7 ஆயிரம் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பிற வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ள தகவல்களும் இதை ஆதரிக்கின்றன என்றும் மனித உரிமைக் கண்காணிப்பகம்' தெரிவித்துள்ளது.
இதற்கும் மேலாக, சண்டை நடக்கும் பகுதியாக இருந்தாலும் சரி, அல்லது அரசு நடத்திவரும் இடர்நீக்கச் சிற்றூர்கள்' ஆக இருந்தாலும் சரி போதிய உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகள் கிடைக்காமல் அப்பாவித் தமிழ் மக்கள் திண்டாடித் தவிக்கும் நிலைமைதான் உள்ளது என்றும் பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பகம்' கூறியிருக்கிறது.
இலங்கை அரசின் ஏமாற்று நடவடிக்கை பின்வருமாறு இருக்கும் என்று தோன்றுகிறது. போர் நடக்கும் பகுதியில் இருந்து 35 ஆயிரம் மக்கள் வெளியேறிவிட்டார்கள் என்று இலங்கை அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் போர் நடக்கும் பகுதியில் இருந்து எஞ்சியுள்ள அனைத்து 70 ஆயிரம் பேரும் வெளியேறிவிட்டார்கள் என்றும், விடுதலைப்புலிகள் மட்டுமே அங்கு இருக்கிறார்கள் என்றும் கூறி இலங்கை அரசு ஏமாற்ற முயற்சிக்கலாம். அதன் பிறகு, மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக் காட்டியிருப்பதுபோல, சட்டத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு இலங்கை அரசு இசைவளிக்கலாம். உண்மையில் அந்த 100 சதுர கி.மீ. பகுதியில் 2 லட்சத்திற்கும் அதிகமான இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.
பீரங்கிகள், டாங்கிகள், வானூர்திப் படையின் துணையுடன், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைப் படைவீரர்களால் பெரும் தாக்குதல் நடத்தப்படலாம். அதன் விளைவு, கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்படும் அளவுக்கு, மனிதப் பேரழிவாக அது இருக்கும். இந்த இனப்படுகொலை உடனடியாக நிகழக்கூடிய பேராபத்து உள்ளது.
அது நிகழுமானால், இதுவரை எங்கும் கண்டிராத மிகக்கொடிய மனிதப் பேரழிவாக அது இருக்கும். இந்தப் பயங்கரங்களின் பயங்கரம்'' நடப்பதற்கு இந்திய அரசு இசைவளிக்கப் போகிறதா? அல்லது இந்த இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த எல்லா வழிகளையும் அது பயன்படுத்தப் போகிறதா? என்பதே இப்போதைய வினா.
காலம் கடப்பதற்கு முன்பாக இதற்கு உடனடியாக விடை தேவை என்பதே இந்திய மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் எழுப்பும் குரல். இதனை உணர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த ஆபத்தை தடுக்க செயல்பட முன்வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்




