பொதுமக்கள் இழப்புகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது


பயங்கரவாதத்திற்கு போரை முன்னதாக நியாயப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியம், இன்று அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளிக்கவேண்டும் என கோரியுள்ளது
அத்துடன் இலங்கையில் போர் நிறுத்தம் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது

இலங்கையின் வடபுலத்தில் இடம்பெறும் யுத்தம் காரணமாக மக்கள் பாரிய இடப்பெயர்வுக்கு உள்ளாகுவதோடு, மக்கள் மத்தியில் பாரிய உயிரழிவுகள் தொடர்கின்றன.

இந்தநிலையில் இரண்டு தரப்பும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளிக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது

உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்று அமுல்செய்யப்படவேண்டும். அத்துடன் மனிதாபிமான உதவிகள் அங்கு அனுப்பப்படவேண்டும். அதேநேரம் தமிழீழ விடுதலைப்புலிகளும் மக்களை வெளியேற அனுமதிக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

அரசாங்கம் தற்காலிக நலன்புரி முகாம்களை சர்வதேச தரத்தில் பராமரிக்கவேண்டும் அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஏனைய மனிதாபிமான நிறுவனங்கள் அங்கு சேவை செய்ய அனுமதிக்கப்படவேண்டும்

தமிழீழ விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை கைவிடவேண்டும் அதேநேரம் அரசாங்கம் அரசியல் தீர்வுதிட்டம் ஒன்றை முன்வைத்து அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு திட்டம் ஒன்றை முன்வைக்கவேண்டும்

அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியில் இடம்பெறுகின்ற கொலைகள், காணாமல் போதல் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில்; அரசாங்கம், உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.