இலங்கை தொடர்பாக அமெரிக்க செனட் விவாதிக்கவுள்ளது
அமெரிக்க செனட் சபையின் அதிகாரம் மிக்க வெளிநாட்டு விவகாரம் தொடர்பான குழு நாளை இலங்கையின் தற்போதயை சூழ்நிலை குறித்து விவாதம் ஒன்றை நடத்தவுள்ளது
அமெரிக்க அரசியல் யாப்பில் மிகவும் பலம் வாய்ந்த செனட் சபையின் முக்கிய பிரிவு ஆகிய இந்த குழு நாளைய விவாதத்தில் வடக்கு கிழக்கில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கை, மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் நடைபெறும் இந்த விவாதத்திற்கு அமெரிக்க ஜனாதிபதிக்காக போட்டியிட்டவரும் தற்போதைய செனட்டருமான ஜோன் கெரி தலைமை தாங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளைய அமர்வின் போது இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லங்ஸ்டெட் மனித உரிமைகள் காப்பக பிரதிநிதியான அனா நெய்ஸ்ட் மற்றும் சர்வதேச ஊடகத்துறை பாதுகாப்புக்குழுவின் பிரதிநிதி பொப் டைட்ஸ் ஆகியோரின் சாட்சியங்களும் பதிவுசெய்யப்படவுள்ளன.
ஏற்கனவே ஊடகத்துறையில் இலங்கையில் பாரிய பின்னடைவை கண்டுள்ளதாக சர்வதேச ஊடகவியலாளர் குழு தெரிவித்துள்ள நிலையிலேயே நாளைய சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவுள்ளன.
தலைப்புகள்
வெளி நாட்டு செய்திகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.