இயக்குனர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்: பழ.நெடுமாறன்
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களையும், திரை உலகை சேர்ந்தவர்களையும் ஒட்டு மொத்தமாக மிரட்டுவதற்காகவே சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி ஏவி இருக்கிறார். இதைநான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து பேச இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று புதுவை வந்தார்.
காலாப்பட்டு ஜெயிலுக்கு சென்ற அவர் ஒரு மணி நேரம் காத்திருந்து இயக்குனர் சீமானை சந்தித்து பேசினார். சுமார் 1/2 மணிநேரம் அவருடன் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இயக்குனர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு ஏவி உள்ளது. இதைநான் வன்மையாக கண்டிக்கிறேன். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களையும், திரை உலகை சேர்ந்தவர்களையும் ஒட்டு மொத்தமாக மிரட்டுவதற்காகவே சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி ஏவி இருக்கிறார்.
இலங்கை தமிழர்களுக்காக பேசியதை தவிர தேசத்திற்கு எதிரான செயல்களில் சீமான் ஒருபோதும் ஈடுபடவில்லை. அவரின் பேச்சின் விளைவாக எந்த இடத்திலும் எத்தகைய கலவரமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் அவர் மீது இந்த கொடிய சட்டத்தை பயன்படுத்தி இருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத போக்காகும். சீமான் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கை உடனடியாக திரும்ப பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக புதுவை வந்த பழ.நெடுமாறனை புதுவை பெரியார் திராவிடர் கழக தலைவர் லோகு.அய்யப்பன், செந்தமிழர் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் தமிழ் மணி ஆகியோர் வரவேற்றனர்.
முகப்பு Print Send Feedback
தலைப்புகள்
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.