போர்க்களத்தில் பொட்டுஅம்மன்:புலிகளை வழிநடத்தும் பொறுப்பு
முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பு நகரையொட்டியுள்ள பகுதிகளில் இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.
தற்போது, இந்த போரில் புலிகள் இயக்க புலனாய்வு பிரிவின் பொறுப்பாளரும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வலது கரமாக கருதப்படுபவருமான பொட்டு அம்மன் குதித்து இருக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு முதல் சிங்கள ராணுவத்தின் 58-வது படைப்பிரிவினருக்கு எதிரான போரை அவர் வழிநடத்த ஆரம்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விடுதலைப்புலிகளின் தொலைத்தொடர்புகளை ஒட்டுக்கேட்டதன் மூலம் இந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டு உள்ளதாக இலங்கை பாதுகாப்பு படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கி நேற்று காலை வரையில் நடந்த மோதல்களின்போது விடுதலைப்புலிகளை பொட்டு அம்மன் வழி நடத்தி இருக்கிறார் என்றும் ராணுவம் தெரிவித்து இருக்கிறது.
3 நாட்களுக்கு முன்பு, 58-வது படைப்பிரிவினர் பெரும் உயிர்ச்சேதங்களை சந்தித்திருந்ததும், ஆயிரத்துக்கும் மேலான ராணுவத்தினர் இறந்தும், 3 ஆயிரம் பேர் வரை காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
தலைப்புகள்
புலிகளின் அறிவிப்புகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.