புதுக்குடியிருப்பு நகரை பிடிக்க முனையும் சிறிலங்காவும், தடுத்து தாக்கும் புலிகளும் உக்கிர சமர்: இதுவரை 1,000 படையினர் பலி;3000 பேர் காயம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையின் அதி சிறப்புப் படையணிகள் பலமுனைகளில் மேற்கொள்ளும் படையெடுப்பை எதிர்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் சமரில் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்கா தரைப் படையின் 53 ஆவது, 58 ஆவது டிவிசன், 59 ஆவது டிவிசன், சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 3 (Task Force - 3) மற்றும் சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 4 (Task Force - 4) ஆகிய அதிசிறப்பு வலிந்த தாக்குதல் படையணிகள் ஐந்து முனைகளில் இருந்து பெரும் படையெடுப்பை நிகழ்த்துகின்றன.

கடந்த மூன்று நாட்களாக இந்த ஐந்து முனை முன்னேற்றத்தை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் உக்கிர சண்டையில் இதுவரை ஆகக்குறைந்தது 1,000 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் சமர் கட்டளைப் பீட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று மூன்றாவது நாளாக -

புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்கான கடும் ஐந்து முனை தாக்குதலில் சிறிலங்கா படையினரும், அவர்களை எதிர்கொண்டு கடும் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படையணிகளும் தொடர்ந்தும் கடும் சமரில் ஈடுபட்டுள்ளன.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.