இலங்கைப் பிரச்சினையில் உதவுவதற்கு விசேட தூதுவரை நியமித்தது பிரிட்டன் போர்நிறுத்தம் கொண்டுவர முன்னுரிமை வழங்கப்படும்
இலங்கைப் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் உதவுவதற்கு விசேட தூதுவர் ஒருவரை பிரிட்டன் நியமித்துள்ளது. போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கு முன்னுரிமை அளித்துச் செயலாற்றும் இலக்குடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் டெஸ் பிறவுணியை தாம் இப்பதவிக்கு நியமித்துள்ளதாகப் பிரதமர் கோர்டன் பிறவுண் நேற்று அறிவித்தார்.
போர் நிறுத்தம் ஒன்றை உருவாக்கி இலங்கையில் அரசியல் தீர்வு காண்பதற்காகப் பணியாற்றுவதே விசேட தூதுவரின் முக்கிய பணியாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
விடுதலைப்புலிகளின் வசம் உள்ள மிகக் குறுகிய நிலப்பரப்பில் சிக்குண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அவலப்படும் இலங்கையில்,போர் நிறுத்தத்தை கொண்டுவர உழைப்பதும் அதன் ஊடாக அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு உதவுவதுமே பிரிட்டனின் இலக்கு என்றும் பிரதமர் கோர்டன் பிறவுண் விவரித்தார்.
அங்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் உள்ள விடயங்களை கவனிப்பதும் விசேட தூதுவரின் பிரதான பணிகளில் ஒன்றாக அமையும்.இனத்தகராறுக்கு தீர்வு ஒன்றைக் காண்பதற்கான சாத்தியக் கூறுகளைக் கண்டறிந்து அதனை முன்னெடுத்துச் செல்வதற்கும் அவர் உழைப்பார்.போர் நிறுத்தம் இல்லாமல் அரசியல் தீர்வு காணும் முயற்சி மீண்டும் அதேவகையான பிரச்சினைகளுக்கே வழி வகுக்கும் என்பதை சம்பந்தப்பட்ட சகல தரப்புக்களையும் உணரச் செய்யவேண்டும்.
பிரிட்டனின் விசேட பிரதிநிதி இலங்கையில் சகல இனத்தலைவர்களுடனும், சர்வதேச ஏஜன்சிகளுடனும் ஏனைய நாடுகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு உதவுவார் என்று பிரதமர் கோர்டன் பிறவுண் மேலும் விவரித்தார்.
இலங்கைக்கான விசேட தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள டெஸ் பிறவுணி கடந்த ஒக்டோபர் மாதம் பிரிட்டிஷ் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது பாதுகாப்புச் செயலர் பதவியை இழந்தார்.
தலைப்புகள்
வெளி நாட்டு செய்திகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.