சீமானை அடக்க நினைக்கிறது அரசு: கொளத்தூர்மணி
புதுச்சேரி மாநில மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குநர் சீமானை பெரியார் திராவிடர் கழக தமிழ் மாநில தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி பொது செயலாளர் மணியரசன் ஆகியோர் இன்று சந்தித்தனர்.
காலை 11-45 மணி முதல் 12-15 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது. இச்சந்திப்புக்கு பின்னர் கொளத்தூர் மணி செய்தியாளர்களிடம்,
’’கடந்த காலங்களில் சமுதாய அக்கறை இல்லாதவர்களாக சினிமாகாரர்கள் சித்தரிக்கப்பட்டு வந்தனர். ஆனால் சமீப காலங்களில் காவிரி நதி நீர் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினைகளை சினிமாக்காரர்கள் முன்னின்று மக்கள் மத்தியில் எடுத்து கூறுகின்றனர்.
இலங்கையில் நடக்கும் இனபடுகொலையை கண்டித்தும் அவர்கள் பேசி வருகிறார்கள்.
சீமானை குறி வைத்தே போலீசார் தொடர்ந்து வழக்கு போட்டு வருகிறார்கள். தற்போது நெல்லையிலும் வழக்கு போட்டுள்ளனர். வழக்குகள் போட்டு சீமானை அடக்க அரசு நினைக்கிறது. இது நல்லதல்ல.
சீமான் சிறைக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்க கூடாது என சிறை துறையினர் கெடுபிடி செய்கின்றனர். இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது’’ என்று தெரிவித்தார்.
தலைப்புகள்
தமிழ்நாட்டு செய்திகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.