பிரான்ஸ் பாரிஸ் இந்தியத் தூதுவராலயம் முன்னால் இன்று வியாழக்கிழமை (05.02.2009) பி.பகல் மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை ஆயிரக்கணக்கான பிரான்ஸ்வாழ் தமிழ் மக்கள் ஒன்று கூடி கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
இதன் போது
இந்திய அரசே சிறிலங்காவிற்கு ஆயுதம் வழங்குவதை உடனடியாக நிறுத்து!
படை உதவிகளை நிறுத்து!
இராணுவ ஆலோசனை வழங்குவதை நிறுத்து!
தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலைக்கு உடந்தை ஆவதை நிறுத்து!
தமிழ் நாட்டு மக்களின் உணர்வலைகளைப் புரிந்து கொள்! போன்ற கோசங்களை எழுப்பி தமது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
இதே நேரம் இந்தியத் தூதுவராலயத்தின் பிரதிநிதிகளிடம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.
அயல் நாடு அண்டை நாடு காந்தியம் பேசும் நாடு. ஆனால் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் கடும் போக்கைக் கடைப்பிடிப்பது ஈழத்தமிழ் மக்களுக்கும் பெருங்குடிதமிழகமக்களுக்கும் பெரும் விசனத்தை அளித்துள்ளதாக கண்டன நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் மிகவும் வேதனையுடன் தெரிவித்திருந்தார்கள்.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.