உறைய வைக்கும் குளிரில் அமெரிக்க தலைநகரில் திரண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்: பயங்கரவாதத்தின் பேரிலான போரை நிறுத்தி தமிழர்களை காக்க வேண்டுகோள்!
அமெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் - 'வெள்ளை மாளிகை' முன்பாகவும் வெளியுறவுத்துறை இராஜாங்க செயலகம் முன்பாகவும் நேற்று வெள்ளிக்கிழமை உறைய வைக்கும் பனியில் குவிந்த 10 ஆயிரம் வரையான தமிழர்கள் - 'பயங்கரவாத'த்தின் பேரால் சிறிலங்கா அரசு முன்னெடுக்கும் தமிழினப் படுகொலை போரை நிறுத்தி வன்னி மக்களை காப்பற்றுமாறு அமெரிக்க அரசாங்கத்திடம் கோரினர்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து ஏறக்குறைய 8,000 முதல் 10,000 வரையான தமிழர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்று - தமிழ் இனப் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு அரச தலைவர் ஒபாமா அவர்களையும், செயலர் ஹிலறி கிளின்டன் அம்மையாரையும் கோரும் முழக்கங்களை எழுப்பினர்.
வன்னியில் நடக்கும் தமிழர் படுகொலையின் கோரக் காட்சிகள் கொண்ட படங்களைத் தாங்கியிருந்து பேரணியாளர்கள் -
"இது சுத்தமான ஒரு இனப்படுகொலையே தான்; இந்த போரை நிறுத்தி தமிழர்களைக் காப்பாற்றுங்கள்" என அமெரிக்க அரச தலைவரிடம் கோரிக்கைகளை எழுப்பினர்.
'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கொள்கையை தமிழினப் படுகொலை செய்வதற்கான ஒரு சாட்டாகவே சிறிலங்கா அரசு உபயோகிக்கின்றது என்ற கருத்தை பேரணியாளர்கள் வற்புறுத்தினர்.
தமிழீழ தேசியக் கொடிகளை தாங்கியிருந்த தமிழர்கள் - "விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல; அவர்கள் எமது சுதந்திரப் போராளிகள்" என முழக்கங்களை எழுப்பியதுடன் -
"புலிகள் மீதான தடையை நீக்கங்கள்" என்று கோரும் அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.
பேரணியின் முடிவில் - அரச தலைவர் ஒபாமா அவர்களுக்கும், ஹிலறி கிளின்டன் அம்மையார் அவர்களுக்கும் வழங்கப்பட்ட மனு கடிதத்தில் -
போர் நிறுத்தப்பட வேண்டிய உடனடித் தேவை வலியுறுத்தப்பட்டதுடன், நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய அவசியமும் எடுத்து விளக்கப்பட்டது.
தலைப்புகள்
புலம் பெயர்ந்த தமிழர் நிகழ்வுகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.