டென்மார்க், சுவிஸ் தூதுவர்கள் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ள விடுத்த வேண்டுகோள் நிராகரிப்பு
வடக்கு பகுதிக்கு விஜயம் மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர்கள் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பொதுமக்களது நிலைமை குறித்து ஆராய்வதற்காக வடக்கு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்வதாக இரு நாட்டு தூதுவர்களும் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, சர்வதேச ஊடக நிறுவனமொன்று வன்னிக்குச் செல்ல அனுமதியளிக்குமாறு விடுத்த வேண்டுகோளையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செய்தி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு குறித்த நபர்கள் வன்னிக்கு விஜயம் செய்ய உள்ளமையினால் அனுமதி மறுக்கப்பட்டதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்
தலைப்புகள்
வெளி நாட்டு செய்திகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.