நோர்வே உட்பட்ட நாடுகள் இலங்கை நிலவரம் குறித்து கவலை


இலங்கையின் வடக்குப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக வடதுருவ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐந்து நாடுகளின் அமைச்சர் நேற்று ஒஸ்லோவில் சந்தித்தவேளையில் இது தொடர்பான கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைய இலங்கை அரசாங்கமும், விடுதலைப்புலிகள் இயக்கமும் செயற்படவேண்டும் என அந்த அறி;க்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வன்னியிலுள்ள காயமடைந்த மற்றும் சுகவீனமுற்ற மக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக இரண்டு தரப்பும் துரித மோதல்தவிர்ப்பை அறிவிக்கவேண்டும் என இந்த கூட்டறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை விடயம் தொடர்பில் இணைத்தலைமை நாடுகள் கடந்த 3 ம் திகதி வெளியிட்ட அறி;க்கையையும் வடதுருவ வெளியுறவு துறை அமைச்சர்கள் வரவேற்றுள்ளனர்.

மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதவிர, நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சென்றடைவதன் பொருட்டு ஐக்கிய நாடுகள் அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றின் நிவாரண மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்புகளை வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

அதேவேளை, மனித அவலங்களை தவிர்த்து கொள்வதற்காக இருதரப்பினரும் உடனடி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவதற்கு முன்வரவேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.