வன்னியில் உள்ள மக்களை அழிவில் இருந்து காப்பாற்ற சர்வதேச சமூகம் பொறுப்புடன் செயற்படல் வேண்டும்
வன்னியில் சுமார் 400 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்பில் 450000 திற்கும் குறையாத எண்ணிக்கையான மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் சுமார் 400000 மக்கள் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்து மரங்களின் கீழும் வீதிகளிலும் காடுகள் வயல் வெளிகளிலும் வாழ்கின்றனர்.
இவர்களை இலக்கு வைத்து சிறீலங்கா இராணுவம் தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களையும் எறிகணைத் தாக்குதல்களையும் நடாத்தி தினமும் சராசரி 75 பொது மக்களை படுகொலை செய்கிறது சாராசரி 100 பொது மக்கள் படுகாயமடைகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (06-02-2009) அன்று புதக்குடியிருப்பில் அமைந்துள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை சிறீலங்கா விமானப் படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 61 நோயாளர்கள் படுகொலை செய்யப்பட்னர்.
நேற்று திங்கட்கிழமை இராணுவத்தினரின் எறிகணை மற்றும் விமானத் தாக்குதலில் மட்டும் 25 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன். 77பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை இராணுவத்தினரின் எறிகணை மற்றும் விமானத் தாக்குதலில் மட்டும் 22 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டும் 87 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர் மேலும் 17 பேர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான மருந்துகள் இல்லை. மருத்துவ வசதியின்றி தினமும் பலர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். ஏனைய நோயாளர்கள் ஆயிரக் கணக்கானோர் வைத்தியவசதிகளோ வைத்திய ஆலோசனைகளையோ பெறமுடியாது கொடுமைகளை அனுபவிக்கின்றனர்.
450000 மக்களுக்குமாக ஒரு வைத்தியசாலை கூட பாதுகாப்பான சூழலில் இயங்கவில்லை. காயமடைந்தவர்களும் நோயாளர்களும் மரங்களின் கீழ் பாயில் படுக்கவைத்து சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.
அலுவலகத் தேவைகளுக்காக வவுனியாவுக்குச் சென்ற வைத்தியர்கள் வவுனியாவிலிருந்து திரும்பவும் வன்னி சென்று தமது பணிகளை தொடரவோää குடும்பங்களுடன் இணைந்து கொள்ளவோ அனுமதி மறுக்கப்பட்டு பல வந்தமாக வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வன்னியில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியாவுக்கு வந்த பொது மக்களும் வவுனியாவில் இருந்து திரும்பிச் சென்று தமது குடும்பங்களுடன் இணைந்து கொள்ள படையினர் அனுமதி மறுத்துள்ளதுடன் பலவந்தமாக அவர்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்துள்ளனர்.
வன்னியில் உள்ள மக்களுக்கு உணவு மருந்து இல்லாத நிலையில்; மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலை ஏற்றபட்டுள்ளது. வவுனியாவில் இருந்து உணவு மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்ல அரசாங்கம் அனுமதி மறுத்து வருகின்றது. அதே வேளை தமது நிர்வாக தேவைகளுக்காக வவுனியாவிற்குச் சென்ற அரசாங்க அதிபர்களை மீளவும் வன்னிக்குச் செல்ல படைத்தரப்பு அனுமதி மறுத்துள்ளது.
இந் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வன்னியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. வன்னியில் அரச படைகள் மேற்கொள்ளும் இனப் படுகொலைகளை மூடி மறைப்பதற்காகவே அரசு திட்டமிட்ட ரீதியில் செஞ்சிலுவைச் சங்கத்தினை வெளியேற்றியுள்ளது. இதனை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
கடந்த இரண்டு மாத காலப் பகுதியில் இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசங்களுக்குள் சென்ற மக்களில் நூற்றுக் கணக்கானோர் இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்டுள்ளனர். பல நூற்றுக் கணக்கானோர் படையினரால் கைது செய்யப்பட்டு இரகசிய சிறைகளில் வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
எஞ்சியவர்கள் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தினமும் விசாரணை என்ற போர்வையில் படையினரால்
அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் விசாரணை என்ற போர்வையில் இரவில் அழைத்துச் செல்லப்பட்டு பாலியில் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் மறுநாள் காலையில் அனுப்பப்படுகின்றனர்.
இவ்வாறு இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்தவர்கள் அகதி முகாம் என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் சிவில் உடையில் துணை இராணுவக் குழுவினரும் இராணுவ புலனாய்வுத்துறையினரும் தங்கியுள்ளனர். இதன் காரணமாக பொது மக்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை தமக்கு அருகில் உள்ளவர்களுடன் கூட தெரிவிக்க முடியாத நிலையிலுள்ளனர்.
நேற்றய தினம் திங்கட்கிழமை இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள விசுவமடுப் பிரதேசத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் பல பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பொது மக்களை பழிவாங்கும் நோக்கிலும் புலிகளுக்கு எதிராக சர்வதேச சமூகத்தினரை திருப்ப வேண்டும் என்ற நோக்கிலும் சிறீலங்கா இராணுவத்தினராலேயே இக்குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இது பற்றி பாதிக்கப்பட்ட மக்களை நேரில்சென்று உண்மைகளை கேட்டு அறியாது படுகொலையாளர்களது கருத்துக்களை மட்டும் அடிப்படையாக வைத்து அமெரிக்கத் தூதரகம் கண்டன அறிக்கை வெளியிட்டு இருப்பது மிகவும் கவலையளிக்கின்றது.
நேற்றய தினம் விசுவமடுவில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக உண்மைகளை கண்டறியாது அமெரிக்க தூதரகம் வெளியிட்ட கண்டன அறிக்கை காரணமாகவே படையினர் இன்றும் செவ்வாய்க்கிழமை வன்னியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த பொது மக்கள் 17 பேரை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளதுடன் 69 பொதுமக்களை காயப்படுத்தியுள்ளனர். இப் படுகொலைகளை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
சர்வதேச சமூகம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் எனக் கோருவதுடன் சிறீலங்கா அரசாங்கம் வன்யிலுள்ள மக்களை தொடர்ந்து படுகொலை செய்து வருவதனை தடுத்து நிறுத்தவும்
வன்னிக்கு உணவு மருந்து பொருட்களும் மனிதாபிமானப் பணியாளர்களும் உடனடியாக அனுப்பி வைக்கப்படவும்
வன்னிக்கு திரும்பிச் செல்ல முடியாதவாறு வவுனியாவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர்கள் அவர்களது விருப்பப்படி வன்னி செல்வதற்கும்
வவுனியாவில் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் வன்னி மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள வசதியாக மீண்டும் வன்னிக்கு செல்வதற்கும்
செஞ்சிலுவைச் சங்கத்தினரின் வழித் துணையுடன் வவுனியாவிற்கு சிகிச்சைக்காக சென்ற பொது மக்கள் மீண்டும் வன்னியில் உள்ள தமது குடும்பத்தினருடன் சென்று இணைந்து கொள்வதற்கும்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரும் ஏனைய தொண்டு நிறுவனப் பணியாளர்களும் உடனடியாக மீண்டும் வன்னிக்கு சென்று தமது பணிகளை மீளவும் தொடருவதற்கும்
இலங்கை அரசின் மீது அழுத்தங்களை பிரயோகித்து உடனடியாக போர் நிறுத்தப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உடனடியாக பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவும் சர்வதேச சமூகம் அழுத்தங்கைளப் பிரயோகித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.
செ.கNஐந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்
10-02-2009
தலைப்புகள்
தமிழ் ஈழ தலைவர்களின் கருத்துகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.