வன்னியில் இருந்து இன்று ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வன்னியை விட்டு வெளியேறியுள்ளது.
முல்லைத்தீவு மாத்தளன் கடற்பரப்பில் இன்று பிற்பகல் 1:00 மணியில் இருந்து 1:30 நிமிடம் வரையே கப்பல் தரித்து நிற்க முடியும் எனும் சிறிலங்கா அரசாங்கத்தின் நிபந்தனையை ஏற்று குறித்த நேரத்துக்கு குறைந்தளவு நோயாளர்களை கப்பல் ஏற்றிச் சென்றுள்ளது.
நோயாளர்கள் படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டுள்ளனர். 300-க்கும் அதிகமானவர்களை ஏற்றக்கூடிய கப்பலில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நோயாளர்களே கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டனர்.
"ஓசின்" எனும் கப்பலே மாத்தளன் கடற்பரப்புக்கு வந்து நோயாளர்களை ஏற்றிச் சென்றுள்ளது.
நோயாளர்களுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் வெளியேறியுள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.