ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிலைப்பாடு தவறு: பாதுகாப்புச் சபையின் தலைவர் மறுக்கிறார்
இலங்கை விவகாரம் ஐ.நாவின் பாது காப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாமையால் அந்த நாட்டில் தம்மால் போர் நிறுத்தத்தைக் கோர முடியவில்லை என்று பொதுச் செயலாளர் பான் கீன் மூன் கூறியது ஏற்புடையதல்ல. இவ்வாறு மறுத்துரைத்திருக்கிறார் பாதுகாப்புச் சபையின் இந்த மாதத்துக்கான தலைவர் யுகியோ டக்காசு.
நாடு ஒன்றினது அமைதி மற்றும் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படும் போது, அது குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரும் மிகவும் முக்கியமான பொறுப்பு, ஐ.நா. சாசனத்தின் கீழ் அதன் பொதுச்செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார் பாதுகாப்புச் சபையின் தலைவரான ஜப்பானைச் சேர்ந்த யுகியோ டக்காசு.
இதேவேளை ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீன் மூனின் அரசியல் பிரிவு இயக்குநர் விரைவில் இலங்கை வரவிருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வெளியே அரசு அமைத்துள்ள மக்கள் பாதுகாப்பு வலயத்தை சர்வதேச கண்காணிப்பாளர்களைக் கொண்டு கண்காணிக்கும் வாய்ப்புக் குறித்து இவர் ஆராய்வார் என நம்பப்படுகின்றது என செய்தி ஏஜென்சி ஒன்று தெரிவித்தது.
இலங்கை நிலைவரத்தை நன்றாக அறிந்து கொண்டு இது தொடர்பாக பான் கீன் மூனுக்கு அவர் அறிக்கை சமர்ப்பிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தலைப்புகள்
மனித உரிமைகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.