யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு கிழக்குத் திமோர் விடுத்த கோரிக்கை அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ளது
வடக்குப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்துமாறும் கிழக்கு திமோர் ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமன்றி வேறு முறைகளில் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாதென கிழக்குத் திமோர் ஜனாதிபதி ஜோசே ராமோஸ் தெரிவித்துள்ளார்.
ஜோசே ராமோஸ் பிரிவினைவாத போராட்டத்தின் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் எனவும், அவரது ஆலோசனைகள் எங்களுக்குத் தேவையில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் உள்விவகாரத்தில் கிழக்குத் திமோர் ஜனாதிபதி தலையீடு செய்வதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கும் ஜோசே ராமோஸிற்கும் இடையிலான உறவு வெளிப்பட்டுள்ளதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தலைப்புகள்
வெளி நாட்டு செய்திகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.