உரிமைக்குரலுடன் கனடிய பாராளுமன்றம் முன்பாக பல்லாயிரக்கணக்கில் திரண்ட தமிழ் மக்கள்

கனடாவின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் நேற்று பி.ப 1:00 மணிக்கு கனடியத்தலைநகர் ஒட்டாவாவில் அமைந்துள்ள கனடிய பாராளுமன்றம் முன்பாக அணிதிரண்டனர்.

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாக கடைப்பிடிக்கும் தமிழினம் மகிந்த அரசு மேற்கொண்டு வரும் தமிழ் இனப்படுகொலையைக் கண்டித்தும் தடுத்து நிறுத்தக் கோரியும் கனடிய பாராளுமன்றம் முன்பாக பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது 3:00 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் முழக்கமிட்டனர்.

கனடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த பதினைந்திற்கும் மேற்பட்ட .கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் முன் தோன்றி உரையாற்றியதோடு கோரிக்கைகளையும் உள்வாங்கிக் கொண்டார்கள். இச்சந்திப்பில் பெருமளவிலான கனடிய பிரதான ஊடகங்கள் கலந்துகொண்டன.

கனடிய தமிழ் மக்களின் தொடர் போராட்டத்தின் பயனாக இன்று மாலை 6:00 மணிக்கு இலங்கை நிலவரம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றதோடு உடனடியாக போரை நிறுத்தும்படியும் வேண்டப்பட்டுள்ளது.































0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.