தயவு செய்து கவனிக்கவும்:
கடந்த ஜனவரி 26, 2009, திங்கட்கிழமை அன்று வன்னிப் பகுதி மீது சிறிலங்கா படையினர் பரவலாக நடாத்திய பல்குழல் பீரங்கி, ஆட்டிலறி மற்றும் குறுந்தூரப் பீரங்கித் தாக்குல்களில் 302 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, 985 தமிழர்கள் படுகாயமடைந்தனர். ஆனால், முழுமையான விபரங்கள் சேகரிக்க முடியாத அளவுக்கு பெரும் அவலமான நிலை அப்போது இருந்ததால், 64 தமிழர்கள் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்ததை மட்டுமே அப்போது உடனடியாகக உறுதி செய்ய முடிந்தது. இப்போது - கடந்து ஒரு வாரமாகச் சேகரித்துச் சரி பார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அன்று 302 பேர் கொல்லப்பட்டு, 985 பேர் காயமடைந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீர் செய்யப்பட்ட இந்த புதிய எண்ணிக்கையின் அடிப்படையில், தமிழ் இனச் சுத்திகரிப்புக் குறிகாட்டி இப்போது பதிவேற்றம் செய்யப்பட்டள்ளது.
Please Note:
On Monday, January 26th 2009 relentless artillery, shelling and multi barrel barrage by the Sri Lanka Armed Forces brutally killed 302 Tamil civilians and critically wounded 985 Tamil civilians. As complete details were not available in the aftermath of the tragic day, only killings of 64 Tamils were confirmed immediately that day. Now, after information gathered over a week is carefully compiled, deaths of 302 Tamil civilians on 26th January are confirmed. Accordingly, Tamil Ethnic Cleansing Index is now revised and updated to include these killings.
இந்தக் குறிகாட்டிக்கான தகவல்கள் உரிய முறையில் ஆதாரபூர்வமான தரவுகளிலிருந்து எடுக்கப்படுகின்றன. மருத்துவமனை வட்டாரங்கள், நீதித்துறை வட்டாரங்கள், வடக்கு-கிழக்கு மனித உரிமைச் செயலகம் மற்றும் நம்பகத்தன்டையுடைய ஊடகச் செய்திகள் ஆகியவற்றிலிருந்து மிகவும் கவனமாகச் சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த குறிகாட்டி அமைக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.