விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியும் சிறுபான்மையின மக்களின் உரிமைகளும்


இலங்கையில் கடந்த சுமார் 30 வருடங்களாக தமிழர்களுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் போர் மேகங்கள் ஓய்ந்து விட்டதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் இலங்கையில் பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்று கூற முடியாது.

இலங்கையின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாயின் எல்லா இனங்களும் ஏற்கும்படியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்கள் தமக்கு சிங்களவர்களுக்கு ஈடான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று ஜனநாயக வழிகளில் போராட்டங்களில் ஈடுபட்டதனால் கிடைக்கப் பெற்ற பயன் ஏற்கும்படியாக இல்லாததன் காரணமாகவே உரிமைகளுக்கான ஜனநாயகப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது.

இந்த ஆயுதப் போராட்டத்தினால் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மூவின மக்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்துள்ளனர். இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் சிறுபான்மையினரின் கோரிக்கைகளிலுள்ள நியாயங்களை உணர்ந்து கொண்டிருந்தபோதிலும் அவற்றை வழங்குவதற்கு முழுமனதுடனான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சிறுபான்மையினரை மென்மேலும் ஒடுக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள். இதனால் போராட்டங்களும் உயிர் இழப்புக்களும் அதிகரித்துக் கொண்டே சென்றன.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்திற்காக நாட்டின் மொத்த வருமானத்தில் பெரும் பகுதி செலவு செய்யப்பட்டதுடன் பொருளாதாரம் பாரிய பின்னடைவுகளை கண்டது. இதனால் பொது மக்கள் மீதான பொருளாதார சுமைகள் அதிகரித்துக் கொண்டே வந்தன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் தமிழர்களுக்கோ அல்லது சிறுபான்மையினருக்கோ அதிகாரப் பகிர்வு வழங்கப்படத் தேவையில்லை என்று வாதிடப்படுமாயின் அவ்வாதம் இலங்கையின் வளர்ச்சிக்கு தடையானதொரு வாதமாகவே இருக்கும்.

இலங்கையில் இருப்பது இனப்பிரச்சினையல்ல, பயங்கரவாதப் பிரச்சினையே. பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுமாயின் எல்லாம் சரியாகி விடுமென்று பேரினவாத மேலாதிக்கவாதிகள் தொடர்ச்சியாகக் கூறிக் கொண்டிருந்தனர்.

தற்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் மீண்டும் இக்கருத்தை வலியுறுத்தவும், சிறுபான்மையினர் அனுபவிக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் இல்லாமல் செய்வதற்கும் முயற்சிகளை எடுக்கலாம். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களினால் போராட்டத்திற்கு அடிப்படையாக அமைந்த கருத்துக்கள் தோற்கடிக்கப்படவில்லை.

தமிழர்கள் சம உரிமைகளுடன் வாழ வேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்ற கருத்து தமிழர்களின் மனங்களிலிருந்து நீக்கப்பட வேண்டுமாயின் அவர்களின் நியாயமான அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பெரும்பான்மையின மேலாதிக்கத்தின் பிடி இன்னும் இறுக்கமாகி விடுமோ என்ற அச்சம் சிறுபான்மை மக்கள் மத்தியில் இருக்கலாம். இதனை நீக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கைகளில் உள்ளது.

இதேவேளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ""எல்லோரும் ஏற்கும்படியான அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்படும். விடுதலைப் புலிகளின் தோல்வி தமிழர்களின் தோல்வியல்ல. அவர்கள் நிம்மதி, சந்தோஷத்துடன் சமத்துவமாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டுப் போரினை அவதானித்துக் கொண்டிருந்த சர்வதேச சமூகங்கள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ""ஈழத் தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவது அவசர அவசியமானதாகும். அங்கு வாழும் எல்லா இனங்களும் ஏற்கும்படியான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்'' என்று கேட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, ""இனியும் நாட்டு மக்களிடையே அரசாங்கம் வேற்றுமை காட்டக்கூடாது. அவ்வாறு காட்டினால் மீண்டும் புரட்சி வெடிக்கும்'' என எச்சரித்துள்ளார்.

""இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படா விட்டால் வேறு வழிகளில் போராட்டம் நிகழக்கூடும்'' என்று நோர்வே கூறியுள்ளது. ""இலங்கை மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்'' என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்திய அரசாங்கம் தமது பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி அதிகாரப் பரவலாக்கம் பற்றி கலந்துரையாடியுள்ளது.

இவ்வாறு உலக நாடுகள் பலவும் இலங்கையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இக்குரல்களை தட்டிக் கழித்துச் செயற்பட இலங்கை அரசாங்கம் நினைக்குமாயின் சர்வதேச ரீதியாக பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஆதலால் பெரும்பான்மையினர் அனுபவிக்கும் எல்லா வகையான உரிமைகளையும் சலுகைகளையும் சிறுபான்மையினரும் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனை நிறைவேற்றுவதில் காலதாமங்கள் இடம்பெறக்கூடாது

ஆஸ்பத்திரிகளில் வேதனையுடன் சிறுவர்கள்


கிழிந்த மெத்தைகள் வரிசையாகக் காணப்பட்டன. இலங்கையின் தலைநகர் கொழும்பை ஜன்னலால் காயமடைந்த குழந்தையொன்று பார்த்துக்கொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டவேளை அந்தக் குழந்தையை பெண் உறவினர் ஒருவர் சாந்தப்படுத்திக்கொண்டிருந்தார். வட இலங்கையில் மோதல் இடம்பெற்ற இறுதிக் கட்டங்களின் போது வயிற்றில் சூட்டுக் காயங்களுடன் இந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெண் குழந்தையின் வயிற்றின் குறுக்கே அதிகளவு தையல்கள் போடப்பட்டிருந்தன. மருத்துவர்கள் சத்திரசிகிச்சை செய்து சன்னத்தை அகற்றியிருந்தனர். அக்குழந்தையின் வலது காலில் கணிசமானளவு சதை எடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையிலுள்ள மருத்துவமனைகளில் பொதுமக்களின் பார்வைக்குத் தென்படாமல் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் இந்தச் சிறுமியும் ஒருவராவார். ஆஸ்பத்திரி வார்ட்டுகளில் படையினரும் பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த காயமடைந்தவர்கள் தங்களால் எழுந்து நடக்கக்கூடிய நிலைமைக்கு வந்த பின்பே அவர்கள் முகாம்களுக்கு திரும்பிச் செல்வார்கள். அந்த முகாம்களில் சுமார் 3 இலட்சம் மக்கள் தங்கியுள்ளனர்.

யுத்தம் நடைபெற்ற இறுதி வாரங்களில் மிக மோசமாக காயமடைந்த சிறுவர்கள் வயது வந்தோர்களுக்குத் தேவையான சிகிச்சையளிப்பதற்காக நாட்டின் மருத்துவ சேவைகள் போதியளவு இல்லையென்று சுகாதார பணியாளர்களும், மனித உரிமைகள் ஆர்வலர்களும் கூறுகின்றனர். இந்த அனர்த்தத்தின் உண்மையான அளவு பொதுமக்களின் கண்களுக்குத் தென்படாத தன்மையே காணப்படுகின்றது. மோதல் பகுதியில் பணியாற்றிய 3 மருத்துவர்கள் இழப்புகள் தொகை தொடர்பாக திரித்துக் கூறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.நா. வின் உத்தியோகபூர்வமற்ற புள்ளிவிபரத்தின் பிரகாரம் கடந்த 4 மாதங்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகி இருப்பதாகவும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகையில் கடைசி 3 நாட்களில் இடம்பெற்ற இழப்புகள் தொடர்பாக உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. பிந்திய எண்ணிக்கை தொடர்பான விபரம் தன்னிடம் இல்லை என சுகாதார அமைச்சு கூறுகிறது. சிறுவர்களின் இழப்புகள் அதிகளவில் இருப்பதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிப்பதாக ஐ.நா. வட்டாரங்கள் கூறுகின்றன.

முழுத்தொகையில் சிறுவர்கள் இழப்புகள் 45% என்று கூறப்படுகின்றது. இதன் பிரகாரம் 3600 சிறுவர்கள் கொல்லப்பட்டும், 7650 பேர் காயமடைந்தும் இருப்பதாக கணிப்பிடப்படுகிறது. ஆயினும், காயமடைந்தவர்கள் சிகிச்சையளிக்க முடியாததால் பின்னர் மரணமடைந்திருப்பதாக நம்பப்படுவதாக சிலர் கருதுகின்றனர். கொழும்பிலுள்ள சிறுவர்கள் மருத்துவமனைக்கு 23 ஆம் திகதி சனிக்கிழமை சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் பேசுவதற்கு முயற்சிக்கப்பட்டது.

அந்த மருத்துவமனையின் 6 ஆம் மாடியில் வார்ட் இருந்தது. அங்கு மிகவும் மோசமாக காயமடைந்த சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அது மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தும் காட்சியாகும். அங்கங்கள் இழந்த, துப்பாக்கிச் சூட்டுக்கு காயமடைந்த, தோல் எரியுண்ட சிறிய பிள்ளைகள் அந்த வார்ட்டில் இருந்தனர். இந்த மாதிரியான பலர் அங்கு வந்ததாக அங்கிருந்த தலைமைத் தாதி கூறினார். யுத்த வலயத்திலிருந்து சிகிச்சைக்காக விசேட சிறுவர் மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்தார். எவ்வளவு தொகையினர் என்பது பற்றி அவரால் கூறமுடியவில்லை. இந்த சிறுமிக்கு வயிற்றில் சுடப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார். மருத்துவர்கள் சன்னத்தை அகற்றிய பின் போடப்பட்ட தையல்களே இவை என்று அவர் தெரிவித்தார்.

ஏனைய குழந்தைகள் கதிரைகளில் அமர்ந்திருந்தனர். ஒரு குழந்தையின் தோள்மூட்டில் பிளாஸ்டர் போடப்பட்டிருந்தது. பையன் ஒருவன் எரிகாயப்பட்டிருந்ததாகத் தோன்றியது. ஏனையோர் தொட்டில்களில் இருந்தனர். அவர்களின் காயங்களுக்கு கட்டுப் போடப்பட்டிருந்தது. வார்ட்டுகள் துப்புரவாக இருந்தன. அவர்கள் அங்கு விருந்தாளி ஒருவர் வந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்ததாக தென்பட்டது. ஏனெனில், ஆஸ்பத்திரிக்கு பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்தக் குழந்தைகள் குணமடைந்தவுடன் வவுனியாவிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் தமது பெற்றோரிடம் அனுப்பப்படுவார்கள்.

ஒவ்வொரு குழந்தையும் எவ்வாறு காயமடைந்தது என்பது பற்றி நிரூபிப்பதற்கான சாத்தியம் இல்லை. மருத்துவமனையின் பணிப்பாளரின் அனுமதியின்றி நோயாளரின் உறவினர்களையோ அல்லது நோயாளிகளையோ பேட்டி காண்பதற்கு அங்குள்ள ஊழியர்கள் அனுமதிக்க மாட்டார்கள். பத்திரிகையாளர்கள் அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஏனையோர் கூறிய விபரத்தின் பிரகாரம் ஏனைய மருத்துவமனைகளிலும் நிலைமை ஒரே மாதிரித்தான் என்று தெரிவிக்கப்பட்டது.

யுத்தத்தால் ஏற்பட்ட இழப்புகளினால் வார்ட்டுகள் நிரம்பி வழிந்தன. மருத்துவர்கள் குணப்படுத்துவதற்கு பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர். அளவுக்கதிகமாகவும் பயங்கரமாகவும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பிலுள்ள யுனிசெவ் பேச்சாளர் ஜேம்ஸ் ஹெல்டர் தெரிவித்தார். காயமடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ முறைமைகள் முழு அளவில் பயன்படுத்த வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்தார். காயமடைந்த குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் முகாம்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருக்கிறார். சிலரே காயமடைந்தும், கொல்லப்பட்டும் இருப்பதாக நிரூபிப்பதற்கான தீர்மானத்துடன் அரசாங்கம் இருப்பதாகத் தென்படுவதாக மாற்றுக்கோள்களுக்கான நிலையத்தைச் சேர்ந்த பவானி பொன்சேகா என்பவர் கூறினார்.""பேசக்கூடாது என்ற கொள்கை உள்ளது யாவற்றையும் சுருட்டி வைத்துவிட வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கப்பலில் நாட்டிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என்பதே உண்மை. ஆஸ்பத்திரிகளில் நீங்கள் பார்த்தால் இது அதிக தொகை என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். இரண்டு மருத்துவமனைகளுக்குச் சென்றிருந்த பொன்சேகா இரு கால்களை இழந்த அல்லது இரு கால்களும் முடமாக்கப்பட்ட குழந்தைகளை தான் பார்த்ததாக தெரிவித்தார். அங்கவீனர்களான தலைமுறையினரையே நாங்கள் கொண்டிருக்கப்போகின்றோம் என்று அவர் கூறினார். உளரீதியாக பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

முகாம்களுக்குள் உரிய மருத்துவ வசதிகள் போதாது என்று ஐ.நா. விளங்கிக் கொண்டுள்ளது. ஆனால், வெளியிடத்திலிருந்து உதவிகளை கிடைக்கச் செய்வதற்கு அரசு தயங்குகிறது. சனிக்கிழமை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் முகாமொன்றுக்குச் சென்றபோது ஒரு சிறுமி ஒருவரை சந்தித்தார். அந்தச் சிறுமியின் இரு கால்களும் காயமடைந்திருந்தன. சிதறல்கள் பட்டதால் தனக்கு காயமேற்பட்டதாகவும் முகாமில் மருத்துவ வசதிகள் இல்லை என்றும் அந்தச் சிறுமி அவருக்கு தெரிவித்திருக்கிறார்.

அபாயகரமான விளையாட்டை நடத்துகிறது ஐரோப்பா ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதர் எச்சரிக்கை


* இன்று மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வு
தமிழர்களுக்கு எதிராக "போர்க்குற்றங்கள்' புரிந்ததாக கொழும்பு மீது ஐரோப்பா குற்றச்சாட்டு தெரிவித்திருக்கும் நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவான பக்கத்தில் இருக்கின்றன.

இன்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக விசேட அமர்வொன்று இடம்பெறவுள்ளது. இந்த அமர்வு நாளை புதன்கிழமை வரை நீடிக்கப்படவுள்ளது. ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்ய விசேட அமர்வொன்றை நடத்துவதற்கு பேரவையிலுள்ள 47 உறுப்பினர்களில் 17 உறுப்பினர்களின் கையெழுத்தை டென்மார்க் பெற்றுள்ள நிலையில், இந்த அமர்வு நடத்துவது சாத்தியமாகியுள்ளது.

விசேட அமர்வை கூட்டுவதாயின் குறைந்தது 16 உறுப்பினர்களின் கையெழுத்து தேவையாகும்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதையும் அதன் தலைமைத்துவத்திலிருந்து குறைந்தது ஒரு பகுதியையாவது காப்பாற்றுவதற்கும் மேற்குலகின் ஒரு பகுதியினர் முயற்சித்திருந்ததாக ஜெனீவாவிலுள்ள ஐ.நா. விற்கான இலங்கைத் தூதுவரும் விசேட பிரதிநிதியுமான தயான் ஜயதிலக குற்றம் சாட்டியதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவித்தது.

""தோல்வி கண்டுள்ள நிலையில், இது (விசேட அமர்வு) தண்டிப்பதற்கான நடவடிக்கையாகும்' என்று தொலைபேசி மூலமான பேட்டியில் தயான் ஜயதிலக ஐ.ஏ.என்.எஸ். சேவைக்கு கூறியுள்ளார்.

சில மேற்கு நாடுகளில் புலிகள் கணிசமான அளவு போஷிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், தலிபான், அல்கைதாவுக்கு இதேமாதிரியான அந்தஸ்த்தை அந்நாடுகள் வழங்கியதா என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, கியூபா, எகிப்து, சவுதி அரேபியா, நிக்கர குவா, பொலிவியா மற்றும் ஏனைய நட்பு நாடுகளின் உதவியுடன் எந்தத் தீர்மானத்தையும் இலங்கையால் தோற்கடிக்கமுடியுமென்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சர்வதேச பயங்கரவாதச் சந்தையில் பெரியளவிலான பெயர்களை கொண்டிருந்தவற்றில் ஒன்றை இலங்கை அழித்தமைக்காக உலகம் இலங்கைக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றும் அந்தத்தருணத்தில் இலங்கையை இவ்வாறு இழுந்துவிட்டிருப்பது கவலைக்குரியது என்றும் ஜயதிலக கூறியுள்ளார். "தமது சொந்த நாடுகளில் இராணுவ மயமாக்கும் பேச்சுகளுக்கு ஊக்குவிப்பு அளிக்கும் அபாயகரமான விளையாட்டை அவர்கள் விளையாடுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். ஐரோப்பாவையும் புலிகள் சார்வு தமிழர்கள் பற்றியும் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

விசேட அமர்வுகான தனது பாதையில் ஐரோப்பா செல்லுமானால், இலங்கையின் உணர்வுகளை அது கடினமானதாக்கியிருப்பதுடன் அரசியல் ரீதியான இடத்தினை சுருக்கிவிடும் என்றும் ஆழமான எதிர்விளைவுகளை தோற்றுவிக்கும்' என்றும் அவர் எச்சரித்துள்ளார்

இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்படுவர்


இலங்கையில் சகஜநிலை திரும்பியதும் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறு கோரப்படுவார்கள் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் மீண்டும் உள்துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, இலங்கையில் விடு தலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதால் அங்கு இயல்பு நிலை திரும்பும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்களா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த சிதம்பரம், சகஜநிலை திரும்பினால் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்ல அகதிகளே ஆர்வமாய் இருப்பார்கள் என்றும், இலங்கையில் இயல்பு நிலை திரும்பும்போது அகதிகள் கண்டிப்பாகத் திரும்பிச் செல்வார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வெளிவருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம், இலங்கை அரசே அதை உறுதிப்படுத்திவிட்ட நிலையில், பிரபாகரன் மரணம் தொடர்பாக ஐயப்பாடுகளை எழுப்பத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

தமிழகக் கடலோரப் பகுதிகள் வழியாக விடுதலைப் புலிகள் ஊடுருவ வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதலளித்த சிதம்பரம், அது தொடர்பாக தமிழக அரசுக்கு உரிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கியிருப்பதாகவும், மாநில அரசும் அதை ஏற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருப்பதால் ஊடுருவல் நடைபெற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

ஈழப்பிரச்சனைக்காக சிங்கபூரில் உண்ணாநிலை போராட்டம்!

ஈழப்பிரச்சனைக்காக சிங்கபூரில் உண்ணாநிலை போராட்டம்!

 
சிங்கையை சேர்ந்த தமிழ் உறவான திரு ராஜ சேகர் என்பவர் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை வரும் 23-05-2009 (சனிக் கிழமை) காலை பத்து மணி அளவில் தொடங்கி 26-05-2009 (திங்கள் கிழமை) காலை பத்து மணி வரை நம் உலகத் தமிழ் மக்கள் அரங்க அறக்கட்டளை ஆதரவுடன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க இருக்கிறார். அலைகடலென தமிழர்கள் வந்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கவும்.
சர்வதேச சமூகம்கத்தின் கவன ஈர்ப்பிர்க்காவும் உலக மக்களின் ஆதரவு வேண்டியும் இந்த உண்ணாவிரதத்தை அவர் மேற்கொள்கிறார்
-
இடம் ஹாங் லிம் பார்க் hong lim park (speakers corner).
கிளார்க் கீ ரயில் வண்டி நிலையம் அருகில்
தொடர்புக்கு
-
தமிழ் மறையான் 92702429,
-
சத்யா-83984444
-
மேலும் தகவலுக்கு
-
http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5338231452272556972&start=1
=============================================


சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன:


தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போர்க் குற்றச் செயல்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன என்று இந்திய ஊடகமான ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட போர்க் குற்றச்செயல்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன.

சுவிற்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மனித உரிமை சபையின் சிறப்பு விவாத்தில் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் பிரித்தானியாவும் டென்மார்க்கும் தீவிரமாக உள்ளன.

சிறிலங்காவுக்கு எதிரான விவாதத்தை மேற்கொள்ளும் பொருட்டு 17 நாடுகளின் ஆதரவுகளை டென்மார்க் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் குறைந்தது 16 நாடுகளின் ஆதரவுகளாவது தேவை.

வன்னிப் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. சபை தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்தே இந்த விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆனால், தனது நட்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், ரஸ்யா, சீனா, கியூபா, எகிப்து, சவூதி அரேபியா, நிக்கரகுவா, பொலிவியா ஆகிய நாடுகளின் ஆதரவுகளுடன் இந்த தீர்மானத்தை முறியடிக்கப் போவதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவிலும் கனடாவிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்வதால் அவர்கள் சிறிலங்காவுக்கு எதிரான தீவிர போக்கை கொண்டுள்ளனர்.

மோதல்களில் சிறிலங்கா படையினர் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை படுகெலை செய்ததாக அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரணடைய இடைத்தரகராக செயற்படுமாறு புலிகள் என்னை மன்றாட்டமாக கேட்டிருந்தனர்


* லண்டன் ரைம்ஸ் பத்திரிகை நிருபர் மேரி கொல்வின் கூறுகிறார் .
சரணடைவதற்கு இடைத்தரகராக செயற்படுமாறு புலிகள் என்னிடம் மன்றாடிக் கேட்டனர். இது நம்பிக்கையிழந்த கடைசி தொலைபேசி அழைப்பாக இருந்தது. ஆனால், சில மணித்தியாலங்களுக்குள் மரணமடையப்போகின்ற மனிதனின் குரலோசையாக அது காணப்படவில்லை. புலிகளின் அரசியல் தலைவரான பாலசிங்கம் நடேசன் திரும்பி வருவதற்கு எந்தவொரு மாற்றமும் இல்லை.

"நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம்' என்று ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் கடைசியாக அவர் எனக்குக் கூறினார். விடுதலைப் புலிகள் கடைசியாக தமது களமாக அமைத்துக்கொண்ட இலங்கையின் வட பகுதியிலுள்ள கடற்கரையோரம் அமைந்த சிறு நிலப்பகுதியிலிருந்து செய்மதித் தொலைபேசி மூலம் இதனை அவர் எனக்குத் தெரிவித்திருந்தார். அங்கிருந்து இயந்திரத் துப்பாக்கிகளின் ஓசையை என்னால் கேட்கக்கூடியதாக இருந்தது. அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்; "ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்' என்று கூறியிருந்தார்.

வெற்றி பெற்றிருக்கும் இலங்கை இராணுவத்திடம் சரணடைவது 26 வருட உள்நாட்டுப் போரில் மிகவும் அபாயகரமான தருணம் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார் என்று லண்டன் டைம்ஸ் நிருபரான மேரி கொல்வின் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விடயம் தொடர்பாக லண்டன் டைம்ஸ் பத்திரிகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் எழுதியிருப்பதாவது;

8 வருடங்களுக்கு முன்பு புலிகளின் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதிலிருந்து நடேசனையும் புலிகளின் சமாதானத் செயலகத் தலைவர் சீவரட்ணம் புலித்தேவனையும் நான் அறிந்திருந்தேன். அந்த காலகட்டத்தில் தீவின் மூன்றில் ஒரு பகுதியை புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இப்போது இந்த இருவரும் எஞ்சியிருக்கும் 300 போராளிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பலர் காயமடைந்திருந்தனர். அவர்களுடன் பல்லாயிரணக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களும் அகப்பட்டிருந்தனர். கையால் கிண்டிய பதுங்கு குழிகளுக்குள் மறைந்திருந்தனர். தொடர்ச்சியான குண்டு வீச்சுகள் அருகாமையில் நீடித்திருந்தன.

புலிகளின் கிளர்ச்சியை இராணுவம் வெற்றிகரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் போது பல நாட்களாக புலிகளின் தலைமைத்துவத்துக்கும் ஐ.நா. விற்கும் இடையில் நான் இடைத்தரகராக இருந்தேன்.

மூன்று விடயங்களை ஐ.நா. விற்குத் தெரிவிக்குமாறு நடேசன் என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள், அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை அவர்கள் விரும்புகின்றனர். தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கவேண்டுமென்ற உறுதிமொழியை அவர்கள் விரும்பியிருந்தனர்.

பிரிட்டிஷ், அமெரிக்காவைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகளூடாக கொழும்பில் இருந்து ஐ.நா. வின் விசேட தூதுவர் விஜே நம்பியாருடன் நான் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தேன். அவர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பிரதம தலைமையதிகாரியாவார். சரணடைவதற்கு புலிகளின் நிபந்தனைகளை நான் அவருக்குத் தெரிவித்திருந்தேன். அவற்றை இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவிப்பதாக அவர் கூறியிருந்தார்.

சமாதானமான பெறுபேற்றை மோதலானது கொண்டுவரும் என்று தோன்றியது. மகிழ்ச்சியாகயிருப்பவரும் கண்ணாடி அணிந்தவருமான புலித்தேவன் பதுங்கு குழிக்குள் இருந்து தான் சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படமொன்றை எனக்கு அனுப்பியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை நடேசன் உபயோகிக்க மறுத்தார். என்னிடம் அவர் தொலைபேசீ மூலம் அழைப்புக்கொண்டபோது அந்த வார்த்தையை பிரயோகிக்க மறுத்திருந்தார். ஆனால், அதனைச் செய்யவே அவர் விரும்பியிருந்தார். புலிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்க நம்பியார் பிரசன்னமாகியிருக்க வேண்டுமென்று அவர் விரும்பியிருந்தார். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வின் 24 மணிநேரக் கட்டுப்பாட்டு நிலையமானது கொழும்பிலுள்ள நம்பியாருடன் எனக்குத் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தது. இது திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணியாகும். நான் அவரை எழுப்பினேன்.

புலிகள் தமது ஆயுதங்களை கீழே வைத்துவிட்டார்கள் என்று நான் அவருக்குக் கூறினேன். தனக்கு நடேசனும் புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள் என்று இலங்கை தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக எனக்குக் கூறினார். வெள்ளைக் கொடியொன்றை உயர்த்திப் பிடித்தவாறு வருவதே அவர்கள் செய்ய வேண்டியது என்று அவர் தெரிவித்திருந்தார். சரணடையும் போது சாட்சியமாக இருப்பதற்கு அவரால் வடக்கிற்கு அவர் போகக் கூடாதா என்று நான் கேட்டேன். அவர் அவசியம் இல்லையென்றார். அச்சமயம் லண்டனில் ஞாயிறு பின்னிரவாக இருந்தது. நடேசனின் செய்மதித் தொலைபேசியில் தொடர்பு கொள்ள நான் முயற்சித்தேன். முடியவில்லை. ஆதலால் தென்னாபிரிக்காவிலுள்ள புலிகளின் தொடர்புக்கு நான் அழைப்புவிடுத்தேன். நம்பியாருக்கும் செய்தியைத் தெரிவிப்பதற்காக அழைப்புவிடுத்தேன்.

வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்து அசைப்பதே அந்தச் செய்தியாகும். அதிகாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. நான் விழித்தெழும்பினேன். அதில் தென்கிழக்காசியாவில் இருந்து புலிகளின் மற்றொரு தொடர்பாடல் அழைப்பாகும். அவராலும் நடேசனுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. "எல்லாம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்' என்று அவர் கூறினார். "அவர்கள் யாவரும் இறந்துவிட்டனர்' என்று நான் நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

அன்று மாலை இலங்கை இராணுவம் அவர்களின் உடல்களை பார்வைக்கு வைத்தது. சரணடைவதற்கு என்ன நடந்தது. மிக விரைவில் நான் கண்டுபிடிக்கவேண்டும். ஞாயிறு இரவு இலங்கைப் பாராளுமன்றத்திலுள்ள தமிழ் எம்.பி.யான ரொகான் சந்திரநேருவுக்கு நடேசன் அழைப்பு விடுத்திருந்தார். அவர் உயர்மட்டத்துடன் தொடர்பு கொண்டார். அடுத்த மணித்தியாலங்களில் நிகழ்ந்தவற்றை எம்.பி. கூறியிருந்தார். நடேசனுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் பூரண பாதுகாப்பு அளிப்பதாக தமக்குக் கூறப்பட்டது என்றும் நடேசனுடன் 300 பேர் இருப்பதாகவும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதாகவும் நடேசன் தெரிவித்திருந்தார்.

சரணடையும் போது தான் செல்வதாக இலங்கை உயர்மட்டத்திற்கு தான் கூறியதாக சந்திரநேரு தெரிவித்திருந்தார். அங்கு செல்ல வேண்டிய தேவையில்லையென்றும் தனக்கு வீணாக அபாயத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியமில்லையென்றும் தமக்குக் கூறப்பட்டதாக சந்திரநேரு எம்.பி. தெரிவித்திருந்தார். திங்கட்கிழமை உள்ளூர் நேரம் 6.20 மணியளவில் நடேசனுடன் எம்.பி. தொடர்பு கொண்டார். துவக்குச் சூடு சத்தம் பெரிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நடேசன் கூறினார். வெள்ளைக் கொடியுடன் நான் போகப்போகிறேன் என்று நடேசன் தெரிவித்தார்.

உயரமாகக் கொடியைப் பிடித்துக் கொண்டு போகுமாறும் அவர்கள் அதனைப் பார்க்க வேண்டுமென்றும் மாலையில் உங்களை சந்திக்கிறேன் என்றும் தான் நடேசனிடம் கூறியதாக சந்திரநேரு எம்.பி. தெரிவித்தார். என்னநடந்தது என்று அந்த இடத்தில் இருந்து தப்பிய தமிழர் ஒருவர் கூறியுள்ளார். அவர் நிவாரணப் பணியாளர் ஒருவரிடம் அதனைத் தெரிவித்திருக்கிறார். நடேசனும் புலித்தேவனும் மற்றும் ஆண்களும் பெண்களுமாக ஒரு குழுவினர் வந்ததாகவும் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஐ.நா. தூதுவரான நம்பியாரின் பங்களிப்புக் குறித்து கேள்வி எழுந்துள்ளது. அவரின் சகோதரர் சதீஸ் நம்பியார் 2002 இல் இருந்து இலங்கை இராணுவத்திற்கு ஆலோசகராக இருந்து வருகிறார்.

விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்டிருந்தனர். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் என்பன தொடர்பாக அவர்கள் தடைசெய்யப்பட்டிருந்த போதும் புலித்தேவனும் நடேசனும் மோதலுக்கு அரசியல் தீர்வொன்றை காணவேண்டுமென்பதில் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். அவர்கள் உயிருடன் இருந்தால் தமிழ் சிறுபான்மையினருக்கு நம்பகரமான அரசியல் தலைவர்களாக இருந்திருக்கக்கூடும். கடந்த வாரம் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வதந்திகள் பரவியிருந்தன. அமைப்பு முழுக்க குழம்பிப்போயிருந்தது.

உயிருடன் உள்ள தமிழ்த் தலைவர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு திரும்புவது பற்றிப் பேசினர். அதேசமயம், போராளிகளின் பிரதிநிதிகள் பழிவாங்கல் தாக்குதல் தொடர்பாக அச்சுறுத்தியிருந்தனர். பத்திரிகையாளர் என்ற முறையில் இந்த செய்தி குறித்து எழுதுவதற்கு கடினமான நிலைமையில் இருந்தேன். இலங்கைக்கு 2001 இல் நான் முதலாவதாகச் சென்றிருந்தேன். 5 இலட்சம் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை தடைசெய்திருப்பதாக வெளியான செய்திகள் குறித்து ஆராய்ந்து செய்தி எழுதுவதற்காகச் சென்றிருந்தேன். 6 வருடங்களாக பத்திரிகையாளர்களுக்கு வடக்கே அச்சமயம் தடைவிதிக்கப்பட்டிருந்தது. மக்கள் மிகவும் கஷ்டமான நிலைமையில் இருந்தனர். மருத்துவர்கள் மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து கோரிக்கை விடுத்தவாறு இருந்தனர். நடேசன், புலித்தேவன் போன்றவர்கள் தமது கோரிக்கைகளைத் தாங்கள் குறைத்துக்கொண்டிருப்பதாகவும் சுதந்திரத்தில் இருந்து இலங்கைக்குள் சுயாட்சியைக் கோரவிரும்புவதாகவும் என்னிடம் தெரிவித்திருந்தனர்.

இரவு வேளையில் நான் அவர்களின் இடத்திற்குக் கடத்திச் செல்லப்பட்டேன். ஆயினும் இலங்கை இராணுவத்தினர் பதுங்கியிருந்து நடவடிக்கையை மேற்கொண்டனர். ?பத்திரிகையாளர் பத்திரிகையாளர்? என்று சத்தமிடும்வரை நான் காயமடைந்திருக்கவில்லை. அதன் பின்னர் தமிழர்களுடன் எனக்கு இடைக்கிடையே தொடர்புகள் இருந்தது.

இராணுவத்தின் புதிய நடவடிக்கை புலிகள் எதிர்கொண்ட அண்மைய மாதங்களில் தலைமைத்துவத்திடமிருந்து எனக்குத் தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகள் கிடைத்தன.ஒரு தொலைபேசி அழைப்பில் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுக்குத் தாங்கள் கட்டுப்படுவார்கள் என்று நடேசன் கூறியிருந்தார்.யுத்த நிறுத்தத்திற்கு அவர் மன்றாடிக் கேட்டார். அவரது கோரிக்கையை கொழும்பு நிராகரித்துவிட்டது. விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து வெற்றி கிடைத்துள்ளது. தமிழ்ப் பொதுமக்களின் விலை செலுத்தப்பட்டதாக அது வந்துள்ளது. இறுதி யுத்த நடவடிக்கையின் போது 7 ஆயிரம் பொதுமக்கள் இறந்ததாக ஐ.நா. கூறுகிறது. ஆயினும் அதன் இழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமென்றும் நம்பப்படுகிறது. மோதல் வலயத்திலிருந்த 2 இலட்சத்து 80 ஆயிரம் பேர் முகாம்களுக்குள் உள்ளனர். அவர்களின் நிலைமை மிக மோசமாகிவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு கூடாரத்திற்குள்ளும் மூன்று குடும்பங்கள் உள்ளதாக சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்கள் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தன.

உணவுக்கும் தண்ணீருக்கும் பல மணிநேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 44 ஆயிரம் பேர் உள்ள முகாமில் ஒரே மருத்துவரே இருப்பதாக ஒரு நிவாரணப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். உதவி வழங்கும் அமைப்புகளூடாக அகதிகள் சண்டே டைம்ஸ் (லண்டன்) உடன் தொடர்பு கொள்ள முடிந்தது. "நாங்கள் எப்படி வாழ்கிறோம்' என்று முகாமில் இரு பிள்ளைகளுடன் இருக்கும் பெண்ணொருவர் கூறினார். எமக்கு இடமில்லை. வெயிலில் இருந்து பாதுகாப்பு இல்லை. கைதிகளாக முற்கம்பி வேலிக்குள் இருக்கின்றோம். இரண்டு பிள்ளைகளின் தாயான நான் என்ன செய்வேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நாங்கள் ஏன் இங்கு இருக்கிறோம் என்று அந்தப் பெண் கேள்வியெழுப்பினார்.

நாட்டை ஐக்கியப்படுத்துவதாகவும் 80 வீதமான அகதிகளை ஆண்டு முடிவதற்குள் மீளக்குடியேற்றப் போவதாகவம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது யதார்த்த பூர்வமானது என்று நான் நினைக்கவில்லை. எவரையும் விடுவிப்பதற்கான நடைமுறை இல்லை என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் அன்னா நெய்சாட் டைம்ஸுக்குக் கூறியுள்ளார். அரசாங்கம் எத்தகைய நோக்கங்களை பிரகடனப்படுத்தினாலும் தமிழ் மக்களின் துன்பங்களுக்குத் தீர்வு காணப்படும் வரை எதிர்காலத்தில் இலங்கையை ஐக்கியப்படுத்தும் விடயத்தில் சிறிதளவே எதிர்பார்ப்புகள் காணப்படுவதாகத் தென்படுகிறது.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இந்தியா இனியும் நாடகம் ஆடக்கூடாது


* ஆனந்த விகடன் ஆசிரியர் தலையங்கம்
ஈழத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது என்று தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார இதழான "ஆனந்த விகடன்' வலியுறுத்தியிருக்கின்றது.

இது தெடார்பாக "இரக்கமற்ற இறையாண்மை' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்திய பாராளுமன்றத்துக்கான தேர்தல் முடிந்து, வாக்குகளை எண்ணிக்கொண்டு இருந்த அதேநேரம், இலங்கை மண்ணில் செத்து விழுந்த தமிழர்களின் சடலங்களைக் கணக்குப் பார்த்துக்கொண்டே முன்னேறியது இலங்கை இராணுவம்.

"முந்தைய தேர்தலை விட வலுவாக வென்றுவிட்டோம்' என்று ஆளும் கூட்டணியினர் இங்கே வெடி போட்டுக் கொண்டாடிய அதேவேளை... "இறுதி வெற்றியை நெருங்கி விட்டோம்' என்று பீரங்கிகள் வெடித்துக் கரும் புகையால் விண்ணை நிரப்பின.

"விரும்பிய இலாகாவைக் கேட்டுப் பெறுவோம்' என்ற மகிழ்ச்சியில் இங்கே இனிப்புப் பரிமாற்றம் தொடங்கிய அதேசமயம், "பிரபாகரனைக் கொன்றுவிட்டோம்' என்று இனிப்பு ஊட்டிக்கொண்டார்கள் சிங்கள மக்கள்! "விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களைப் பிணைக் கைதிகளாக முன்னிறுத்தி யுத்த களத்தில் பலி கொடுக்கிறார்கள் என்று இனிமேலும் இலங்கை அரசு சொல்லமுடியாது.

இனி ஒரே ஒரு தமிழன் அங்கே துப்பாக்கியாலோ பசியாலோ உயிர்நீத்தாலும் அதற்கான முழுப்பொறுப்பும் இலங்கை அரசைத்தான் சாரும் என்று உறுதியான குரலில் இந்தியா உடனே எச்சரிக்கவேண்டும். அது அடுத்த நாட்டு விவகாரம் என்று சொல்லி இனியும் நம் நாடு பதுங்கு குழிக்குள் முடங்கியிருக்கக்கூடாது.

குண்டு மழையால் விளைந்த காயங்களாலும் குடலைச் சுருட்டும் பசியாலும் வாட்டி வதைக்கும் நோயாலும் உயிரோடு செத்துக்கொண்டு இருக்கும் மிச்சம் மீதித் தமிழர்களுக்கான புனரமைப்பில் இந்தியா முக்கியபங்கு வகிக்க வேண்டும்.விரைவில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை பெற்றுத் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும்.

உலக நாட்டுப் பிரதிநிதிகளும் பத்திரிகையாளர்களும் தொண்டு நிறுவனங்களும் அங்குள்ள தமிழர்களை நேரில் சந்திப்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகளை அகற்றுவதும் கூட இந்திய அரசின் பொறுப்புத்தான். இதற்கெல்லாம் இலங்கை அரசை உடன்பட வைக்க முடியாது என்றால் இலங்கையோடு சேர்ந்துகொண்டு இத்தனை நாளும் இறையாண்மை என்கிற பெயரால் இந்திய அரசு இரக்கமற்ற நாடகம்தான் ஆடிக்கொண்டு இருந்தது என்கிற பழிச்சொல் உறுதிபட்டுவிடும்.

மெனிக் பாமில்

இருமருங்கிலும் அச்சிடப்பட்ட பதாகைகளுடன் நின்றுகொண்டிருந்த தமிழ் பிள்ளைகள் "தாய் நாட்டிற்கு' ஐ.நா. வின் பான் கீ மூனை வரவேற்பதற்கு அணிவகுத்து நின்றனர். சனிக்கிழமை இலங்கைக் கொடிகளுடன் நின்று கொண்டிருந்த அந்தச் சிறுவர்கள் உச்சஸ்தாயில் பாடினர். "பான் கீ மூன், பான் கீ மூன்' என்று அவர்கள் பாடினர். அதேசமயம், அவர்களில் பலர் பரிதாபமான நிலையில் காணப்பட்டனர். இந்தப் பிள்ளைகள் ஐ.நா. நிதியுதவியுடனான முகாம்களில் தமது குடும்பங்களுடன் கொண்டு வரப்பட்டவர்கள். அவர்களை புன்சிரிப்புடன் பான் கீ மூன் பார்த்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இராணுவ மயமாக்கப்பட்ட முகாமிற்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார் என்று அவருடன் வருகை தந்த இன்னர் சிற்றி பிரஸின் மத்யூ ரஸல் லீ மெனிக்பாமில் இருந்து செய்தி ஆய்வை எழுதியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்லப்பட்டார். அங்கு கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த முதியவர்கள் வலியினால் துடித்துக்கொண்டிருந்தனர். இலையான்கள் அவர்களுக்கு மேலாகப் பறந்துகொண்டிருந்தன. பான் கீ மூன் வளைந்து ஒரு பெண்ணின் கரத்தைப் பிடித்தார். அதேசமயம், பக்கத்திலிருந்த பெண்ணொருவர் இறந்திருந்தார். இந்தக் கொடூரமான பயணத்தின் போது வந்திருந்த புகைப்படப் பிடிப்பாளர் ஒருவரும் கவனிக்காத விதத்தில் படம் பிடித்து விட்டார். பான் கீ மூன் பி.பி.சி. க்கு பேட்டி கொடுத்தார். நாங்கள் இன்னும் போக வேண்டிய தேவையுள்ளதென்று பாதுகாப்பு அதிகாரி மெதுவாகக் கூறினார்.

அவர் "ஊடகங்களுடன் பேசிக்கொண்டிக்கிறார்' என்று பான் கீ மூனின் உதவியாளர் பதிலளித்தார். இப்போது நாங்கள் போவதற்கு இந்த மக்கள் வெளியேறியிருந்த வெற்றுநிலம் காத்துக்கொண்டிருக்கக் கூடும். அடுத்ததாக கணவர் ஒருவர் ஊடகத்துறையினரை நிறுத்தி தனது மனைவியின் தொடையைக் காட்டினார். ஆட்லறி ஷெல்லினால் துண்டாடப்பட்டிருந்தது. எமக்கு உதவி தேவையென்று அவர் வேண்டிக்கொண்டார். அவரின் பெயரைக் குறிப்பிடுவது அதிக பிரச்சினைகளுக்கு இடமளிக்கக்கூடும். முற்கம்பி வேலிகளினூடாக நிருபர்களுக்கு ஒரு பெண்ணொருவர் பேட்டி கொடுத்தார். அதனை நியூயோர்க்கைச் சேர்ந்த ஐ.நா. அதிகாரியொருவர் தமிழில் மொழி பெயர்த்தார். அவர் தமிழில் பேசக்கூடியவர்.

அந்தப் பெண் தனது பெயரைக் கூறினார். தாங்கள் முகாமை விட்டு வெளியே போக முடியாது என்று முறைப்பாடு செய்தார். பின்னர் அந்தப் பெண்ணையும் அங்கிருந்த கூட்டத்தினரையும் திரும்பிப் போகுமாறு தெரிவிக்கப்பட்டது. உங்களது இறுதிப் பெயர் என்ன என்று அந்தப் பெண்ணிடம் நிருபர் ஒருவர் கேட்டார். அதனைக் கூறுவதற்கு முன் அப்பெண் கவலையுடன் பார்த்தார். அதனால், அதனை இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிடவில்லை.

இந்த முகாம்களில் ஐ.நா.வின் பங்களிப்பு என்ன? பான் கீ மூனினதும் ராஜபக்ஷவினதும் ஐ.நா. படங்களை இலங்கை அரசாங்கம் பிரசார பதாகைகளுக்கு உபயோகிக்க ஏன் அனுமதியளிக்கப்பட்டது. தனது பெயரை பலவந்தமாகப் பாடுவதற்கு பான் கீ மூன் எவ்வளவு தூரம் பிரதிபலிப்புகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்?

சனிக்கிழமை காலை பான் கீ மூனிற்கும் அவரது அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து ஒரு வழி மார்க்கமாக விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. சந்திப்பறையில் இரண்டு மின் விசிறிகள் மெதுவாகச் சுற்றிக்கொண்டிருந்தன. ஆயுதம் தரித்த பாதுகாவலர்கள் நின்று கொண்டிருந்தனர். பான் கீ மூனிற்கும் அவரது உயர்மட்ட மனிதாபிமான விவகார அதிகாரிக்கும் மூவர் இடம்பெயர்ந்த மக்களுக்காக தாங்கள் எவ்வளவைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றித் தெரிவித்தார்கள்.

மேற்குலகிலிருந்து உதவி பற்றாக்குறையாக இருப்பதாக அவர்கள் கூறினர். இந்தியா மட்டும் மருத்துவ உதவி வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சில நீல நிறக்கூடாரங்களைக் காட்டி அவை சீனாவால் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்திற்கு நாம் உதவி செய்ய வேண்டியிருக்கிறது என்று பான் கீ மூன் பின்னர் தெரிவித்தார். விடயங்களை ஒருவழிமார்க்கமாகத் தெரிவித்த போது நாங்கள் கேள்விகளைக் கேட்க முடியுமா என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டுக்கொண்டது. பான் கீ மூனின் அதிகாரிகள் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால், அரசாங்கம் தனது விடயங்களை கூறிக்கொண்டிருந்தது. வங்கிக் கிளைகள் , புத்தக விற்பனை பற்றி தெரிவித்தனர்.

பின்பு மண்டபத்தை விட்டு வெளியேறுமாறும் மினி பஸ்ஸுக்குப் போகுமாறும் இன்னர் சிற்றி பிரஸுக்கு கூறப்பட்டது. வெளியே வைத்திருந்த கமராக்களை உள்ளே வைக்குமாறு புகைப்படப் பிடிப்பாளர்களுக்கு படைவீரர்கள் கூறினர். முள்ளுக்கம்பி வேலிக்குள்ளே நின்றவர்களை ஒருவர் அணுகி கதைக்க முயன்றார். அவ்வாறு செய்ய வேண்டாமென ஐ.நா. பிரதி நிதியொருவர் கூறினார். இது சில சமயம் புத்திசாலித்தனமானதாக பாதுகாப்பான விடயமாகவும் இருக்கக்கூடும். ஆனால், ஐ.நா. ஏன் இந்த முகாம்களுக்கு நிதியுதவி அளிக்கின்றது?

பதிலளிக்கப்படாத பல கேள்விகளுடன் இலங்கையிலிருந்து புறப்பட்ட பான் கீ மூன்


பதிலளிக்கப்படாத கேள்விகளுடன் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையை விட்டு புறப்பட்டிருப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது.

மோதல் சூன்ய வலயத்துக்கு மேலாக சென்று பார்வையிட்டும் அகதிகள் முகாம் ஒன்றுக்கு சென்று நிலைமையை அவதானித்துவிட்டும் பான் கீ மூன் தலைமையில் வருகை தந்திருந்த அதிகாரிகளுடன் ஐ.நா. விமானம் கொழும்பை விட்டு புறப்பட்ட போதிலும் குழப்பகரமான பல கேள்விகள் தொடர்ந்தும் இருப்பதாக அந்த விமானத்தில் சென்ற நியூயோர்க்கிலுள்ள இன்னர் சிற்றி பிரஸின் நிருபர் மத்யூ ரசல் லீ தனது செய்தியாய்வில் எழுதியிருக்கிறார்.

கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அரசாங்கம் தன்னால் முடிந்த அதிகளவிலானவற்றை செய்து கொண்டிருக்கிறது. இந்த முயற்சிகளை நான் பாராட்டுகின்றேன் என்று பான் கீ மூன் கூறியிருக்கிறார்.

கேள்வி பதில் அமர்வு இடம்பெறவில்லை. பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக இரத்தக்களறியென்று அதனை அழைப்பதை பான் தவிர்த்துக்கொண்டார். "அந்தக் குறிப்பிட்ட வார்த்தையை நான் சொல்லவில்லை. அது தொடர்பாக முழுமையான தெளிவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்' என்று அவர் கூறினார். கண்டியிலிருந்து விமானநிலையத்திற்கு ஊடகத்துறையினர் அழைத்துச் செல்லப்பட்டனர். (பான் கீ மூனின் பயணம் தொடர்பாக வழங்கப்பட்ட இரண்டு நாள் விசாவை மேலும் நீடிக்குமாறு இன்னர் சிற்றி பிரஸ் கேட்டிருந்தது. ஆனால் அது வழங்கப்படவில்லை.

கண்டியிலிருந்து விமானநிலையம் செல்லும் பாதையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகள் காணப்பட்டன. எங்கும் சிங்கக் கொடி பறந்தது. விமானநிலையத்தில் அரசாங்கம் மற்றொரு செங்கம்பள பிரியாவிடைக்கு ஏற்பாடு செய்திருந்தது. பான் கீ மூன் சிறிது நேரம் தாமதித்து வருகை தந்தார். பான் கீ மூனின் தலைமையதிகாரி விஜே நம்பியாரும் ஐ.நா. விமானத்தில் உடன் வந்தார். அவருடைய ஒருவார காலப் பணி பூர்த்தியாக்கப்பட்டிருந்தது. அவர் விமானத்தில் ஏறியபோது இன்னர் சிற்றி பிரஸ் பகிடிவிட்டது. திரும்பி வந்ததற்கு நல்வரவு என்று தெரிவித்தது. பான் கீ மூன் பேட்டியளித்துக்கொண்டிருந்தார். இறுதியாக இன்னர் சிற்றி பிரஸை அவர் கண்டுகொண்டார். நீங்களும் எங்களுடன் திரும்பி வருகிறீர்களா என்று கேட்டார். ஆம் என்று பதிலளிக்கப்பட்டது. விசா நீடிப்பு மறுக்கப்பட்டபோதும் ஐ.நா.விடம் உதவி இல்லை.

மக்களுடன் இன்னர் சிற்றி பிரஸுக்கு மக்கள் கதைக்க முடியுமா என்று ஐ.நா. விலுள்ள இலங்கைத் தூதுவரிடம் கேட்கப்பட்டது. ஓரளவுக்கு முடியும் என்று அவர் கூறினார். முகாம்களில் உள்ளே இருந்தவர்களிடம் மட்டுமே இன்னர் சிற்றி பிரஸால் கதைக்க முடிந்தது. அங்கு படையினரும் ஏனைய அரசாங்க அலுவலர்களும் இருந்தனர். இலங்கை அதிகாரிகளிலும் அங்குள்ள அதிகாரிகளே முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் இருந்தவர்களை அருகிச்செல்வதைத் தடுத்தனர். கொழும்பிலிருந்து விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் விமானத்தில் அங்கு கூடியிருந்தோர் மத்தியில் பான் கீ மூன் பேசினார். கொரியாவின் முன்னாள் தலைவரின் தற்கொலைக் கடிதம் மற்றும் தான் மலர்களை அங்கு அனுப்பி வைத்த விடயம் என்பன பற்றி அங்கு கதைத்தார்.

முன்நாட்களில் ஊடகங்களுடன் பேசுவதற்கு தென்கொரியா தடுத்திருந்தது. பின்னர் மூன்று மருத்துவர்களைப் பற்றியும் நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டீர்களா என்று பான் கீ மூனிடம் கேட்கப்பட்டது. ஆம், நான் கதைத்தேன் என்று அவர் பதிலளித்தார்.

அரசாங்கத்துடனான கூட்டறிக்கையின் போது அந்த மருத்துவர்கள் பற்றியோ அல்லது பத்திரிகை சுதந்திரம் குறித்தோ முகாம்களுக்கு அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செல்வது தடுக்கப்பட்டமை குறித்தோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அரசாங்கம் மனிதாபிமான நிறுவனங்கள் தொடர்ந்து பணிபுரிவதற்கு ஏற்பாடுகளைச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ், எதிர்க்கட்சிகள் அல்லது சிவில் சமூகத்தை ஏன் பான் கீ மூன் சந்தித்திருக்கவில்லை. இது அரசாங்கங்கள் பக்கம் ஐ.நா. செல்வதாக தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்துகின்றது. விமானத்தில் சென்றுகொண்டிருந்த போது பான் கீ மூன் பஹ்ரயினில் வைத்து நிருபர்களிடம் கதைப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பான் கீ மூன் குழுவினர் வேறுபக்கமாகச் சென்றனர்.

ஒரு சில நிருபர்களுக்கே பேட்டியளித்தனர். அவர்களின் உள்ளூர் சந்தைகளைப் பற்றி பேட்டி காணப்பட்டது. இலங்கை என்ன செய்யவேண்டுமென்று தான் விரும்புவதாக பான் கீ மூன் தலைமையிலான ஐ.நா. எதனையும் கூறவில்லை என்று அவதானி ஒருவர் இன்னர் சிற்றி பிரஸுக்குக் கூறினார்.

இலங்கைத் தமிழரின் நிலையைப் பார்த்து முழுநாடுமே கண்ணீர் வடிக்கிறது


இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பார்த்து நாடே கண்ணீர் விடுகிறது, வேதனைப்படுகிறது. ஆனால் இலங்கைத் தமிழர்களைக் காக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.

பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நரேந்திரமோடி சனிக்கிழமை தமிழகத்தில் பிரசாரம் செய்தார்.

முதலில் கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அவர் நாகர்கோவிலில் பேசினார். அங்குள்ள நாகராஜா கோவில் திடலில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி; பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு பாரத நாட்டின் தென்கோடியில் வாழும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு எனது வணக்கம் என தமிழில் பேசினார்.

அவர் இங்கு கூறியதாவது;

குடும்ப அரசியல் நாட்டை மோசமான நிலைக்குக்கொண்டு சென்று விட்டது. டில்லியைப் பார்த்து தமிழ் நாட்டிலும் குடும்ப அரசியல் நடைபெறுகின்றது. தி.மு.க.வில் ஒரு பகுதியினர் டில்லியையும் சிலர் தமிழ் நாட்டையும் பார்த்துக் கொள்கின்றனர். அப்படியும் குடும்ப சண்டை தீராததால் தமிழ்நாட்டின் வடக்கை அவர் பார்த்துக் கொள்ளட்டும் தெற்கை இவர் பார்த்துக் கொள்ளட்டும் என்று பிரித்துக் கொண்டுள்ளார்கள்.

தமிழகத்தையே இவர்கள் பங்கு போட்டு கொள்ளையடித்து வருகிறார்கள். இதேபோல டில்லியில் சோனியா காந்தி குடும்பத்தினர் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசியல் முடிவுக்கு வரவேண்டும். இந்த வாக்கு வங்கி அரசில் குடும்ப அரசியலால் நமக்கு பல சிக்கல்கள் உள்ளன. நாடு முன்னேற வேண்டுமானால் இந்த வாக்கு வங்கி அரசியலையும் குடும்ப அரசியலையும் ஒழிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்காக நாடே அழுகிறது

இலங்கையில் தமிழ் சகோதரர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசால் தடுக்க முடியவில்லை. இலங்கைத் தமிழர்கள் இரத்தமும் நம் இரத்தமும் ஒன்றுதான். இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பார்த்து நாடே கண்ணீர் விடுகிறது. வேதனைப்படுகிறது. ஆனால் இலங்கைத் தமிழர்களைக் காக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமையுடன் வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றால் மத்தியில் பா.ஜ.க.ஆட்சி அமைய வேண்டும். அதற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

உங்கள் விரல் நுனியில் இருக்கும் சக்தி பகவான் கிருஷ்ணணின் விரல் நுனியில் இருக்கும் சக்தியைவிட அதிக சக்தி வாய்ந்தது. உங்கள் விரல் நுனி மூலம் ஒரு பட்டனை அழுத்தினால் ஒரு அரசையே ஆட்டி அசைக்கலாம்.

புலிகளுக்கு எதிரான இலங்கையின் யுத்தத்துக்கு இந்தியா இராணுவ உதவி


முக்கியமான பங்களிப்பை வழங்கியதாக ரணில் தெரிவிப்புவிடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவியளித்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
"ரைம்ஸ் நௌ'வுக்கு வழங்கிய பிரத்தியேகப்பேட்டியின்போது விடுதலைப்புலிகளை அதன் பலம்வாய்ந்த பகுதிகளிலிருந்தும் அழிப்பதற்கு இந்தியா முக்கியமான பங்களிப்பை வழங்கியதாக ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்திருப்பதாவது; நான் பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவும் அபிவிருத்தியடைந்த நாடுகளும் பாதுகாப்புத் துறையில் எமக்கு உதவியளித்தன. முன்னர் தடைகள் இருந்தன. ஆனால், சமாதான நடவடிக்கைகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு அவர்கள் முன்வந்து உதவுவதற்கு இணங்கினார்கள். உதாரணமாக, இந்தியாவின் உதவியின்றி கடலில் புலிகளின் கப்பல்களை தடுப்பது சாத்தியமான விடயமாயிருக்காது. அமெரிக்கா, ஏனைய சில நாடுகளும் உதவின. வெளிநாடுகளில் புலிகளின் வலைப்பின்னலும் உடைக்கப்பட்டது.

ஏனைய நாடுகளும் இலங்கை ஆயுதப்படைகளுக்கு புலனாய்வு ஒத்துழைப்பை வழங்கி உதவின. இதனை நாம் ஏற்பாடுசெய்தோம். அதனை விரிவுபடுத்தினோம். பயிற்சியளிக்கப்பட்டது. புலனாய்வு ஒத்துழைப்பு கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றது. இலங்கையில் எமது பாதுகாப்பில் சடுதியான தாக்குதல்களை மேற்கொள்வதற்கான உதவியை இந்தியா வழங்கியது என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

பிரபாகரனை தொடமுடியாது;அதனால்தான் அவரைச்சுற்றியிருப்பவர்களை கொல்கிறது ராணுவம்:பாரதிராஜா


சிவகாசி பாவடி தோப்பு திடலில் திரையுலக தமிழீழ ஆதரவு குழு சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலக இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இக்கூட்டத்தில் பாரதிராஜா, ‘’அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. எனது இனத்துக்கு ஒரு துரோகம் நடக்கிறது என்பதால் நான் இங்கு வந்தேன்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க பல போராட்டங்களை நாங்கள் நடத்தினோம். இது மத்திய அரசின் காதுகளுக்கு கேட்கவில்லை.

இலங்கை பிரச்சினையில் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டுதான் நாங்கள் எங்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம். சோனியா என்ன பேசுகிறாரோ அதற்கு மன்மோகன்சிங் வாய் அசைப்பார். இலங்கை ராணுவத்தால் பிரபாகரனை தொடமுடியாது.

அதனால் தான் அவரை சார்ந்தவர்களை லட்சக்கணக்கில் இலங்கை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. அங்குள்ள தமிழர்கள் மாற்று உடைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள். உலகமே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் சோனியா மட்டும் வாய் திறக்கவில்லை.

போரை நிறுத்தி விட்டு நீங்கள் தமிழகத்துக்கு வாருங்கள் உங்களை ரத்தின கம்பளம் போட்டு வரவேற்கிறோம். அதை செய்யாமல் நீங்கள் எப்போது வந்தாலும் எங்களின் எதிர்ப்பை காட்டியே தீருவோம்.

1962-ல் தமிழகத்தில் ஒரு எழுச்சி இருந்தது. அந்த எழுச்சி தற்போது இங்கு வரவேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்று யார் சொன்னாலும் அவர்களுக்கு எங்கள் இதயத்தை கொடுப்போம்’’என்று பேசினார்.

கலைஞருக்குப் பிறந்த "சுடலை ஞானம்" !


தமிழக அரசியல் தலைவர்களின் நிலைமை பார்க்கப் பரிதாபமாக இருக்கின்றது. அதுவும் "திரிசங்கு சொர்க்கம்" என்ற இக்கட்டில் இரண்டுங்கெட்டான் நிலையில் பரிதவிக்கும் தமிழக முதல்வர் கலைஞரின் அந்தரிப்பு இன்னும் பாவமாக இருக்கின்றது.
பதவிச் சுகத்தைத் தக்க வைப்பதற்காக அதிகாரச் செருக்கைப் பேணுவதற்காக இதுவரை காலமும் ஈழத் தமிழர் விடயத்தில் அவர் முன்னெடுத்த நாடகம், இப்போது அவருக்கு எதிரான முடிவுக்கட்டத்துக்குக் கொண்டுவந்திருப்பது அவருக்குப் பெரும் வேதனை தரக்கூடியதுதான்.

ஈழத் தமிழர்கள் அழியும்போது அழிக்கப்படும் போது அதைப் பார்த்துக்கொண்டு தாம் நடத்திய அபத்த நாடகத்துக்கு உரிய விலை கொடுக்கும் தண்டனையை எதிர்கொள்ளும் வேளை அவருக்கு நெருங்கிவிட்டது.

ஈழத் தமிழர்கள் நீதி, நியாயம், உரிமை, கௌரவ வாழ்வு ஆகியவற்றைக் கோரி உக்கிரத்தோடு போராடிய சமயம், அதற்கு உறுதுணை வழங்காமல் எள்ளி நகையாடியோர் இன்று ஈழத் தமிழருக்குத் தனித் தமிழ் ஈழம் பெற்றுக் கொடுப்போம் என்று வாக்குறுதி தந்து மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கும் அளவுக்கு கட்டாயத்துக்கு வந்திருக்கின்றார்கள்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவிலிருந்து, தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வரை தமிழகத் தலைவர்கள் பலரும் ஈழத் தமிழர் பிரச்சினையைத் தங்களுக்கு வாக்குத் திரட்டும் விவகாரமாகப் பயன்படுத்தி அவ்விடயத்தில் சந்தர்ப்பவாதிகளாகவே செயற்படுகின்றனர் என்பது வெளிப்படை.

கடந்த ஜனவரியில் நான்கு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் தமிழர் தாயகத்தில் ராஜபக்ஷ அரசு முன்னெ டுத்து வரும் கொடூர யுத்தத்தை நியாயப்படுத்திய ஜெயலலிதா தான், இன்று தனி ஈழத்தையும் நியாயப்படுத்தி, இந்தியப் படை களை அனுப்பியாவது அதனை நிறுவுவேன் எனச் சூளுரைத்துத் தமிழக மக்களிடம் வாக்கு யாசகம் வேண்டுகின்றார்.
தமிழக மக்களின் உணர்வலைகள் தங்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களின்பால் திரும்பியதால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்ட கட்டாயம் இது.
ஆனால், இதனை ஒட்டிய அபத்த நாடகத்தில் தமிழகத் தலைவர்கள் எல்லோரிலும் பெரும் ஏமாற்றுக்கார நடிகர் என்ற தனித்துவத்தை நிலைநிறுத்தியிருப்பவர் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிதான் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

ஈழத் தமிழர் விடயத்தில் அவர்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கைப் போக்கை வெளிப்படையாகவே பின்பற்றி வரு கின்றது இந்தியாவின் மத்திய அரசை வழி நடத்தும் காங்கிரஸ் தலைமைப்பீடம்.

தமிழகத்தில் தன்னுடைய சிறுபான்மை ("மைனாரிட்டி") அரசைத் தக்க வைப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியின் தயவில் தங்கியிருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, அதன் காரணமாக இச்சமயத்தில் பேரவலப்படும் ஈழத் தமிழர்களின் விடயத்தில் மத்திய காங்கிரஸ் அரசை மீறிச் செயற்பட முடியா மல், அதற்குக் கட்டுப்பட்டு நடந்து, ஈழத் தமிழருக்காக ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையைப் புறந்தள்ளிப் பெரும் துரோகமிழைத்திருக்கின்றார்.
அரசியல் பதவி சுகத்தை அனுபவிக்கும் ஒரே நோக்கத்துக் காக ஈழத் தமிழர் விவகாரத்தில் தாம் புரிந்த துரோகங்களை மூடி மறைக்கக் கலைஞர் போட்ட கூத்தும் நாடகமும் அளப்பரியவை.

அனைத்துக் கட்சிக் கூட்டம், மனித சங்கிலிப் போராட்டம், இராஜினாமா அச்சுறுத்தல், சர்வகட்சிகளுடனும் சென்று புது டில்லிக்குக் காலக்கெடு விதித்து மிரட்டல் அறிவிப்பு வெளியி டல், "சாகும்வரை" உண்ணாவிரதம் என்று அவர் அரங்கேற்றிய நாடகங்களின் வரிசையில் இப்போது வைத்தியசாலையில் போய்ப் படுத்துக்கொண்டு, "தமிழ் ஈழம் அமைக்கும் பொறுப்பை ஏற்கிறேன்" என்று அறிவிப்பு விடுக்கும் கூத்தை அவர் கடைசியாக அரங்கேற்றியிருக்கின்றார்.

பாவம்! இதனைத்தான் "காலம் கடந்த ஞானம்" அல்லது "சுடலை ஞானம்" என்பதா என்று எண்ணிப் பரிதாபப் படுகின்றார்கள் நோக்கர்கள்.
"தமிழ் ஈழம் அமைக்கும் பொறுப்பை ஏற்கிறேன்" என்ற அவரின் அந்த இறுதி அறிவிப்பில் கூட தமது வழமையான "குசும்பை" அவர் கைக்கொள்ளத் தவறவில்லை.
ஈழத் தமிழர் விடயத்தில் தமது "சாதனை"களைப் பட்டியலிடுவதற்காக, "1956 இல் தி.மு.க.பொதுக்குழுவில் இலங் கைத் தமிழருக்காக விசேட பிரேரணை முன்மொழிந்து நிறை வேற்றினேன்", "சட்டசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தேன்" என்றெல்லாம் பழைய கதை பேசிக்கொண்டிருப் பவர் கலைஞர்.

அந்த வரிசையில் இப்போது "ஈழம் அமைக்கும் பொறுப்பை ஏற்கிறேன்" என்ற தமது அறிவிப்பில் கூட "இலங்கைத் தமிழருக்கு கணிசமான அளவு நீதியை உறுதிப்படுத்தியுள்ளோம். அடுத்த கட்டமாக அவர்கள் ஈழத்தைப் பெற வேண்டும். நான் பொறுப்புகளை எடுத்துக்கொண்டபின் அடுத்த கட்டமாக ஈழம் உருவாக்கப்படுவதற்கான சகல முயற்சிகளையும் உறுதிப்படுத்துவேன்" என்று கூறியிருக்கின்றார் கலைஞர்.
சரி. இனி அவர் ஈழம் அமைக்கும் முயற்சிகளைப் பொறுப்பெடுத்து உறுதிப்படுத்துவார் என்று அவர் கொடுக்கும் "கயிறை" விட்டுவிடுவோம். இதுவரை "இலங்கைத் தமிழர்களுக்கு கணிச மான அளவு நீதியை உறுதிப்படுத்தியுள்ளோம்" என்று அவர் கூறும் கணிசமான அளவு நீதி எது என்பதுதான் புரியவில்லை.

தாமும் தமது தி.மு.க. தரப்பும் கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்தியில் முண்டு கொடுத்து நிலை நிறுத்தியிருந்த காங்கிரஸ் அரசு இலங்கையில் தமிழர்கள் கொன்றொழிக்கப்படும் போரில் கொழும்புக்கு அளவற்ற உதவிகளை வழங்கியமையைத்தான் ஈழத் தமிழர்களுக்கு கணிசமான அளவு நீதி கிடைப்பதை உறுதிப் படுத்திய தங்கள் சாதனையாகக் கருதுகின்றாரோ கலைஞர்....?

இலங்கையில் தமிழர்களின் இன்றைய பேரவல நிலைக் குப் பிரதான காரணம், அவர்கள் மீது கொடூரப் போர் தொடுத்தி ருக்கும் கொழும்புக்கு இந்திய மத்திய அரசு கொடுத்த ஆதரவு, ஒத்துழைப்பு, உதவி போன்றவைதான். அதில் இரண்டு கருத்து களுக்கு இடமில்லை.
அத்தகைய மத்திய அரசுக்கு முண்டுகொடுத்து ஈழத் தமிழர்களுக்குப் பெரும் துரோகம் இழைத்திருக்கும் கலைஞரும், தி.மு.கவினரும் அதற்காக முதலில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். அதுவே இதுவரை அவர்கள் இழைத்த இழி செயல் போக்குக்கு ஆகக் குறைந்த பட்ச பிராயச்சித்தமாகும். அதைக் கூடச் செய்யாது இதுவரை ஈழத் தமிழர்களுக்குத் தாம் இழைத்த அநீதிகளை மூடி மறைத்து, நீதியே செய்தவர்களாகத் தம்மைக் காட்ட அவர்கள் முயல்வது, மேலும் அரசியல் துரோகமாகும்.

தனி ஈழம் அமைக்கும் பொறுப்பை ஏற்கிறேன் என்று அறி விப்பு விடுக்கும் அளவுக்கு "சுடலை ஞானம்" வந்த பின்னரும் கூட, இதுவரை இழைத்த அநீதிகளை மூடி மறைத்து நீதியாகக் காட்ட முயலும் அவரது எத்தனம், ஈழத் தமிழர் விடயத்தில் அவர் திருந்தவில்லை, தொடர்ந்தும் கூத்தாடுகின்றார் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

பழ.நெடுமாறன் அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், தமிழக அரசிற்கு எதிராகவும் ’சிடி’ க்கள், போஸ்டர்கள் இருக்கலாம் எனக்கருதி இலங்கைத் தமிழர் ஆதரவாளர்கள் அலகலகங்களில் திடீர் சோதனையிட முடிவு செய்தனர்.

அதன்படி மதுரை மேலச்சித்திரை வீதியில் பழ.நெடுமாறனின் உலகத் தமிழர் பேரமைப்பு அலுவலகத்தில் நேற்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது நிர்வாகிகள் யாரும் அங்கு இல்லை. சோதனையில் எதுவும் சிக்கவில்லை என அலுவலக உதவியாளர் சிவாஜியிடம் எழுதி வாங்கிச் சென்றனர்.

இதனைத்தொடர்ந்து தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தமிழகமும் தமிழ் ஈழமும்


வட்டுக்கோட்டையில் 1976 மேயில் நடைபெற்ற மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தனித்தமிழ் ஈழத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் முன்னிலையில் சமர்ப்பித்தே தமிழர் விடுதலை கூட்டணி 1977 ஜூலை பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலுக்குப் பிறகு இலங்கையில் நடைபெற்ற எந்தவொரு பொதுத் தேர்தலிலுமே தனித்தமிழ் ஈழம் என்ற கோஷத்தை தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்ததில்லை. 1987 ஜூலையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் கைச்சாத்திட்ட சமாதான உடன்படிக்கைக்குப் பின்னர் தமிழ் மிதவாதக்கட்சிகளும் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துவிட்டதாகக் கூறிக்கொண்ட முன்னாள் தமிழ்ப் போராளிக் குழுக்களும் அதிகாரப்பரவலாக்கல் மூலமாக தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. விடுதலைப் புலிகள் மாத்திரம் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையைக் கைவிடாமல் ஆயுதப் போராட்டத்தைத் தொடருவது அண்மைக்கால வரலாறு.

இலங்கையில் இடம்பெறக்கூடிய எந்தவொரு தேர்தலிலுமே சர்ச்சைக்குரிய விடயமாக தற்போது நோக்கப்படாத தமிழ் ஈழக் கோரிக்கை இந்தியப் பொதுத் தேர்தலில் தமிழக களத்தில் இன்று முக்கியமான ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. இலங்கையில் தீவிரமடைந்த போரின் விளைவாக தமிழ்ப் பகுதிகளில் தோன்றிய மனிதாபிமான நெருக்கடி தமிழகத்தில் பெரும் உணர்வலைகளைத் தோற்றுவித்திருக்கிறது. போர் நிறுத்தமொன்றைக் கொண்டு வருவதற்கு கொழும்பு அரசாங்கத்துடனான செல்வாக்கை இந்திய மத்திய அரசாங்கம் பயன்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுக்காத தமிழகக்கட்சி எதுவுமேயில்லை. போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசாங்கம் மானசீகமாக முயற்சிக்கவில்லையென்பதால் காங்கிரஸ் கட்சி மீதும் அதன் நேச அணியான முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மீதும் பெரும்பாலான தமிழகக் கட்சிகள் குற்றச்சாட்டைச் சுமத்துகின்றன. கடந்த 6 மாதங்களுக்கும் கூடுதலான காலமாக தமிழக கட்சிகளிடையேயான வாதப் பிரதிவாதங்கள் அடிப்படையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மையமாகக் கொண்டவையாகவே அமைந்திருப்பதைக் கண்டோம். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏட்டிக்குப் போட்டியாக போராட்டங்களை அந்தக் கட்சிகள் நடத்திக் கொண்டிருந்தன.

இலங்கைத் தமிழர் பிரச்சினையை பொதுத் தேர்தலில் ஒருமுக்கியமான சர்ச்சையாக்குவதற்கு கட்சிகள் தீர்மானித்தபிறகு அதற்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது. இலங்கையில் தோன்றியிருக்கும் மனிதாபிமான நெருக்கடியை தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்துவதன் விளைவாக ஏற்படக்கூடிய விபரீதங்கள் குறித்து பிரத்தியேகமாக இலங்கைத் தமிழர்கள் படுகின்ற அவலங்கள் தொடர்பில் தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் ஒருமைப்பாட்டு உணர்வு அலைகளும் கட்சி அரசியலின் அடிப்படையில் கூறுபோடப்படக்கூடிய ஆபத்துக் குறித்து நாம் அடிக்கடி எமது ஆசிரிய தலையங்கத்தில் சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். தேர்தல் நாள் நெருங்க நெருங்க இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக பிரதான கட்சிகள் மத்தியில் தீவிரமான நிலைப்பாடுகள் வெளிக்கிளம்புவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு ஏனைய இனத்தவர்களுடன் சமத்துவமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறிவந்த முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா சில தினங்களுக்கு முன்னர் திடீரென்று இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகள் தீருவதற்கு ஒரேவழி தனித் தமிழ் ஈழம் உருவாவதே என்று பிரசாரக் கூட்டங்களில் பேச ஆரம்பித்தார். தமிழக மக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் இந்த ஈழப் பேச்சுக்கு எந்தளவுக்கு ஆதரவு இருக்கிறதோ எமக்குத் தெரியவில்லை. ஆனால், கலைஞர் கருணா நிதியையும் காங்கிரஸ் காரர்களையும் ஜெயலலிதாவின் பேச்சுகள் தடுமாறவைத்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

சில தினங்களுக்கு முன்னர் இந்தியப் பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்று கூறிய கருணாநிதி, நேற்றைய தினம் சென்னையில் தனியார் மருத்துவமனையொன்றில் இருந்துகொண்டு விடுத்த அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் தனித்தமிழ்ஈழத்தைப் பெறுவதற்கு சகல முயற்சிகளையும் செய்யப் போவதாகப் பிரகடனம் செய்ததைக் காணக்கூடியதாக இருக்கிறது. கலைஞரின் இந்த அறிக்கை தொடர்பில் அதன் நேச சக்தியான காங்கிரஸ்கட்சி இதுவரை எந்த அபிப்பிராயத்தையும் வெளியிடவில்லை. வழமையாகச் சொல்வதுபோல் அது கலைஞரின் தனிப்பட்ட அபிப்பிராயம் என்று கூறிவிட்டு காங்கிரஸ் காரர்கள் விட்டுவிடவும் கூடும். இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளின் தலைவர்களான டாக்டர் ராமதாஸ், வைகோ போன்றவர்களின் வீராவேசப் பேச்சுகளை தமிழக மக்கள் அடிக்கடி கேட்டிருக்கிறார்கள். ஆனால், பிரதான திராவிடக் கட்சிகள் இரண்டும் தனித் தமிழ் ஈழம் கோரிக்கையை முன்வைப்பது புதியதொரு நிலைவரமாகும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜெயலலிதா பேசுகின்ற பாணி முன்னென்றுமே அவரிடம் காணப்படாததாகும். இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவது பற்றிக் கூட அவர் பேசுகிறார்.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தேர்தல் பிரசாரங்களுக்காக தமிழகத்துக்கு வர முடியாத அளவுக்கு எதிர்ப்பிரசாரங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இத்தடவை சோனியா காந்தி ஒரு பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்குத் தானும் தமிழகம் வர முடியாமல் போகுமேயானால் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் பொதுத் தேர்தலுக்காக தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்ய முடியாமல் போன முதல் சந்தர்ப்பமாக இது அமைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறாக முன்னென்றுமில்லாத அரசியல் நிகழ்வுப் போக்குகளைக் கொண்டதாக தமிழகத்தில் பொதுத் தேர்தல் களம் இன்று காணப்படுகிறது. இலங்கையிலே தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதான தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணி தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்னெடுத்து ஒரு பொதுத் தேர்தலைச் சந்தித்து 32 வருடங்கள் கழித்து பாக்கு நீரிணைக்கு அப்பால் தமிழகத்தில் பொதுத் தேர்தலிலே அந்த மாநிலத்தின் பிரதான திராவிடக் கட்சிகள் தமிழ் ஈழக் கோரிக்கையை பயன்படுத்தி பிரசாரங்களில் இறங்கியிருக்கும் விசித்திரத்தைக் காண்கிறோம். தேர்தலுக்குப் பிறகு தமிழ் ஈழம் பற்றி இந்தத் திராவிடக் கட்சிகள் என்ன கூறப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போமே!

ஜெயலலிதாவின் பிரசாரத்தினால் தி.மு.க.,காங்கிரஸ் தடுமாற்றம்


* தனிஈழம் கோஷத்தை ஆஸ்பத்திரியில் இருந்தவாறு கலைஞரும் ஒப்புவிப்பு

இலங்கைத் தமிழர் பிரச்சினை இந்திய பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகளின் முக்கியமான தொனிப்பொருள் பிரசாரமாக தீவிரமடைந்துவரும் நிலையில், தனது அரசியல் எதிரியான அ.தி.மு.க. கூட்டணியின் செல்வாக்கு சடுதியாக அதிகரித்து விட்டிருக்கும் அழுத்தத்தை தடுத்து நிறுத்தும் அரசியல் "பிரமாஸ்திரமாக' "ஈழத்தை' உருவாக்குவதே தனது அடுத்த கூட்டு முயற்சி என்று தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி நேற்று முன்தினம் புதன்கிழமை மருத்துவமனையிலிருந்தவாறு அறிவித்திருக்கிறார்.

லோக சபைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்களிப்புக்கு இன்னமும் 5 நாட்களே முழுதாக உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகளில் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தற்போது அதிகளவு ஆதரவை பெற்றதாக ஜெயலலிதாவின் அ.தி.மு.க. கூட்டணி காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்திய பாராளுமன்றத்தேர்தலில் தமிழகத்திலும் பாண்டிச் சேரியிலுமுள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியை வெற்றிபெற வைத்தால் மத்தியில் கிடைக்கும் பலத்தின் மூலம் இலங்கைத் தமிழருக்கு தனியான தாயகத்தை அமைத்துக் கொடுப்பேன் என்றும் இந்திய இராணுவத்தை அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றும் தேர்தல் பிரசார மேடைகளில் ஜெயலலிதா முழங்கி

வருகிறார். அவருக்கு ஆதரவாக ம.தி.மு.க. , பா.ம.க. போன்ற கட்சிகளின் தலைவர்களான வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் உரத்து குரல் கொடுத்து வருகின்றனர்.

அத்துடன் தமிழகத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள திரைப்படத்துறையும் காங்கிரஸுக்கு எதிராக வாக்களிக்குமாறு தீவிரமான பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளது.

இந் நிலையில் கருணாநிதியிடமிருந்து இறுதி அஸ்திரமாக ஈழத்தை அமைக்கும் முயற்சி பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

"இலங்கைத் தமிழருக்கு கணிசமான அளவு நீதியை உறுதிப் படுத்தியுள்ளோம். அடுத்தகட்டமாக அவர்கள் ஈழத்தைப் பெறவேண்டும். நான் பொறுப்புகளை எடுத்துக் கொண்டபின் அடுத்த கட்டமாக ஈழம் உருவாக்கப்படுவதற்கான சகல முயற்சிகளையும் உறுதிப்படுத்துவேன்' என்று தனது தி.மு.க. ஆதரவாளர்களுக்கு கருணாநிதி உறுதியளித்திருக்கிறார்.

அதேசமயம் கருணாநிதியின் இந்த சடுதியான அறிவிப்புக்கு, அதன் நேச அணியான காங்கிரஸிடமிருந்து இரு தினங்களுக்கு முன்னர் வெளிவந்த அறிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தேர்தலின் பின் காங்கிரஸ் தலைமையில் அரசாங்கத்தை அமைக்க ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வுக்கும் கதவு திறந்திருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் தெரிவித்திருந்தார். காங்கிரஸிடமிருந்து வெளியான இந்தக்கருத்து கருணாநிதிக்கு சங்கடத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடுமெனவும் அதனையடுத்தே வெற்றிபெறும் அணியின் தேர்தல் பிரசார பீரங்கிகளுடன் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆஸ்பத்திரியிலிருந்தவாறு இந்த அதிரடி அறிவிப்பை விடுத்துள்ள கருணாநிதி, தனது அரசின் சிறப்பான பணிகள் குறித்து ஒவ்வொரு வாக்காளரும் அறிந்து கொள்வதை உறுதிப்படுத்துங்கள் என்றும் தனது கட்சி ஆதவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவியுள்ள நிலையில் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் அவர் தனது கட்சியின் தொலைக் காட்சியில் உரையாற்றியிருக்கிறார்.

கடந்த 27 ஆம் திகதி இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதமென அறிவித்து பின்னர் அது குறித்து உறுதிமொழி கிடைத்ததையடுத்து கைவிட்டதாகக் கருணாநிதி அறிவித்திருந்ததை அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஏளனம் செய்திருந்தன. இலங்கையில் தொடர்ந்து மோதல் இடம்பெறும் நிலையில் கருணாநிதியின் உண்ணாவிரதம் ஒரு நாடகம் என்றும் அவை விமர்சித்து வந்தன.

இது இவ்வாறிருக்க, கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லையென்ற இலங்கையின் உறுதிமொழி, யுத்த நிறுத்தம் போன்றதொன்றுதான் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் அறிவிப்பும் இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 100 கோடி ரூபா வழங்குவதென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவிப்பும் தமிழ் நாட்டு மக்களை சாந்தப்படுத்தவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

"தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை இந்த உறுதிமொழிகள் திருப்திப்படுத்துமா?? என்றும் இலங்கைத் தமிழர் விடயத்தில் முன்கூட்டியே நடவடிக்கைகளில் இறங்கியிருக்க வேண்டுமெனவும் காலந்தாழ்த்திய இந்த நடவடிக்கை ஒருபோதும் தமிழக மக்கள் மனங்களை சாந்தப்படுத்தாது என்றும் ஆசிய நிலையத்தின் வி.சூரியநாராயணா "அவுட்லுக்' சஞ்சிகையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

"சர்வதேச சமூகத்துடன் இணைந்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முன் முயற்சியை இந்தியா கட்டியெழுப்பியிருக்க வேண்டும். அதிகாரமையமாக வரவிரும்பும் நாடொன்று அதிகளவுக்கு இதனை செய்திருக்க வேண்டும்' என்று அரசியல் விமர்சகர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

"வெசாக்" கொண்டாடும் தகுதி உண்டா?

இன்று "வெசாக்" பண்டிகைத் திருநாள். அத்துடன் சித்திரா பௌர்ணமி தினமும் கூட.
இலங்கைத் தீவின் இரு பெரும் மதங்களான பௌத்தத்துக்கும் இந்து சமயத்துக்கும் போற்றுதற்குரிய மிக முக்கிய நோன்பு நாள்கள் இவை.

இந்த வெசாக் தினம் பௌத்தர்களால் போற்றிப் பூஜிக்கப் படுவதற்கு முக்கிய காரணம் உண்டு. பௌத்த சீலத்தை உலகுக் குப் போதித்த கௌதம புத்தர் நேபாளத்தின் எல்லைப்புறத்தில் அவதரித்ததும், அரசமரத்தடியில் ஞானோதயம் பெற்றதும், அன்பு மார்க்கத்தைப் போதித்து பரிநிர்வாணம் அடைந்ததும் இந்த வெசாக் புண்ணிய தினத்தில்தான்.

சித்தார்த்த கௌதமரின் சிந்தனையில் இத்தினத்தில் ஒரு சிறு பொறியாகப் பட்டுத் தெறித்த ஞானம், தெளிந்த ஞானக்கடலாகப் பின்னர் பரந்து வியாபித்து, விசாலித்து, உலகைப் பற்றிப் பிடித்து, வழிப்படுத்தி, நெறிப்படுத்தியது என்பதால் இத் தினம் மகத்துவமானதாகின்றது.
உயரிய வாழ்க்கை நெறியை பஞ்ச சீல மார்க்கத்தை உலகுக்கு ஈந்த ஓர் அவதரிப்பை பெரு மகிழ்வோடு கொண் டாடுவது அதுவும் அந்த உயரிய மார்க்கம் தழைத்து, பரவி, நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக உரிமை கோரும் ஒரு தேசம் அதைக் கொண்டாடுவது பொருத்தமானதுதான். ஆனால் இந்த உயரிய நிகழ்வைக் கொண்டாடி அனுஷ்டிக்கும் தகுதியும், தகைமையும், உரிமையும் இந்த இலங்கைத் தீவுக்கு இன்று உண்டா என்பதுதான் இன்றைய பிரதான கேள்வியாகும்.

சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தரிடம் இருந்து வெளிப்பட்ட இந்த அறிவியல் அதிர்வு இன்றுவரை உலகை வளப்படுத்தி, வழிப்படுத்தி, வலுப்படுத்தும் ஓர் உயரிய மார்க்கமாகப் போற்றப்படுகிறது அது பெருமைக்குரிய விடயமாகும்.

மனிதத்துவம் பற்றியும், ஒழுக்கமான வாழ்க்கை குறித்தும் ஞான சீலர் புத்தரிடமிருந்து வெளிப்பட்ட சிந்தனைகளும், போதனைகளும், அதை நடைமுறை வாழ்வில் வளமுறப் பயன்படுத்தி அனுபவ வாயிலாக அதை வெளிப்படுத்திய அவரின் வழிகாட்டல்களும் ஆசியாவின் கிழக்கேயும் மேற்கேயும் பெரும் புயலாகப் பற்றிப் பரவிப் பிடித்து நிலைகொண்டன. இலங்கை யில் மட்டுமல்லாமல், கொரியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து எங்கும் அவரின் போதனைகளும் அவர் நெறிப்படுத்திய உயரிய மார்க்கமும் இன்னும் ஆழமாக நிலைபெற்று சுடர்விட்டுப் பிர காசிக்கின்றன.

இன்று உலகில் தார்மீக சிந்தனையையும் சீரிய வாழ்வியல் முறைகளையும் போதிக்கும் மார்க்கங்களுக்குள் மதங்களுக்குள் மிக உயர்ந்ததாகப் போற்றப்படும் அளவுக்கு பௌத்தத்தின் கோட்பாடுகளும், சிந்தனைகளும், வழிகாட்டல்களும் அது வலி யுறுத்தும் அறநெறித் தத்துவங்களும் விஞ்சி விளங்குகின்றன.

கருணை, சமத்துவம், சமரசம், அன்பு, பரிவு, நேசம், குரோதமின்மை, பழிவாங்காமை, அரவணைப்பு, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற சமாதான அமைதி வாழ்வுக்கு அடிப்படை யான பண்பியல்புகளைக் கடைப்பிடிப்பதை மட்டுமே பௌத் தம் போதித்தது. குரோதத்தையும், விரோதத்தையும், கொலை வெறிப் போக்கையும், கொடூரத்தையும் நோக்கி மனிதத் துவத்தை அது வழிப்படுத்தவில்லை. யுத்த வெறியை அது வர வேற்கவில்லை.

சித்தார்த்தரின் உயரிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட பௌத்தநெறி அஹிம்சையையும், அன்பையும், சாத் வீகத்தையும் அரவணைத்துச் செல்ல வலியுறுத்திய அதேச மயம், தன் நெறியைப் பரப்புவதற்கேனும் மேலாதிக்கத்தை ஒரு வழியாகக் கொள்ள அது கூறவில்லை. யுத்தத்தை வெறுத்து சமாதானத்தை நிலைநாட்டத் தனது ஞான வழிகாட்டலைப் பயன்படுத்தினார் சித்தார்த்தர். யுத்த வெற்றி மூலமும், ஆக் கிரமிப்பு மற்றும் அடக்குமுறைகள் மூலமும் அதிகாரத்தைத் தக்க வைக்கும் கொலை வெறிக் கலாசாரத்தை அவர் நமக்குப் போதிக்கவில்லை. அதனை அவர் வெறுத்தார்.

ஆனால், இன்று அவரின் ஞான சீலத்தைப் பரப்புபவர்க ளாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் தென்னிலங்கைத் தலை வர்கள் யதார்த்தத்தில் என்ன செய்கின்றார்கள்?
கௌதம புத்தர் எதை வெறுத்து ஒதுக்கினாரோ, அதனை அவரின் நெறியை மார்க்கத்தை நிலை நிறுத்தும் செயற்பாடாகக் காட்டிக்கொண்டு முன்னெடுக்கின்றார்கள் நவீன சித் தார்த்தர்கள்! என்னே கொடூரம் இது.....?

உயர்ந்த அறநெறி மார்க்கம் என்று முழு உலகமுமே வியந்து போற்றி, ஏத்தி மகிழும் பௌத்த தர்மம் உலகில் பரப்பப்படுவதற்கும் நிலைநிறுத்தப்படுவதற்குமாக ஒரு வாள் கூட நிமிர்த்தப்படவில்லை. ஒரு துளி இரத்தம் கூட சிந்தப்படவில்லை. ஆனால் இன்று இங்கு நடப்பது என்ன?

பௌத்தம் என்ற பிரபஞ்ச நெறி, இந்தத் தீவில் தான் பரவி நிற்பதாகக் கூறப்பட்டாலும், அது உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் இங்கு உணரப்படவேயில்லை என்பதுதான் வேதனைமிக்க யதார்த்தமாகும்.

வாளேந்திய சிங்கக்கொடியை, பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் மேலாதிக்கச் சின்னமாக முன்நிறுத்தி, பௌத்த சீலத்தையும், சமயத்தையும் பரப்புவதாகக் கொள்ளும் பேதமை இத்தீவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.

திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலமும், புத்தரின் சிலைகளை ஆங்காங்கே நிலைநிறுத்துவதன் மூலமும் பௌத்தத்தைப் பரப்புவதாகக் கொள்ளும் ஒவ்வாதபோக்கு இங்குதான் அரங்கேறுகின்றது.

பௌத்த மதத்துக்கு முதன்மைத்தானம் வழங்கப்படும் விதத்தில் தனது அரசியல் சாசனத்தில் தனியாக இரண்டாவது அத்தியாயத்தில் "பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருக்கவேண்டும்" என்று உறுதிப்படுத்தியிருக்கும் இத் தேசத்தில்தான், அந்த பௌத்த சாசனத் தைப் பேணும் பெயரால் பௌத்தத்தின் உயரிய நெறிக்கு விரோதமான கொடூர யுத்தமும், கொலை வெறியும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

பௌத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், வாழ் நிலைப் பண்புகளையும், மேன்மைச் சிறப்புமிக்க விழுமியங் களையும், மாண்புமிக்க மகத்துவ வழிகாட்டல்களையும் மறந்து, துறந்து, ஒதுக்கிவிட்டு, அவற்றுக்கு மாறாக பௌத்த சிங்கள தேசிய வாதத்தைப் பலாத்கார வழியிலும், கட்டாயப்படுத்தல் மூலமும், பௌத்தம் வெறுத்து ஒதுக்கும் ஆயுத கலாசார வெறிப் போக்கு மற்றும் கொடூர யுத்தம், கொலைவெறி ஆக்கிரமிப்பு ஆகியவை மூலமும் முன்னெடுக்க முயல்கிறது தென்னிலங்கை.

காருண்ய சீலர் புத்தபகவான் இன்று இங்கு இருப்பாரானால் வன்னியில் பௌத்த சீல ஆட்சியின் பெயரால் இன்று அரங் கேறும் மனிதநேயமற்ற சமரசம் துறந்த குரோதத் தனமான அடக்குமுறை அவலங்களைக் கண்டு மனம் கொதித்துப் போவார். தாம் போதித்த உயரிய நெறி, மக்கள் அழிவுக்கான வழி காட்டலாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பது கண்டு விசனப் பட்டுப் போவார். இத்தகைய இழிசெயலைப் பின்பற்றும் மக் கள் கூட்டத்துக்குத் தமது அவதரிப்பையும், ஞானம் பெற்ற சிறப் பையும், பரிநிர்வாணம் அடைந்த பக்குவத்தையும் போற்றி மகி ழும் தினத்தைக் கொண்டாடுவதற்கு என்ன அருகதை உண்டு என்று எண்ணி எண்ணி மனம் வெதும்புவார் அவர் என்பது உண்மை.

தமிழினப் படுகொலையினது முக்கிய ஆதாரங்களை ஐ.நா. மறைத்து வைத்திருந்தது ஏன்? - இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் கேள்வி


சிறிலங்கா அரசாங்கம் அப்பாவித்தமிழ் மக்கள் மீது ஏவிவிட்டிருக்கும் போரில், உயிர் இழந்தவர்கள் மற்றும் காயப்பட்டவர்களின் எண்ணிக்கையையும, பாதுகாப்புவலயம் மீது இராணுவம் நடாத்திய தாக்குதல்கள் குறித்து ஐ.நா. பிடித்த அந்தரங்க செய்மதிப்படங்கள் போன்ற ஆதாரங்களையும் ஐ.நா. மறைத்தது ஏன் என இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதேபோன்ற தகவல்களை காசாப்பிரச்சினையின்போது உடனேயே வெளியிட்ட ஐ.நா., இலங்கையில் மட்டும் அதை வெளியிடாமல் விட்டதன் நோக்கமென்ன என்பதை இன்னர் சிற்றி பிறஸ், ஐ.நா. செயலாளர் நாயகம், பான் கி மூனை கேட்டுள்ளது. இதற்கு பான் கி மூன் பதில் வழங்காமல், மாறாக இலங்கை அரசாங்கத்துடன் தான் தொலைபேசியில் பேசிய, மக்களைப் போர் வலயத்தில் இருந்து மீட்பது போன்ற விடயங்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. உதவிக்குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பிவைக்க தாமதிப்பதும், தமிழ்மக்களுக்கு நடந்துகொண்டிருக்கும் அவலங்கள் பற்றிய ஆதாரங்களை மறைத்து வைத்திருப்பதும், தமிழ் வட்டாரங்கள் இடையே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேலும், இலங்கையின் உண்மை நிலவரங்களை ஆராய வேறொரு விசேட பிரதிநிதியை அனுப்புவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டபோது, அதற்கு பான் கி மூன் அவர்கள் அதைப்பற்றி பிறகு முடிவுசெய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பெண்மணிக்காக ஓராயிரம் மக்களைப் பழிவாங்க வேண்டுமா? : பாரதிராஜா கேள்வி


"சோனியா காந்தி என்ற ஒரு பெண்மணிக்காக ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தமிழர்களின் முதல் எதிரி" என்று கூறினார் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா.


ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :

"நாங்கள் கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரத்தைக் கண்டித்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மத்திய அரசு எதுவித நடவடிக்கையுமே எடுக்கவில்லை. தொடர்ந்து இலங்கையில் தமிழர்கள் குண்டடிபட்டும், பட்டினி கிடந்தும் மடிந்து கொண்டிருக்கின்றனர்.

சிவ்சங்கர் மேனன் 2 முறை கொழும்பு போனார். பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இலங்கை ஜனாதிபதியுடன் போனில் பேசித் தமிழ் மக்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் இதெல்லாம் வெட்டி வேலை. யாராவது இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போனாலோ அல்லது போனில் பேசினாலோ, உடனே இலங்கை அதிபர் ஒரு அறிக்கை விடுவார். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா எங்களுக்கு துணை நிற்கிறது என்பார். ஆனாலும் தொடர்ந்து அப்பாவிகள், நிராயுதபாணிகள் கொல்லப்பட்டுக் கொண்டுதான் வருகின்றனர்.

தமிழனின் இன்றைய அவலத்துக்கு காங்கிரஸே காரணம்

இன்றைய இந்த நிலைக்கு முழுக் காரணம் காங்கிரஸ் கட்சிதான். அதுதான் பொறுப்பு. அவர்களால் தடுத்து நிறுத்த முடியும், ஆனால் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.

காங்கிரஸ் கூட்டணி அரசுதான் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குகிறது; இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது; இலங்கை அரசு போரில் வெல்ல பணத்தையும் அள்ளித் தருகிறது.

சோனியா காந்திக்காக அவர்கள் பழி வாங்குகிறார்கள். ஒரு பெண்மணிக்காக ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.

காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறுவதை காங்கிரஸ் எதிர்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. அவர்கள் ஜனநாயக ரீதியில் எங்களுடன் மோதட்டும். எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க அவர்களுக்கு உரிமை இருக்கிறதென்றால், அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்க எங்களுக்கும் உரிமை உள்ளது. நாங்கள் வாக்கே அளிக்காதீர்கள் என்று மக்களிடம் கூறவில்லையே?

காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே எதிர்ப்பு

நாங்கள் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. காங்கிரஸுக்கு எதிராக மட்டுமே நாங்கள் பிரசாரம் செய்கிறோம். வேறு எந்தக் கட்சிக்கு எதிராகவும் நாங்கள் பிரசாரம் செய்யவில்லை. காங்கிரஸைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் மக்கள் வாக்களிக்கட்டும்.

ஜனநாயகத்தில் கருப்புக் கொடி காட்டுவதில் தவறே இல்லை. அது நமது எதிர்ப்பைக் காட்டும் ஓர் அடையாளம். முடிந்தால் நாங்கள் கருப்புக் கொடி காட்டுவதை அவர்கள் தடுத்து நிறுத்திக் கொள்ளட்டும்.

எதிர்வரும் 11ஆம் திகதி மாலை 5.00 மணி வரை காங்கிரஸ் எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் போய் தீவிரமாகப் பிரசாரம் செய்வோம். காங்கிரஸ் கட்சி தமிழர்களின் எதிரி, அக்கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என மக்களிடம் கேட்டுக் கொள்வோம். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்."

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.

இவர்களின் இன்றைய கதியே தொடருமா?


போர் நடைபெறும் பகுதிக்குள் சிக்குண்டிருப்பது ஒருவித வேதனை. எறிகணைகள் மற்றும் ஆயுதங் களின் தாக்குதலில் அகப்பட்டு எப்போது உயிர் பிரியுமோ என்ற மரண பயம் வினாடிக்கு வினாடி மக்கள் மனங் களைக் கொன்று கொண்டிருப்பது அந்த வகை வேதனை.
ஆனால் உயிரைத் தக்க வைத்து விட்டோம், அது பறிக்கப்படும் ஆபத்து 90 முதல் 95 வீதம் நீங்கிவிட்டது என்ற ஆறுதலுடன் நலன்புரி நிலையங்களுக்குப் போய்ச் சேர்ந்த பின்னர் படும் வேதனை இன்னொரு விதம். எதுவுமற்ற ஏதிலிகளாக, உடுத்த உடையுடன் முல்லைத்தீவுப் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளி யேறி வந்த மக்கள்வவுனியாவில் நலன்புரி நிலையங் களில் அடைபட்டிருக்கும் மக்கள்படும் துன்ப துயரங் கள் நீண்ட நிரல் வரிசைப்படுத்தக் கூடியவை. இங்கே வந்து இத்துணை வடிவங்களில் அல்லற்பட்டு ஆற் றாது விநாடிக்கு விநாடி செத்துக்கொண்டிருப்பதை விட, ஆயுதங்களால் தாக்குண்டு ஒரே முறையில் மடிந் திருக்கலாம் என்று மனம் சலிப்புற்று விரக்தி நிலைக் குத் தள்ளப்படும் அளவுக்கு, நலன்புரி நிலையங்களில் நாள்களைக் கழிப்பது நரகலோக வாழ்வாக மாறியிருப் பதனை தூரத்தே இருந்து பார்க்கவே மனித நேயம் உள்ள எந்த மனிதனுக்கும் மனதை வதைக்கும்.


வவுனியா நலன்புரி நிலையங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களைக் கண்டு, கதைத்து வந்தவர்கள் கூறும் சோகக் கதைகள் எவர் மனதிலும் இரக்கம் பிறக்க வைக்கும் காட்சிகளாகப் பதியக்கூடியவை. கடந்த மாதம் இருபத்திநான்காம் திகதி, தமது இலங்கைக்கான சிறப்பு வருகையின் போது வவுனியா நலன்புரி நிலை யத்தில் உள்ளவர்களைச் சந்தித்துப் பேசிய அவர் களின் நிலைமையை நேரில் கண்ட, கேட்டவாழும் கலை அமைப்பின் தலைவரும், ஆன்மீகக் குருவுமான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருஜி தெரிவித்த தகவல்கள் கேட்டவர் மனங்களை உருகவைப்பவை.

பிச்சைக்காரர்களையே காணாத மக்கள்,மற்றவர் களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் கள். அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக் கப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதனைக் காண முடிந்தது. அங்கு மனிதனாகப் போகமுடியாது. மனதைக் கல்லாக்கிக் கொண்டுதான் போக வேண்டும் என்று மனம் வெதும்பியிருக்கிறார் ரவிசங்கர் குருஜி.

அவர் தமிழ் பேசத் தெரிந்த அயல்நாட்டவர், ஓர் ஆன்மீகவாதி என்ற வகையில் மக்களுடன் நெருங்கி உரை யாடி அவர்களின் மனநிலைகளை அளந்து சென்றிருக் கிறார். உண்மையைச் சொல்லத் தயங்க வேண்டிய நிலைக்கு அப்பாற்பட்ட ஆன்மீக யோகி. அதனால், அவர் கூடவே இந்திய அரசாங்கத்தையும் அரசியல் வாதிகளையும் அவர்களின் போக்கையும் கண்டித்தார் மன வேதனையுடன்.

வன்னியிலிருந்து வந்து, வவுனியா நலன்புரி நிலையங் களில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வாழும் மக்கள் மூன்று வேளையும் பிச்சைக்காரர்கள் போன்று உணவுக்குக் கையேந்துகிறார்கள். அவர்கள் சோர்வடைந்த நிலையில் காணப்படுகிறார்கள். அந்த மக்களின் நிலைமை பரிதாபகரமானது, வேதனைக்குரியது என்று மனம் வெதும்பியுள்ளார் இன்னுமொரு ஆன்மீகக் குருவான யாழ்.மறை மாவட்ட ஆயர் அதிவண. தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை. அவர் தாம் நேரில் கண்டதை மனம் தாங்காது, மனம் திறந்து மிக நீட்டமாகவும் கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் தற்காலிகமாக அமைக்கப்பட் டுள்ள கூடாரங்கள் பாதுகாப்பானவை அல்ல; சர்வதேச தரம் வாய்ந்தவை அல்ல. மக்கள் களைத்துச் சோர் வடைந்த நிலையில் இருக்கிறார்கள். குளிப்பதற்குப் போதிய இடவசதிகள் இல்லை. சுத்தமான குடிதண்ணீர் இல்லை. மருத்துவ வசதிகள் போதியனவாக இல்லை. உழைத்து வாழ்ந்த மக்கள் விரக்தியுடன் வெறுங்கை யுடன் இருக்கின்றனர் என்று நலன்புரி நிலைய மக்களின் அவலத்தைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

இடம்பெயர்ந்தவர்களின் தேவைகளை உரிய வகை யில் நிறைவேற்றாத அரசு, உள்நாட்டு மக்கள் மற்றும் உறவுகள் உதவுவதற்கு அனுமதியும் வழங் குவதாக இல்லை. நிவாரணப் பொருள்களைத் தாங்கள் கொண்டு போய்க் கொடுப்பதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். மனிதாபிமான உதவிகளைச் செய்வதற்கும் இப்படி ஒரு மறைமுக மான தடை!
இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணப் பணி களை அரசு செவ்வனே செய்யவில்லை என்பதை வவுனி யாவுக்குச் சென்றிருந்த ஐ.நா.அதிகாரி ஜோன் @ஹாம்ஸ் மற்றும் பிரிட்டிஷ், பிரெஞ்சு வெளிநாட்டமைச்சர்கள் மில்லிபான்ட், பேர்னாட் கௌச்னர் ஆகியோரும் வன்னி நலன்புரி நிலையங்களைச் சென்று பார்வை யிட்ட பின்னர் தெரிவித்திருந்தனர். அவர்களும் இடம் பெயர்ந்தோருக்கு உரிய வசதிகள் செய்யப்பட வில்லை என்பதனையே பிரதானமாகச் சுட்டிக்காட்டி உள்ளனர்.

தமது உழைப்பால், வீடுவாசல்களில் வசதியாக வாழ்ந்த மக்கள், பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டி ருக் கிறார்கள்; போதிய அடிப்படை வசதிகள் இன்றி நோயாளி களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர் களுக்கு உற வினர்கள் மற்றும் வெளியார் உதவுவதற் குத் தடை போடும் அரசு, அந்த மக்களை நீண்ட நாள் "கைதிகள்" ஆக்கி உடலாலும் உள்ளத்தாலும் மெலிந் தும் நலிந்தும் போகச் செய்து அடிமை களாக்கப் போகிறதா அல்லது கண்ணுக் குப் புலப்படாத விதத்தில் உள்ளூர்ந்து சாகடிக் கப்போ கிறதா? அவர்களும் மனிதர்களே என்று மனந்திருந்தி, அரசு போதிய வசதிகளைச் செய்யும் என்று இப்போதைய செயற்பாடுகளை வைத்து எவரும் நம்புவதற்கில்லை.

நிர்க்கதிக்கு ஆளாகி இருக்கும் வன்னி வாழ் தமிழ் மக்களை, மிகக் குறுகிய காலத்தில் அவர்களின் முந்திய பிரதேசங்களில், சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற வேண்டும். ஐ.நா. போன்ற சர்வதேச மனிதாபிமான அமைப்புகளே அதற்கு உந்துசக்தியாக இருக்க முடியும்.

சரணடைவதற்கான பேச்சுக்கே இடமில்லை: போராட்டம் தொடரும் - தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர்

நாங்கள் சரணடைவது மற்றும் ஆயுதங்களைக் கீழே போடுவது என்ற கேள்விகளுக்கு இங்கே இடமில்லை என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கூறியுள்ளதாக அனைத்துலக ஊடகமா அனைத்துலக ஊடகமான 'அசோசியட் பிறஸ்' வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சரணடைவது மற்றும் ஆயுதங்களைக் கீழே போடுவது என்ற கேள்விகளுக்கு இங்கே இடமில்லை. மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை நாம் பெறும் வரையிலும் எமது போராட்டம் தொடரும் என நடேசன் கூறியுள்ளார்.

போரை நிறுத்தும் அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகள் அனைத்தையும் சிறீலங்கா அரசாங்கம் புறந்தள்ளி வருகின்றது. அனைத்துலக சமூகம் இந்தக் கொடுமையான போரை நிறுத்த முனவரவேண்டும். இக்கொடிய போரில் மக்களின் உயிர்களைக் காக்க அக்கறை இருந்தால் எந்த நாடென்றாலும் தனது இராஜதந்திர வரப்புகளைக் கடந்து இப்போரை நிறுத்த முன்வரவேண்டும் என அரசியற்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைமை உட்பட நாம் அனைவரும் எமது தாயத்தில் இருந்தவாறே போராட்டத்தை நடத்தி வருகின்றோம். சிறீலங்காப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தயா மாஸ்ரர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியமான உறுப்பினர் அல்ல எனவும் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்

இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள்.

பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம்.

இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.




இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நன்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை.

புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது.

வினாச காலம் நெருங்குகையில் விபரீத புத்தி தானே தேடிவரும்.


"கெடுவான் கேடு நினைப்பான்" என்று கூறுவார்கள்.
"விநாச காலே விபரீத புத்தி" என்ற பேச்சு வழக்கும் கூட நம்மத்தியில் உண்டு.
அழிவுகாலம் நெருங்கி விட்டால் மதி கண்ணை மறைக்கும். எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக் கூடாது என்ற புரிதல்களை எல்லாம் அறிவில் தெளிய விடாமல் செய்து விடுமாம் அந்தக் கெட்டகாலம்.

இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டி யுத்தம் கோர வடிவெடுத்து, அப்பாவிப் பொதுமக்களின் பேரழிவுக்கு வழி செய்துள்ள பின்னணியில், அதைத் தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேசம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் "விழலுக்கு இறைத்த நீராக" "புறக்குடத்து நீராக" "செவிடன் காதில் ஊதிய சங்காக" வீணாகின.

வன்னியில் மோதலில் சிக்கியுள்ள மக்களின் நிலை தொடர்பான சர்வதேச சமூகத்தின் கவலை அதிகரித்துள்ளமையைத் தொடர்ந்து இங்கு யுத்தநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளச் செய்யும் நோக்குடன், அதற்காக இலங்கை அரசை வலியுறுத்துவதற்கென கொழும்புக்கு வந்த பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட், பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கௌச்னர் ஆகியோர் வெறுங்கையோடு இலங்கையை விட்டுப் புறப்பட்டிருக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் விநாச காலத்தைப் புரிந்து கொள்ளாமல் விபரீத புத்தியுடன் போர்வெறித் தீவிரத்துடன் சன்னதம் கொண்டு நிற்பதால்தான் இந்த இரு வல்லரசுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக எடுத்த முயற்சி பலனளிக்காமல் பயன்தராமல் தோல்வியில் முடிவடைந்தது என்பது வெளிப்படை.
"இலங்கை இறைமையுள்ள நாடு. அதன் தலைமைத்துவத்துக்குச் சொல்லிப் பார்த்தோம். அவர்கள் கேட்பதாக இல்லை. இனி நாம் என்ன செய்ய முடியும்?" என்று இத்தகைய வல்லரசு நாடுகள் இவ்விடயத்தை அப்படியே போட்டு விட்டு வாளாவிருந்து விடும் என எண்ணுவது அபத்தம்.

மூன்று மாத காலத்தில் சுமார் ஏழாயிரத்து ஐந்நூறு பொதுமக்கள் பரிதாபமாக சாகவும் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடையவும் காரணமான கொடூர யுத்தம், மேலும் கோர வடிவு எடுக்கும் பேராபத்து நிலைமை சூழ்ந்து வருகின்றது. இதனை வெறும் உள்நாட்டு யுத்தமாகக் கருதி அவை ஒதுங்க விடா.

"இலங்கையில் மோதல் நடைபெறும் வடபகுதியில் நிலைமை மிகவும் அபாயகரமான கட்டத்தை அடைந்துள்ளது" என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகம் எச்சரித்திருக்கின்றது. இலங்கையில் கடமையாற்றி வரும் தமது பணியாளர்களை மேற்கோள் காட்டி அந்த அமைப்பின் பேச்சாளர் வில்லியம் ஸ்பின்ட்லெர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.பொதுமக்களின் நிலைமை தொடர்பான இலங்கை அரசின் கடப்பாடுகளையும்,அரசு தனது சொந்த மக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் மீள வலியுறுத்திச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இதேசமயம், இலங்கையில் மோதல் இடம்பெறும் முல்லைத்தீவுப் பகுதியில் விமானங்கள் மற்றும் கனரக ஆயுதங்களின் பாவனை நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு அறிவித்துள்ள போதிலும் அப்பிரதேசத்தில் தொடர்ந்து கடும் ஷெல் வீச்சுகள் நீடிக்கின்றமை தொடர்பாக அமெரிக்கா கடும் கவலை தெரிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.

இதற்கிடையில் வன்னியில் இடம்பெறும் மோதல்களின்போது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று அரசு அறிவித்துள்ள போதிலும் இலங்கை இராணுவம் ஷெல் வீச்சுக்களை மேற்கொள்கின்றது என ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியிருப்பதாக "த டெய்லி டெலிகிராவ்" நாளிதழ் தகவல் வெளியிட்டிருக்கின்றது.

உலகின் எங்கோ ஒரு மூலையில், மிகவும் பின்தங்கிய பிரதேசம் ஒன்றின் தெருவழியே மிக வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டியின் கைக்கடிகாரத்தில் காட்டும் நேரத்தை அமெரிக்காவில் ஒரு கண்காணிப்பு மையத்தில் இருந்தபடி துல்லியமாகப் பார்த்தறி யக்கூடிய அளவுக்கு நவீன தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலம் இது.
வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள குறுகிய நிலப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலி கக் கூடாரங்களைத் தமது செய்மதிகள் மூலமான வீடியோ கமராக்கள் மூலம் துல்லியமாகக் கணக்கிட்டு, அதனடிப் படையில் அங்கு எஞ்சியுள்ள மக்களின் எண்ணிக்கையை இட்டுமட்டாக மதிப்பிடக்கூடிய வல்லமையில் அமெரிக்காவும் ஏனைய மேற்குலகும் உள்ளன என்பதும் புதுமையான விடயமல்ல.

எனவே, விமானத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் பீரங்கி போன்ற கனரக ஆயுதப் பாவனை தொடர்பாகக் கொழும்பிலோ அல்லது பிற இடங்களிலோ ஓர் அறிவிப்பும், களத்தில் வேறு நிலைப்பாடுமாக இரட்டை வேடம் போடலாம் என்று யாரும் நினைப்பார்களாயின் அது பேரபத்தம் இன்றி வேறில்லை.

இத்தகைய பின்புலத்தில்தான், இப்போது இலங்கைக்கு வந்து யுத்த நிறுத்தம் ஒன்றை உடன் ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அது பலனளிக்காத நிலையில் வெறுங்கையோடு நாடு திரும்பிய பிரிட்டிஷ் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர்களின் எத்தனங்களை நாம் நோக்கவேண்டும். இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. இந்த விடயத்தைப் புரிந்துகொண்டு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்திருக்கின்றது.
"இலங்கை அரசு இராஜதந்திர அணுகுமுறையைப் புரிந்துகொள்ளாது முன்பின் யோசிக்காது சர்வதேசத்துடன் சண்டைபோட்டு வீண் பகைமையை வளர்த்துக்கொள்கின்றது" எனச் சுட்டிக்காட்டியிருக்கின்றார் ஐ.தே.கட்சியின் எம். பியும் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க.

"இலங்கை அரசு சர்வதேசத்துடன் ஒன்றிணையாது தனிப் பயணம் செய்ய முயல்கிறது. முன்பின் நேரக்கூடிய விளைவுகளைப் பற்றி சிந்திக்காது சர்வதேசத்துடன் முரண்பட்டு நிற்கின்றது." என்று கூறுகின்றார் அவர்.இப்படி விபரீத புத்தியுடன் கொழும்பு செயற்படுவது வினாச காலத்துக்கு வெற்றிலை வைத்து அழைக்கும் செயற்பாடே.

ஐ.நா. பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்படுவது அவசியம்

* வவுனியா அகதி முகாமிலிருந்தவேளை மில்லிபான்ட் கருத்து
இலங்கை யுத்தமானது குறிப்பிட்டதொரு பகுதியை பூகோள சமூக ரீதியாக பாதித்துக்கொண்டிருப்பதுடன் ,பரந்துபட்ட விளைவுகளையும் ஏற்படுத்துவதால் இந்த விவகாரம் ஐ.நா. பாதுகாப்புச்சபை நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரிட்டிஷ் அரசாங்கம், இதற்கான முயற்சிகளில் பிரிட்டனும் பிரான்ஸும் அமெரிக்காவும் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை பிரெஞ்சு வெளி விவகார அமைச்சர் பேர்னாட் குச்னருடன் இணைந்து விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் வவுனியாவிலுள்ள அகதிகள் முகாமுக்கு சென்று பார்வையிட்ட வேளையில் அங்கிருந்துகொண்டு பி.பி.சி.க்கு வழங்கிய பேட்டியிலேயே மேற்கண்ட கருத்தை தெரிவித்திருக்கிறார்.

பி.பி.சி.யின் நிருபர் மார்தாகர்ணிக்கு அமைச்சர் மில்லிபான்ட் தெரிவித்திருப்பதாவது;

பாதுகாப்பு வலயமென அழைக்கப்படும் பகுதியானது பாதுகாப்பானதாக இல்லை. அங்கு மோதல் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இனிமேல் அங்கு கடுமையான ஷெல் தாக்குதல் இருக்காது என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அதனை நடைமுறைப்படுத்துவது அவசியம். ஆனால், இது நிச்சயமாக யுத்தத்தை நிறுத்துவதாகும்.

ஐரோப்பிய ஒன்றியமும் ஜி8 நாடுகள் அமைப்பும் இதற்கான அழைப்பை விடுத்திருந்தன. தற்போதைய தருணத்தில் பொதுமக்கள் புலிகளால் அகப்பட்டுள்ளனர். இந்த மோதல் சூன்யப்பகுதிக்குள் இருந்து அவர்கள் வெளியேறவிடாமல் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அரசாங்கம் பொறுப்பை பெற்றுள்ள தொன்றாகும். அது ஐ.நா.வின் ஜனநாயக ரீதியான உறுப்பினரென்ற முறையில் செயற்படுவதற்கும் சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை பிரயோகிப்பதற்குமான தேவைகள் உள்ளது என்று மில்லிபான்ட் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவாக நீங்களும் பிரெஞ்சு அமைச்சர் குச்னரும் சென்றுள்ளீர்கள், இலங்கை அரசாங்கத்திடம் உடனடி யுத்தநிறுத்தம் தொடர்பாக முயற்சிசெய்யவும் வலியுறுத்தவும் சென்றுள்ளீர்கள். அதுதொடர்பாக நீங்கள் எவ்வளவு தூரம் இலக்கை எட்டியுள்ளீர்கள் என்று மார்தாகேர்ணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மில்லிபான்ட் இந்த விஜயத்தின் மூலம் இன்று யுத்தநிறுத்தம் ஏற்படப்போவதில்லை. இந்த நாட்டில் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 25 வருடங்களில் 80 ஆயிரம் பேரை இந்த யுத்தம் பலியெடுத்து விட்டது.

நாங்கள் இங்கு மோதல் பகுதியிலுள்ள பொதுமக்கள் தொடர்பாகவே கவனத்தை செலுத்தியுள்ளோம். உணவுக்கும் நீருக்கும் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு தொடர்பாகவும் விரக்தியான நிலையிலுள்ள மக்கள் தொடர்பாகவே நாம் எமது கவனத்தை செலுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

சர்வதேச அபிப்பிராயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவில்லையா? உங்களைப் போன்ற தூதுக்குழுக்கள் தொடர்பாக சிரத்தை கொள்ளவில்லை என்பது உண்மையான விடயம் இல்லையா?

ஐ.நா.பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேற்றுவதற்கு இது நேரம் இல்லையா? என்று மார்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மில்லிபான்ட் இப்போது முதலாவது தூதுக்குழு அனுமதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வட கிழக்குப்பகுதிக்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை இது கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.

பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாம் சரியாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறோமென நான் நினைக்கிறேன். இந்த விடயத்தை கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா.பாதுகாப்பு சபையில் எழுப்பவிருந்தோம்.

இது ஐ.நா.பாதுகாப்பு சபை நிகழ்ச்சி நிரலை சார்ந்த விடயமாகும் இந்த உள்நாட்டு யுத்தமானது பூகோள சமூகம் சார்ந்ததும் பரந்துபட்ட விளைவுகளை ஏற்படுத்துவதாகும். அத்துடன் பாரியளவில் பொதுமக்கள் அவசரமான நிலைமை குறித்ததுமாகும் என்று கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் இங்கு இழைக்கப்பட்டிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இப்போது நிறுத்திவிட்டாலும் இலங்கை அரசு கனரக ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது.

அத்துடன் பொதுமக்களை தமிழ்ப் புலிகள் மனிதக்கேடயங்களாக வைத்துள்ளனர் என்று மார்தா கேள்வி எழுப்பிய போது பதிலளித்த மில்லிபான்ட் உண்மை குறித்து எமக்கு தெரியாது மோதல்பகுதியிலிருந்து பொது மக்களை வெளியேற விடாமல் புலிகள் தடுத்து வைத்து பொதுமக்களின் உரிமைகள் மீறுவது தொடர்பான கேள்விக்கு இடமில்லை. அதேசமயம் மோதல் பகுதிக்குள் கடுமையான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பது குறித்தும் நாம் மிகவும் கவலையடைந்துள்ளோம்.

அங்கு செல்வதற்கு இடமளிக்கப்படவேண்டும் என்பதற்கான ஒருகாரணமானது இதன் மூலம் பொதுமக்கள் நலன்களை மேம்படுத்த முடியும் என்பது மட்டுமல்லாமல் என்ன நடக்கிறது என்பது தொடர்பாக சகல தரப்பினரதும் பதிலளிக்கும் கடப்பாட்டையும் உரிய முறையில் மேம்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் அமைச்சர் மில்லிபான்ட் மேலும் கூறியதாவது;

இலங்கை நிலைவரம் தொடர்பாக உலகம் பூராமுவுள்ள மக்கள் கவலையடைந்துள்ளனர். 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரை இடம் பெயர்ந்துள்ளனர்.

சர்வதேச சமூகத்தின் கவலையானது பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் வெளிப்படுத்தப்பட்டிருப்பது மாத்திரமன்றி வீதிகளிலும் அமைதியான ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றன.

பொது மக்களை பணயக் கைதிகளாக வைத்திருக்க வேண்டாமெனவும் அவர்கள் வெளியேறிச் செல்ல அனுமதி வழங்க வேண்டுமெனவும் புலிகளை நாம் வலியுறுத்துகின்றோம். இது உள்நாட்டு யுத்தம் என்பதையும் பயங்கரவாத அமைப்பானது இலங்கை பூராவும் பஸ்கள், வர்த்தக நிலையங்களில் குண்டுகளை மக்கள் மீது வெடிக்க வைத்திருப்பது குறித்தும் நாம் மறக்கவில்லை. ஆனால், தமிழ் மக்களின் உண்மையான கோரிக்கையானது கண்ணியமான உரிமைகள், உரிய அங்கீகாரம் என்பன இலங்கையில் சமாதானமான வழியில் கிடைக்க வேண்டும் என்பதாகும்.

மிகத் தீவிரமான அரசியல் நெருக்கடியானது பிரதிநிதித்துவம் மற்றும் அங்கீகாரம் பற்றியதாகும். நிச்சயமாக அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் மில்லிபான்ட் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டுமா என்று மார்தா கோர்னி கேட்டபோது, வன் செயல்களை கைவிடுமாறு நாம் அவர்களை கோரியுள்ளோம். ஜனநாயக நாடொன்றில் அரசியல் ரீதியில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு வன்முறையானது ஒரு போதும் வழிமுறையல்ல. இந்த நாட்டிற்கு சர்வதேச சமூகம் தேவையாகவுள்ளது. சர்வதேச சமூகம் அதற்குரிய செயற்பாட்டில் ஈடுபடும் ஆனால், தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்குரிய அங்கீகாரமும் அவர்களின் தேவைகளுக்கான அங்கீகாரமும் ஏற்படுவதை பார்க்க சர்வதேச சமூகம் விரும்புகிறது.

ஐக்கிய இலங்கைக்குள் இவை அமையமுடியும். ஆனால், தெளிவான அரசியல் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டதாக அது இருக்க வேண்டும். மோதலின் பெறுபேறாக இருப்பது இலங்கை அரசு யுத்தத்தில் வெற்றி பெற்றதாக இருக்கக் கூடும். அதே சமயம் சமாதானத்தை இழப்பது அபாயமானதாகும். ஏனெனில், நாம் 25 வருடங்களுக்கும் அதிகமான காலப் பயங்கரவாதத்தை கொண்டுள்ளோம். ஏனெனில், இலங்கை பூராவும் உள்ள தமிழ்ச் சமூகங்கள் அவர்கள் பார்த்ததையிட்டு அதிர்ச்சியும் திகிலும் அடைந்துள்ளனர் என்று மில்லிபான்ட் கூறியுள்ளார்.