ஈழத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்துக் கைவிட்ட கலைஞரும் ??????



விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகப் பெரும் பின்னடைவுக்குள் தள்ளி, அவர்களை இலங்கைப் படை கள் ஒடுக்கியமை என்பது இப்போது நடந்து முடிந்துவிட்ட விடயம்.
அந்தப் பின்புலத்தில் சூத்திரதாரியாகச் செயற்பட்ட தரப்புகள் பற்றிய உண்மைகள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசுப் படைகளின் யுத்த தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றிருந்த காலகட்டத்தில் இவ்வாண்டின் முதல் நாலரை மாத காலப்பகுதியில் அரசுப் படைகளுடன் யுத்தமுனையை அண்டிய பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்து இரா ணுவ நடவடிக்கைகளின் வெற்றி பற்றிய தீரச் செய்திகளை சர்வதேச மயப்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர் நிதின் எ.கோகுலே. என்.டி. ரி.வி. சார்பில் தொலைக்காட்சிச் செய்தியாளராக இலங் கையின் விமானப்படை ஹெலிகளிலும், இராணுவ டாங்கிகளிலும் அடிக்கடிப் பயணம் செய்து, இலங்கை இராணுவ வெற்றிகள் பற்றிய செய்திகளை இந்தியப் பக் கத்தில் பரபரப்பாகப் பரப்பிய பெருமை அவருக்கு உண்டு.
இந்த வகையில் இலங்கை இந்தியப் படை அதிகாரி கள், இராஜதந்திரிகள் போன்ற தரப்பினருடன் அண்மைக் காலத்தில் மிக நெருக்கமாக மனம்விட்டுப் பழகும் வாய்ப் புக் கிடைத்த ஒரு சில ஊடகவியலாளர்களுள் அவரும் ஒருவர் என்பது மறுக்கப்பட முடியாததாகும்.

அதேசமயம், இந்த யுத்த காலத்தை ஒட்டிய தமது அனுபவங்கள் குறித்து, அந்த யுத்தம் முடிந்த கையோடு சூட்டோடு சூடாக அவர் எழுதி வெளியிடும் புத்தகத் தில் உள்ள தகவல்கள், கருத்துக்கள் என்பவையும் இலகு வில் புறந்தள்ளி, ஒதுக்கப்பட்டு, மறுக்கப்படக்கூடி யவை அல்ல என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

இலங்கை இராணுவத்தின் இந்த யுத்த வெற்றியின் பிரதான சூத்திரதாரியாக இவ்விடயத்தில் அமசடக்காகச் செயற்பட்ட இந்தியாவை அடையாளம் காட்டுகின்றார் கோகுலே.
யுத்தத்தில் வென்றதான அறிவிப்பை விடுத்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்னர், "இந்தியாவின் யுத்தத்தையே நாம் முன்னெடுத்து வெற்றியீட்டி னோம்!'' எனக் கூறிய தகவலை இப்போது கோகுலே வெளி யிடும் தகவலோடு ஒப்பிட்டுப் பொருத்திப் பார்த்தால் உண்மைகளை நாமாகவே புரிந்துகொள்ள முடியும்.

"இலங்கைக்குத் தாக்குதல் ஆயுதம் எதனையும் வழங்கவில்லை'' என்று இந்திய அரசு வெளியில் சாட் டுக்குக் கூறிக்கொண்டே, இலங்கைக்கு அம்சடக்கமாக உதவி, புலிகளை அழிப்பதைத் தந்திரோபாயமாக உறுதிசெய்துகொண்டது என்பதை கோகுலே தமது வார்த்தைகளில் வெளிப்படுத்தி நிற்கின்றார்.

ஆயுதங்களை ஏற்றிவந்த புலிகளின் கப்பல்கள் குறித்த புலனாய்வுத் தகவல்களையும், அக்கப்பல்கள் தங்கிநின்ற அமைவிடங்களையும், ஏனைய துல்லிய மான விவரங்களையும் இந்திய அரசு சத்தம் சந்தடியின்றி வழங்கியது.
இத்தகவல்கள் மூலம் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இலங்கைக் கடற்படை அழிப்பதை இந்தியா உறுதிசெய்து கொண்டது.

இதுவே, புலிகளின் அழிவுக்குப் பிரதான காரணம் என் பதை கோகுலே அம்பலப்படுத்துகின்றார்.
தவிரவும், புலிகளுடனான யுத்தத்துக்குப் பயன்படுத்த வென எம்.ஐ.17 ரக ஹெலிக்கொப்டர்கள் ஐந்தை, இந் தியா இலங்கைக்குக் கொடுத்து உதவியது. தன்னுடைய பங்களிப்பை மறைப்பதற்காக இந்த ஹெலிக்கொப்டர் கள் இலங்கை விமானப்படையின் குறியீட்டுடனேயே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் இந்தியா வழங்கியது என்ற உண்மையையும் கோகுலே பகிரங்கப்படுத்துகின்றார்.
ஆக, இந்தியா புதுடில்லி வெளிப்படையாகத் தன் னைப் பார்வையாளராகக் காட்டிக்கொண்டே புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தீவிர பங்காளியாகச் செயற்பட்டு தனது இலக்கை அடைந்திருக்கின்றது என்ற உண்மை இப்போது மெல்ல மெல்ல வெளிப்பட்டுக் கசியத் தொடங்கிவிட்டது.

யுத்தம் தீவிரம் பெற்றிருந்த சமயத்திலேயே ஈழத் தமிழர் தரப்புக்கு எதிரான புதுடில்லியின் இந்த சதித் திட்டம் பற்றிய தகவல்கள் பகிரங்கமாகின. எனினும், புதுடில்லி அரசுத் தலைமையும், அதற்குக் காவடி தூக் கிய தமிழகத் தலைமைகளும் அப்போது அதனை அடி யோடு மறுத்து வந்தன. ஆனால் இப்போது உண்மைகள் மெல்ல அம்பலமாகி வருகின்றன.
தமது பதவிக் கதிரைகளைத் தக்கவைக்கும் சுயநலத் துக்காகப் புதுடில்லியின் பாதரட்சைகளை அபிஷேகம் செய்து பூஜித்து வந்த வருகின்ற தமிழகத் தலைமை கள் இனி என்ன செய்யப் போகின்றன? இனி என்ன சமா தானம் கூறப் போகின்றன?

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி களில் தமது பேரம் பேசும் வலுவை இழந்து, தென்னி லங்கை தூக்கிப் போடும் பிச்சையை இரந்து அளிக்கும் சலுகையை தலைவணங்கி, சிரம் தாழ்த்தித் தாங்கிப் பிடிக்கும் கேவலத்துக்கு பற்றுக்கோடற்ற நிலைக்கு ஈழத் தமிழினம் இன்று தள்ளப்பட்டு நிற்கின்றது.

ஈழத் தமிழினத்தை இத்தகைய இழிநிலைக்குத் தள் ளும் இராணுவச் செயற்பாடுகளுக்குத் துணைபோன புதுடில்லியும், அந்தப் புதுடில்லி அரசுத் தலைமைக்கு கூஜா தூக்கி அதனைப் பலப்படுத்திய தமிழகக் கேவ லங்களும் இன்று பரிதாப நிலையில் பரிகசிக்கப்படும் கட்டத்தில் அவலப்படும் தமிழினத்துக்குக் கூறப்போகும் பதில் என்ன?

ஈழத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்துக் கைவிட்ட கலைஞரும் அவரது ஆட்சி சகாக் களான உடன் பிறப்புக்களும், இலங்கையில் வாழும் தமது உடன்பிறவா சகோதரங்களான ஈழத் தமிழினத்துக்குக் கூறப்போகும் விடை என்ன?

கொடுமை தாங்காமல் முகாம் மக்கள் சிங்களப்படையினருடன் மோதும் நிலை வரும்!

வன்னி தடுப்பு முகாம்களில் மக்கள் அளவிட முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதை அடுத்து அங்கு மக்களுக்கும் சிங்களப் படையினருக்கும்

இடையில் மோதல்கள் வெடிப்பதற்கான சாத்தியங்கள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் எச்சரித்துள்ளது.

முகாம்களில் காணப்படும் கொடூரமான வாழ்க்கைச் சூழல் காரணமாக அங்குள்ள மக்கள் மிகப் பெரியளவில் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
முகாம் மக்களின் நிலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முட்கம்பிகளால் அடைக்கப்பட்ட பகுதிக்குள் அந்த மக்கள் வாழ்கிறார்கள். பருவமழை காரணமாக அந்தப் பகுதி நீரில் ஊறிப் போய்க் கிடப்பதுடன் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாகவும் மாறியுள்ளது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அந்த மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
அங்கு மிகக் கொடூரமான நிலைமை காணப்படுகின்றது.

அடுத்த மாதம் வடக்கு - கிழக்கில் பருவமழை பெய்யத் தொடங்கிவிடும். அதன் பின்னர் நிலைமை இன்னும் மோசமாக மாறிவிடும். முகாம்களுக்குள் வாகனங்கள்கூடச் செல்ல முடியவில்லை.

இத்தகைய நிலையால் அங்குள்ள மக்கள் படையினருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தகையதொரு நிலை குறித்து நாங்கள் எச்சரிக்கின்றோம்.
முகாம்களில் சிறுவர்கள் நோயால் மடிந்துகொண்டிருக்கிறார்கள். இதனைப் பார்த்துக்கொண்டு பெற்றோர்களால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.

நோய் வாய்ப்பட்டுள்ள சிறுவர்களை மேற்கொண்டு சிகிச்சைக்காக முகாமில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் படைத்தரப்பு அதற்கு அனுமதி மறுத்துள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

வன்னி அகதி முகாம்களிலிருந்து அம்பாறை வந்தவர்களின் கண்ணீர்க் கதைகள்



வவுனியா முகாம்களில் தங்கியிருந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அகதிகள் சிலர் மீள்குடியமர்த்துவதற்காக அம்பாறைக்கு அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் முதலில் காரைதீவு விபுலானந்தர் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்கள் தாம்பட்ட அவலம் பற்றிக் கூறிய கண்ணீர் கதைகள் இதோ...

"நாம் இடம்பெயர்ந்து இராமநாதபுரம், பிரமணங்குளம், துறவில், தேவிபுரம், இரணைப்பாலை என 3 மாதங்கள் வரை அலைந்து நாடோடியாக புதுமாத்தளனை அடைந்தோம். அங்கு தினமும் வெறும் பருப்பை தண்ணீரில் அவித்து உண்டோம்.''
வன்னி யுத்தத்தில் சிக்கி வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து காரைதீவுக்கு சென்ற, அம்பாறை மாவட்ட 159 அகதிகள் சார்பில் நற்பிட்டிமுனையைச் சார்ந்த சிவராசா ரஞ்சனி (வயது 32) என்ற பெண்மணி இவ்வாறு கூறினார்.
காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் இவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த வேளையில் அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் அவர்களைப் பேட்டி கண்டனர். அப்போது அப்பெண்மணி கூறியவை வருமாறு:

"எனது கணவர் த.சிவராசா கிளிநொச்சியைச் சேர்ந்தவர். நான் நற்பிட்டிமுனை. 1982 இல் திருமணம் செய்தோம். அதன் பலனாக 3 பிள்ளைகள் பிறந்தனர். 2006ஆம் ஆண்டு கிளிநொச்சிக்குச் சென்றோம். அங்கிருந்து மீண்டும் திரும்வர "பாஸ்' தரமறுத்துவிட்டனர். கடந்த வருடம் யுத்தம் தொடங்கியது. வேறு வழியின்றி இடம்பெயர ஆரம்பித்தோம். வட்டக்கச்சி, இராமநாதபுரம் எனத் தொடங்கி புதுமாத்தளன் வரை 3 மாதங்கள் உடுத்த உடுப்புடன் நாடோடிகளாக ”டச்”ட அலைந்தோம்.



புதுமாத்தளனில் இருக்கும்போது உணவுக்கு கஷ்டப்பட்டோம். அங்கு தேங்காய் 2 ஆயிரம் ரூபா, சீனி 2,500 ரூபா, செத்தல் மிளகாய் 16,000 ரூபா, மீன் 1,500 ரூபா இப்படி விலைகளில் பொருட்கள். கப்பல் வந்தால் உணவுப் பொருட்கள் வரும். ஆனால் எங்களுக்கு வெறும் பருப்பு மட்டுமே கிடைக்கும். அதுவும் கோதுப்பருப்பு. என்ன செய்வது. அப்பருப்பை வெறும் தண்ணீரில் அவித்து பசியைப் போக்கினோம். சிலர் சைக்கிளை விற்று, தங்கத்தை விற்று தேங்காய் வாங்கினர். எம்மிடம் பணமில்லை.
அங்கு துப்பாக்கிச் சூடுகள் விழவிழ ஓடினோம். ஒரு தடவை பார்த்தோம். எம்முடன் வந்த அறுவருக்கு கால்களில்லை.

இப்படி நாதியற்று அலைந்து கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதியன்று படையினரிடம் சரணடைந்தோம். எம்முடன் 2,500 பேர் சரணடைந்தனர். அதன்பிறகு ஓரளவு நிம்மதி. நாம் செட்டிக்குளம் அருணாசல முகாமில் தங்க வைக்கப்பட்டோம். எமது ஒரு மகனை மொட்டை அடித்து வவுனியா காமினி வித்தியாலயத்தில் வைத்துள்ளனர். அவர் இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தர பரீட்சை எடுப்பவர். அவரை அவர்கள் விடவில்லை. நாம் அருணாசல முகாமில் 3 மாதங்கள் வரை இருந்தோம். சாப்பாடு பரவாயில்லை. நிவாரணம் தந்தார்கள். உடுப்புகளைத் தந்தார்கள். இன்று ஆண்டவன் அருளால் இங்கு வந்திருக்கிறோம். இனி புதுவாழ்க்கையை ஆரம்பிக்கவிருக்கிறோம்'' என்றார்.

மாங்குளத்தில் காலையிழந்தேன்!நிந்தவூரைச் சேர்ந்த சீ.வில்டன் (வயது 57) என்பவர் கூறியவை வருமாறு:
"நான் மேசன் வேலை செய்து பிழைத்து வந்தேன். 1996இல் விமானத் தாக்குதலில் காலையிழந்தேன். மாங்குளத்தலிருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றது. எனது குடும்பத்தினருடன் கிளிநொச்சிக்குச் சென்று யுத்தம் தொடங்கியதும் 3 மாதம் அலைந்து அடுத்த மே 17ஆம் திகதி செட்டிக்குள முகாமிற்கு வந்தடைந்தோம். அங்கு 1,500 குடும்பங்கள் உள்ளனர்'' என்றார்.
வில்டனின் மகளான ரவீந்திரராஜ பேபி (வயது 33) தெரிவித்தவை வருமாறு:
"நாம் கிளிநொச்சிக்கு 1992 இல் குடியேறினோம். எமக்கு 5 பிள்ளைகள் பிறந்தனர். எனது மகன் ரசிதர் (வயது 10) அங்கு நிலவிய கடும் காய்ச்சல் காரணமாக காக்காய் வலிப்பு வந்தது. ஒரு காலையும் இழந்தார். மற்ற மகளுக்கும் அதேகதி'' என்றார்.

அன்னமலையைச் சேர்ந்த சந்திரசேகரன் யமுனா (வயது 32) கூறியவை வருமாறு:
"நான் 2003 இல் முன்பள்ளிப் பாடசாலையில் கற்பிப்பதற்கு புதுக்குடியிருப்புக்குச் சென்றேன். அங்கு 2004இல் சு. சந்திரசேகரனுக்கு (வயது 39) வாழ்க்கைப்பட்டேன். பலனாக 02 பிள்ளைகளைப் பெற்றோம்.
கடந்த வருட நடுப்பகுதியில் யுத்தம் ஆரம்பமாக வீட்டை விட்டு வெளியேறி தேவிபுரம், ஆனந்தபுரம், பழையமடம், இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் கடந்து மே 5 இல் வெள்ளமுள்ளி வாய்க்காலுக்கு வந்து சேர்ந்தோம்.
கடும் கஷ்டப்பட்டு மே 17 இல் இராணுவத்தில் சரணடைந்து வவுனியா முகாமை அடைந்தோம். வழியில் எமது 2ஆவது நான்கரை வயது பிள்ளையை தவறவிட்டிருந்தோம். வவுனியா முகாமில் "உறவுப்பாலம்' வானொலி நிகழ்ச்சியின் பலனாக இரண்டரை மாதங்களுக்கு பிறகு எனது மகள் புகழரசி எங்களுக்குக் கிடைத்தாள். அவள் வேறொரு முகாமில் இருந்திருக்கிறாள்.
வலயம் 4 முகாமில் நாம் சமைத்துச் சாப்பிடுவோம். அவர்கள் உணவுப் பொருட்கள் தருவார்கள். யுனிசெவ் எமக்கு முத்திரை வழங்கி முதலாம் கட்ட உணவுப் பொருட்களைப் பெற்றவேளை இங்கு வந்திருக்கிறோம். இப்பதான் சந்தோசம். எமது தலைவிதி; கஷ்டப்பட்டோம். இனி நிம்மதி'' என்றார்.



மற்றவர்களையும் விடவேண்டும்!

திருக்கோவிலைச் சேர்ந்த கா.துஸ்யந்தி (வயது 26) கூறியவை வருமாறு:
"நாம் 1996 இல் கிளிநொச்சிக்கு தொழில் நிமித்தம்சென்றோம். மாங்குளத்திலிருந்த வேளை 2 பிள்ளைகள் கிடைத்தது. அவர் கார்த்திகேசு ( வயது 37) கூலி வேலை செய்பவர். யுத்தம் தொடங்கியதும் கஷ்டப்பட்டு சாப்பாடின்றி அலைந்து திரிந்து புதுமாத்தளனுக்கு வந்தோம். அங்கிருந்து ஏப்ரல் 20இல் முகாமிற்கு வந்து சேர்ந்தோம். முகாமில் கஷ்டம்தான். என்றாலும் நிம்மதி. எங்களை வெளியே விட்டதுபோன்று ஏனையவர்களையும் விட்டால் நல்லது'' என்றார்.

நேர்த்திசெய்யபோய் மாட்டினோம்திருக்கோவிலைச் சேர்ந்த தி.குமரன் தெரிவித்தவை வருமாறு:
"வற்றாப்பளை, அம்மன் கோவிலுக்கு நேர்த்தி செய்வதற்கு 2006இல் முல்லைதீவு சென்றோம். பின்புவர "பாஸ்" தரமறுத்துவிட்டார்கள். மாட்டிக் கொண்டோம். இவ்வேளையில் யுத்தம் இடம்பெற்றது. இருந்த இடத்தைவிட்டு இடம்பெயர்ந்து வல்லிபுரம், மாத்தளன், முள்ளிவாய்க்கால், வட்டுவாள் ஊடாக 5 மாதங்கள் அலைந்து இராணுவத்திடம் சரணடைந்து மெனிக் பாம் முகாமில் தங்கவைக்கப்பட்டோம். குளிப்பதற்கு 3 வாளி தண்ணீர் மாத்திரம்தான் கஷ்டம்தான். என்றாலும் நிம்மதி. நாம் இப்படி வருவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை. வெறும் பருப்பை தண்ணீரில் அவித்துச் சாப்பிட்ட எமக்கு இங்கு காரைதீவுப் சாப்பாடு தேவாமிர்தமாக உள்ளது'' என்றார்.

வினாயகபுரத்தைச் சேர்ந்த அ.சத்தியராஜ் (வயது 17) கூறியவை வருமாறு:
"2006இல் மாமாவைப் பார்க்க தேவிபுரத்திற்கு சென்றேன். அங்கு "பாஸ்" தராமையினால் மாட்டினேன். யுத்தம் ஆரம்பமானது. அங்கு ஷெல் வீழ்ந்ததில் எனது கால் போய்விட்டது. 2 மாதமாக உரிய மருந்தில்லாமல் அலைந்தேன். ஒருவாறு காய்ந்தவுடன் கம்பின் உதவியுடன் ஓடிஓடி வட்டுவாளூடாக வந்து இராணுவத்திடம் சரணடைந்தேன். வவுனியா இராமநாதபுரம் முகாமிலிருந்து இங்கு வந்துள்ளேன். எனது பெயர் இங்கில்லை என்கிறார்கள். அதுதான் கவலையாக இருக்குது'' என்றார்.

திருக்கோயிலைச் சார்ந்த கு.திருநாவுக்கரசு (வயது 63) குறிப்பிட்டவை வருமாறு:
நான் குடும்பத்துடன் கிளிநொச்சிக்கு போனபோது யுத்தம் தொடங்க மாட்டிக் கொண்டேன். புதுமாத்தளன் பகுதியில் குழந்தைக்காக பால்மா வாங்கப் போனபோது ஷெல் வீழ்ந்ததில் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டது. பின்பு அத்தலைந்து திரிந்து இராணுவத்திடம் சரணடைந்தேன். எப்போ சாவு என்ற நிலையில் நடைப்பிணமாக அலைந்தோம். நாம்பட்ட கஷ்டங்களை எழுத்தால், சொல்லால் வடிக்க முடியாது. இன்று இங்கிருக்கிறோம்'' என்றார்.

பொது இடத்தில் தலையை வெட்டி சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதியில்,இரண்டு கொலைகள் செய்தவரின் தலை பொது இடத்தில் வெட்டித் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு, சர்வதேச மன்னிப்புக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சவுதியைச் சேர்ந்தவர்.

இதற்காக, அந்நாட்டு அதிகாரிகள் ரியாத்தில் உள்ள பொது இடத்தில் நேற்று முன்தினம் இவரின் தலையை வெட்டி, தண்டனையை நிறைவேற்றினர்.

மேலும்,அவரின் உடலை பொதுமக்கள் பார்வைக்காக, தொங்கவிட்டனர். இதுபற்றி சவுதியின்,அல்-ஹயத் பத்திரிகையின் இணையதளத்தில் படங்கள் வெளியிட்டதோடு, அவரது உடலை இரவு வரை அதிகாரிகள் அகற்றவில்லை எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புக் கழகம், "தலையை வெட்டுதல் போன்ற கடும் தண்டனைகள் வழங்கப்படுவது மிகவும் பயங்கரமானது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதியில், கடந்தாண்டு மட்டும் 102பேர் கொல்லப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது. சவுதியில், கொலை,கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் போன்றவற்றிற்கு பொது இடத்தில் தலையை வெட்டித் தண்டனை வழங்குவது வழக்கம்.

இதுகுறித்து அந்நாட்டு அரசு தாங்கள் இஸ்லாமிக் ஷரியா சட்டத்தைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளது. இது நாட்டின் சட்டங்களை மதித்து நடக்கும் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு முழு உரிமை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

இவர்தான் அந்த தண்டனையை நிறைவேற்றுபவர்





நல்லா இருக்கா ???

இந்த தண்டனை நம்ம அரசியல் வாதிகளுக்கு குடுத்த எப்படி இருக்கும் ????


அமெரிக்க அதிபர் ஒபாமா, அரசர் அப்துல்லாவுடன்,பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சவுதி வருவதற்கு ஒரு நாள் முன்னதாக இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.