யாழ்பாணத்தின் வரலாறு

யாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை இங்கிருந்து தென்மேற்காக நெடுந்தீவு சென்று அங்கிருந்து ராமேஸ்த்திற்கோ அல்லது மன்னார், கொழும்பிற்கோ செல்லலாம். வடக்கில் கோடிக்கரைக்கோ நாகப்பட்டினத்திற்கோ போய் அங்கிருந்து கிழக்காக, பத்தாவது அகலக்கோட்டைப் பின்பற்றித் தென்கிழக்காசியாவிற்கும் சீனாவிற்கும் போகலாம். நேர் வடக்கில் இந்தியாவின் கிழக்குக் கரையோரமாக எந்தத்துறை முகத்திற்கும் போக முடியும். மேற்குத் திசையில் தொண்டி, அதிராம் பட்டினத்திற்கும் தென் கிழக்கில் யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்கும் போகலாம்.
காரைநகருக்கும், ஊர்காவற்துறைக்கும் இடையில் பரவைக் கடலின் தலைவாயிலில் அமைந்த திட்டொன்றில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் இருந்து, யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்க்கவும் முடியும். பாதுகாக்கவும் முடியும். இந்த இடத்தின் கடற்பாதை முக்கியத்துவம், பாதுகாப்பு முக்கியத்துவம் காரணமாக, கடற்கோட்டைக்கு நேர் எதிராக ஊர்காவற்றுறைப் பக்கம் எய்றி (Fort Eyrie) என்றழைக்கப்பட்ட ஒரு கோட்டையை போர்த்துக்கேயர் ஏற்கனவே கட்டியிருந்தார்கள். அது இப்பொழுது பாழடைந்த நிலையில் உள்ளது.

ஊர்காவற்றுறைக்கு முயலவள என்று வழங்கப்படும் பெயர் முயலள என்ற போர்த்துக்கேயச் சொல்லில் இருந்து வந்ததாகக் கருதப்படுகின்றது. இச்சொல், துறைமுகம் அல்லது துறைமுகமேடை எனப்பொள்படும் ‘கீ’ என்று உச்சரிக்கப்படும் Qyal என்ற ஆங்கிலச் சொல் இதற்குச் சமதையானது.

ஊர்காவற்றுறையென்று இன்று எழுத்துத் தமிழ் வடிவம் பெற்றிருக்கும் இந்த இடம்பெயர் , ‘ஊறாத்துறை’ என்றே பேச்சு வழக்கில் உள்ளது. 12ஆம் நூற்றாண்டுத் தமிழ்க்கல்வெட்டுக்களில் ஊராத்துறை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஸிகர தித்த என்று சூளவம்சத்திலும் ஹிராதொட அல்லது ஊராதொட என்று பூஜாவலிய, ராஜாவலிய, நிகாயஸங்கிரஹய போன்ற இலங்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. (இந்திரபாலா: 1969)

நயினாதீவு கல்வெட்டு

1).............. நாங்கள் .......................

2) வந்து ஊராத்துறை
3) (யில்) பிரதேசிகள் வந்து
4) இருக்க வேணுமென்றும்
5) அவர்கள் ரஷைப்படn
6) வணுமென்றும் பல தை
7) றகளில் பிரதேசிகள் வந்து நந்து
8) றையிn(ல) கூடவேணு மென்று
9) (ம்) நாம் ஆனை குதிரை மேல் ஸ்நெஹ
10) (மு) ண்டாதலால் நமக்கு ஆனை குதிரை
11) கொடுவந்த மரக்கலங் கெட்டது
12) ண்டாகில் நாலத் தொன்று பண்டா
13) (ர) த்துக்குக் கொண்டு மூன்று கூறும
் 14) (உ) டையவனுக்கு விடக்கடவதாகவு
15) (ம்) வாணிய மரக்கலங் கெட்டதுண்
16) டாகில் செம்பாகம் பண்டாரத்துக்
17) (கு) க் கொண்டு செம்பாகம் உடைய
18) (வ) னுக்கு விடக்கடவதாகவும் இவ்
19) வவஸ்தை (ரு) ள்ளதனையுங்க
20) வில்லிலுஞ் செம்பிலும் எழுத்துவெ
21) ட்டி வித்து இவ்வவஸ்தை செய்துங் கு

சமஸ்கிருதப் பாகத்தின் மொழி பெயர்ப்பு

பெயர்ப்புவரி 22 – 23 சகல சிங்களத்துக்கும் சக்கரவர்த்தி யாகிய பகை அரசர்களுக்கு காட்டுத் தீயாயாகிய வேபராக்கிரம புஜோ (பாஹி)....

இந்திரபாலா.கா.(யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுகள், 1969

ஸிகரஹா என்பது பன்றி எனப் பொருள்தரும் சமஸ்கிருதச் சொல். சூகரம் என்று தமிழ் நிகண்டுகளிலும் இச்சொல் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது. பிராகிருத வழக்காறுகளில் இது ஹ{ரா என்றும் ஊரா என்றும் உருமாறும். சிங்களத்தில் இது வழக்கிலுள்ள சொல். ஸ{கரதித்த (ஸ{கர தீர்த்தம்) என்று சூளவம்சம் குறிப்பிடுவது பன்றித்துறை என்பதற்குச் சமதையானது. பன்றியின் காற்குளம் என்ற பொருளில் கடற்கோட்டைக்கு ஒல்லாந்தர் ஹம்மன் ஹீல் (ர்யஅஅநnhநடை) எனப் பெயரிட்டது. கோட்டையின் வடிவமைப்பினால் மாத்திரம் அல்ல என்றே தோன்றுகின்றது.

ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு மேலாக, கடற்கோட்டைப் பகுதியைக் கடந்து சென்ற பன்நாட்டுக் கடல்வணிகத்தின் தொல்லியற் தடங்களை நெடுந்தீவில் பெரியதுறை அருகிலுள்ள வெடியரசன் கோட்டையிலும் காரைநகரில் கடற்கோட்டைக்கு அணித்தாகவுள்ள வேரப்பிட்டியிலும் பொன்னாலையில் சம்புத்துறைக்குப் பக்கத்திலுள்ள திசைமழுவையிலும் காணலாம். பழைய துறைகளை ஒட்டியுள்ள இந்த மூன்று இடங்களிலும் காணப்படும் பௌத்த சின்னங்கள், கடல்வணிகத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையில் அக்காலத்தில் இருந்த நெருங்கிய தொடர்பைக் காட்டுகின்றன.

இருப்பினும், இப்பகுதியின் கடல்வழித் தொடர்புகள் பௌத்த தடயங்களின் காலத்திற்கும் முந்தியவை என்பதை, காரைநகரின் உட்புறத்தில் களபூமியில் கிடைத்த பெருங்கற்காலத் தடயங்களும் ஊர்காவற்றுறை அமைந்துள்ள வேலணைத்தீவின் தென்கிழக்கில் சாட்டியிலும் கும்புறுப்பிட்டியிலும் கிடைத்த மட்கலத்தடயங்களும் தெளிவுபடுத்துகின்றன.

இரண்டாம் இராசாதிராசசோழனது திருவாலங்காட்டுக் கல்வெட்டு

இவன் தன் படைநிலையான ஊராத்துறை, புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம் , மட்டிவாழ் உள்ளிட்ட ஊர்களிலே படைகளும் புகுதவிட்டு படவுகளுஞ் செய்விக்கிறபடி கேட்டு இதுக்குப் பரிகாரமாக ஈழத்தான் மருமகனராய் ஈழ ராச்சியத்துக்குங் கடவராய் முன்பே போந்திருந்த சீவல்லவரை அழைப்பித்து இவர்க்கு வேண்டுவனஞ் செய்து இவரையும் இவருடனே வேண்டும் படைகளும் ஊராத்துறை வல்லிகாமம் மட்டிவாழ் உள்ளிட்ட ஊர்களிலே புகலிட்டுப் புலைச்சேரி மாதோட்டம் உள்ளிட்ட ஊர்களும், அழித்து ஈழத்தானினவாய் இவ்வூர்களில் நின்ற ஆனைகளுங் கொண்டு ஈழமண்டலத்தில் கீழ்மேல் இருபதின் காதமேற்படவுந் தென் வடல் முப்பதின்காதமேற்படவும் அழித்து இத்துறையில் இவன் மனிசராயிருந்தாரில் கொல்வாரையுங் கொன்று பிடிப்பாரையும் பிடித்து இவர்களையுஞ் சரக்காய்க் கைக்கொண்டனவும் பிடித்த ஆனைகளும் அழைப்பித்து இவன் தமக்குக் காட்டி ஈழமண்டலத்துக் காரியம் எல்லாப் படியாலும் இவன் (சோழத்தளபதியாகிய பழையனுருடையான வேதவன் முடையான் அம்மையப்பனான ‘அண்ணன் பல்லவராயன்) அழியச் செய்வித்த படிக்கும் (சதாசிவபண்டாரத்தார் பிற்காலச் சோழர் சரித்திரம்: 1967)

12ஆம் நூற்றாண்டில் ஊர்காவற்றுறையின் கேந்திர, வணிக முக்கியத்துவங்களை இரு தமிழ்க் கல்வெட்டுக்கள் அறியத்தருகின்றன. இரண்டாம் இராஜாதிராஜசோழனது (1163-1178) திருவாலங்காட்டுக் கல்வெட்டு, சோழர்களுக்கும் பராக்கிரமபாகுவிற்குமிடையில் நடைபெற்ற மோதலில் படைத்தளஙக்களுள் ஒன்றாக ஊராத்துறை இருந்ததை அறியத்தருகின்றது. தற்பொழுது நயினாதீவுக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள, முதலாம் பராக்கிரமபாகுவின் தமிழ் சமஸ்கிருதக் கல்வெட்டு, ஊர்காவற்றுறையில் பன்நாட்டு வணிகம் ஊக்குவிக்கப்பட்டதைத் தெரியப்படுத்துகின்றது. கடற்கோட்டைக்கு அணித்தாக, நீரோட்டங்கள் கலக்கும் அபாயகரமான ஏழாற்றுப் பிரிவில் அடிக்கடி மரக்கல விபத்துக்கள் நடந்ததையும் இக்கல்வெட்டைக் கொண்டு ஊகிக்க முடிகின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் சிதைந்த மரக்கலங்களில் வந்த பொருட்கள் எவ்வாறு பகிரப்பட்டன என்பதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. சர்வதேசக்கடல் சார் சட்டங்களின் (ஐவெநசயெவழையெட ஆயசவைiநெ டுயறள) தோற்றுவாய்க்குரிய எடுத்துக் காட்டுகளில் ஒன்றாக இது விளங்குகின்றது.

காரைநகரில், கடற்கோட்டைக்கு அணித்தாகவுள்ள இராசாந்தோட்டத்தில் யாழ்ப்பாண அரசர்களுக்குச் சொந்தமான இருப்பிடமொன்று இருந்திருக்கிறது. இதற்கும், முன்னர் குறிப்பிடப்பட்ட வேரப்பிட்டிக்கும் இடையில், வியாவில் என்ற இடத்தில், ஐயனார் கோயிலொன்று யாழ்ப்பாணத்து அரசர் ஒருவரால் போர்த்துக்கேயர் இறுதியாக யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்குச் சற்று முன்னதாகக் கட்டப்பட்டது. இக்கோயில், போர்த்துக்கேர் காலத்தில் இடிக்கப்படாவிட்டாலும் ஒல்லாந்தர் காலத்தில் இடிக்கப்பட்டு அக்கற்களைக் கொண்டு கடற்கோட்டை கட்டப்பட்டது. இவை, காரைநகர் சிவாச்சாரியார்களின் பரம்பரை ஏடுகள் அறியத்தரும் செய்திகள். (கணபதீஸ்வரக் குருக்கள் நினைவுமலர்:1967)

காரைநகர்ச் சிவாச்சாரியார்களின் பரம்பரை ஏடுகளில் இருந்து...

வியாவில் ஐயனார் கோவில் கும்பாபிஷேகஞ் செய்த தினம் கலியப்தம் நாலாயிரத்து ஏழு நூற்று மூன்று, சாலிவாகன சகாப்தம் ஆயிரத்தைஞ் நூற்றுப் பதினெட்டு, பிரபாவாதி வருஷம் முப்பத்தைந்தாவது பிலவ வருடம் வைகாசி மாசம் 25ந் திகதி நடைபெற்றது........ (மங்களேஸ்வரக் குருக்கள்)

நானுமெனது தமையனாரும் கோயிற் ப+சை செய்து வரும் காலத்தில் தமிழ் இராச்சியம் போய்விட்டது. முத்துமாணிக்கம் செட்டியாரும் இறந்துவிட்டார். போர்த்துக்கீசர் என்னும் பறங்கியர் கிறிஸ்து வருஷம் 1618 ம் ஆண்டு காலயுத்தி வருஷம் ஊர்காவற்றுறைக்கு வந்தார்கள். அநேக வைசசமயக் கோயில்களை இடித்துப் போராட்டார்கள். இங்கேயுள்ள ஐயனார் கோயிலை இடிக்க வந்து கோபுரவாசலிற் கதவைத் திறக்கப்போனார்கள். அவர்களின் வாயிலிருந்து இரத்தம் புறப்பட்டு இறந்துவிட்டார்கள் அந்தப் பயணத்தினால் மறுபடி கோயிலை இடிக்க வரவில்லை....

(---சூரியநாராயணக் குருக்கள்)

------ பின்னர் போர்த்துக்கீசராச்சியம் போய் ஒல்லாந்தராச்சியம், வந்தது. அவர்கள் கிறிஸ்து வருஷம் 1858 ஆம் ஆண்டு ஏவிளம்பி வருஷம் சித்திரை மாதம் ஊர்காவற்றுறையைப் பிடித்தனர். ஊர்காவற்றுறை பிடிபட்ட ஒரு மாசத்திற்குள் அநேக சைவசமயக் கோயில்களையும் இடித்துவிட்டு இந்த ஐயனார் கோவிலை யும் இடிக்க வந்தபோது நாலுபேர் கண் தெரியாதவர் களாயும், இரண்டு பேர் நடக்கமாட்டாதவர்களாயும் போனார்கள். இது நடந்து கொஞ்சக்காலத்தின் பின் எங்களைப் ப+சை செய்யாது தடுத்தனர். அவர்கள் போனபிற்பாடு விக்கிரகங்கள் எல்லாவற்றையும் நில அறையில் வைத்து இரகசியமாய்ப் ப+சை செய்து வரும்போது ஒரு நாள் வந்து கோவிலையும் இடித்து கடலுக்குள்ளே ஓர் கோட்டையையும் கட்டினார்கள்.. (கனகசபாபதிக் குருக்கள்)

(ஆன்ம தர்சநம், கணபதீசுவரக்குருக்கள் நினைவு மலர் 1967)

வரிசையாக ஆட்களை நிறுத்தி, கற்களைக் கைமாற்றித் தூக்கிச் சென்று, கடற்கோட்டையைப் ப+தத்தம்பி முதலியார் ஒல்லாந்தருக்காகக் கட்டிக் கொடுத்தார் என்பதும் அந்தச் செல்வாக்கால் வந்த பொறாமை அவரது வாழ்வுக்கு உலை வைத்த காரணங்களுள் ஒன்றென்பதும் நாட்டார் இலக்கியத்தில் இடம்பெற்ற விடயங்கள்.

அழிபாடுகளில் இருந்து எடுத்துவரப்பட்ட கற்கள் கடற்கோட்டையைக் கட்டப் பயன்பட்டிருக்கலாம் என்பதை, கோட்டைக்குள் காணப்படும் வேலைப் பாடமைந்த சில கற்களை வைத்து ஊகிக்கலாம். இவற்றுள் இரு கற்களில் சோழர்காலக் கல்வெட்டுக்கள் அறியப்பட்டுள்ளன. ஒன்று மாத்திரமே படிக்கப்பட்டுள்ளது. மற்றையதன் பெரும்பாகம் சாந்தினால் மூடப்பட்டுள்ளதால் முழுமையாகப் படிக்கப்படவில்லை. படிக்கப்பட்ட கல்வெட்டு முதலாம் இராஜேந்திரசோழன் காலத்தது. இலங்கையை வெற்றி கொண்ட சோழத் தளபதியின் பெயரை அறியத்தருகின்றது.

கடற்கோட்டைக் கல்வெட்டுக்கள்

முதலாவது கல்வெட்டு

ஸவஸ்திஸ்ரீ
ஈழமு(ழு)
(ங்)துவ்கொ
ண்டு ஈழ
த்தnசெர
யும் பெண்


டிர் பண்டார
மும் பிடிச்
சுக் கொடுபொ
ன அதிகார
த் தண்டநாச
கனார் ஐய


(ங்) கொண்டn (சொ)
(ழ) மூவேந்(த)
வெளார் மா
தொட்டமான
இராசராசபுர


ஸ்வ்திஸ்ரீ
ஈழமான மு
ம்முடி சொழ
மண்டல...
...ண...
குல....


இந்திரபாலா. கா:(யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள் 1969)

பாய்க்கப்பல் போய் நீராவிக்கப்பல் வந்த காலத்தில், பாக்குநீரிணையின் ஆழம் போதாததால் ஊர்காவற்றுறை பன்நாட்டு முக்கியத்துவத்தை இழந்தது. இருப்பினும், இந்தியாவின் கிழக்குக் கரையுடன் வணிகம் அண்மைக்காலம் வரை தொடர்ந்தது. யாழ்ப்பாணப் பரவைக்கடலின் சங்கு வங்காளம் வரை சென்றதையும், விசாகப்பட்டினத்து வடக்கன் மாடு இங்கு வந்ததையும் ஊர்காவற்றுறையில் இன்றும் காணப்படும் சங்குக் கழிவுக்குவியல்களாலும் இடிந்து போன கால்நடைத் தொற்று நோய்த்தடுப்புக் கட்டிடங்களாலும் அறிந்து கொள்ளலாம். ஊர்காவற்றுறையில் இறக்கப்பட்ட சரக்கு, மாட்டு வண்டித் தொடர்களில் அனுராதபுரம், கண்டிவரை சென்றதை எனது பாட்டனார் கூறக்கேட்டிருக்கின்றேன்.

காலனித்துவம் போய்த் தேசியங்கள் வந்த காலத்தில் ஊர்காவற்றுறையின் வணிகம் நின்று போனாலும் கேந்திர முக்கியத்துவம் போய்விடவில்லை வணிகத்தையும் கடற்பாதைகளையும் பராமரிக்கவும் பாதுகாக்கவும் தேவைப்பட்ட கேந்திர அமைவிடம் அவற்றைத் தடுக்கவும் தேவைப்பட்டது. வடபுலத்திற்கான இலங்கைக்கடற்படையின் தலைமையகம் கடற்கோட்டைக்கு மிகவும் அண்மித்த நிலப்பகுதியான காரைநகர், நீலங்காட்டில் அமைந்தது. இக்காரணத்தினாலேயே, 1971 ஆம் ஆண்டு து.ஏ.P. கிளர்ச்சியின் போது கைதான ரோகண விNஜிவீரவும் சகாக்களும் பாதுகாப்புக் கருதி கடற்கோட்டையிலேயே சிலகாலம் சிறைவைக்கப்பட்டனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

மிகப்பழங்காலந்தொட்டு மேற்கிற்கும் கிழக்கிற்குமான கடற்பாதை, மன்னார் வளைகுடா – பாக்குநீரிணைய+டாகச் சென்றது. அபாயகரமானது என்பதால் ஆழ்கடல் பாதைகள் ஆதிகாலத்தில் இயன்றளவு தவிர்க்கப்பட்டன. இலங்கையின் தென்கிழக்கு மூலையில் , காந்தப்பாறைகள் என அறியப்பட்ட புசநயவ டீயளநளஇ டுவைவடந டீயளநள காரணமாக இலங்கைப் பாதுகாப்பும் மன்னார் வளைகுடாவின் முத்தும் பாக்கு நீரிணையின் சங்கும் கிழக்கையும் மேற்கையும் இங்கு சந்திக்க வைத்தன.

இந்தியாவின் மேற்குக் கரையினரும் கிழக்குக் கரையினரும் பரஸ்பரம் வந்து போனதும் கிரேக்கரும் உரோமரும் வந்ததும் அரபுக்களும் சீனரும் வந்ததும் பின்னர் ஐரோப்பியர் வந்ததும் மன்னார் வளைகுடா பாக்குநீரிணைக் கடற்பாதைய+டாகவே பெரிதும் நடைபெற்றதை அதன் இருபுறக் கரைகளிலும் காணப்படும் எண்ணிறந்த தொல்லியற் தடங்களால் அறிந்து கொள்ளலாம்.

இராமர் அணை என்றும் ஆதாமின் பாலம் என்றும்அழைக்கப்படும் சேதுவை இவர்கள் மன்னார்த்தீவிற்கும் மாந்தைக்கும் இடையில் உள்ள கால்வாயால் அல்லது இராமேஸ்வரம் தீவுக்கும் இராமநாதபுரத்துக்கும் இடையில் உள்ள பாம்பன் கால்வாயால் கடந்தனர். பெரிய துறைமுகம் எனப்பொருள் தரும் மாதோட்டம் என்ற மாந்தையிலும் பாம்பன் கால்வாயின் பெருநிலப்பகுதியில் உள்ள அழகன் குளத்திலும் அறியப்பட்ட தொல்லியற் தடங்கள், அவை பல நூற்றாண்டுகளாக பல நாட்டினரும் வந்துபோன பெரும் நகரங்களாக விளங்கின என்பதைத் தெரியப்படுத்துகின்றன.

ஏறத்தாழ ஒல்லாந்தர்காலப் பிற்பகுதியில் மாந்தைக் கால்வாய் சேறடைந்து போக, பாம்பன் கால்வாய் மட்டும் தொடர்ந்து இயங்கியது. தமிழ்நாட்டுப் பாரம்பரிய வணிகர்களான செட்டியர்களின் தாயகம் எனப்படும் செட்டிநாடு, பாம்பன் கால்வாய்க்கு வடக்கிலும் மற்றொரு பாரம்பரிய வணிகர்களான முஸ்லீம்களின் பழைமை முக்கியத்துவம் வாய்ந்த நகரமான கீழக்கரை, பாம்பன் கால்வாய்க்குத் தெற்கிலும் அமைந்திருப்பது தற்செயலானவையன்று.

1860 இல் நீராவிக் கப்பல்கள் ஓடத் தொடங்கின. 1869 இல் சுயெஸ் கால்வாய் திறக்கப்பட்டது. கொழும்புத் துறைமுகமும் இலங்கையைச் சுற்றி செல்லும் கடற்பாதையும் தனி முக்கியத்துவம் பெற்றன. பாக்குநீரிணைப்பாதை அறவே கைவிடப்பட்டது. துறைமுகங்கள் செல்வாக்கிழந்தன. வணிகப்பெரு மக்கள் வேறிடங்களுக்குச் சென்றுவிட்டனர்.

மன்னார் வளைகுடா – பாக்குநீரிணையை மீண்டும் பன்நாட்டுக் கடற்பாதையாக்கும் சேதுசமுத்திரத்திட்டம் நூறாண்டுகளுக்கு மேலாகப் பேசப்பட்டு வருவதொன்று. சேதுசமுத்திரத் திட்டம் வந்தால், கொழும்பின் இழப்பைச் சரி செய்யவும் தூத்துக்குடியுடன் போட்டியிடவும் காங்கேசன்துறையை விரிவாக்கவென்று, அறுபதுகளின் பிற்பகுதியில், டட்லிசேனநாயக்கா வந்து காங்கேசன்துறை மருத்துவமனைப் பகுதியில் அத்திவாரமிட்டதைப் பார்த்து நினைவுக்கு வருகிறது. அத்திவாரக்கல் இப்பவும் இருக்கலாம்.

இப்பொழுது சேதுசமுத்திரத் திட்டம் மீண்டும் முனைப்பாகப் பேசப்படுகிறது. இந்தியா மட்டும், தன்னுடைய கடற்பகுதியில் செய்யப்போவதாக , பல்வேறு அபிவிருத்திக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் பாதுகாப்பு என்பதே முனைப்பான காரணம் என்பதில் ஐயமில்லை. இதில், தனக்குப் பங்கு என்ன என்பது இலங்கை அரசின் கவலை. இருவருக்கும் பொதுவான பாதையாக இருக்கலாம் என்றும் இலங்கை அரசின் நிலப்பாலத்திட்டத்தை இதனுடன் இணைக்கலாம் என்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல பன்நாட்டு நிறுவனங்களும் பங்கு கொள்ளக் காத்திருக்கின்றன. டெல்லியிலும் சென்னையிலும் கொழும்பிலும் இதைத் தீர்மானித்துவிடலாம் என்ற போக்கும் தெரிகின்றது.

எது எவ்வாறாயினும் சேதுசமுத்திரத் திட்டத்தால் வரப்போகும் கால்வாய் எங்கள் தீவகத்தின் புழைக்கடைய+டாகத்தான் போகப் போகின்றது. பாக்கு நீரிணையின் பாரம்பரியப் பங்காளிகள், அதன் இருபுறமும் வாழும் மக்கள், பாக்குநீரிணை இவர்களது பொருளாதார உரிமை மட்டுமல்ல, பண்பாட்டு உரிமையும் கூட, திட்டத்தில் இவர்களுக்குப் பங்கு என்ன என்பது தெளிவாகவில்லை. பாதிப்பு என்ன என்பதும் தெளிவாகவில்லை. சூழல், பொருளாதார, பண்பாட்டு விளைவுகள் மிகக் கவனமாக ஆராயப்பட வேண்டியவை. எங்களுக்கு இன்று அவசியம் தேவைப்படுவது இத்திட்டத்தின் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு.

இந்தியாவைச் சூழும் பேரபாயம் சீனா-பாக்-சிங்களர் கூட்டுச்சதி

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளைப் புதிய வேகத்துடன் தொடர்வதற்காக சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையுடன் கைகோர்த்து:க் கொண்டு களத்தில் இறங்கியுள்ளன.
இந்தியாவுடன் பலவகையிலும் பகைமை பாராட்டி வரும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் இணைந்து இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை சிங்கள அரசு பகிரங்கமாக முடுக்கி விட்டுள்ளது. சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் இராணுவ ரீதியான உதவிகளையும் சிங்கள அரசு பெற்று வருகிறது. இதற்குக் கைமாறாக அவை இலங்கையைத் தளமாகக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட சிங்கள அரசு ஒப்புதல் தந்துள்ளது.


பாகிஸ்தான்

இந்தியாவில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் தில்லியில் அமைக்கப்பட்டுள்ளன. சில நாடுகளுக்கு துணைத் தூதரகங்களை சென்னையில் அமைத்துக் கொள்ள இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அரசின் துணைத் தூதுவர் அலுவலகத்தை சென்னையில் நிறுவிக்கொள்ள இதுவரை இந்திய அரசு அனுமதி தரவில்லை. தென்னிந்தியாவின் முக்கிய நகரமாக விளங்கும் சென்னையில் பாகிஸ்தானின் துணைத் தூதுவர் அலுவலகம் இயங்க அனுமதித்தால் அதன் விளைவுகள் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பெரிதும் பாதிக்கும் என்ற காரணத்தினால் இந்த அனுமதி மறுக்கப்பட்டே வந்தது.

இந்தியாவின் வடக்கு எல்லையில் சீனாவும் மேற்கு எல்லையில் பாகிஸ்தானும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அறைகூவல்கள் விட்டுக்கொண்டிருக்கும் நிலையில் வடஇந்திய மாநிலங்களில் இந்திய பாதுகாப்புத் துறையின் தொழிற்சாலைகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதை இந்திய அரசு தவிர்த்தே வந்திருக்கிறது., ஆயுதத் தொழிற்சாலைகளும் முக்கிய பெரிய தொழிற்சாலைகளும் தென்னிந்தியாவிலேயே அமைக்கப் பெற்றுள்ளன. சென்னை ஆவடியில் டாங்கித் தொழிற்சாலை, திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை, உதகமண்டலத்தில் வெடிமருந்துத் தொழிற்சாலை, பெங்களூரில் விமான உற்பத்தித் தொழிற்சாலை போன்ற பல முக்கியமான தொழிற்சாலைகள் தென்னிந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, சென்னையில் பாகிஸ்தான் துணைத் தூதரகம் அமைக்கப்படுவதன் மூலம் இத்தொழிற்சாலைகள் குறித்த உளவறியும் பணியிலும் நாச வேலைப் பணிகளிலும் ஈடுபட பாகிஸ்தானுக்கு வசதியாக இருக்கும் என்பதால் இதுவரை சென்னையிலோ அல்லது தென்னிந்தியாவின் எந்த நகரத்திலோ பாகிஸ்தானின் துணைத் தூதரகம் அமைக்க இந்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால் தென்னிந்தியாவிற்கு மிக அருகில் உள்ள இலங்கையில் செயல்பட்டுவந்த பாகிஸ்தான் தூதரகத்தை தென்னிந்தியாவில் தனது நடவடிக்கைகளுக்குரிய தளமாக மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. எனவேதான் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் இயக்குநராக இருந்து ஓய்வுபெற்ற பசீட் வாலி முகமது என்பவரை இலங்கையில் தனது தூதுவராக பாகிஸ்தான் நியமித்தது. இலங்கையின் கிழக்கு மாநிலத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவாக இயங்கும் ஜிகாத் குழுவினருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கவும் ஆயுதங்கள் வழங்கவும் திட்டமிட்டு இவர் உதவினார். கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் இவருக்குத் தொடர்பு இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. சிங்கள அரசுக்கு இரண்டு கப்பல்கள் நிறைய ஆயுதங்களை பாகிஸ்தானில் இருந்து பெற்றுத் தந்தவர் இவரே. சிங்கள அரசுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மிக நெருக்கமான உறவை ஏற்படுத்தியவரும் இவர்தான். அண்மையில் கொழும்பில் இவருக்கு எதிராக நடந்த தாக்குதலில் எப்படியோ தப்பிப் பிழைத்தார். இந்திய 'ரா' உளவுத்துறைதான் தன்னைப் படுகொலை செய்ய முயன்றதாக இவர் குற்றம்சாட்டினார்.

இவர் பதவியில் இருந்து விலகிச்சென்ற பிறகு பாகிஸ்தான் விமானப் படையின் துணைத் தலைமைத் தளபதியாக இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற ஏர்வைஸ்' மார்சல் சேக் சட் அஸ்லம் சவுத்திரி என்பவரை இலங்கையின் தூதுவராக பாகிஸ்தான் நியமித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் நடைபெற்றுவரும் விடுதலைப் போரை ஒடுக்குவதில் பாகிஸ்தானிய விமானப்படையை இவர் தீவிரமாகப் பயன்படுத்தினார். சீனாவுடன் இணைந்து ஜே.எப்-17 என்னும் அதிரடித் தாக்குதல் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான உடன்பாட்டை நிறைவேற்றியவர் இவர். சீனா மற்றும் வடகொரியாவிடமிருந்து எம்.9, எம்-11 ஏவுகணைகளை ரகசியமாக கொள்முதல் செய்ததில் இவர் பங்கு முக்கியமானதாகும். இத்தனை திறமை வாய்ந்த ஒரு நபரை இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு தூதுவராக பாகிஸ்தான் அனுப்பி வைத்திருப்பது ஆழமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்தியாவின் முக்கியத் தொழில் மையங்களும் ஆயுதத் தொழிற்சாலைகளும் நிறைந்திருக்கும் தென் இந்தியாவை இலக்கு வைத்தே மிக உயர்நிலை அதிகாரிகளை இலங்கைக்கு தனது தூதுவராக பாகிஸ்தான் நியமித்து வருகிறது. தென் மாநிலங்களின் தலைநகரங்களாக விளங்கும், சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத் போன்றவற்றிலும் இம்மாநிலங்களைச் சேர்ந்த பிற முக்கிய நகரங்களிலும் மதரீதியான மோதல்களை ஏற்படுத்த நடைபெற்ற முயற்சிகள் வெற்றிபெறவில்லை. மும்பை நகரில் மத மோதல்களை உருவாக்குவதில் பாகிஸ்தான் வெற்றிப்பெற்றதைப் போல மேற்கண்ட நகரங்களில் ஏற்படுத்த முயன்று தோல்வியை பாகிஸ்தான் சந்தித்துள்ளது. ஆனால் கொழும்புவில் பாகிஸ்தான் புலனவாய்வுத் துறையால் பயிற்றுவிக்கப் பட்டவர்கள் இந்த நகரங்களில் எளிதில் ஊடுருவும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய ஊடுருவல்கள் இந்தியாவின் அரசியல் நிலைத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆனால் இந்திய அரசின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் இந்தியாவிற்கு எதிரான சதிச்செயல்களை ஊக்குவிக்கும் தளமாக கொழும்பு பயன்படுத்தப்படுவதையும் அதற்கு சிங்கள அரசு உறுதுணையாக இருந்து வருவதையும் இன்னமும் உணரவில்லை.


சீனா

1962ஆம் ஆண்டு இந்தியாவின் வட எல்லைப் பகுதியில் பெரும் படையெடுப்பை நடத்தி பெரும் பகுதியைக் கைப்பற்றியது சீனா. இதன் விளைவாக இருநாடுகளுக்கும் இடையே மூண்ட போர் என்பது உலக நாடுகளின் தலையீட்டால் நிறுத்தப்பட்டது. ஆனாலும் இந்தியாவுக்கு எப்போதும் அச்சுறுத்தல் தரும் வகையில் சீனப்படைகள் வடஎல்லையில் இன்னமும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவுடன் பகைமை உணர்வு கொண்டுள்ள பாகிஸ்தானை தனது நட்பு நாடாக சீனா தக்கவைத்துள்ளது. இமயமலைப் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு பாகிஸ்தானை சீனா பயன்படுத்துகிறது. இந்தியாவுக்கு எதிராக தனது முற்றுகை வலையை சீனா திட்டமிட்டு விரித்துள்ளது.

வங்க தேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தில் வலிமையான கடற்படைத் தளத்தை சீனா அமைத்துள்ளது.

இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பர்மாவிலும், சிங்கப்பூரிலும் கடற்படைத் தளங்களை சீனா அமைத்துள்ளது. இந்தியாவிற்குத் தெற்கே மாலத்தீவிலும் தனது ராணுவ நிலையை சீனா உறுதிசெய்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள கத்வார்த் துறைமுகத்தை பெரும் செலவில் உருவாக்கி அரபிக் கடல் பகுதியிலும் இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலை சீனா உருவாக்கியுள்ளது. இவ்வாறு இந்தியாவைச் சுற்றி தனது முற்றுகைத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

இப்போது இலங்கையிலும் சீனா காலூன்றியுள்ளது., இதற்கான முன்னேற்பாடுகள் ஜெயவர்த்தனா இலங்கையின் அதிபராக இருந்தபோது தொடங்கப்பட்டன. 1984ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜெயவர்த்தனா சீனாவுக்குச் சென்று அதன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சிங்களக் கடற்படையை வலிமையாக்குவதற்கு உதவிகோரினார். இதிலிருந்து தொடர்ந்து இலங்கை சீனா உறவு மிகநெருக்கமடைந்தது. இலங்கையில் சீனாவின் முதலீட்டு மதிப்பானது 2001 ஆம் ஆண்டில் 13 மில்லியன் அமெரிக்க மில்லிய டாலராக உயர்ந்தது. சேதுக்கால்வாய் திட்டத்தை இலங்கை எதிர்ப்புக்கிடையே இந்தியா தொடங்கிவிட்ட நிலையில் அதற்குப் போட்டியாக இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்தை சீரமைத்துக்கொடுக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

இப்போது தமிழகத்தின் எதிர்க் கரையில் மன்னார் வளைகுடாப் பகுதியில் சீனாவை இலங்கை இறக்கிவிட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்குப் பெரும் அறைகூவலாகும். காவிரிப் படுகைப் பகுதியில் எண்ணெய் வளம் உள்ளது. இந்த எண்ணெய் வளத்தில் 65 சதவீதம் தமிழ்நாட்டுப் பகுதியிலும் 35 சதவீதம் இலங்கையில் உள்ள மன்னார் பகுதியிலும் உள்ளது.

1956ஆம் ஆண்டில் காவிரிப்படுகையில் எண்ணெய் வளம் இருப்பதை சோவியத் நிபுணர்கள் உறுதி செய்தனர். 1960களின் தொடக்கத்தில் இலங்கை அரசும் மன்னார் பகுதியில் எண்ணெய் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது. இதன் விளைவாக 1980களின் நடுவில் அங்கு எண்ணெய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மன்னார் எண்ணெய்ப் படுகையானது மொத்தம் 6 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 2 பகுதிகளை சீனாவிற்கு சிங்கள அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் கடற்கரையில் இருந்து 20 மைல் தொலைவில் சீன நிபுணர்கள் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அத்துடன் உளவு வேலைகளிலும் அவர்கள் ஈடுபடும் சாத்தியம் உள்ளது.

இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்டுள்ள உடன்பாட்டின்படி மன்னார் வளைகுடாப் பகுதியில் உள்ள எண்ணெயை எடுக்கும் முயற்சியில் இருநாடுகளும் கூட்டாக ஈடுபடவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த உடன்பாட்டிற்கு எதிராக இப்போது சீனாவிற்கு எண்ணெய் எடுக்கும் உரிமையை சிங்கள அரசு வழங்கியிருப்பதின் மூலம் இந்தியாவின் தெற்கு எல்லை வாயிலில் சீனா நுழைவதற்கு இடமளித்திருக்கிறது.


யார் காரணம்?
இந்தியாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளில் சீனா தனது தளங்களை அமைப்பதற்கும் இலங்கையில் சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் ஊடுருவுவதற்கும் பொறுப்பு யார் என்பதை டெல்லியில் உள்ள அதிமேதாவிகள் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தியாவின் பிரதேசப் பாதுகாப்பு நலன்களுக்கு உள்பட்ட நாடுகளாக நேபாளம், பூடான், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளை இந்தியா கருதியது. இந்த நாடுகளும் தங்களின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கு எதிராக எதுவும் செய்வதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்துவந்தன.

இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது 'இந்துமாக் கடல்பகுதியில் எந்த அந்நிய வல்லரசின் தளம் அமைக்கப்பட்டாலும் அது இந்தியாவுக்கு எதிரான செயலாகக் கருதப்படும் அதை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது' என இந்திய நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகவே எச்சரித்தார். திரிகோணமலையில் இருந்த எண்ணெய் குதங்களை குத்தகைக்கு அமெரிக்காவுக்கு கொடுக்கும் பிரச்சினையிலும் 'வாய்ஸ் ஆப் அமெரிக்கா' வானொலி தளம் இலங்கையில் அமைவதற்கும் சிங்கள அரசு ஒப்புக்கொண்டபோதும் பிரதமர் இந்திரா அதில் தலையிட்டு சிங்கள அரசை எச்சரித்தார். இதன் விளைவாக சிங்கள அரசும் அமெரிக்காவும் பின்வாங்கின. இந்திரா காந்தியின் காலம் வரையில் இலங்கையில் ஊடுருவுவதற்கு அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் துணியவில்லை. இந்நாடுகளின் ராணுவ உதவிகளைப் பெற சிங்கள அரசும் துணியவில்லை. ஆனால் அவரின் மறைவுக்குப் பிறகு பிரதமராக ராஜிவ் காந்தி பொறுப்பேற்றபோது நிலைமை அடியோடு மாறியது. திறமையும் அனுபவமும் குறைந்தவர் ராஜீவ் காந்தி என்பதை உணர்ந்து கொண்ட சிங்கள அரசு இந்தியாவின் நலன்களுக்கு எதிராகத் துணிந்து செயல்படத் தொடங்கியது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்களாகவும் ராஜீவ் காந்தியின் ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் அவருக்குத் தவறான வழியைக் காட்டினார்கள். அவர்களின் ஆலோசனையின் பேரில் ஜெயவர்த்தன விரித்த வஞ்சக வலையில் ராஜிவ்காந்தி வீழ்ந்தார். ஜெயவர்த்தனாவுடன் அவர் செய்துகொண்ட உடன்பாட்டினை தமிழர்களும் ஏற்கவில்லை. சிங்களவர்களும் எதிர்த்தார்கள். ஜெயவர்த்தனாவுக்குப் பின் பதவியேற்ற பிரேமதாசாவின் காலத்தில் இந்தியப் படை உடனே வெறியேறவேண்டும் என்று வற்புறுத்தினார். தமிழர்களும் சிங்களர்களும் விரும்பாத நிலையில் இந்தியப் படை அவமானகரமாக வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இலங்கையில் அந்நிய நாடுகள் ஊடுருவுவதை பிரதமர் இந்திரா வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதுபோல ராஜிவ்காந்தியால் நிறுத்த முடியவில்லை. எல்லா வகையிலும் ராஜிவ் காந்தியின் வெளியுறவுக் கொள்கை படுதோல்வியடைந்தது. அவரது தவறான அணுகுமுறையின் விளைவாக ஈழத் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். அதைவிட அதிகமான அளவில் இந்தியாவின் பிராந்திய நலன்களும் மிகப்பெரிய இழப்புகளுக்கு ஆளாயின. இலங்கையில் இராசதந்திர ரீதியாக மட்டுமல்ல இராணுவரீதியாகவும் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் தங்கள் தடத்தைப் பதித்துள்ளன. இதன் விளைவாக இந்தியா தனது தென்வாயிலில் அபாயத்தை உருவாக்கிக்கொண்டுள்ளது.

ராஜிவ்காந்தியின் தோற்றுப்போன அணுகுமுறையையே இன்னமும் இந்திய அரசு கடைப்பிடித்துவருவது வெட்கக்கேடானது. இந்த வெளியுறவுக் கொள்கை என்பது இந்தியாவிற்கு எதிரான சக்திகளோடு கரம் கோர்த்துக் குளாவிக்கொண்டிருக்கக்கூடிய சிங்கள அரசுக்கு சாதகமாக இருக்கிறது என்பதுதான் வேதனைக்குரியதாகும். இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்றத் தளபதியான லெப். கர்னல் தாகூர் குல்துப் எஸ். உத்ரா என்பவர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ள வற்றை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

'சர்வதேச அளவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே முருகல் நிலை ஏற்படும்போது சிங்கள அரசு அமெரிக்காவின் பக்கம் சார்ந்து இருந்தால் இந்தப் பிரதேசம் முழுதும் பெரும் போர்க்களமாக மாறும். இந்தியாவுக்கு எதிராக டிக்கோகாசியாவில்- கொழும்பு, திரிகோணமலை, சிங்கப்பூர் தளங்களில் இருந்து அமெரிக்கா இயங்கும். இந்த நிலையில் சிங்கள அமெரிக்கக் கூட்டை எதிர்ப்பதில் இந்தியாவின் முக்கிய கூட்டாளிகளாக ஈழத்தமிழர்கள்தான் இருப்பார்கள்.

ஆசிய பிராந்திய அளவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முருகல் நிலை ஏற்படும் சி,ஙகள அரசு சீனாவின் பக்கம் நிற்கும். பாகிஸ்தானும் அந்த அணியில் இணைந்து இந்தியாவிற்கு எதிரான முக்கூட்டு உருவாகும். அப்போது இந்தியாவின் கடற்படையை அந்த அணி வீழ்த்தும் சாத்தியம் உள்ளது. அத்தகைய அணிக்கெதிராக மூன்றுக்கும் மேற்பட்ட களமுனைகளை இந்தியா உருவாக்கவேண்டியிருக்கிறது.,

பிரதேச அளவில் இலங்கையும் பாகிஸ்தானும் இணைந்து நிற்பது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே அத்தகைய சூழ்நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்களை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கையோடு சீனா இணையாமல் தடுக்க வேண்டுமானால் திரிகோணமலைத் துறைமுகத்தை ஈழத்தமிழர்களின் உதவியுடன் இந்தியா காப்பாற்ற வேண்டியிருக்கும்.' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு இலங்கையில் அந்நிய வல்லரசுகள் காலூன்றுவதற்கு வழிவகுத்துவிட்டது. இதன் விளைவாக இந்தியாவின் இறையாண்மைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் அதைச் சற்றும் உணராமல் சிங்கள அரசுக்கு இன்னமும் ஆயுத உதவிகளை இந்தியா செய்துகொண்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையை சிங்கள அரசுக்கு அவர்கள் விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்மொழிக்கு சம அந்தஸ்து; வெறும் அரசியல் கோரிக்கையா?


சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆங்கில நூல் ஒன்றை தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்த்து வெளியிடுகின்ற பணியை இலங்கையில் இயங்கி வருகின்ற அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஆற்றியிருந்தது. மொழிகளுக்கு சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைளில் ஒன்றாக அமைந்திருந்தது. உண்மையில் இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து என்கின்ற அரசியல் கோரிக்கையே 1956 இன் பின் இனப்பிரச்சினையை தூண்டுகின்ற ஒரு காரணியாய் இருந்து வந்துள்ளது என்பது மட்டுமன்றி ஆயுதப் போராட்டத்தின் மூலைக் கற்களில் ஒன்றாகவும் இருந்து வந்துள்ளது.

தமிழ்க் குழுக்களின் சம அந்தஸ்திற்கான போராட்டம் தொடங்கி அறுபது ஆண்டுகளின் பின்னரும், வன்முறை எமது இருப்பின் அடிப்படையை ஆட்டம் காணச் செய்து முப்பது ஆண்டுகளின் பின்னரும் நிலைமை பார தூரமாக மாற்றமடைந்துள்ளது எனக் கூற முடியாது. தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டமும் அரசியலமைப்பின் சம அந்தஸ்து ஏற்பாடுகளும், உதாரணமாக, கொழும்பின் புதிய போக்குவரத்து விதிகள் தொடர்பான அறிவித்தல்களை கூட தமிழில் பெற்றுத் தர இயலவில்லை. எனவே, இன்றும் கூட சம அந்தஸ்து என்பதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிக அக்கறை உள்ளது எனக் கூற முடியாது.

உள்ளூரில் இந்த கூறுணர்வு குறைவாகக் காணப்பட்டாலும் அது சர்வதேச யதார்த்தம் எனக் கூற முடியாது. குறிப்பாக நாட்டினுள் இயங்கி வருகின்ற சர்வதேச நிறுவனங்கள் இங்குள்ள இனக் குழுக்களை சமமாக நடத்துகின்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து என்பதை கொள்கை அளவில் மட்டுமன்றி செயற்பாட்டிலும் காட்டி வருகின்றன. இப்போக்கின் வெளிப்பாடே கடந்த வாரம் இடம்பெற்ற ஆங்கில நூலின் தமிழ், சிங்கள மொழிபெயர்ப்பு ஆகும்.

இரு மொழிகளிலும் நூல் வெளியிடப்பட்டமையினால் நூல்கள் பற்றியும் மொழி பெயர்ப்பு பற்றியும் உரையாற்றுவதற்காக தமிழ் ஆய்வாளர்கள் இருவரும். சிங்கள ஆய்வாளர்கள் இருவரும் அழைக்கப்பட்டிருந்தனர். அதேபோன்று தமிழ் ஆய்வாளர்கள் இருவரும் தமிழிலும், சிங்கள ஆய்வாளர்கள் சிங்களத்திலும் உரையாற்றும்படி அழைக்கப்பட்டிருந்தனர்.
அதேசமயம், எல்லா உரைகளும் சமாந்தரமாக ஆங்கிலம் உட்பட ஏனைய இரண்டு மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் யாவும் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. சிங்களத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்த முன்னணி சிங்கள ஆய்வாளர்கள் இருவரும் தமது பணியை செவ்வனே செய்து முடித்தனர்.

தமிழில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்த ஆய்வாளர்களில் ஒருவர் தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர் மட்டுமன்றி மொழிப்பற்றும் மிகுந்தவர் ஆகும். இரு மொழிக் குழுக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற தொனியில் அவர் பல சமயங்களில் எழுதியும் பேசியும் வந்துள்ளார். அவர் பேசத் தொடங்கினார் தமிழில். என்ன ஆச்சரியம் தயது செய்து எனக்கு ஆங்கிலத்தில் உரையாற்ற அனுமதியுங்கள் என்பதை மட்டுமே அவரால் தமிழில் சொல் முடிந்தது. மிகுதி உரை ஆங்கிலத்தில் முறையாக செய்து முடிக்கப்பட்டது. இங்குதான் தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து என்ற கோரிக்கைக்கும் தமிழர்களின் பொதுவான மனோபாவத்துக்கும் இடையிலான முரண்பட்ட உறவு வெளிப்படுகின்றது. அதன் காரணமாகவே இவ்விடயம் பற்றி, அதாவது சம அந்தஸ்துக் கோரிக்கைக்கும் மனோபாவத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றி சில விடயங்களை இப்பகுதியில் முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

மேலே கூறப்பட்ட உதாரணம் ஒரு விதிவிலக்கு அல்ல, இன்று அது பொதுவான ஒரு மனோபாவமாகவே மாறிவிட்டுள்ளது. இங்கு எமது நண்பர் தமிழ் மொழியில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தும் கூட, ஆங்கிலத்தில் உரையாற்றியமைக்குப் பல காரணிகள் இருந்திருக்கலாம். ஒன்று, இப்போது பொதுவாகவே பொது மேடைகளில் தமிழில் உரையாற்றுவதற்கான ஒரு தயக்கம் காணப்படுகின்றது. இது பல ஆண்டுகாலமாக நசுக்கப்பட்டமையின் காரணமாக ஏற்பட்ட தாழ்வுச் சிக்கலின் வெளிப்பாடாக இருந்திருக்கலாம். அல்லது எம்மை அறியாமலே எம்முள் தோற்றம் பெற்றுள்ள காலனித்துவ மனப்பான்மையின் வெளிப்பாடாக இருந்திருக்கலாம். இதன் பரிமாணம் என்னவெனில், தான் கூறுகின்ற கருத்தை புரிந்துக்கொள்வதில் `பெரும்பான்மையினர்' கஷ்டப்பட்டு விடக்கூடாது என்கின்ற கரிசனை ஆகும். இன்னொரு வகையில் கூறுவதாயின் பெரும்பான்மையினரைத் திருப்திப்படுத்தவதற்கான முயற்சி இதுவாகும்.

இன்றைய பொதுவான போக்கு என்னவெனில், பெரும்பாலான விடயங்கள் சிங்களத்தில் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதாகும். மேற்கூறப்பட்ட ஓரிரண்டு நிகழ்ச்சிகளிலேயே அல்லது சந்தர்ப்பங்களிலேயே தமிழில் கூறப்பட்டு சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படுகின்ற சாத்தியம் ஏற்படுகின்றது. இந்த உணர்வு அதாவது எப்பொழுதும் மொழிபெயர்த்துக் கூறப்படுகின்ற அனுபவம் எத்தகையது என்பதை பெரும்பான்மையினர் உணர்ந்து கொள்ள வேண்டிய அல்லது உணர்த்த வேண்டிய ஒரு தேவை உள்ளது. ஏனெனில், அரசில் இருந்து ஊற்றெடுக்கின்ற பாகுபாடான திட்டங்கள் சிலவாயினும் புரிந்துணர்வின்மையின் காரணமாக ஏற்படுபவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இன்று இலங்கையில் இன ரீதியான பிரச்சினை ஒன்று இல்லை என்று கூறுபவர்கள் பலர் அவ்விதமான நம்பிக்கையை உண்மையில் கொண்டுள்ளவர்களாகும். உண்மையில் அவ்விதமான பிரச்சினை ஒன்று உள்ளது என்பதை இத்தகையவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் ஒன்று உள்ளது. அவர்களது சுமையை குறைப்பதன் மூலம் இது அடையப்பட முடியாது.

தமிழில் பேச அழைக்கப்படுபவர்கள் ஆங்கிலத்தில் பேசுகின்ற போது, அடுத்த நிகழ்வில் தமிழுக்கு ஒரு பகுதி ஒதுக்கத் தேவையில்லை என்ற அபிப்பிராயம் தோன்றுமாயின் அது தீர்மானம் மேற்கொள்பவரின் தவறாக இருக்க முடியாது. அத்தகைய சந்தர்ப்பங்களில் தமிழுக்கு சம அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று எம்மவர்கள் கூச்சல் எழுப்பாமல் இருக்க மாட்டார்கள் என்பது நிச்சயமானது. அது இருக்கின்ற பிரச்சினையை தீவிரப்படுத்த உதவுமே அன்றி வேறில்லை.

மேற்கூறிய உதாரணத்தில் இருந்து தோற்றம் பெறுகின்ற முக்கியமான ஒரு கேள்வி என்னவெனில், நம்மவர்கள், சம அந்தஸ்து என்பதை உண்மையில் கோருகின்றார்களா அல்லது அது அரசியல் ரீதியாகக் கவர்ச்சிகரமானது அல்லது இலாபகரமானது என்பதனால் அதனை வலியுறுத்தி வருகிறார்களா என்பதாகும். சமத்துவக் கோரிக்கை என்பது அரசியல் ரீதியாக இலாபகரமானது என்பதன் காரணமாக முன்வைக்கப்படுமாக இருப்பின் இத்தகைய போக்கும் மனோபாவமும் கண்டிக்கத்தக்கவை அல்ல.

மாறாக இப்போக்கு தாழ்வுணர்ச்சியின் காரணமாகவோ அன்றி காலனிகத்துவ மனோபாவம் காரணமாகவோ ஏற்பட்டிருக்குமாயின் வருந்தத்தக்கது என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவில் நீக்ரோக்கள் அடிமைகளாக இருந்த காலத்தில் அவர்கள் கறுப்பர்கள் என அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட போது நான் கறுப்பன் , அதனால், "நான் பெருமைப்படுகிறேன்" என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அது அவர்களது சுய கௌரவத்தையும் மன வலுவையும் உறுதி செய்து கொள்ள உதவியிருந்தது. அத்தகைய ஒரு நிலை இங்கு காணப்படுகின்றது என்று கூற முடியாது. இங்கு நாம் தாழ்வுணர்ச்சியின் காரணமாக வேறு மொழிகளில் தஞ்சமடைகின்ற ஒரு போக்கே காணப்படுகின்றது. இது ஆங்கிலத்தின் அவசியத்தைக் குறைத்துக் கூறுவதற்கான ஒரு முயற்சி அல்ல. ஆங்கில புலமையும் தேர்ச்சியும் மிக அவசியமானவை. இன்று ஆங்கிலம் இன்றி வளர முடியாது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதவசியம். ஆயினும், பிரச்சினை தமிழுக்கு மாற்றீடாக ஆங்கிலத்தை பயன்படுத்த விளைகின்ற போதே ஏற்படுகின்றது.

இங்கு நாம் கூற முற்படுவது யாதெனில், எமது மனோபாவமும் செயற்பாடுகளும் அடிப்படையான விடயங்கள் தொடர்பில் தவறான சமிக்ஞைகளை அனுப்பிவிடக் கூடும். மேற்கூறிய உதாரணம் சிங்களமும் ஆங்கிலமும் போதுமானவை என்ற அபிப்பிராயத்தை தோற்றுவித்துவிடக்கூடும். உண்மையில் சிங்களமும், ஆங்கிலமும் மட்டும் போதுமானவையா அல்லது தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது. தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமாக இருப்பின் அது தொடர்பில் எம்மவர்களுக்கு நிச்சயமான ஒரு பொறுப்பு காணப்படுகின்றது.

தமிழுக்கு சம அந்தஸ்து வழங்கப்படாத போது கூச்சல் போடுவோம். ஆனால், அது வழங்கப்படுகின்ற போது பயன்படுத்திக்கொள்ள மாட்டோம் என்பது ஆக்கபூர்வமான ஒரு நிலைப்பாடாக இருக்க மாட்டாது. பொதுவாக இனப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதிலும் குறிப்பாக சம அந்தஸ்தை அடைந்து கொள்வதிலும் சிறுபான்மையினருக்கும் ஒரு பொறுப்புக் காணப்படுகின்றது. அவற்றை அடைந்து கொள்வதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட வேண்டிய கடமையும் காணப்படுகின்றது. வெறுமனே குற்றம் சாட்டுவது மட்டும் போதுமானதாக இருக்கப் போவதில்லை. நாம் எதுவும் செய்யப் போவதில்லை. பெரும்பான்மையினர் அது எதுவாக இருப்பினும் வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுமே கூட ஒருவகையில் காலனித்துவ மனோபாவமே.

கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் விடுத்த மஹிந்தவின் அழைப்பு செய்தியானது தமிழ் இன அழிப்பை மறைக்கும் பிரச்சாரமே!


தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தி, அவரது ஆதரவு பாரம்பரிய ஆங்கில நாளிதழில் மட்டுமின்றி மேலும் சில தமிழ் ஏடுகளிலும் இன்று வெளிவந்துள்ளது.


தாங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத்தான் போர் நடத்தி வருகிறோம், அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக அல்ல என்றும், விடுதலைப் புலிகள்தான் அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள் என்று‌ம் சிறிலங்கா அரசும், உண்மையை திட்டமிட்டு மறைக்கும் வல்லமை கொண்ட அதன் ஆதரவு ஊடகங்களும் தொடர்ந்து செய்துவரும் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்க்க இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பது மட்டுமின்றி, இப்படி ஒரு செய்தி (பிரச்சாரம்) மூலம் சிறிலங்கா இராணுவம் ஈழத் தமிழ் மண்ணில் நிகழ்த்தி வரும் இனப் படுகொலையை மறைக்கவும், அதற்குக் காரணம் விடுதலைப் புலிகள்தான் என்று திசை திருப்பவும் முயன்றுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் குரலை, பேட்டி கண்டு எழுத்தாக ஒளி, ஒலி பரப்பி ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஒரு தொடர் பிரச்சாரத்தை செய்துவரும் அந்த பாரம்பரிய ஆங்கில நாளிதழின் இன்றைய தலைப்புச் செய்தியை படிக்கும் எவரும், தமிழக முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கும் கடந்த திங்கட்கிழமை திடீரென்று இந்த அழைப்பை ராஜபக்ச விடுத்துள்ளார் என்றுதான் கருதுவார்கள். அப்படி ஒரு தலைப்பு. எப்பொழுது அவர் கூறினார் என்பதை மறைத்து செய்தி எழுதப்பட்டுள்ளது.

‘ஏசியன் டிரிபுயூனல்’ என்ற இணையத்தளத்திற்கு (இது அப்பட்டமான சிங்கள ஆதரவு இணையத்தளம் என்பதை அறிக) அதிபர் ராஜபக்ச அளித்துள்ள ஆங்கில பேட்டியில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

"I have already invited Tamil Nadu Chief Minister M.Karunanidhi to make an official visit to Sri Lanka and meet the Tamil people in Jaffna, as well as those in the East and in the Upcountry to see for himself how the Tamils in Sri Lanka are living with honor and dignity", Rajapaksa said hailing the DMK chief as a veteran Indian leader.

“யாழ்ப்பாணத்திலும், இலங்கையின் கிழக்குப் பகுதியிலும், மலையகப் பகுதியிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் எவ்வாறு கெளரவத்துடனும், கண்ணியத்துடனும் வாழ்கின்றனர் என்பதை நீங்களே அரசுப் பூர்வமாக இங்கு வருகை தந்து அவர்களைச் சந்தித்துத் தெரிந்துகொள்ளுங்கள் என்று நான் ஏற்கனவே தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்துள்ளனே” என்று ராஜபக்ச கூறினார் என்றுதான் அந்தப் பேட்டியில் கூறப்பட்டுள்ளது.

அதிபர் ராஜபக்ச, ‘ஏற்கனவே விடுத்த அழைப்பை’ ஏதோ புதிதாக விடுத்த அழைப்பு என்பதுபோல காட்டி ஒரு செய்தியை வெளியிட்டு அதன்மூலம் ஒரு பிரச்சாரத்தையும் செய்துள்ளார்கள்.

அந்த ‘புகழ்பெற்ற இணையத் தளத்திற்கு’ அளித்த பேட்டியை, ஒரு ‘அறிக்கை’ (A report posted in the Preisdents secretariat website) என்று பெரிதுபடுத்தி, சிறிலங்க அரசுடன் இணைந்து, ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை செய்துள்ளார்கள் இந்த உண்மையின் காவலர்கள்.

இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம்? ‘அப்பாவித் தமிழர்களை விடுதலைப் புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள்’ என்று அடிப்படையற்ற ஒரு சொத்தை வாதத்தை தமிழ்நாட்டு தமிழர்கள் எண்ணங்களில் ஆழ‌ப் பதிய வைக்க தங்களது செய்திகளையே பிரச்சாரமாக்கியுள்ளார்கள்.

இலங்கையில் கடும் போர் நடக்கும் முல்லைத் தீவுப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை பாதுகாப்பு வலயம் என்று கூறி, அவர்கள் தங்கியிருந்த பகுதி‌யி‌ன் ‌மீது‌ம், தற்காலிக மருத்துவமனையையும் குறிவைத்து தொடர்ந்து குண்டு வீசித் தாக்கி, 400க்கும் மேற்பட்டோரை அழித்ததை மறைக்க இந்த கேடய வாதத்தை செய்திகளாக வீசியுள்ளார்கள்.

தமிழக முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கைக்கு வந்து, போர் நடக்கும் இடங்களில் நாடோடிகள் போல பிள்ளை, குழந்தைகளை தூக்கிக் கொண்டு காடுகளில் பதுங்கி வாழும் மக்களிடம் உண்மை என்ன என்பதை அவர்களை நேரில் சந்தித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அதிபர் ராஜபக்சயின் விருப்பமாக இருந்தால், அதனை அதிகாரப்பூர்வமான வழிகளில் செய்திருக்கலாமே? அப்படிப்பட்ட அழைப்பை பேட்டியின் வாயிலாக, அதுவும் இப்படிபட்ட உலகப் பிரசித்துப் பெற்ற இணையத் தளத்திற்கு அளிக்கும் பேட்டியின் வாயிலாகவா அழைப்பை விடுப்பார்கள்?

ஒரு வாரத்திற்கு முன்னர் அயலுறவுச் செயலர் சி‌வ்சங்கர் மேனன் அங்கு சென்றாரே? கண்டிக்குச் சென்று ராஜபக்சயை சந்தித்தாரே. அப்பொழுது அவரிடம் இந்த அழைப்பை விடுத்திருந்தால், தமிழக சட்டப் பேரவையில் ‘அய்யகோ’ என்று தீர்மானம் போடாமல் தவிர்த்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை.

ஆனால் ராஜபக்சயின் பேட்டியை வெளியிட்ட இணையத்தளம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது:

In a smart diplomatic initiative, President Mahinda Rajapaksa Sunday invited 'veteran' Indian leader Karunanidhi, also his arch rival Jayalalithaa Jayaram of AIADMK to visit Jaffna and Vanni and personally appeal to LTTE to release the Tamilians held as human shield at gun point.

‘மிக அறிவார்ந்த ராஜதந்திர நடவடிக்கையாக’ (In a smart Diplomatic initiative) என்று கூறித்தான் பேட்டியைப் பற்றிய விவரிப்பை ஆரம்பிக்கின்றார் அதன் இதழியலாளர்.

முதலமைச்சர் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் அழைப்பு விடுத்துள்ளது ‘போல’ ஒரு உருவகத்தை ஏற்படுத்தும் முயற்சி என்பது இந்த வார்த்தைகளே புலப்படுத்தவில்லையா? பத்திரிக்கையை படிப்பவர்கள் அந்த இணையத்திற்குச் சென்று படிக்கவா போகிறார்கள் என்ற அறிவார்ந்த நம்பிக்கையுடன் செய்யப்பட்டுள்ள செய்திப் பிரச்சாரம் இது.

இன்று நேற்றல்ல, கடந்த அக்டோபர் மாதம் முதல் போரை நிறுத்தக் கோரி தமிழ்நாட்டில் எழுந்த குரலோடு, எழுந்து ஒரு முக்கிய கோரிக்கை, அங்கு (ஈழத்தில்) என்னதான் நடக்கிறது என்பதை அறிய அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்பதே. அவர்கள் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை சந்திக்கட்டும், உண்மையை அறியட்டும் என்றுதான் தமிழகத் தலைவர்கள் கோரி வருகிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ், இலங்கை செல்லும் அயலுறவு செயலருடன் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று குரல் கொடுத்தாரே? மத்திய அரசு அதற்கெல்லாம் செவி சாய்க்கவில்லையே?

உண்மையறிய தமிழ்நாடு தயாராகவே உள்ளது. ஆனால் சிங்கள இனவாத அரசு தயாராக இல்லை. அதனால்தான் இப்படிப்பட்ட ‘எளிமையான’ பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது.

குழந்தைகளும், பள்ளிச் சிறார்களும் நாளைய புலிகள் என்ற பார்வையே சிறிலங்கா அரசிற்கும், அதன் முப்படையினருக்கும் உள்ளது என்பதை அறியாமல் இங்கு யாரும் ஈழப் பிரச்சனையை பேசிக்கொண்டிருக்கவில்லை என்பதை சிங்கள சிறிலங்கா அரசும், அதன் துதிபாடிகளும் உணர வேண்டும்.

கிழக்கில் உள்ள தமிழர்கள், மேற்கில் உள்ள தமிழர்கள், தெற்கில் வாழும் தமிழர்கள், சிறிலங்கா இராணுவத்தின் கொலை வெறித் தாண்டவத்திற்கு பயந்து நாட்டை விட்டு கடல் கடந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த தமிழர்கள் என்று எல்லோருடனு‌ம் பேசி அறிந்துதான் இங்கு அரசியல் நடைபெறுகிறது, அவர்களின் இன விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவு பெருகுகிறது.

சிறிலங்கா அரசின் இன வெறி நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி கட்டுரை தீட்டிய சிங்கள இன பத்திரிக்கையாளர்களைக் கொன்று குவிக்கும், கடத்திக் காணடிக்கும் ராஜபக்ச சகோதரர்களின் இன வெறியாட்டத்தைக் கண்டு கொள்ளாமல், அதற்கு எதிர்ப்பு காட்டாமல், அந்த ஆட்சி கொடுக்கும் விருதை பெற்றுக்கொண்டு புளகாங்கிதம் அடையும் ‘பத்திரிக்கை தருமிகள்’ நடத்தும் இப்படிப்பட்ட திட்டமிட்ட பிரச்சாரம் தமிழனத்தை திசை திருப்பும் என்று எதிர்பார்ப்பது அறியாமையே.

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: (தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமரன் அளித்த இறுதி மடல்)




தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...

இலங்கையின் தேசிய செல்வத்தை பங்கிட மறுக்கும் சிங்கள தேசம்


உலகின் வரையறுக்கப்பட்ட வளங்களுக்காக மனிதர்கள் போட்டியிடுகின்றார்கள். இந்தப் போட்டி அரசியல் முரண்பாடுகளுக்கும் பெரும் போர்களுக்கும் காரணமாகிறது. மனித குலத்தின் அனைத்து முரண்பாடுகளும் சண்டைகளும் வரையறுக்கப்பட்ட வளங்களுக்கான இந்த போட்டாபோட்டியிலிருந்தே தோன்றுகின்றன என சிலர் கூறுவர். இலங்கை இனப்பிரச்சினையையும் நாம் இந்த அடிப்படையில் நோக்கலாம்.
கடந்த வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினுடைய முதலாவது வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் தமிழருக்கு எந்த நன்மையுமில்லையென சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியுள்ளனர். வரவு செலவுத்திட்டம் என்பது உண்மையில் என்ன? ஒரு நாட்டின் திரட்டிய தேசிய செல்வத்தை எதற்கு எவ்வாறு செலவிடுவது எனத் தீர்மானிப்பதே வரவு செலவுத்திட்டம் எனப்படுகிறது.

இந்த அடிப்படையில் பார்த்தால் இலங்கைத் தீவின் அனைத்து மக்களிடமிருந்தும் வரியாகவும் தீர்வைகளாகவும் இன்ன பிற வழிகளிலும் திரட்டப்படும் தேசிய செல்வத்தை எவ்வாறு செலவு செய்வது எதற்கு ஒதுக்கீடு செய்வது என்ற ஏகபோக உரிமை சிறிலங்கா அரசியல் யாப்பின் 148ஆவது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. யார்தான் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கப்போவது சிங்கள அரசியலாளரே.


இதன் அர்த்தம் என்ன? சிங்கள மக்களுடைய மேம்பாட்டை நோக்கியே இலங்கையின் திரட்டிய தேசிய செல்வத்தை அவர்கள் செலவிட முனைவர் என்பதே யதார்த்தம். இலங்கையின் தேசிய செல்வம் என்பது தமிழராலும் உருவாக்கப்படுவதாகும். ஆனால் அதை எவ்வாறு தமது சமூக நன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் செலவிடுவதென்ற உரிமை அவர்களுக்கில்லை. இலங்கைத் தீவிலிருந்து பிரித்தானியர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டுவரும் பல சிக்கல்களுக்கு இதுவே காரணமாகும்.

தமிழ் சிங்கள மேட்டுக்குடிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பார்கள். அவர்கள் இனபேதமின்றி இலங்கையின் தேசிய செல்வத்தை கையாள்வர் என இலங்கைக்கு ஒற்றையாட்சியை வழங்கிச் சென்றபோது பிரித்தானியர் எதிர்பார்த்தனர். அந்நேரத்தில் சில தமிழ்த் தலைவர்களும் இதே கருத்தைக் கொண்டிருந்தமையால் தேசியசெல்வத்தின் மீது நாடாளுமன்றத்திற்கிருந்த ஏகபோகத்தை, தனியுரிமையை எதிர்க்கத் தவறிவிட்டார்கள். சிங்களப் பெரும்பான்மை நாட்டில் அதன் நாடாளுமன்றத்தை சிங்கள அரசியலாளரே கட்டுப்படுத்துவார்கள் எனவும் அதனால் இலங்கையின் தேசிய செல்வமும் அவர்களின் தனியுரிமையாகிவிடும் எனவும் சில தமிழ் அரசியலாளரும் அறிஞர்களும் அன்று எழுப்பிய குரல் எடுபடாமல் போயிற்று.

அது மட்டுமன்றி ஒரு நாட்டின் தேசிய செல்வத்தின் மீதான ஏகபோக உரிமையை அனுபவிப்பவர்கள் தமது ஏனைய அரசியல் ஏகபோகங்களையும் இலகுவில் விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்பது உலக அரசியல் வரலாறு தரும் பாடமாகும். அதாவது இலங்கையின் திரட்டிய தேசிய செல்வத்தை விகிதாசாரப்படி தமிழருக்குப் பங்கிட்டுக் கொடுப்பதற்கும் அதையவர்கள் எவ்வாறு செலவிடுவது என்பதற்கான அரசியல் நிருவாக ஒழுங்கை ஏற்படுத்துவதற்கும் பிரித்தானியர் ஆவனசெய்திருந்தால் இன முரண்பாடு இந்தளவிற்கு வளர்ந்திருக்காது எனச் சிலர் கூறுவர். பழையதைப் பேசிப் பயனில்லை.

இந்தவகையில் தமிழருக்கேற்பட்ட பெரும்பாலான இன்னல்களையும் அவர்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளையும் இலங்கையின் வளங்கள் மீது சிங்கள தேசம் கொண்டுள்ள ஏகபோக உரிமையின் அடிப்படையில் விளங்கிக் கொள்ள முடியும். இலங்கையின் தேசிய செல்வத்தின் பெரும்பகுதி சிங்கள தேசத்தை விருத்திசெய்யச் செலவிடப்பட்டதாலும் தமிழ், முஸ்லிம் மக்களினுடைய பல வாழ்வாதாரப் பிரதேசங்கள் சிங்கள மக்களின் ஏற்றம் கருதி உருவாக்கப்பட்ட பெருநீர்ப்பாசனத் திட்டங்களால் கையகப்படுத்தப்பட்டதாலும் தமிழர் தாயகத்திற்குள்ளேயே போட்டிகளும் பிரதேச முரண்பாடுகளும் ஏற்படலாயின.

அதாவது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இலங்கையின் திரட்டிய தேசிய செல்வம் ஆயிரம் ரூபா என வைத்துக்கொள்வோம். அதில் தமிழருக்குச் சேரவேண்டியது குறைந்தபட்சம் நூற்றியிருபது ரூபாயாகும். ஆனால் இந்த நூற்றியிருபது ரூபாயில் பெரும் பகுதி நாடாளுமன்றத்திற்கூடாக சிங்கள மக்களின் நன்மைக்கு செலவிடப்படுமாயின் தமிழ் மக்களிடையே எஞ்சுகின்ற ஒருசில ரூபாய்களுக்கான போட்டியும் முரண்பாடும் அதிகரிக்கும். இவ்வாறு வரையறுக்கப்படும் வளங்கள் காரணமாக தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் முரண்பாடேற்படுவதும் தவிர்க்க முடியாததாகின்றது.

வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களில் கணிசமான சிங்களவர்கள் இருக்கின்ற அம்பாறை, திருமலை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு சிறிலங்கா அரசு கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. இதைத்தான் யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு சிறிலங்கா அரசு ஒரு சதமேனும் தரவில்லையென யாழ் அரச அதிபர் ஒருமுறை குறிப்பிட்டார். வட கிழக்கின் பெரும்பான்மையான மாவட்டங்களிலுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை போன்றவையும் சிறிலங்கா அரசின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளில் எதுவும் பெறாமல் அலுவலகங்களை மட்டும் பெயருக்கு நீண்டகாலம் பேணிவந்தன.

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் தொடங்குவதற்கான நிதியொதுக்கீடுகளோ கடன்களோ வட கிழக்கில் மூன்று வருட அமைதிக்குப் பின்னர்கூட கொடுக்கப்படுவதில்லை. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பெருங்கைத்தொழில்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றின் ஒட்டுமொத்த விளைவாக தமிழர் தாயகத்தில் இன்று வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகிச் செல்கின்றன. இவற்றை தமிழ் அரசியலாளர் கேள்வி கேட்காமலிருப்பதற்கு பரவலாக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடு என்ற பெயரில் ஆளுக்கு ஐம்பது லட்சம் என்று சிறு எலும்புத் துண்டுகள் போடப்படுகின்றன.

அதையெப்படி கோயில்களுக்கும் விளையாட்டுக் கழகங்களுக்கும் வழங்கி தமது அரசியல் ஆதரவுகளைத் தக்கவைத்துக் கொள்வது என்பதிலேயே நமது தமிழ் அரசியலாளர் கவனங்கொண்டு திரிவர். ஆனால் உண்மை என்ன?. இலங்கையிலேயே வங்கிகளில் அதிக பணத்தைச் சேமிப்பவர்கள் தமிழர்கள். மிகவும் நெருக்கடியான போர்க்காலத்திலேயே இவர்களுடைய சேமிப்பு எப்படி கணிசமாக இருந்தது என தேசிய சேமிப்பு வங்கிப் பணிப்பாளரே ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.

வங்கிச் சேமிப்புகளே தென்னிலங்கையில் பெருங் கைத்தொழில்கள் தொடங்குவதற்கும் அபிவிருத்திகள் செய்வதற்கும் பல்வேறு வகைக் கடன்களாக வழங்கப்படுகின்றன. வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை ஈடுசெய்வதற்கும் சிறிலங்கா அரசு இந்தச் சேமிப்புக்களை நம்பியே வங்கிகளிடம் கடன்வாங்குகின்றது. இந்தவகையில் தமிழரின் சேமிப்புகளும் அவர்களிடமிருந்து அறவிடப்பட்ட பல்வேறு வரிகளும் அவர்கள் மீதே போர்தொடுக்க பயன்படுத்தப்பட்டன என்ற உண்மையை நாங்கள் கவனிக்க வேண்டும். சிங்கள மேலாண்மையாளரால் நாம் எந்தளவிற்கு முட்டாளாக்கப்பட்டோம், இன்னும் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்க இன்று பலருக்கு நேரமில்லை.

56 ஆண்டுகளாக இலங்கையின் தேசிய செல்வத்தின் மீது சிங்கள தேசம் கொண்டிருந்த ஏகபோக உரிமையின் காரணமாக ஏற்பட்ட அழிவுகளையும் தீமைகளையும் கருத்தில் கொண்டுதான் தமிழர் தாயகத்தின் புனரமைப்பு, மீள் கட்டுமானம் என்பவற்றைச் செய்வதற்கு ஒரு தனிக் கட்டமைப்பினையும் அதற்கான நிதியையும் புலிகள் கோரினர். அதாவது இலங்கையின் தேசிய செல்வத்தில் தமிழருக்கு நியாயமாக உரிய பங்கில் ஒரு பகுதியைத் தானும் எவ்வாறு செலவிடுவதென தமிழரே தீர்மானிப்பதற்கான ஒரு கட்டமைப்பைப் பற்றியே புலிகள் பேசினர்.

ஆனால் இது சிறிலங்கா அரசியல் யாப்பின் 148ஆவது பிரிவின் கீழ் இலங்கையின் தேசிய செல்வத்தின் மீது நாடாளுமன்றத்திற்குள்ள ஏகபோக உரிமைக்கு முரணானதால் சட்டவிரோதமானதென சிங்கள அரசியலாளர் தட்டிக்கழித்து விட்டனர். அதாவது தமிழ் மக்கள் உருவாக்கும் செல்வத்தை எவ்வாறு, எதற்கு பயன்படுத்துவதென்ற தனியுரிமையை சிறு துளிகூட விட்டுக்கொடுக்க சிங்கள மேலாண்மையாளர் தயாரில்லை என்பதையே இது மீண்டும் நிறுவியது.

வரதராஜபெருமாள் மாகாணசபை மூலமாக செயற்பட முற்பட்டபோது அதற்கும் இது போன்றதொரு தடையைப் போட்டனர் சிங்கள மேலாண்மையாளர். மாகாண சபைகளுக்கு திரட்டிய தேசிய செல்வத்தின் ஒரு பங்கைக் கொடுப்பதற்கு நிதி ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென 13ஆவது திருத்தச்சட்டத்தில் கூறப்பட்டது. இந்த ஆணைக் குழுவை நடைமுறைப்படுத்தி அதன் மூலம் தேசிய செல்வத்தில் தமிழருக்குரிய ஒரு பங்கையாவது சிங்கள தேசத்திடமிருந்து பெற்றுவிடலாமென எதிர்பார்த்தார் பெருமாள். கடைசிவரை முடியவில்லை. எனவே தமிழீழந்தான் ஒரே வழியெனப் பிரகடனப்படுத்தி அவர் இந்தியாவிற்கு ஓடிவிட்டார்.

மாகாணசபைகள் இயங்கத் தொடங்கி பதினாறு வருடங்களாகியும் இன்று வரை இந்த நிதி ஆணைக்குழு பற்றிய பேச்சையே எடுக்காமலிருக்கிறார்கள் சிங்கள மேலாண்மையாளர். ஒழுங்கான மாநில சுயாட்சியென்பது ஒரு நாட்டின் தேசிய செல்வத்தை நீதியான முறையில் பங்கிடுவதற்கான அரசியல் நிருவாகக் கட்டமைப்பைக் கொண்டதாகும்.

உள்நாட்டுப் போர் நடைபெற்ற, பெற்றுவரும் பலநாடுகளில் தேசிய செல்வத்தையும் வளங்களையும் எவ்வாறு பங்கிடுவதென்பது ஒரு மிக முக்கியமான அம்சமாகக் காணப்படுகின்றது. சூடானில் 1983ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போரை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு கடந்த பல ஆண்டுகளாக நடந்துவந்த பேச்சுக்களில் அந்நாட்டின் எண்ணெய் மற்றும் அரபிப் பசை என்பவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயை எவ்வாறு சமனாகப் பங்கிடுவது என்ற விடயம் மிக அடிப்படையாயிருந்தது.

எண்ணெய் வளம் நிரம்பிய நைஜீரியா நாட்டில் பல இனங்கள் காணப்படுகின்றன. 1960, 1963 இல் இந்த இனங்கள் இணைந்து உருவாக்கிய சமஷ்டி அரசியல் யாப்பில் நைஜீரியாவின் தேசிய செல்வத்தை எவ்வாறு நீதியாகப் பங்கிடுவதென்பது மிக முக்கியமான அம்சமாக வரையப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தின் ஒரு மிக முக்கிய இயற்கை வளமான இல்மனைட் மண்ணை விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்தது சிங்கள தேசம். அதிலொரு சிறுபங்கைக் கேட்டாலும் சட்டப் புத்தகத்தைக் காட்டுகிறார்கள்.

இந்தியாவின் தேசிய செல்வத்தை அதன் மாநிலங்களுக்கு உரிய முறையில் பங்கிட்டுக்கொடுப்பதற்கென அந்நாட்டின் அரசியல் யாப்பின் கீழ் நிதி ஆணைக்குழு ஒன்று இயங்குகிறது. நீண்ட காலமாக இந்தியாவின் தேசிய செல்வத்தை இந்தி மொழி பேசும் வட மாநிலங்களே ஆண்டனுபவிக்கின்றன என தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் குறைபட்டு வந்தன. இந்தியாவில் முழுமையான சமஷ்டியாட்சி முறை இல்லாமையே இதற்குக் காரணமாகும். எனினும் தேசிய செல்வத்தை நீதியான முறையில் பிரித்திட வேண்டுமென்பது கொள்கையளவிலாவது அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் இது பற்றிய பேச்சையெடுக்கவே மறுக்கிறது சிங்கள தேசம். இத் தீவின் அனைத்து பாகங்களிலுமுள்ள வளங்கள் மீதும் அங்கு உருவாக்கப்படும் செல்வத்தின் மீதும் தனக்கே ஏகபோக உரிமையுண்டு என்பதில் சிங்கள தேசம் மிகமிக உறுதியாகவுள்ளது. இதை மாற்றலாமென்று யாரும் கனவு காண வேண்டாம்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு

வலிகளிலிருந்து வலிமை பெறுவோம்



யூத மக்கள் மீதான இனப்படுகொலையை இந்த உலகம் தெரிந்து வைத்திருக்கிறது. வருடா வருடம் தவறாமல் நினைவு கூரவும் வேறு செய்கிறது. ஆனாலும், உலகெங்கும் தலைதூக்கும்இனக்குரோத உணர்வுகளையும், அதற்குத் தூபமிட்டு கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலைகளையும், புதிய புதிய ஹிட்லர்களையும இனங்கண்டு மனிதாபிமான முன்னெடுப்புக்களைச் செய்வதற்கான பொறுப்புணர்ச்சியோ அன்றி நாகரிக முதிர்ச்சியோ இன்னும் தான் சர்வதேசத்திற்கும் அதன் பல்வேறு பெயர் சூட்டல்களுடன் கூடிய நிறுவனங்களுக்கும் கிட்டிவிடவில்லை என்பதை ஒவ்வோர் ஈழத்தமிழனாலும் அதிகமாகவே உணரமுடிகிறது.

"பயங்கரவாத" த்தைப் போலவே விருப்பிற்கேற்ப ஒவ்வொருவரும் அர்த்தம் கற்பிக்கும் "சனநாயக" மான இவ்வுலகிலே இறைமையின் பேரால் மேற்கொள்ளப்படும் கொடுமைகள்யாவும் அங்கீகாரம் பெறுவது வேதனைக்குரியது. இப்படியான சூழலிலே தமது இருப்புக்களை கௌரவமாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக்கை மட்டுமே கொண்ட பல்தரப்பு பிரமுகர்களினதும் கண்டனம் அல்லாத கவலைகள் மற்றும் அக்களை போன்ற அனுதாப அறிக்கைகளால் அல்லலுறும் மக்களுக்கு ஆவது ஏதுமில்லை.

இவ்வாறிருக்க ஈழத்தமிழ் இனத்திற்கு வேறெந்த தீர்வு அல்லது தெரிவு எஞ்சியுள்ளது என்ற கேள்வி முக்கியம் பெறுகின்றது. இப்போது நம் தாயகம் எதிர்கொள்ளும் நிலைமையின் தீவிரமும் நெருக்கடியும் தமிழர் பலம் பலவீனமாகி விட்டதான கேள்வியை ஒரு சிலர் மத்தியில் எழுப்பக்கூடும். அவ்வாறு ஒரு சிலரிடையே எழும் எண்ணமானது தமிழினத்தின் எதிர்காலத்தை இல்லாமற்செய்ய விளையும் சிங்களப் பேரினவாதத்தின் விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் விதத்தில், சிலரால் விவாதிக்கப்படுவது குறித்து நாம் விழிப்பாயிருக்கவேண்டும்.


"இன்றிரவுதான் உனக்குக் கடைசி இரவு: நாளை என்பது உனக்கு இல்லவே இல்லை!"
என்று யாராவது நமக்குச் சொல்ல, அதையே நாமும் நம்பி எங்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதற்கான எமது ஆற்றலைக் கைவிடலாமோ?

'யுத்தங்களின் வெற்றிகள் களங்களில் தீர்மானிக்கப்படுவதில்லை மாறாக அதில் ஈடுபட்டுள்ளவர்களின் மனங்களிலேயே தீர்மானிக்கப்படுகிறது' என்கிறது. நீண்டகாலமாகவே தன்னை நிலைநிறுத்தி வரும் முதுமொழி ஒன்று.

ஆகவே நாளை மீதான நம்பிக்கையை மறுதலிக்கும் நச்சுக்கருத்துக்களை இனங்கண்டுடனே புறந்தள்ளவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.அதேவேளை தமிழர் பலர் இன்று பலவீனப்பட்டுள்ளது என்பது உண்மையல்ல! மாறாகச் சிங்களப் பேரினவாதம் மூன்றாமுலக நாடொன்றிற்கு முற்றிலும் பாதகமான விரலை மீறிய வீக்கத்துடன் தனது ஏனைய சகல ஒதுக்கீடுகளையும் வலுவாகவே மட்டுப்படுத்திக்கொண்டு, நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியாத விலையேற்றங்களின் துணையுடன் பற்களைக் கடித்துக்கொண்டு தனது முழுப்பலத்தையும் ஓரிடத்தில் குவித்து முக்கிக் கொண்டிருக்கிறது.
தனது தரப்பு இழப்புகளை வெளிவிடாத ரம்புக்வெல கூட கடந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் 3000 படையினர் (நாளொன்றுக்கு 33 படையினர்) கொல்லப்பட்டு 12,000 பேர்வரை காயமடைந்ததாக (அங்கவீனர்களாக) தெரிவித்துள்ளார்.

ஆக மூன்று மாதங்களில் 1500 0 படையினரை இழக்கும் இந்நிலையை சிறிலங்காவின் படைத்தரப்பால் தொடர்ந்தும் ஈடுசெய்து கொள்வது சாத்தியமானதா என்பதைத் தெளிவாகவே நம்மால் உணரமுடியும். அதேவேளை இப்படியானதொரு தீவிர விலைகொடுபப்ற்கு அது தயாராக உள்ளதற்கு வலுவான காரணம் இருக்கவே செய்கிறது.

ஒரு பெரும்பான்மை இனத்தின் அரச கட்டுமானத்துடன் கூடிய தனது படைகளுக்கு ஏற்படும் இழப்புக்களும் நெருக்கடிகளும் அதற்குக் காரணமான விடுதலைப்புலிகளுக்கும் ஏதோ ஒரு விகித அளவிலாவது ஏற்படத்தானே வேண்டும். ஆகவே தனக்கு இரண்டு கண்கள் போனாலும் போகட்டும்: புலிகளுக்கு ஒரு கண் ஆவதுபோகட்டும் என்ற கணிப்பிலே தன்னால் முடிந்ததற்கும் மேலான தளபாட வளங்களை உலகெங்கிலுமிருந்து கடனாகப் பெற்றுக்கொண்டு, தனது படைப்பலத்தை ஒன்று திரட்டி வன்னிக்கான முற்றுகைப்போரில் இறங்கியிருந்தது.

ஒப்பீட்டளவிலே சிங்களப் படைகளின் இழப்பு அதிகமாயினும், தமிழர் தாயகம் துண்டாடப்பட்டுள்ளநிலையில் தனது ஆளணி வன்னிக்குள்ளே மட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழலில் புலிகளால் நீண்ட காலத்திற்கு நின்று பிடிக்கமுடியாது என்ற இறுமாப்புக்கணிப்பீட்டிற்குள் சிங்களப் பேரினவாதம் மூழ்கியுள்ளது. இதை உணர்ந்தவர்களாகவே இன்று வன்னி வாழ் தமிழன் ஒவ்வொருவரும்ஃஒவ்வொருத்தியும் வீரச்சாவாகி விதைதவர் விட்டுச்சென்ற இடத்தை, கடமையைத் தம் தோளில் ஏற்றிக்கொண்டு தயாராகஉள்ளனர்.

ஆக்கிரமிப்பு வெறியர்களில் கடைசியானவானும் வீழ்த்தப்படும்வரை ஒவ்வொரு தமிழனும், குறிப்பாக எல்லைகள் மீட்க்கப்படும் வரைக்கும் இப்போதைய வன்னியில் சகலரும் ஈழத் தமிழினத்தின் தலைவிதியை எழுதும் தற்காலக் கடமையை ஆற்ற வேண்டியது அவசியம்.
ஒற்றைத் துரோகியால் எம்மினம் ஒருபோதும் பலமிழந்து போகாது. ஏனெனில் ஆணிவேர்களுடன் பக்கவேர்களும் ஆயிரமாயிரமாய் அணிவகுத்து நிற்க, ஒட்டுண்ணியாகிவிட்ட ஒற்றைக் கோடரிக் காம்பைக் காட்டி ஒப்பாரிவைப்பதில் அர்த்தமில்லை. சூரியனுக்கு சொந்தமானவர்களான நாம் சோகத்தைச்சூட்டிக்கொள்ளக் கூடாது. வெறுமனே ஐந்து ஆண்டுகளில் மட்டுமே 60 இலட்சம் (ஆறுமில்லியன்) மக்களை இப்படுகொலைக்குப் பறிகொடுத்த யூத இனம் இவ்விடத்தில் எங்களுக்கு அநேகமான வரலாற்று படிப்பினைகளைத் தந்து நிற்கின்றது.

அதிலும் குறிப்பாக மிகவும் பகிரங்கமாகவே தனது இப்படுகொலையைத் தமிழர் மீது மேற்கொண்டுவரும் சிங்களத்தைக் கண்டிக்கும் நேர்மையற்று. வெற்றுச் சாட்டுப்போக்குகளை அறிக்கைகளால் விடுத்துவரும் பன்னாட்டு பிரமுகர்களின் பாராமுகம் பெருத்த ஏமாற்றத்தை நமக்கு அளித்து வருவதைப் போலவே யூதர்களின் அன்றைய ஏமாற்றமும் கொடூரமானது.
அதிலும் நேச நாடுகளால் மிகமோசமான கொலைகாரணக விமர்சிக்கப்பட்ட ஹிட்லரினால் 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதன் பின் மண (உழnஉநவெசயவழைnஉயஅpள) எனப்படும் தடுப்பு முகாம்களில் அரைப்பிணங்களாக உயிர்பிழைத்த யூதர்கள் இஸ்ரேலிற்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அவர்கள் அங்கே செல்வதை அரேபியர்கள் விரும்பவில்லை.

எண்ணெய் வழங்கும் அரேபியர்கள் விருப்பத்தை மறுதலிக்க மேற்குலகமும் தயாராக இருக்கவில்லை. விளைவு: யூதர்கள் சைப்ரஸ் தீவிலே நாசிகளின் தடுப்பு முகாம்களுக்கு இணையான, ஆனாலும் 'நலன்புரிமுகாம்' என்ற பெயரிலேமோசமான நிலைமைகளின் கீழ் அடைத்து வைக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் தளர்ந்து போய்விடவில்லை. யூதர்கள் அம்முகாம்களிலிருந்தும் ஏனைய இடங்களிலிருந்தும் தப்பி இஸ்ரேலிற்குச் சென்று பிரித்தானியர் மற்றும் பல்வேறு அரபு நாட்டுப் படைகளையும் எதிர்த்துப் போராடித்தாயகத்தை வென்றெடுத்தனர்.

இதற்கான பயிற்சிகளை சைப்ரஸ் முகாம்களில் இரவு வேளைகளிலே தும்புத்தடி, கற்கள், பொல்லுகளை துப்பாக்கிகளாகவும் எறிகுண்டுகளாகவும் எறிகுண்டுகளாகவும் பாவித்தே பெற்றிருந்தனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இன்றுங்கூட அரபு நாடுகளிடமே எண்ணெய் வளம் குவிந்து கிடக்கிறது. ஆனாலும் உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் தனக்குச் சார்பாக அல்லது குறைந்தபட்சம் தன்கெதிராகப் பேசமுடியாதவாறு சர்வதேச அரசியற்களத்தைத் தனக்குச் சாதகமாக இஸ்ரேல் வென்றெடுத்துள்ளது.
ஆகவே அடுத்தவர் நமக்கு ஆதரவாக வருவாரெனப் பார்த்துக்கிடக்காமல், ஆகவேண்டியதை நாம் முன்னெடுப்பதனூடாகவே உள்நாட்டிலும் உலக அரங்கிலும் எங்களுக்குச் சாதகமான சூழலைவென்றெடுக்கமுடியும்.

இவ்விடத்தில் 1ஆம் உலக நாடான போலந்து தேசம் நேற்றோ - கூட்டமைப்பிலே இணைந்து கொள்ள விண்ணப்பித்தபோது, அதன் வான்படையின் வளப்பற்றாக்குறை சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, ஜேர்மனி தன்னிடமிருந்த சில மிக்-27 விமானங்களை அதற்கு நன்கொடையாக வழங்கியிருந்தது. ஆரம்பித்தில் மிகவும் நன்றியுணர்வோடு இவற்றைப் பெற்றுக்கொண்ட போலந்து பின்னாளில் அவற்றின் பராமரிப்புச் செலவு பாரதூரம் என்பதனாலேயே சற்றே காலம் கடந்ததுடன் கைகழுவி விட்டது ஜேர்மனி என்பதை உணர்ந்துகொள்ளத் தொடங்கியிருந்து.

ஆக உலகின் முன்னணி நாடுகளான ஜேர்மனி மற்றும் போலந்திற்கே கட்டுப்படியாகாதவற்றையே சிறிலங்கா கொள்வனவு செய்துவைத்துள்ளது.
பணிப்பெண்களாக அனுப்பப்பட்ட தனது குடிமக்கள் துஷ்பிரயோககப் படுத்தப்பட்ட போதிலும் தட்டிக்கேட்காமல் அந்நியச் செலவணியை அறவிட்டாலே போதுமென அங்கலாய்த்துக்கிடக்கும் சிறிலங்காவின் பொருளாதாரம் விரைவிலேயே, நிலைகுலைந்து எரித்திரியாவை ஆக்கிரமித்த எதியோப்பியா ஈற்றில் தோல்வியுடன், எச்சில் நடாக உலகில் அடையாளம் பெற்றதைப் போன்ற இக்கட்டை அடையும் சில நாடுகளின் நயவஞ்சகமான முண்டுகொடுத்தல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே சாத்தியப்படும்.

மூழ்கும் கப்பலில் எந்த முட்டாளும் ஏறமாட்டான் என்பது இந்தப் பின்புல ஆதரவுநாடுகளுக்கு அதிகமே பொருந்தும். தயாகம் முற்றாக ஆக்கிரமிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்படும் பட்சத்தில் அழகாய் இருப்பதோ, ஆரோக்கியமாய் இருப்பதோ மட்டும் ஆபத்தில்லை: ஆக்கிரமிப்பாளனுக்குக் கீழே அடிமையாய் இருப்பதுவும்கூட ஆபத்துதான். ஏனெனில் இனப்படுகொலையின்போது அடிமைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதில்லை.
அதிலும் சிங்களப் பேரினவாதத்திற்கு அன்போ, மானுடமோ புரியாது. அதற்குப் புரியும் மொழி ஒன்று மட்டுமே! அதைப் பேச எழுவது ஒவ்வொரு ஈழத்தமிழ் மக்களினதும் உடனடிக் கடமையாகவுள்ளது. ஆகவே வலிகளுக்காக நொந்து கிடந்து அழுவதை விடுப்போம்: வலிகளிலிருந்தும் வலிழம பெறுபவர்களாய் எழுவோம்! வாழ்வோம்!! நாளையும் அதன் பின்வரும் நெடுங்கால மெங்கும் நிலைத்து வாழும் எங்களினம்!

அடக்கி, ஒடுங்கிப்போன 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். இனப்படுகொலை அவர்களின் வரலாறானது. எஞ்சிய 40 இலட்சம் யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டினை உருவாக்கி இன்று உலகின் விதியையே தீர்மானிக்கிறார்கள்! ஆகவே நாம் எப்படி இருப்போம் என்பதை நாமே தீர்மாகிக்கிறார்கள்! ஆகவே நாம் எப்படி இருப்போம் என்பதை நாமே தீர்மானிப்போம்! முடியாதவர்கள் மூக்கைச் சொறியட்டும், ஏனையவர்கள் எதிர்காலத்தை எமதாக்கட்டும்!!
நன்றி: சங்கதி

வரலாற்றுச் சுருக்கம்

ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று தனித்துவங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு எஞ்சியுள்ள தனித்துவத்தினை பேணிப்பாதுகாப்பதில் முன்னின்று செயற்படும்இக்காலகட்டத்தில் எமது வரலாறு பற்றி எழுதுவதும் அவற்றைப் படிப்பதும் அறிவது அவசியமாகிறது. எனவே எமதுஇந்த முயற்சிகள் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு எமது தொன்மையான வரலாறு பற்றியும்.அதில் எமது தனித்துவம் பற்றியும் அதன் தார்ப்பரியம் பற்றியும் உணரக்கூடியதாக எடுத்தியம்பும் என நினைக்கிறோம்.
ஈழத்தமிழரை பொறுத்தவரையில் எங்களுடைய வரலாறு என்பது மிகத்தொன்மையானது பல நூற்றான்டு காலம் தொடர் வரலாற்றைக் கொண்டதுமாகவே காணப்படுகிறது. வரலாறு என்பது மிகத்தொன்மையானது பல நூற்றாண்டு காலம் தொடர் வரலாற்றை கொண்டதுமாகவே காணப்படுகிறது. வரலாறு என்பது எழுதப்படுவதற்கு முன் நிலவிய குறுனிக் கற்கால பண்பாட்டுடன் ஆரம்பமாகி பெருங்கற்காலப் பண்பாடு கதிரமலை அரசு சிங்கைநகர் அரசு என இருந்த போதும் கி.பி 09ம் நூற்றாண்டில் இருந்து 13ம் நூற்றாண்டுவரை சோழர்களின் ஆட்சியில் இவர்களை அடுத்த 13ம் நூற்றாண்டில் இருந்து யாழ் இராச்சியம் ஊடாக ஒரு தொடர் வரலாற்றைக் கொண்டிருந்த மக்களாகவே ஈழத்தமிழருடைய வரலாறு அமைகிறது.
நீண்டகாலமாக தமக்கென இலங்கைத்தீவில் வடக்கு-கிழக்கைக் கொண்ட ஒரு தாயகப் பிரதேசத்தைத் தன்னகத்தே கொண்டிருந்த போதும் இதில் தமெக்கென ஓர் அரசை உருவாக்கி ஈழத்தமிழரிடையே அரசியல் பொருளாதார சட்டதிட்டங்களை மற்றும் தலைவிதியையும் நீண்டகாலமாகவே தீர்மானித்து வந்தார்கள். இதன் நிமித்தம் தேசிய விழுமியங்கள் நன்கு வளர்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டுமே வந்துள்ளது.
19ம் நூற்றாண்டின் பின் ஈழத்தமிழரின் வடக்கு கிழக்கு இணைந்த தாயகப்பகுதியும் மற்றும் அரசுரிமையும் ஏகாதிபத்தியங்களின் கைகளுக்கு மாறியதும் தேசிய விழுமியங்கள் படிப்படியாக சிதைக்கப்பட்டு இறுதியில் தாயகப்பகுதியும் சிங்கள தேசத்தோடு இணைக்கப்பட்டதோடு ஈழத்தமிழர் தனது தன்னாட்சி உரித்தை முற்று முழுதாக இழந்தனர். அது மட்டுமல்லாமல் ஆங்கிலேயர் ஈழத்தமிழரின் அரசியல் தலை விதியை சிங்கள ஆட்சியாளர்களின் கைகளில் கையளித்தே இன்று ஈழத்தமிழர்கள் இழந்த தமது தன்னாட்சி உரித்தை வென்றெடுக்கவே ஓர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றன.

முல்லைத்தீவு வெறும் ஆயுதப் போர்க்களம் மட்டுமல்ல; உளவியல் போர்க்களமாகவும் உருமாறியிருக்கிறது.

நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வரும் முல்லைத்தீவு களமுனைச் செய்திகள் நெஞ்சத்தை நெருடி நிற்கின்றது என்னவோ உண்மைதான். போர் என்று வந்தாலே இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை என்பது எல்லோரும் அறிந்த விடயம். இருந்தாலும் அந்த மண்ணில் வாழக்கூடிய எமது தொப்புள்கொடி உறவுகள் ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களுக்கும் இலக்காகி...
பச்சிளம் பாலகர் முதலாக வயோதிபர்கள் வரை, வயது வேறுபாடின்றி அரக்கத்தனமான கொடிய தாக்குதல்களுக்கு இலக்காகும் போது அதையொரு போர்க்கள நடவடிக்கையாக எம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில். இந்தக் காலப்பகுதி மிகவும் முக்கியமான காலகட்டமாக கருதப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்பது மெல்ல மெல்ல இராணுவ மயமாக்கப்படுகிறது, விடுதலைப் புலிகளின் விமானத்தளம், கடற்புலிகளின் படகுகளைக் கைப்பற்றி விட்டோம் என்றும், சில நம்பமுடியாத புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரீலங்காப் படைகள் கூறும் தகவல்கள்உண்மையானது தானா?

பாதுபாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் தகவல்களுக்கும் ஹெகலிய ரம்புக்வெலவின் கருத்துக்களுக்கும் சரத் பொன்சேகாவின் தகவல்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாது இருப்பதன் பின்னணியில் இருக்கும் உண்மைதான் என்ன? யாரை ஏமாற்றுவதற்கான முயற்சி? அரசு கூறும் தகவல்கள் உண்மையில்லை என்றால்! இந்தச் செய்திகளை அழகாகவும் மிகுந்த மதிநுட்பமாகவும் வெளியிடுவதில் அரசாங்கத்துக்கு என்ன இலாபம். அரசாங்கத்தின் கூற்றில் எவ்வளவு உண்மையிருக்கும் என்பது எமது கேள்வியாக விரிகிறது!

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அரசு தொடங்கிய வடபோர்முனைப் போரானது முயல் வேகத்தில் தொடங்கி ஆமையின் வேகத்தையும் விட மிகவும் கேவலமான வேகத்தில் முடிந்தது! குறித்த திகதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என சூளுரைத்த பொன்சேகாவுக்கு போதுமடா சாமி போதும் என்றாகி விட்டது புலிகளின் பதில் தாக்குதல்கள்.

அஞ்சுங்கெட்டு அறிவும்கெட்ட மகிந்தருக்கு மயக்கம் வராத குறை! ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னணிப் படைகளுடன், வெளிநாடுகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற இராணுவ வீரர்களையும், விமானப் படைகளையும் இணைத்துக் கொண்டு தொடரப்பட்ட போரானது எவ்வளவு தூரம் வெற்றியை பெற்றுத் தந்தது? ஆளில்லாத கிளிநொச்சி நகரைப் பிடிப்பதும் அங்கு சிங்களத்து தேசியக் கொடியை ஏற்றுவதும்தான் அவர்களின் வெற்றியா? சரி கிளிநொச்சி நகரைப் பிடிப்பதற்கான உண்மைக்காரணம் என்ன?

கிளிநொச்சி என்பது சர்வதேசங்களுக்கு மிகவும் பழகிப்போன பூமி. பல நாட்டு இராஜதந்திரிகள் வந்து போன மண், அந்த மண்ணை கைப்பற்றுவதன் மூலம் சர்வதேசங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான தொடர்பை துண்டித்து விடலாம் என்பதுதான் அவர்களின் திட்டம்.

கிளிநொச்சிப் போரைத் தொடங்கியபோது அரசும், மகிந்தரும் கூறிய விடயத்தை ஞாபகப்படுத்திப் பார்ப்பது சிறந்தது, கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதும் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைப்பேன் எனக் கூறிய அரசானது, கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட பின்னரும் கூட, அதுபற்றி எவ்விதமான பேச்சோ,தீர்வோ எதுவுமேயின்றி முல்லைத்தீவுக்கான போரில் முனைப்புக் காட்டுவதன் நோக்கம் என்ன? அவ்வாறு ஒரு தீர்வை வைத்திருக்கும் அரசு ஏன் விடுதலைப் புலிகளை ஓரங்கட்டிவிட்டு தீர்வைத் திணிக்க நினைக்கிறது.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள்தான் என தமிழ் மக்கள் எப்பொழுதே ஆணி அடித்தாற்போல் கூறி விட்டார்களே. அப்படியானால் தமிழர்களுக்கான அரசின் தீர்வு எவ்வாறானதாக இருக்குமென சாதாரண சாமனியனுக்குக் கூட அது புரியும்! ஞாபகமறதி வாறது வழக்கம்தான.; அதற்கு மருத்துவரைத்தான் நாடவேண்டுமே தவிர கிளிநொச்சியை அல்ல!

குரைக்கின்ற நாய் கடிக்காது என்பார்கள். இங்கே ஸ்ரீலங்கா அரசாங்கம் குரைப்பது எதைக் காட்டுகிறது? உண்மையில் இந்தப் போரை வெறும் ஆயுதப் போராக அரசு கருதவில்லை. பதிலாக இதையொரு பிரச்சாரப் போராகவே அரசு கருதுகிறது! உண்மையில் ஆயுதப் போரின் மூலம் கிடைக்கக் கூடிய வெற்றியானது 50%மாக இருக்குமானால், மிகுதி 50% உளவியல் போர் மூலமாக கிடைக்கப் பெறுவதேயாகும்.

வன்னிப் போர்முனையில் அரச படைகள் ஈட்டும் வெற்றியென்பதும் இவ்வாறானதே! மக்களைத் திசைதிருப்பும் இந்த முயற்சியில் ஸ்ரீலங்கா அரசு அதிகமான வெற்றிகளைப் பெறமுடியாது போனாலும், இந்தியா போன்ற நாடுகளில் இந்த யுக்தியானது பல சந்தர்ப்பங்களில் வெற்றியீட்டி இருக்கிறது என்பது மெய்யானதே!

உதாரணமாக சென்ற வாரம் ஸ்ரீலங்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த சிங்சங்கர் மேனன் இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தக் கோருவாரென தமிழகத் தலைவர்களால் அதிகமாக எண்ணப்பட்ட போதும், அங்கு அவர் அந்த விடயம் பற்றி எதுவும் பேசாது, பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கான இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் வழங்குவது பற்றிப் பேசிவிட்டுப் போயிருந்தார் இதன் மூலம் தமிழகத்தின் தணலை அணைக்கலாம் என்பது இந்தியாவின் எண்ணம்?

ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த உளவியல் போரானதுபுலம்பெயர் தமிழர்களிடையே ஒருவித சந்தேகத்தை அல்லது விடுதலைப் புலிகள் பற்றிய தப்பான கண்ணோட்டத்தை உருவாக்குவதற்கே! தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பானது மிகப்பெரிய பங்களிப்பு என தேசியத் தலைவர் அவர்களாலேயே பலமுறை சுட்டிக்காட்டப் பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா அரசுக்கெதிரான பிராச்சாரப் போரையும் இந்த மக்களே முன்னின்று நடத்துகிறார்கள். இதனால் சர்வதேச மட்டத்தில் ஏற்படக் கூடிய நெருக்குவாரங்களை தணிப்பதற்கான முயற்சியாக இந்த உளவியல் போர் கருதப்படுகிறது.

அதே வேளையில் இந்த பின்னணியில் பார்க்கும்போது இந்தப் போரானது வெறுமனே தமிழ் மக்களை நோக்கிய போராகக் கருதமுடியாத சூழலுமுண்டு. காரணம் போரிடும் வலுமிகுந்த இராணுவப் படையணிகள் கிளிநொச்சி முல்லைத்தீவுக் களத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதலினால் கொல்லப்பட்டவர்கள், படுகாயமடைந்தவர்கள், தப்பியோடியவர்களென ஏராளமானோர் அடங்குவர். சிதைந்து போகும் இராணுவ கட்டமைப்பை மேலோங்கச் செய்வதற்காகவும், சிங்கள மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகளிடமும் இருந்து எழக்கூடிய விமர்சனங்களையும் கேள்விகளையும் தணிப்பதற்காகவும், உளவியல் ரீதியாக தமக்குச் சாதகமான முறையில் ஆட்சியை நடத்த இந்தப் போர் உதவலாம்.

அதேவேளை விடுதலைப் புலிகளின் பதுங்கல் என்பது “சாக்ரடீஸ்”சொன்னதைப் போன்று ஒரு சாதனை படைப்பதற்கான பதுங்கலாகவே கருதலாம். இருந்த போதும் நம்பிக்கை தரக்கூடிய விடயங்கள் நிறையவே உண்டு. அரசின் கண்மூடித்தனமான குண்டு வீச்சு, பொருளாதாரத் தடை,மருத்துவ வசதியின்மை இவை அனைத்தையும் நடத்தும் இந்த அரசின் அடக்குமுறையை மீட்டு வெளியே வர விடுதலைப் புலிகள் நன்கு திட்டமிட்டு சில பின்னகர்வுகளையும், தேவைப்படும் போது பாய்ச்சலையும் நடத்தலாம்.

ஏனென்றால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களுடன் தொடர்ந்தும் இருக்கிறார்கள் என்றால் அங்கு ஏதோ இருக்கிறது என்று மட்டும் புரிகிறது.

முல்லைத்தீவை ஸ்ரீலங்கா அரசாங்கம் கைப்பற்றி விடுவதற்கான எந்தச் சூழலும் இல்லை. முல்லைத்தீவை இந்திய இராணுவமும் முற்றுகையிட்டிருந்த போதும் அவர்களால் கூட அங்கு செல்ல முடியாது போனதுதான் வரலாறு.

இது ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் நன்கு தெரியும். இதன் வெளிப்பாடுதான் அண்மையில் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் நடைபெற்ற டோரா அதிவேகப் படகு மூழ்கடிப்பாகும். விடுதலைப் புலிகள் இன்னும் பலமுடன்தான் இருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்களிடன் புதிய பதிய படையணிகள் இருக்கிறது! புதியரக ஆயுதங்கள் இருக்கிறது! புதிய புதிய வியூகங்கள் இருக்கிறது! அது எல்லாவற்றையும் விட நம்பிக்கைக்குரிய எங்கள் தேசியத் தலைவர் அவர்கள் இருக்கிறார்.

எனவேதான் இந்த முல்லைத்தீவுப் போரை ஸ்ரீலங்கா அரசாங்கம் வெறும் ஆயுதப் போராக கருதாமல் உளவியல் போராகவும் கையிலெடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை!

அல்லையூர் சி.விஜயன் (இத்தாலி)

தமிழனின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால்

இலங்கையில் சிறிலங்க அரசு தமிழர்களை ஒட்டு மொத்தமாக அழித்திட திட்டமிட்டு நடத்‌திவரும் அரச பயங்கரவாதத்திற்கு முடிவுகட்ட, உடனடியாக போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விடுத்த வேண்டுகோளை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு, ராஜபக்ச அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகளுக்கு இன்முகத்துடன் ஆதரவளித்துவிட்டுத் திரும்பியுள்ளார் இந்திய அயலுறவு செயலர் சிவ்சங்கர் மேனன்.

கடந்த மூன்றரை மாதமாக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் சட்டப் பேரவையிலும், வெளியிலும் ஒருமித்த குரலில் விடுத்த வேண்டுகோளிற்கு எந்த மரியாதையும் இல்லை என்பதை அயலுறவு செயலர் சிங்சங்கர் மேனன் பயணம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தியுள்ளது. ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழித்தலை தடுக்க போர் நிறுத்தம் செய்திடு என்று மத்திய அரசை வலியுறுத்த தமிழர்களாகிய நீங்கள், தீர்மானம் போடலாம், போராட்டம் நடத்தலாம், மனித சங்கிலி நடத்தலாம், உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளலாம். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு, உங்களின் இனத்தை அழித்துவரும் அதிபர் ராஜபக்ச அரசுடன், “முன் எப்போதையும் விட இப்போது ஆழ்ந்த, இதமான, பலமான உறவு உள்ளது” என்று சிங்சங்கர் மேனன் தன்னிடம் கூறினார் என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் ரோகித போகல்லாகம கூறியிருப்பது, “தமிழர்களைத் தாண்டிய ஒரு நல்லுறவை நாங்கள் சிறிலங்கா அரசுடன் கொண்டுள்ளோம்” என்பதையே தமிழனின் செவிப்பறை கிழிய பறைசாற்றியுள்ளது.

அதுமட்டுமா! தமிழர்கள் உட்பட இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் அமைதியுடனும், கெளரவத்துடனும் வாழ வழிவகுக்கும் ஒரு அரசியல் தீர்வை, பேச்சு வார்த்தையின் மூலம் காண வேகமாக செயலாற்ற வேண்டும் என்று இந்திய அரசின் சார்பாக சிறிலங்கா அரசிடம் வலியுறுத்தப்பட்டதாக கொழும்பில் இருந்து இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. விமானம் மூலம் குண்டுகளை வீசியும், கனரக பீரங்கி, பல்குழல் பீரங்கி, எறிகணைகள் வீசியும் ஒவ்வொரு நாளும் தமிழர்களைக் கொன்று வதைத்துவரும் சிறிலங்கா அரசின் வெளியுறவு அமைச்சரிடமும், அதிபரிடமும், ‘தமிழர்கள் அமைதியுடனும், கெளரவத்துடனும் வாழ அமைதி வழியில் தீர்வு காண வேண்டும்’ என்று கூறியுள்ளதாக அறிக்கை விடுவது தமிழர்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, வெறுப்பேற்றும் நடவடிக்கையாகும். இலங்கை இனப் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வை வலியுறுத்திய ஜப்பான் உள்ளிட்ட அனைத்து நாடுகளும், முதலில் தமிழர்கள் மீது நடத்திவரும் போரை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துவரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து ஒன்றுமே பேசாமல், தமிழர்கள் அமைதியுடனும், கெளரவத்துடனும் வாழ ‘விரைந்து’ வழிகாணுமாறு சி‌வ்சங்கர் மேனன் கூறிவிட்டு வருகிறார் என்றால், அதன் பொருள், ‘விரைந்து அழித்துவிட்டு பிரச்சினையை முடியுங்கள்’ என்பதுதானே தவிர, தீர்வு காணுங்கள் என்று பொருளல்ல. எனவே தனது வெளிப்படையான, மறைமுகமான நடவடிக்கைகளின் மூலம் தமிழர்களின் நலனோ அல்லது அவர்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவதோ தங்களின் நோக்கமோ, கவலையோ அல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், அதன் தலைமைப் பொறுப்பிலுள்ள காங்கிரஸ் கட்சியும் தெளிவாக தெரிவித்துவிட்டன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இன்று வரை தமிழ்நாடும், உலகளாவிய தமிழினமும் ஒருமித்த குரலில் விடுத்த கோரிக்கைகள் அனைத்தும், இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைக்கு ஒப்புக்கொண்டு சேனநாயகா, பண்டாரநாயகா, சிறிமாவோ ஆகியோர் ஒப்பந்தம் செய்து, பிறகு அதனை கிழித்துத் தூக்கி எறிந்தததைப் போல மத்திய அரசால் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன. அன்றைக்கு சிங்கள ஆட்சியாளர்கள் தமிழனின் உரிமைகளைப் பறித்து நெஞ்சில் குத்தினர்.

தமிழ்நாடு, புதுவையிலிருந்து 40 மக்களவை உறுப்பினர்களுடன் ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி, இன்று அவர்களின் வாழ்வைக் காக்க குரல் கொடுத்த தமிழினத்தின் கோரிக்கையை மறுத்து முதுகில் குத்தியுள்ளது. இதற்கு மேலும் ஈழத் தமிழரை காக்கவோ அல்லது அவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணவோ ஐனநாயக முற்போக்கு கூட்டணி அரசை நம்பிப் பயனில்லை. எப்படி ஈழத் தமிழனின் நலனைப் புறக்கணித்து, தமிழ்நாட்டு மீனவனின் வாழ்வுரிமையை தாண்டி, தமிழின எதிரியான இன வெறி சிறிலங்கா அரசுடன் மத்திய அரசு உறவு கொண்டுள்ளதோ அதற்கு பதிலடியாக தமிழினம் மத்திய அரசைத் தாண்டி, நியாயமான தமிழரின் வாழ்வுரிமைப் போராட்டங்களுக்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபையையும், உலக நாடுகளையும் நேரடியாக நாட வேண்டும்.

தமிழனின் சுதந்திரமும், வாழ்வுரிமையும் பேரத்திற்கோ அல்லது தன்னை ஒரு வல்லரசாக காட்டிக்கொள்ள முற்படும் ஒரு அரசின் நலனிற்காகவோ பலியிடுவதற்கு இல்லை என்பதை தமிழினம் ஒன்றுபட்டு எழுந்து வீறுகொண்டு செயல்பட்டு நிரூபித்திட வேண்டும்.
வெப் உலகம்