ஈழத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்துக் கைவிட்ட கலைஞரும் ??????



விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகப் பெரும் பின்னடைவுக்குள் தள்ளி, அவர்களை இலங்கைப் படை கள் ஒடுக்கியமை என்பது இப்போது நடந்து முடிந்துவிட்ட விடயம்.
அந்தப் பின்புலத்தில் சூத்திரதாரியாகச் செயற்பட்ட தரப்புகள் பற்றிய உண்மைகள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசுப் படைகளின் யுத்த தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றிருந்த காலகட்டத்தில் இவ்வாண்டின் முதல் நாலரை மாத காலப்பகுதியில் அரசுப் படைகளுடன் யுத்தமுனையை அண்டிய பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்து இரா ணுவ நடவடிக்கைகளின் வெற்றி பற்றிய தீரச் செய்திகளை சர்வதேச மயப்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர் நிதின் எ.கோகுலே. என்.டி. ரி.வி. சார்பில் தொலைக்காட்சிச் செய்தியாளராக இலங் கையின் விமானப்படை ஹெலிகளிலும், இராணுவ டாங்கிகளிலும் அடிக்கடிப் பயணம் செய்து, இலங்கை இராணுவ வெற்றிகள் பற்றிய செய்திகளை இந்தியப் பக் கத்தில் பரபரப்பாகப் பரப்பிய பெருமை அவருக்கு உண்டு.
இந்த வகையில் இலங்கை இந்தியப் படை அதிகாரி கள், இராஜதந்திரிகள் போன்ற தரப்பினருடன் அண்மைக் காலத்தில் மிக நெருக்கமாக மனம்விட்டுப் பழகும் வாய்ப் புக் கிடைத்த ஒரு சில ஊடகவியலாளர்களுள் அவரும் ஒருவர் என்பது மறுக்கப்பட முடியாததாகும்.

அதேசமயம், இந்த யுத்த காலத்தை ஒட்டிய தமது அனுபவங்கள் குறித்து, அந்த யுத்தம் முடிந்த கையோடு சூட்டோடு சூடாக அவர் எழுதி வெளியிடும் புத்தகத் தில் உள்ள தகவல்கள், கருத்துக்கள் என்பவையும் இலகு வில் புறந்தள்ளி, ஒதுக்கப்பட்டு, மறுக்கப்படக்கூடி யவை அல்ல என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

இலங்கை இராணுவத்தின் இந்த யுத்த வெற்றியின் பிரதான சூத்திரதாரியாக இவ்விடயத்தில் அமசடக்காகச் செயற்பட்ட இந்தியாவை அடையாளம் காட்டுகின்றார் கோகுலே.
யுத்தத்தில் வென்றதான அறிவிப்பை விடுத்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்னர், "இந்தியாவின் யுத்தத்தையே நாம் முன்னெடுத்து வெற்றியீட்டி னோம்!'' எனக் கூறிய தகவலை இப்போது கோகுலே வெளி யிடும் தகவலோடு ஒப்பிட்டுப் பொருத்திப் பார்த்தால் உண்மைகளை நாமாகவே புரிந்துகொள்ள முடியும்.

"இலங்கைக்குத் தாக்குதல் ஆயுதம் எதனையும் வழங்கவில்லை'' என்று இந்திய அரசு வெளியில் சாட் டுக்குக் கூறிக்கொண்டே, இலங்கைக்கு அம்சடக்கமாக உதவி, புலிகளை அழிப்பதைத் தந்திரோபாயமாக உறுதிசெய்துகொண்டது என்பதை கோகுலே தமது வார்த்தைகளில் வெளிப்படுத்தி நிற்கின்றார்.

ஆயுதங்களை ஏற்றிவந்த புலிகளின் கப்பல்கள் குறித்த புலனாய்வுத் தகவல்களையும், அக்கப்பல்கள் தங்கிநின்ற அமைவிடங்களையும், ஏனைய துல்லிய மான விவரங்களையும் இந்திய அரசு சத்தம் சந்தடியின்றி வழங்கியது.
இத்தகவல்கள் மூலம் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இலங்கைக் கடற்படை அழிப்பதை இந்தியா உறுதிசெய்து கொண்டது.

இதுவே, புலிகளின் அழிவுக்குப் பிரதான காரணம் என் பதை கோகுலே அம்பலப்படுத்துகின்றார்.
தவிரவும், புலிகளுடனான யுத்தத்துக்குப் பயன்படுத்த வென எம்.ஐ.17 ரக ஹெலிக்கொப்டர்கள் ஐந்தை, இந் தியா இலங்கைக்குக் கொடுத்து உதவியது. தன்னுடைய பங்களிப்பை மறைப்பதற்காக இந்த ஹெலிக்கொப்டர் கள் இலங்கை விமானப்படையின் குறியீட்டுடனேயே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் இந்தியா வழங்கியது என்ற உண்மையையும் கோகுலே பகிரங்கப்படுத்துகின்றார்.
ஆக, இந்தியா புதுடில்லி வெளிப்படையாகத் தன் னைப் பார்வையாளராகக் காட்டிக்கொண்டே புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தீவிர பங்காளியாகச் செயற்பட்டு தனது இலக்கை அடைந்திருக்கின்றது என்ற உண்மை இப்போது மெல்ல மெல்ல வெளிப்பட்டுக் கசியத் தொடங்கிவிட்டது.

யுத்தம் தீவிரம் பெற்றிருந்த சமயத்திலேயே ஈழத் தமிழர் தரப்புக்கு எதிரான புதுடில்லியின் இந்த சதித் திட்டம் பற்றிய தகவல்கள் பகிரங்கமாகின. எனினும், புதுடில்லி அரசுத் தலைமையும், அதற்குக் காவடி தூக் கிய தமிழகத் தலைமைகளும் அப்போது அதனை அடி யோடு மறுத்து வந்தன. ஆனால் இப்போது உண்மைகள் மெல்ல அம்பலமாகி வருகின்றன.
தமது பதவிக் கதிரைகளைத் தக்கவைக்கும் சுயநலத் துக்காகப் புதுடில்லியின் பாதரட்சைகளை அபிஷேகம் செய்து பூஜித்து வந்த வருகின்ற தமிழகத் தலைமை கள் இனி என்ன செய்யப் போகின்றன? இனி என்ன சமா தானம் கூறப் போகின்றன?

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி களில் தமது பேரம் பேசும் வலுவை இழந்து, தென்னி லங்கை தூக்கிப் போடும் பிச்சையை இரந்து அளிக்கும் சலுகையை தலைவணங்கி, சிரம் தாழ்த்தித் தாங்கிப் பிடிக்கும் கேவலத்துக்கு பற்றுக்கோடற்ற நிலைக்கு ஈழத் தமிழினம் இன்று தள்ளப்பட்டு நிற்கின்றது.

ஈழத் தமிழினத்தை இத்தகைய இழிநிலைக்குத் தள் ளும் இராணுவச் செயற்பாடுகளுக்குத் துணைபோன புதுடில்லியும், அந்தப் புதுடில்லி அரசுத் தலைமைக்கு கூஜா தூக்கி அதனைப் பலப்படுத்திய தமிழகக் கேவ லங்களும் இன்று பரிதாப நிலையில் பரிகசிக்கப்படும் கட்டத்தில் அவலப்படும் தமிழினத்துக்குக் கூறப்போகும் பதில் என்ன?

ஈழத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்துக் கைவிட்ட கலைஞரும் அவரது ஆட்சி சகாக் களான உடன் பிறப்புக்களும், இலங்கையில் வாழும் தமது உடன்பிறவா சகோதரங்களான ஈழத் தமிழினத்துக்குக் கூறப்போகும் விடை என்ன?

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.