கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவ கெடுபிடிகள் எப்போது அகற்றப்படும், மக்கள் எப்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் தினமும் சுற்றிவளைப்பு தேடுதல், கைது என மக்களின் அன்றாட வாழக்கை மிகவும் இறுக்கமடைந்து கொண்டுவருகின்றன. விடுதலை புலிகளின் ஊடுருவல் என தெரிவித்துக் கொண்டு அப்பாவி மக்களையே படையினரும் ஆயுததாரிகளுனம் கசக்கிப் பிழிகின்றனர்.
இராணுவ நடவடிக்கை இடம்பெற்ற படுவான்கரை பகுதிகளில் தினமும் ஒருவர் ஆயுததாரிகளினாலும், படைத்தரப்புகளினாலும் கடத்தப்படுகின்றார்கள ஆனால் இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியில் வருவதில்லை அவ்வாறு வெளியில் சொல்வதற்கும் குறித்த குடும்பங்கள் அச்சமடைந்துள்ளன. கடத்தல் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் அந்த குடும்பத்தை சந்தித்து பேசினால் மறுநாள் யார் வந்தவர்கள் என ஆயுததாரிகள் விசாரணை செய்து மிரட்டிவருகின்றனர்.
படைகளினதும் ஆயுததாரிகளினதும் அடாவடிகள் அனைத்தும் கல்வி அறிவு குறைந்த பின்தங்கிய இடங்களிலேயே இடம்பெறுகின்றது. இப்பகுதியில் இடம்பெறும் ஒரு சில சம்பவங்கள் வெளியில் தெரியவந்தாலும் மீண்டும் அப்பகுதி மக்களையே தாக்குகின்றனர். இவ்வாறான பகுதிகளில் படையினரும், ஆயுதக்குழுக்களும் தமது விருப்பத்திற்கு ஏற்ப தமது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கடந்த வாரம் கூட அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியான 40ம் கொலனி கிராமத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது அந்த பகுதி மக்களை ஒரு பொது இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நாடத்தியதுடன் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரிகள் கடுமையாக தாக்கப்பட்டார்கள்.
மனித உரிமைச் சட்டத்தின் விதந்துரைப்பின் படி குற்றம் செய்தவர் என்றாலும் எக்காரணத்திற்காகவும் ஒருவரை தாக்க முடியாது என சட்டம் சொல்கின்றது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும். ஆனால் கிழக்கு மாத்திரமல்ல இலங்கையின் நாலா பகுதிகளிலும் குறிப்பாக தமிழர்கள் பல்வேறு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனை உலக நாடுகளின் பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியும் இராணுவ மற்றும் துணைக்குழுக்களின் தொடர்ந்து இவ்வாறான வதைகள் மேற்கொண்டே வருகின்றனா.
40ம் கொலனியில் பொதுமக்களை தாக்கிய விசேட அதிரடிப்படையினர் கடுமையான தொனியில் எங்களுக்கு எதாவது நடந்தால் களுதாவளை, மற்றும் எரிவில் பகுதியில் குடும்பங்களை சுட்டுத் தள்ளியது போன்று உங்களையும் சுட்டுத் தள்ளுவோம் என பகிரங்கமாக மிரட்டியுள்ளனர். தற்போதாவது வெளியுலகுக்கு தெரிகின்றதா கிழக்கில் மாத்திரமல்ல இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் கொலைகள், கடத்தலுக்கு யார் பொறுப்பாளிகள் என்பது தெரிகின்றதா? கடந்த வாரம் எழுதிய கட்டுரையில் கொலையாளிகளை கைக்குள் கைத்துக் கொண்டு அரசாங்கம் எவ்வாறான நாடகம் ஆடுகின்றது என குறிப்பிட்டிருந்தேன். அதன் உண்மைத்தன்மை தற்போது புலப்படுகின்றதா?
கிழக்கு மாகாணத்தில் 33 ஆயிரம் பெண்கள் கணவரை இழந்துள்ளதாகவும் இவர்களில் அதிகமானவர்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள் சராசரியாக மூன்று பிள்ளைகளின் தாய்மார் என கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கின்றது. உண்மையில் இந்த பெண்களின் நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பு இவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு என்னவகையான உதவித் திட்டங்களை செய்துள்ளது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் சில உதவித் திட்டங்களை செய்தாலும் அவை நிறைவான திட்டங்கள் இல்லை என்றே கூறப்படுகினற்து.
இதேபோன்று கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலையினால் பாரிய அழிவை கிழக்கில் ஏற்படுத்தியது நான்கு ஆண்டுகள் கடந்தும் பொருளாத இழப்பிலிருந்து இன்னும் மீளவில்லை என்றே கூறவேண்டும். இதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கதிரவெளியில் 81 குடும்பங்களுக்கு இதுவரையில் நிரந்தர வீடு அமைத்துக் கொடுக்கப்படவில்லை என பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்பொதும் தற்காலிமான கொட்டகையில்தான் வாழ்ந்துவருகின்றார்கள். அன்றாட உணவுக்கே பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் இந்த மக்கள் எவ்வாறு ஒரு நிரந்தர வீடை அமைக்க முடியும். பல நிறுவனங்கள் இப்பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டாலும் இந்த 81 குடும்பங்களை ஏன் கைவிட்டாhர்கள்? இதற்கு 2006,2007 காலப்பகுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையே காரணம். திருமலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையினால் மூதூர் கிழக்கு அழிக்கப்பட்டதன் பின்னர் அடுத்ததாக வாகரை பகுதி அதிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அமைத்துக் கொடுத்த கட்டங்களையே முதல் தாக்கியழித்தனர். இதிலிருந்து இன்னும் மீளவில்லை.

அதுமாத்திரமல்ல கட்டம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கண்துடைப்புக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதே தவிர அவை நிரந்தரமாக பாவிக்க முடியாதளவுக்கு தரமானவையல்ல, இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் இதுவரையில் பூர்த்தி செய்து கொடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எவ்வாறாயினும் சுனாமிக்கான நிவாரணப் பணிகள் இந்த வருடத்துடன் பூர்த்தியடையவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு மூதூர் கிழக்கு தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பு படைகள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக கூனித்தீவு, கடற்கரைச் சேனை, சூழக்குடா, சம்பூர் பிரகடனப்படுத்தியதையடுத்து சில குடும்பங்கள் இன்னும் சொந்த இடத்திற்கு செல்ல முடியாத நிலையுள்ளது. உண்மையில் இப்பகுதியில் சுனாமியால் ஏற்பட்ட இழப்புக்களை விட இராணுவ நடவடிக்கையினால் ஏற்பட்ட இழப்பே அதிகமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கள் தெரிவிக்கின்றார்.
திருகோணமலை மாவட்டத்தின் கடற்கரையை அண்மித்த மக்கள் சுனாமியினால் ஏற்பட்ட தாக்கத்தினால் அந்த மாவட்டத்திற்குள்ளே இடம்பெயர்ந்தார்கள். ஆனால் இராணுவ நடவடிக்கையினால் தமது சொந்த இடத்தைவிட்டு விரட்டியடிக்கப்பட்டர்கள் இந்த மக்களை ஒரு திட்டமிடப்படாத முறையில் மழைக்காலத்தில் அரசாங்கம் தனது அரசியலுக்காக மனிதாபிமானமற்ற முறையில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், உணவு, என சீராக கிடைக்கப் பெறவில்லை.
தற்போதும் கூட அவர்களின் சொந்த இடத்திற்கு சென்றாலும் தற்காலிய கொட்டகைகளில் அவல வாழ்கையே அனுபவிக்கின்றார்கள். இதுவரையில் மூதூருக்கான போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இது புதிதாக ஏற்டுத்தும் விடயமல்ல. இடம்பெயர்வதற்கு முன்னர் போக்குவரத்து சேவை இடம்பெற்றது. ஆனால் மீள்குடியமர்த்தப்பட்டு ஒரு வருடம் கடக்கும் நிலையிலும் இதுவரையில் உட்கட்டுமான பணிகள் செய்து கொடுக்க வில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இத்தனைக்கும் பிரித்தானியா, ஐப்பான், அமெரிக்கா உட்பட பல நாடுகள் சுனாமி மாத்திரமல்ல யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட பல மில்லியன் ரூபாக்கு என்ன நடந்தது. உண்மையில் இதில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் கிழக்கில் உதயம் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என்றாலும் யாருக்கு செய்யப்படுகின்றது என்றால் அரசாங்கத்தின் அரசில் கதிரைக்கு முட்டுக் கொடுக்கும் தமிழர்க்கு அடுத்த சிறுபான்மை இனத்திற்கும், அவர்களின் பிரதேசங்களிலுமே அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
25 ஆயிரம் வாக்குகளைக் கொண்ட கல்குடா தேர்தல் தொகுதியில் உள்ள எவ்வித பாதிப்புக்களும் ஏற்பாடாத ஒட்டமாவடி பகுதியில் மேம்பாலம் அமைத்துக் கொடுக்கும் பணி கிழக்கு உதயம் அபிவிருத்தி திட்டமா? அல்லது யுத்தத்தினாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்ட படுவான்கரை மற்றும் வாகரை போன்ற தமிழ் பகுதியில் போக்குவரத்து வசதி கூட செய்து கொடுக்காது இருப்பது அபிவிருத்தியா? கிழக்கை பொறுத்தவரையில் யுத்தத்தினால் இடம்பெற்ற பாதிப்புக்கள் தமிழர்களுக்கே அதிகம்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான பராபட்சமான அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்காலத்தில் மேலும் இன முறுகளையும், கசப்பான உணர்வுகளையுமே ஏற்படுத்துமே தவிர எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையாக அமையாது என்பது பலரின் கருத்தாகும். ஆண்டாண்டு காலமாக கூறுவது போன்று நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வுத் திட்டம் பெறப்படாத வரைக்கும் இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எவ்விதமான திட்டங்களாக இருந்தாலும் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
நன்றி தினக்குரல்

[செய்தியாளர் சிவநடேசன் ]
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.