தனி வாழ்க்கைத் தரவுகள்
பழ. நெடுமாறன் அவர்கள் திரு. கி. பழநியப்பனார் - பிரமு அம்மையார் ஆகியோருக்கு 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தியதி மகனாக பிறந்தார். அவரது தந்தையார் மதுரைத் தமிழ்ச் சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றினார்.
1942 - ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948 - ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள், 1956 - ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை அவரது தந்தையாரை சாரும். பழ. நெடுமாறனுக்கு 2 தமக்கைகளும், 3 தமையன்களும் உண்டு. பார்வதி அம்மையாரை மணந்தார்.
கல்வி
மதுரை புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி, புனித மரியன்னை உயர் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில், பள்ளி படிப்பினை முடித்த பழ. நெடுமாறன், தனது கல்லூரி படிப்பினை அமெரிக்கன் கல்லூரி, தியாகராசர் கல்லூரி (இடைநிலை வகுப்பு), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய கல்விக்கூடங்களில் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் சிறப்பு இளங்கலை பட்டம் பெற்றார். அவரது ஆசிரியர்களாக புகழ் பெற்ற முனைவர் அ. சிதம்பரநாதனார், முனைவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், முனைவர் இராசமாணிக்கனார், அவ்வை சு. துரைசாமி பிள்ளை, திரு. அ. கி. பரந்தாமனார் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது வாழ்க்கை.
மாணவர் இயக்கம்
பழ. நெடுமாறன் அவர்கள் மாணவப் பருவத்திலேயே தன்னை பொது வாழ்க்கைக்கு அற்பணித்தவர். அவர்தம் கல்லூரி வாழ்வில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்து, 1958 - ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டில், அறிவியல் மாணவர் இல்லப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1958 -1959 வரை பதவி வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட அறிஞர் அண்ணா அறிஞர் அண்ணா அவர்களை மாபெரும் போராட்டத்திற்கு பிறகு அழைத்து வந்து திருவள்ளுவர் விழா நடத்தினார். மேலும், அறிஞர் அண்ணாவின் அவர்களின ஹோம்லாண்ட் பத்திரிகை நிதிக்காக மாணவர்கள் சார்பில் திரு. .டி.சோமசுந்தரம் அவர்களுடன் இணைந்து ரூ.10,000 நிதித் திரட்டி அளித்தார்.

அரசியல் ஈடுபாடு
1962 - அமைப்பாளர், மதுரை மாவட்ட தமிழ்த் தேசியக் கட்சி
1964 - மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரசு அமைப்பாளர்
1970 - மதுரை மாவட்ட காங்கிரசுத் தலைவர்
1973 - 1979 வரை தமிழ்நாடு காங்கிரசுப் பொதுச் செயலாளர்
1979 முதல் - தமிழர் தேசிய இயக்கத் தலைவர்
1980 - 1984 - தமிழக சட்டமன்ற உறுப்பினர்

உலகத் தமிழர் தொண்டு
1982 - நியூயார்க், 1984 - நியூயார்க், 1988 - இலண்டன் ஆகிய நகரங்களில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டுகளுக்குத் தலைமை.
2002 - ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழர் பேரமைப்பின் நிறுவனத் தலைவர்.
1982 - நியூயார்க், 1984 - நியூயார்க், 1988 - இலண்டன் ஆகிய நகரங்களில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டுகளுக்குத் தலைமை.
2002 - ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழர் பேரமைப்பின் நிறுவனத் தலைவர்.
தமிழீழப் பிரச்னையில் ஈடுபாடு
1982 - ஆம் ஆண்டில் யாழ் நூலகம் கொளுத்தப்பட்ட போது அங்கு சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து வந்து தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை அளித்தார். அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து பிரதமர் இந்திராவிடம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் முறையீடு அளிக்கப்பட வேண்டுமென்ற யோசனையைத் தெரிவித்தார். அதற்கிணங்க எம்.ஜி.ஆர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்த முறையீடு ஒன்றை அளித்தது.

1982 - ஆம் ஆண்டு, சிங்கள அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த திரு. தங்கத்துரை, திரு.குட்டிமணி, திரு. ஜெகன் ஆகியோரின் மரண தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஏக மனதாக நிறைவேற்றச் செய்தார்.
1983 - ஆம் ஆண்டில் கொழும்புவில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மதுரையிலிருந்து இலங்கை நோக்கி 5000 தொண்டர்களுடன் தமிழர் தியாகப் பயணம் நடத்தினார்.
1985 - ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையோடு இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் இரகசியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்களைப் பற்றிய விவரங்களையும், ஈழத் தமிழர்களின் துயரங்களையும் நேரில் கண்டறிந்து அவற்றை ஒளிப்படமாக எடுத்து வந்து இந்தியா உட்பட உலக நாடுகளில் காட்டச் செய்தார்.
1987 - ஆம் ஆண்டு திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அங்கு சென்று நிலைமையை அறிந்து வந்து தமிழக மக்களுக்குத் தெரிவித்தார்.
1987 - ஆம் ஆண்டிலிருந்து 90 - ஆம் ஆண்டு வரை தமிழர் தேசிய இயக்கமும் மற்றும் தோழமைக் கட்சிகளும் இணைந்து ஈழத் தமிழர் பிரச்னைக்காக அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தின. 20-12-1990 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழர் அமைப்புகளின் கூட்டத்தில் குடை அமைப்பு ஒன்றினை நிறுவி கூட்டாக செயல்படுவதற்கு முடிவுச் செய்யப்பட்டு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அமைப்பாளராக பொறுப்பேற்றார். 1991-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை இந்த குடை அமைப்பின் சார்பில் போராட்டங்களும் மாநாடுகளும் நடத்தப்பெற்றன. சில நேரங்களில் அரசு தடை விதித்த போது அதை மீறி தோழர்கள் சிறை புகுந்தனர்.
1991 - ஆம் ஆண்டில் மீண்டும் இலங்கைச் சென்று இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களைப் பற்றிய உண்மைகளை ஆதாரப்பூர்வமாகத் திரட்டி வந்து பிரதமர் வி.பி.சிங் அவர்களை சந்தித்து அவரிடம் அளித்து இந்திய அமைதிப் படையை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெறும்படி வற்புறுத்தினார்.
நேயத் தொண்டுகள்
1981 - ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் மோதல் சாவுகள் என்ற பெயரில் அப்பாவி கிராமப்புற இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து உண்மைகளை அறிந்து வந்து அம்பலப்படுத்தி மோதல் சாவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
1991 - ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காயமடைந்த, ஊனமுற்ற விடுதலைப் புலிகளின் நிலைமை குறித்து தேசிய மனித உரிமை கமிசனுக்கு புகார் செய்து அவர்கள் விடுதலைப் பெறுவதற்கு உதவினார்.
1993 - ஆம் ஆண்டு, சர்வ தேசக் கடல் எல்லையில் விடுதலைப் புலிகள் தளபதி கிட்டு பயணம் செய்த கப்பலை இந்தியக் கடற்படை வழி மறித்ததைத் தொடர்ந்து கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. தளபதி கிட்டு உட்பட பல தோழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். கப்பலின் மாலுமிகள் 9 பேரை இந்தியக் கடற்படைக் கைது செய்தது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் வழக்கை உச்ச நீதிமன்றம் வரை நடத்தி 9 பேரின் விடுதலைக்கும் வழி வகுத்தார்.
1998 - ஆம் ஆண்டு இராசீவ் காந்தி கொலை வழக்கில் 26 தமிழர்களுக்கு ஒட்டு மொத்தமாகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது அதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்காகக் குழுவை அமைத்து வழக்கை நடத்தி 19 பேர் விடுதலை பெறுவதற்கும் மூவருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுவதற்கும் வழிவகுத்தார். 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மட்டுமல்ல, இந்தியாவில் தூக்குத் தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் பெரும் இயக்கத்தை நடத்தியதோடு சென்னையில் அய்ம்பதினாயிரம் பேரைத் திரட்டி மரண தண்டனை ஒழிப்பு ஊர்வலம் நடத்தினார். அதன் விளைவாக மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரான நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டையாக குறைக்கப்பட்டது.
2000 - ஆம் ஆண்டு கன்னட நடிகர் இராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது காட்டுக்குள் சென்ற குழுவிற்குத் தலைமை தாங்கிச் சென்று வீரப்பனிடம் பேசி இராஜ்குமாரை விடுவிக்க உதவினார். இதன் விளைவாக இரு மாநிலங்களுக்கிடையே மூளவிருந்த இனக் கலவரத்தைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து அதிரடிப் படையின் அட்டூழியங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டினார்.
2000 - ஆம் ஆண்டு வீரப்பனுக்கு உதவியவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் தடா சட்டப்படிக் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் வாடிய 121 அப்பாவி கிராமவாசிகளின் வழக்கைச் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்தி அவர்களில் 117 பேரின் விடுதலைக்கு வழி வகுத்தார்.
2007 - ஆம் ஆண்டு பட்டினியால் வாடும் யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் திரட்டும் இயக்கத்தினை நடத்தி, தமிழகமெங்குமிருந்து ஏறத்தாழ ரூபாய் 1 கோடி பெறுமானமுள்ள பொருட்களைத் திரட்டினார். அப்பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப இந்திய அரசு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பல கட்சியினரை ஒன்று திரட்டி நாகப்பட்டினத்திலும், இராமேசுவரத்திலும் படகுப் பயணப் போராட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் சாகும் வரை பட்டினிப் போராட்டம் மேற்கோண்டார்.
சிறை
மாணவ பருவத்திலிருந்து இன்று வரை பலப் போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 50 - க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு போலிஸ் காவலிலும் சிறையிலும் நாட்கணக்கிலும், மாதக் கணக்கிலும் வைக்கப்பட்டார்.
தமிழகத்தின் ஒன்றிரண்டு சிறைகளைத் தவிர அனைத்துச் சிறைகளிலும் இருந்திருக்கிறார்.
1993 - ஆம் ஆண்டு தடா சட்டத்தின் கீ.ழும் 2002 - ஆம் ஆண்டு பொடாச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.
பொடாவில் கைது செய்யப்பட்ட போது ஓராண்டு 5 மாத காலம் சிறையில் இருந்தார்.
பிணையில் வெளியே வந்த பிறகு சுமார் இரண்டு ஆண்டு காலம் வாய்ப்பூட்டுப் போடப்பட்டு பேச்சுரிமைப் பறிக்கப்பட்டார்.
இதழியல் பணி
1960 - “தமிழ்நாடு” நாளிதழ் துணை ஆசிரியர்
1962 - “குறிஞ்சி” வார இதழ், “செய்தி” நாளிதழ் ஆகியவற்றின் ஆசிரியர்
1997 முதல் தற்போது வரை “தென்செய்தி” இதழின் ஆசிரியர்.
1960 - “தமிழ்நாடு” நாளிதழ் துணை ஆசிரியர்
1962 - “குறிஞ்சி” வார இதழ், “செய்தி” நாளிதழ் ஆகியவற்றின் ஆசிரியர்
1997 முதல் தற்போது வரை “தென்செய்தி” இதழின் ஆசிரியர்.
நூல்கள்
எழுதப்பட்ட கால வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன)
அரசியல் நூல்கள்
1. நேதாஜி எங்கே?
2. பெங்களுர் முதல் டில்லி வரை
3. காமராசருக்குக் கண்ணீர் கடிதங்கள்
4. நீதி கேட்கிறோம்?
5. சட்டமன்றத்தில் நமது குரல்
6. தேர்தல் தந்த திருப்பம்
7. மத்திய - மாநில உறவு - சில குறிப்புகள்
8. மதுரை முதல் மாஸ்கோ வரை
9. தமிழர் தன்னுரிமை முழக்கம்
10. தமிழன் இழந்த மண்
11. தமிழகம் - நதிநீர் பிரச்னைகள்
12. தன்மானத் தலைவர் சுபாஷ் போஸ்
13. Why a new Constituent Assembly?
14. புதிய அரசியல் யாப்பு அவையைக் கூட்டுக
15. தமிழரின் தலையாய தேசியப் பிரச்னைகள்
16. பேருருக் கொள்ளும் தமிழ்த் தேசியம்
17. தன்னுரிமையா? மாநில சுயாட்சியா?
18. மனித குலமும் தமிழ்த் தேசியமும்
19. மதமாற்றம் - பார்ப்பன இந்துத்துவா கூப்பாடு
20. தடா முதல் பொடா வரை
21. உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும்
ஈழத் தமிழர் சிக்கல்
1. இலங்கைத் தமிழர் பிரச்னை அதிர்ச்சி தரும் உண்மைகள்
2. Srilanka Tamils Problem - A Shocking Revelation
3. பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் - தமிழீழ விடுதலைப் போராட்டமும் 4. Palestine Liberation Struggle & Tamil Eelam Liberation Struggle
5. பாரதப் பிரதமருக்குப் பகிரங்கக் கடிதம்
6. தில்லியின் துரோகக் கொள்கை
7. ஈழப் போர்முனையில் புலிகளுடன்
8. பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்
9. காவிய நாயகன் கிட்டு
10. தமிழீழம் சிவக்கிறது
11. தங்கவங்கமும் தமிழீழமும்
12. Tamil Eelam and Golden Bengal
13. காகிதப் புலி கருணா
14. இந்தியாவும் புலிகளின் தீர்வுத் திட்டமும்

நெடுங்கதைகள்
1. தென்பாண்டிவீரன் (கவியரசு கண்ணதாசனின் “தென்றல்”-இதழின் நெடுங்கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது)
2. சோழ குல வல்லி
3. அருவிக்கரை அழகி
4. முல்லை வனத்து மோகினி
5. சந்தன முல்லை
இலக்கியம் - வரலாறு
1. தமிழ் வளர்த்த மதுரை
2. தமிழ் உயர் தனிச் செம்மொழி
3. எழுக உலகத் தமிழினம்
4. தமிழறிஞர் தெ.பொ.மீ-யின் அரசியல் தொண்டுகள்
5. தமிழரும் கீதையும்
6. கவியரசர் என் காவலர்
7. பழந்தமிழர் பரவிய நாடுகள்

0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.