இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் எட்டாம் ஆண்டு நிறைவில்.........!


சர்வதேசப் பொலிஸ்காரனான அமெரிக்காவையே கலங்கடித்துப் பீதிக்குள் ஆழ்த்திய நியூயோர்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரம் மற்றும் அமெ ரிக்கப் பாதுகாப்புக்கான மையத்தளமான "பென்டகன்" ஆகியவற்றின் கட்டடங்களை விமானங்கள் மூலம் மோதித் தாக்கும் சாகசம் நடத்தப்பட்டு நேற்றுடன் எட்டு ஆண் டுகள் பூர்த்தியாகிவிட்டன.



இந்தத் துணிகரத் தாக்குதல்களை ஒப்பேற்றி முடித்த வர்கள் என்று கூறப்படும் தீவிரவாதிகளின் இலக்கு எட்டப்பட்டதா, நோக்கம் நிறைவேறியதா என் பது தெரியவில்லை; தெளிவில்லை.

ஆனால் அந்தத் தாக்குதலினால் அதிர்ந்துபோன அமெரிக்க ஏகாதிபத்தியம் அதையடுத்து, அத்தாக்குத லுக்குப் பழிவாங்கப் போவதாகக் கூறிக்கொண்டு நேச நாடுகளையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு பெரும் எடுப்பில் ஆரம்பித்த "பயங்கரவாதத்துக்கு எதிரான உலகப் போர்" மட்டும் இன்னும் தனது நோக்கத்தை நோக்கி முன்னேறவேயில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் அந்த எத்தனம் "பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக முடிந்த கதையாக"திசைமாறிச் சிதம்பிப்போய்க் கிடக் கின்றது.

அமெரிக்கா மீதான "செப்டெம்பர் 11" தாக்குதலுக் கான சூத்திரதாரிகள் அதற்குத் திட்டமிட்ட மையம் ஆப் கான் என்ற கருதுகோளில் அந்த நாட்டையே அமெ ரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு முத லில் இலக்கு வைத்தது. அதனோடாவது அமெரிக்கா நிறுத்தியிருக்கலாம்; அடங்கியிருக்கலாம்.



அதை விடுத்து, அளவுக்கு மீறிய செருக்கோடு உல கெங்கும் "வாய்"வைத்தது அமெரிக்கா. "பயங்கரவாதத் துக்கு எதிரான போர்" என்ற கண்மூடித் தனமான குருட் டாம் போக்கிலான அப்போதைய புஷ் நிர்வாகத்தின் எதேச்சாதிகாரம் உலக அமைதிக்கே பங்கம் விளைவித்து வேட்டு வைத்தது. அமெரிக்காவுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி நிற்கின்றது.

எது பயங்கரவாதம், யார் பயங்கரவாதிகள் என்பதற்கான சரியான நுண்ணிய அளவு கோல்களைப் பயன் படுத்தி உண்மையான, நேர்மையான, தெளிவான, தீர்க் கமான முடிவுகளை எடுக்காமல், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தரப்புகளை எல்லாம் சட்ட ரீதியான நேர்மையான இறைமையுள்ள அரசுகளாகத் தன் பாட்டில் அங்கீகரித்தபடி நீதி, நியாயம், உரிமை வேண்டி தார்மீகப் பண்புகளோடு போராடும் ஏனைய தரப்புகள் எல்லாவற்றுக்கும் "பயங்கரவாதம்" என்ற முலாமைப் பூசிக்கொண்டு, அமெரிக்காவும் அவற்றின் நேச அணிகளும் செயற்பட்டன; செயற்பட்டுக் கொண் டிருக்கின்றன.

அமெரிக்காவின் இத்தகைய நேர்மைத்தன்மையில் லாத பார்வையின்கீழ் அணி திரண்ட சக்திகள், தர்மத் தின் வழி தழுவி, நியாயத்தின் பாதையில் முன்னெடுக் கப்படும் போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை எல் லாம் பயங்கரவாதமாகத் திரிபுபடுத்தி முத்திரை குத் தின.

நீதிக்காகப் போராடும் சக்திகளுக்கு பயங்கரவாதச் சேறு பூசிக்கொண்டு, அதேசமயம், அவற்றை நசுக்க முய லும் அடக்குமுறை அரசுகளின் இராணுவப் பயங்கர வாதத்தை மூடி மறைக்கவும் அமெரிக்கா தலைமையி லான இந்த சர்வதேச எதிர்ப்பியக்கம் நன்கு உதவியது. இதன் விளைவை உலகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

சரியோ, பிழையோ, இராணுவ ரீதியிலான அடக்கு முறை ஆட்சியோ, இல்லையோ ஈராக்கில் அதிபர் சதாம் ஹுசைன் தலைமையில் அமைதியான ஓர் ஆட்சி முறைமை தொடர்ந்து நீடித்தது. அப்போதைய அமெ ரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் ஆக்கிரமிப்பு எதேச்சாதிகாரம் அந்த நாட்டை இன்று குண்டு வெடிப்புகளிலிருந்து மீளமுடியாத நிரந்தர இரத்த பூமியாக்கியிருக்கின்றது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவால் இன்று ஈராக்கில் தினசரி குண்டு வெடிப்புகள், தற்கொலைத் தாக்குதல் கள், அழிவுகள், பிணக் குவியல்கள், கோரங்கள், கொடூ ரங்கள். அமைதியாக விடியும் நாள் என ஒன்று இல்லை என்ற நிலைமையே அங்கு ஏற்பட்டிருக்கின்றது.

மனித குலத்திற்குப் பேரழிவைத் தரும் ஆயுதங் களை சதாம் நிர்வாகம் தயாரித்து வைத்திருக்கின்றது என்ற பொய்யைப் பிரகடனப்படுத்திக்கொண்டு அந்தத் தேசத்தை ஆக்கிரமிக்கும் "பயங்கரவாதத்தை" புரிந்தது அமெரிக்கா.

ஈராக்கை ஆக்கிரமிக்க புஷ் நிர்வாகம் முன்வைத்த காரணம் பச்சைப் பொய் என்பது அம்பலமான நிலையில் தான் ஆக்கிரமித்த ஈராக், ஆப்கான் போன்ற தேசங் களில் அதற்கு முன்பிருந்தமையை விட மிக மோச மான, மிகக் கோரமான, மிகக் கொடூரமான, மிகக் கேவ லமான நிலைமையை ஏற்படுத்திவிட்டு முன்வைத்த ஆக்கிரமிப்புக் காலை பின்வாங்கவும் முடியாமல், வைத்துப் பேணவும் முடியாமல் அல்லா டுகின்றது அமெரிக்கா.



"உலகப் பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்ற பெயரில் அமெரிக்கா ஆரம்பித்த மாயை யுத்தம், அமெரிக்காவையே பயங்கரவாதத் தரப்பாக மாற்றி நிற் பதே உண்மை.
"பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேசப் போர்" என்ற பெயரில் முன்னைய புஷ் நிர்வாகம் இழைத்த பாரிய தவறுகளின் தாற்பரியத்தைப் புரிந்துகொண்டு, அவற்றுக்குப் பிராயச்சித்தம் செய்து, நியாயம் புரியும் நல்ல நோக்கம் அமெரிக்காவின் புதிய ஒபாமா நிர் வாகத்துக்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்பது தான் நிஜம்.

1 comments:

Buஸூly சொன்னது…

இஸ்லாமியத் தீவிரவாதிகளின்-
ஒரு மதத்தோடு ஒப்பிட்டு தீவிர வாதிகள் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை முடிந்தளவு இவ்வாறான சொற்பிரயோகங்களை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.