இருப்போரின் விவரம் வெளியானால்தான் இல்லாதோரின் எண்ணிக்கை அம்பலமாகும் .!!!!
நீண்ட காலமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட் டுள்ள கைதிகள் மற்றும் காணாமல் போனோர் தொடர் பாக அடுத்த வாரம் கொழும்பில் முக்கிய மாநாடு ஒன்று நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. இதுபற் றிய தகவலை மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட் டாளரான மனோ கணேசன் எம்.பி. வெளியிட்டிருக்கின்றார்.
வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் விடுவிப்பு, மீள்குடியேற்றம் போன்ற விட யங்கள் மாதிரியே,
கைது செய்யப்பட்ட அல்லது கடத் தப்பட்ட நிலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட் டிருக்கும் கைதிகளினதும் காணாமற் போனோரினதும் பிரச்சினைகளையும் சமூகம் மறந்துவிட முடியாது என மனோ கணேசன் எம்.பி. குறிப்பிடுகின்ற கருத்து முற்றிலும் நியாயமானது; விரைந்து கவனிக்கப்பட வேண்டிய விடயமும் கூட.
அவர் சுட்டிக்காட்டுகின்றமை போல வெளியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதார மற்றும் அன்றாட, அவசர பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் அதே முக்கியத் துவம் விசேடமாகக் கூறுவதானால் அதைவிட அதிக முக்கியத்துவமும் விரைவும் கைதிகள் மற்றும் காணா மற்போனோரின் விவகாரங்களில் காட்டப்பட வேண் டும்.
நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தும் முயற்சியில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக இவ்விவகாரம் பிணைக்கப்பட்டிருப்பதை யாரும் மறந்துவிடவோ, மறைத்துவிடவோ முடியாது. தடுப்புக் காவலில் சிக்கி யோர் விடுவிக்கப்படுதலும், காணாமற் போனோர் தொடர்பில் அவர்களின் குடும்பத்தவர்களுக்குப் பொறுப்பான பதில் வழங்கப்படுவதும் புறம் ஒதுக்க முடியாத நடவடிக்கைகளாகும்.
இத்தகைய காணாமற்போனோர் பிரச்சினை என்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்கு மட்டும் உரியதன்று. இலங்கை முழுவதும் வியாபித்திருக்கும் ஒரு சிக்கலாகும் இது.
இந்தச் சிக்கலின் ஆழ அகலம் அல்லது பரிமாணம் கடந்த ஆறுமாத காலத்துக்குள் புதிய விஸ்வரூப வடி வத்தை எடுத்திருப்பதை எவரும் அறியாதிருக்க முடியாது.
இப்பிரச்சினையைக் கையாண்டு குறைந்த பட்சம் நியாயமான தீர்வு ஒன்றைக் காணும் முயற்சியில் ஈடு படுவதற்கு முதலில் காணாமற் போனோர் பற்றிய முறை யான பதிவுப் பட்டியல் ஒன்று தேவைப்படுகின்றது. இத் தகைய பட்டியலைத் தயாரிப்பதில் மக்கள் கண்காணிப் புக் குழு போன்றவை தமது சக்திக்கும் அப்பாற்பட்ட வகையில் மும்முரமாகச் செயற்பட்டு, பல்வேறு முயற் சிகளையும் எடுத்தனவாயினும் அவற்றின் எல்லை களுக்கு அப்பாற்பட்ட காரணங்களின் பொருட்டு அம் முயற்சி முழு அளவிலான வெற்றியை எட்டவில்லை என்பதே உண்மையாகும்.
காணாமற்போனோரின் பட்டியலை முழுமையாகத் தயாரிப்பதற்கு முதலில் இலங்கைத் தீவில் உயிருடன் இருப்போரின் பட்டியல் அல்லது விவரம் அவசிய மாகும். வன்னிக்கு அப்பாற்பட்ட இடங்களில் வாழ்வோர் பற்றிய தகவல்களைத் திரட்டுவதும் அவர்களின் இருப்புப் பற்றிய விவரங்களை உறவினர்கள் உறுதிப் படுத்திக் கொள்வதும் இயன்ற காரியம்தான். ஆனால் வன்னியில் சிக்குண்டுள்ள லட்சக் கணக்கான தமிழ் மக்கள் விடயத்தில் நிலைமை அப்படியல்ல. முதலில் அங்கு தடுப்பு முகாம்களில் யார், யார் இருக்கின்றார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டால்தான் இல்லாமல் போனோர் அல்லது காணாமல் போனோர், "மாயமாக" மறைந் தோர், கொல்லப்பட்டோர் போன்றோரின் விவரம் அம் பலத்துக்கு வரும்.
தடுப்பு முகாம்களில் "சிறை" வைக்கப்பட்டுள்ள சுமார் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பேரின் பெயர், விவரங்கள் மற்றும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட் டால்தான், காணாமற் போனோரின் பட்டியலின் உண் மையான "பருமன்" தெளிவாகும்.
கடந்த 7 ஆம் திகதி மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு சந்தித்தபோதும் இத்தகைய பட்டியலை வெளி யிடும்படியே வற்புறுத்தியது. அதற்கு அரசுத் தரப்பு கொள்கை அளவில் இணங்கியது என்று கூறப்பட்டாலும், அந்த உறுதிமொழி நடைமுறையில் செயற்படுத்தப் படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேற்படி தடுப்பு முகாம்களுக்கு எதிரணி அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதி கள் போன்ற தரப்பினர் செல்வதற்குக் கடும் கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கின்றது.
அதேசமயம், வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டிருப்போர் மற்றும் காவலிலும், சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவோர் பற்றிய எண் ணிக்கைகள் தொடர்பான விடயங்களில் தொடர்ந்தும் குளறுபடியான செய்திகளே வெளிவருகின்றன.
வன்னிப் பெருநிலப்பரப்பை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து முற்றாக மீட்டாயிற்று என அரசு அறி வித்து நான்கு மாதங்கள் கடக்கப்போகின்றன. எனினும், இதுவரை வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டி ருப்போரின் முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் பகி ரங்கப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது. அது வெளிவரும்போதுதான் காணாமற்போனோர் பற்றிய உண்மை ரூபம் அம்பலமாகும்.
அந்தப் பட்டியல் வெளியாகும்போதுதான் மக்கள் கண்காணிப்புக் குழு போன்ற கட்டமைப்புகளின் உண் மையான பணி பன்மடங்கு சுமையோடு ஆரம்பமாகும் என்பதும் திண்ணம்.
தலைப்புகள்
ஆய்வு கட்டுரைகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.