புலிகளின் அரண்களை உடைத்து நுழைய 7 நாட்களாக கடும் சமர்: 1400 க்கு மேற்பட்ட படையினர் பலி; 6000 க்கு மேற்பட்டோர் காயம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில், விடுதலைப் புலிகளின் முன்னரங்க அரண்களை உடைத்து நுழைவதற்காக சிறிலங்கா படையினர் கடந்த ஏழு நாட்களாக எடுத்த பாரிய முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பின் கிழக்குப் பகுதியில் உள்ள இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பிரதேசங்களின் ஊடாக பாரிய முன்னேற்ற தாக்குதல் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த முன்னேற்ற முன்நகர்வு நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து நடத்தி வரும் முறியடிப்புச் சமர்களில் இதுவரை 1400 க்கு மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 6,000 க்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் படையணிகளுக்கு எதிராக சிறிலங்கா படையினர் ஏவும் எறிகணைகள் மற்றும் வான் குண்டுகள் பல சிறிலங்கா படையினர் மத்தியிலேயே வீழ்ந்து வெடிப்பதாலும் படையினர் தரப்பில் கணிசமான அளவு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், களமுனையில் கடுமையான நெருக்கடிகளை சிறிலங்கா படையினர் எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் வன்னிக் களமுனைகளில் இருந்து தப்பியோடும் படையினரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தலைப்புகள்
தமிழ் ஈழ செய்திகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.