அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் சுமார் 22 ஆண்டு களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் அமைதிப்படை என்ற பெயரில் நுழைந்த இந்தியத் துருப் புகள், 1990 முற்பகுதியில் வெளியேறியமையை அடுத்து கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அரசமைப்புத் திருத்தத்தின் கீழான அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடு, தமி ழர்களைப் பொறுத்தவரை குப்பைக்கூடைக்குள் போய்விட்டது என்பது திண்ணம்.அதனை மீளத் தூசுதட்டி எடுத்து, தமிழ்ச் சமூகத்துக் குப் புதுப்பித்துப் பரிமாறுவது குறித்து இப்போது பேசப் படுகின்றது.
ஏற்கனவே நாறிப்போன குப்பைக் கூடைக் குள்போன இந்த ஏற்பாடு, இலங்கைத் தமிழர்களின் நீதி, நியாயமான அபிலாஷைகளை எதிர்பார்ப்புகளை அவாவை விருப்பத்தை நிறைவு செய்யுமா என்பது வேறு விடயம்.ஆனால், அந்தப் பதின்மூன்றாவது திருத்தத்தில் உள்ள அனைத்தையுமாவது அல்லது அதையும் தாண்டி அதிகமானவற்றை தமிழர்களுக்கு விட்டுக்கொடுக்கத் தென்னிலங்கைச் சமூகம் தயாரா என்பதுதான் இப்போ தைய பிரதான கேள்வியாகும்.
விடுதலைப் புலிகளை அழித்து ஒழித்துவிட்டதாகக் கொழும்பு மார்தட்டும் இந்தச் சூழலில், இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைச் சமாளித்துக் காலத்தை இழுத்தடிப்பதற்காக இப்போதைக்கு 13 ஆவது திருத்தம் குறித்து வாயளவில் பேசுவது வேறு.உண் மையில் தமிழர்களுக்கு நியாயம் செய்யும் வகையில் அதிகாரப் பகிர்வை வழங்கவேண்டும் என்ற நீதியைப் புரிந்துகொண்டு அதனடிப்படையில் விடயங்களை அணு குவது வேறு.
இதில் கொழும்பு அதிகாரவர்க்கம் எந்த நிலைப்பாட்டில் உண்மையில் உள்ளது என்பதை இனித் தான் போகப் போகத்தான் நாம் புரிந்துகொள்ள முடியும்.ஆனால், இவ்விடயத்தில் தென்னிலங்கை அதிகார வர்க்கத்தின் கடந்தகால செயற்பாடுகளும், நடவடிக் கைகளும் நம்பிக்கையளித்து ஏமாற்றுவனவாகவே அமைந்தன என்பதும் இங்கு மறுக்கப்பட முடியாததாகும்.
யாழ்., வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல் விவ காரங்களுக்காக அந்தப் பிரதேசங்களுக்கு விஜயம்செய் யும் அரசுத் தலைவர்கள், தமிழர்களுக்கு நியாயமான அதி காரப் பரவலாக்கலை வழங்க அரசுதயார் என்று தங்களது பரப்புரைகளிடையே தவறாது உறுதி வழங்கி வருகின்றனர்.அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று தமிழ் மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர் வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயார் என்றும், அது தொடர்பாக ஜனாதிபதியுடன் தங்களுக்கு ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே யாழ். மாநகர சபைக்கான தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் அரசுத் தரப்புக் கூட்டணியின் சின்னத்தில் போட்டி யிடத் தாங்கள் முன்வந்தனர் என்றும் ஈ.பி.டி.பியின் செய லாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூறியிருக்கின்றார்.நல்லது.
இத்தகைய இணக்கப்பாடு ஒன்றை நேரத் துடன் வலியுறுத்தி, அதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதி பதியான அரசுத் தலைவரை சம்மதிக்கவைக்க எடுத்த முயற்சிகள் வரவேற்கத்தக்கவைதான்.ஆனால், இந்த இணக்கப்பாடு எல்லாம் வெறுமனே "அரசமைப்பின் 13 ஆவது திருத்தம்", "13 ஆவது திருத் தத்துக்கு அப்பாலும் செல்வது" என வெறும் வாய் வார்த்தை ஜாலங்களாக இருப்பது போதுமானதல்ல.இந்த விவகாரத்தில் தெளிவான சில பிரச்சினைகள் உள்ளன.
* தமிழர் தாயகத்தின் ஐக்கியத்தை உறுதிப்படுத்தும் வடக்கு கிழக்கு இணைப்பு.
* தமிழர் பிரதேசத்துக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டவாறு பொலிஸ், காணி அதிகாரங் கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தல்.
*இவற்றுக்கும் அப்பால் சென்று வழங்கப்படக் கூடிய பகிரப்படக்கூடிய எஞ்சிய அதிகாரங்கள்.
இந்த மூன்று விடயங்கள் குறித்தும் வெளிப்படை யாகவும் மக்களுக்குப் புரியத்தக்க விதத்திலும் கருத் துகளும், நிலைப்பாடுகளும் முன்வைக்கப்பட வேண் டும்; தெளிவுபடுத்தப்பட வேண்டும்.இந்த விடயங்களை வெளிவெளியாகப் பேசி, அவை குறித்துத் தமது நிலைப்பாட்டை அம்பலப்படுத்தாமல் மூடி மறைத்துக் கொண்டு,
பூடகமாக "அதிகாரப் பகிர்வு" என்ற சொற் பிரயோகத்துக்குப் பின்னால், வார்த்தை ஜாலம் பண்ணிக்கொண்டிருப்பது விரும்பத்தக்கது அல்ல; தமிழர்களிடம் நம்பிக்கையை வளர்க்கக் கூடியது அல்ல.ஆகையால் இவ்விடயத்தில் தெளிவாகவும், விவரமாக வும், வெளிப்படையாகவும் கருத்துக்களை முன்வைப் பதற்கு அரசுத் தரப்பினர் முதலில் முன்வரவேண்டும்.அப்போதுதான் மக்களும் தமது பதிலைத் தெளிவான முறையில் பிரதிபலிக்க வாய்ப்பு ஏற்படும்.அரசியல் தலைவர்கள் இதைச் செய்யத் தயாரா?
நன்றி :
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.