இலங்கைப் பிரச்சினை தொடர்பாக சொல்ஹெய்ம் நடேசனுடன் தொலைபேசியில் உரையாடினார்;


நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நேற்று மாலை வன்னியில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனுடன் தொலைபேசியின் ஊடாக உரையாடியுள்ளார்.
இந்த உரையாடல் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பிரதானி புலித்தேவன் இது தொடர்பில் கருத்துரைக்கையில்,

தமிழர் பிரச்சினையின் தற்போதைய நிலை தொடர்பாகவும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில், இலங்கையின் நிலவரம் தொடர்பாக பேசப்பட்ட பிந்திய நிலைகள் தொடர்பாகவும் உரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த உரையாடலின் போது, இலங்கை நிலவரம் தொடர்பில் சர்வதேசத்தின் நிலை குறித்து, சொல்ஹெய்ம் விளக்கமளித்தார்.

சர்வதேச சமூகம் இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சொல்ஹெய்ம் இதன் போது தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நடேசனும் தமிழர் படுகொலைகள் குறித்து தகவல்களை வழங்கியதாக புலித்தேவன் இன்று காலை குறிப்பிட்டார்.

நாள்தோறும் வன்னியில் சிறிய நிலப்பரப்புக்குள் கட்டுண்டுள்ள சிறுவர்கள் பெண்கள் உட்பட்ட 100 பொதுமக்கள் வரை படையினரின் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக நடேசன் இதன் போது குறிப்பிட்டார்.

இந்தநிலையில், கொலைகளை நிறுத்தி உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என நடேசன், சொல்ஹெய்ம்மிடம் வலியுறுத்தினார்.

அத்துடன் தமிழர்கள், இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறையின் கீழ் வாழ விரும்பவில்லை என்றும், அவர்கள், தமிழ்தேசம் என்ற அபிலாசையுடன் வாழ விரும்புகிறார்கள் எனவும் தெரிவித்த நடேசன், இதற்கு சர்வதேச முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என சொல்ஹெய்மிடம் தெரிவித்தார்.

1 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.