பொதுமக்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக எங்களிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்று விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் பி.நடேசன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பி.நடேசன் கூறியிருப்பதாவது:
ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வழிகாட்டியுள்ளது. பொதுமக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்துவதை செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் அறிவார்கள்.
சமீபத்தில், பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் பொதுமக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியபோது செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொரு பணியாளர் காயமடைந்தார்.
மேலும், மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தடுக்கும் வகையில் இலங்கை அரசு மருந்துப் பொருட்கள் விநியோகத்திற்கு தடை விதித்துள்ளது.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. பலர் தனிமைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
முல்லைத்தீவில் பொதுமக்களின் நிலை குறித்து ஆராய சர்வதேசப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் உண்மை வெளிவரும்.
பொதுமக்கள் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக எங்களிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.