
இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஈழத்தமிழர்களை காக்க 5 சூளுரைகளை இயக்கத்தின் தலைவர்கள் வெளியிட்டனர்.
1. இலங்கை சிங்கள அரசின் கொலைவெறி இராணுவத் தாக்குதலுக்கு ஆளாகி மரணத்தின் விளிம்பில் துடிக்கிற நமது தொப்புள் கொடி உறவுகளை ஈழத்தமிழ்மக்களை பாதுகாக்க வீறு கொண்டு எழுவோம். ஒற்றுமையுடன் போராடுவோம்.
2. தமிழின அழிப்பு போரை நடத்தும் சிங்கள பேரினவாத ராஜபக்ச அரசுக்கு, இராணுவ ரீதியான உதவி உட்பட அனைத்து வகை உதவிகளையும் வழங்கி துணை நிற்கும் இந்திய அரசின் மன்னிக்க முடியாத துரோகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
3. தமிழக மக்கள் ஒன்றுபட்டு எழுப்பும் போர் நிறுத்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி போராட உறுதி பூணுகிறோம்.
4. அரசியல் சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து ஈழத்தமிழர் துன்பம் துடைப்பதில் முன்னிற்போம் என உறுதி கூறி கரம் கோற்கிறோம்.
5. எத்தகைய அடக்கு முறைகளுக்கும் அஞ்சாமல் அனைத்து விதமான தியாகங்களுக்கும் தயாராகி, ஈழத்தமிழர்களை பாதுகாக்க ஒன்றுபட்டு போராடுவோம் என வீர தியாகிகள் முத்துக்குமார், ரவி ஆகியோரின் பெயரால் ஆணையிட்டு சூளுரைக்கிறோம்.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.