வீரியரின் பூமியாக இது விளங்கட்டும்



சிறிலங்கா என்றால் இப்போது உலகால் எவ்வாறு பொருள் கொள்ளப்படும்? அண்மையில் வோசிங்டனிலுள்ள ஆய்வமைப்பொன்று உலகிலுள்ள தோற்றுப்போய்விட்ட நாடுகள் பட்டியலொன்றைத் தயாரித்தது.



பல்வேறு குறிகாட்டிகளை அடிப்படையாகவைத்து அறிவியலடிப்படையில் இது தயாரிக்கப்பட்டது. எங்கே ஒரு அரசாங்க்கம் தனது ஆள் புலத்த்தின் கட்டுப்ப்பாட்டினை இழக்க்கிறதோ, எங்கே அதன் கணிசமான குடிமக்க்கள் அதனைச் சட்ட்டபூர்வ்வமான அரசாங்க்கமாகக் கருத மறுக்கின்றார்களோ, எங்கே அதனால் தனது மக்களுக்குரிய பாது காப்ப்பினை வழங்க்கமுடியாமல் அவர்க்களுக் கான பொதுத்தேவைகளை நிறைவேற்ற்ற முடியாமல் இருக்கின்றதோ, எங்கே தனது படைப்பலப் பிரயோகத்தில் தனியுரிமையை இழக்கிறதோ, அங்கே அது தோற்றுப்போய்விட்ட அரசாகக்
கருதப்ப்படும்.

இத்தகைய நிலையிலுள்ள 40 நாடுகளை மிக ஆபத்தான, ஆபத்தான நிலை என இரண்டாக வகுத்து வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் சிறிலங்கா 25ஆவது இடத்திலுள்ளது. 2006ஆம் ஆண்டு அறிக்கையில் சிறிலங்கா எந்த இடத்தைப் பெறும்? ஈராக், ஆப்கான், பாகிஸ்தான் போன்றவை இடம் பெறும் முதல் பத்து நாடுகள் வரிசையிலா? இவ்வாறு சிறிலங்கா தோற்றுப் போவதற்கு எது பிரதான காரணம்? அமெரிக்கப் பேராசிரியர் புல்ஜென்ஸ் கூறுகின்றார். எதையும் நினைவில் கொள்ளாத, ஞாபகத்தில் வைத் திருக்க்காத மறதித் தேசமிது. மாமனிதர் சிவராம் கணக்கிட்டு எழுதியதுபோல தனது முழு படைபலத்தின் 80 விழுக்காட்டிற்கு மேலாகத் திரட்டி, பல நாட்களாக ஒரு நாளில் பல தடவைகளாகப் படையெடுத்தும் அக்கினிச் சுவாலை சந்தித்த படுதோல்வியைக் கூட மறந்துவிட்ட கடும் மறதிநோயால் அவதிப்படும் தேசமிது.



1956ஆம் ஆண்டு இனக்கொலை நிகழ்த்தப் பட்ட காலம் தொட்டு மிக அண்மைக்காலம் வரை தமிழ் மக்கள் திட்டமிட்டுப் பாதுகாப்புத் தரப்பால் படுகொலை செய்யப்படும் இந்த நாள்வரை 150இற்கு மேற்பட்ட கொத்துக்கொத்தான படுகொலை நிகழ்வுகள் பதிவாக்கப் பட்டுள்ளன. 1940களிலிருந்து ஒவ்வொரு பத்தாண்டுகளாகத் தமிழ்த் தேசிய இனத்தின் பாரம்பரிய வதிவிடங்கள் பறித்தெடுக்கப்பட்டன. (இவை தொடர்பில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட திருமலை ரவி ஏறத்தாழ எண்ணாயிரம் சதுரகிலோமீற்றர் பரப்பளவு சிங்க்களவர் நடத்துதுவது பழிவாங்க்கல், படுகொலையல்ல்ல. இது திட்ட்டமிட்டு மேற்கொள்ள்ளப்ப்படும் இனக்கொலை. ஒரு இனத்தைப் புவிப்ப்பந்த்திலிருந்து அகற்ற்றப் பல வழிகளாலும் மேற்கொள்ள்ளப்ப்படும் திட்ட்டமொன்ற்றின் முதன்மைச் செயற்ப்பாடு
என்ப்பதை உணர்த்தலே. இதன் விளைவென்ன? 1956இன் பின்னர் தமிழர் குருதியால் குளிப்பாட்டப்பட்ட இத் தேசத்தில் மீண்டும் குருதிக் காட்டின் ஓலங்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையை சர்வதேசம் ஓரளவிற்காவது புரியத் தொடங்கியுள்ளது என்று நாம் கூறமுடியும். வழமையாகப் பேச்சுக்களில் முடக்கம், தேக்க மேற்படும் பொழுது போராட்ட இயக்கங்கள்மேல் பழிபோடும் உலகு இப்போது இங்கு இரு தரப்பையும் கண்டித்து அறிக்கை விட்டதோடு நிற்காமல் முத் தரப்பையும் கடுமையாகக் கண்டிக்கும் நிலை யிலுள்ளது. நீதிக்குப் புறம்பான வகையில் நிகழ்த்தப்படும் படுகொலைகளை விசாரிக்கும் ஐ.நாவின் விசேட பிரதிநிதியான பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் தன் வருடாந்த அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். சிறிலங்கா அரசு அரசியற் படுகொலைகள் பற்றிய விசாரணைகளை முறையாக மேற் கொள்ளவில்லை.



இவை தொடர்பில் எவரும் அடையாளம் காணப்பட்டதாகவோ, கைதான தாகவோ அறியப்படவில்லை. அப்படி ஏதும் நடந்திருந்தாலும் சாட்சிகள் கடும் அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதற்கு அண்மையில் திருமலையில் ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தையான மருத்துவர் மனோகரனுக்கு விடப்படும் மிரட்டல்களை உதாரணமாகக் காட்டலாம். மிக அண்மையில் சிங்களத் தேசத்திற்குச் சற்று அதிர்ச்சியூட்டும் அறிவிப்பொன்று வெளிவந்தது. ஏப்பிரல் 1995ஆம் ஆண்டு அமெரிக்க ஒக்கலகோமா அரசு கட்டிடம் மீதான குண்டுத்தாக்குதலின் பின் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட TKB எனப்படும் (TERRORISM KNOWLEDGE BASE) பயங்கரவாதத் தகவல் தளம் எனப் படும் அமைப்பே ஜாதிககெல உறுமயவின் முன்னோடி அமைப்பான சிகல உறுமயவைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலில் சேர்த்துள்ளது. இவ்வாறாக ஆங்காங்கே சருவதேசம் நீண்ட உறக்கத்திலிருந்து விழிப்பதாகத் தெரிந்தாலும் இவையாவும் சிங்கள தேசத்தில் ஏதாவது தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது ஐயத்திற்குரியது. தனது போக்கிற்குச் சாதகமற்ற கருத்துக்களைப் புறந்தள்ளுவதே சிங்களத்தின் இயல்பு. நிலம் பறிக்கப்பட்டதாகக்
கணித்துள்ளார்.) 1940கள் தொட்டு இற்றைவரை நிலப்பறிப்பும், இனக்கொலை களும் தொடர்கின்றன. எனவே எம் மக்கள் மனம் குமுறிக் கொந்தளித்து குரலெழுப்புகின்றனர்.எனவே இத்தகைய நிலையிலே மீண்டும் படுகொலைகள் அரங்கேற எம் தாயகம் குருதியால் குளிப்பாட்டப்படுகின்றது.

1956ஆம் ஆண்டு யூன் மாதம் 05ஆம் திகதி இங்கினியாகலையில் கரும்புத் தொழிற்சாலையில் பணி செய்துகொண்டிருந்த 150 தமிழ் தொழிலாளர்கள் அதே தொழிற்சாலை யில் பணி செய்த சிங்களவரால் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டுக் கொலைசெய்யப்பட்டு அரைகுறை உயிருடன் இருந்தவர்களையும் எரியும் தீயில் தூக்கிவீசிய அக்கணம் தொட்டு இக்கட்டுரை எழுதி முடிக்கும் வரை ஆங்காங்கே கொல்லப்பட்டு வீசப்பட்டு கிடக்கும் தேசப்பறற்ளாரை சிங்க்களவர் நடத்துதுவது பழிவாங்கல், படுகொலையல்ல. இது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இனக்கொலை. ஒரு இனத்தைப் புவிப்பந்திலிருந்துது அகற்ற்றப் பல வழிகளாலும் மேற்கொள்ளப்படும் திட்டமொன்றின் முதன்மைச் செயற்ப்பாடு என்ப்பதை உணர்த்தலே.




இனக்கொலையென்றால் என்ன? இதற்குரிய சட்ட வரைவிலக்கணம் என்ன? போலந்து நாட்டைச் சேர்ந்த யூத அறிஞரான ராபேல் லெம்கின் (RAPHAEL LEMKIN 1900 - 1959 ) என்பவர் யூதருக்கெதிரான கிட்லரின் இனக்கொலையின் பின்னணியில் எடுத்த அயராத முயற்சியின் விளைவாகச் சருவதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இனக்கொலையைத் தண்டிப்பதற்கான, தடுப்பதற்கான சட்டக்கோவையொன்று 1948ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் திகதி ஐ.நா பொதுச்சபையில் அங்கீகரிக்கப்பட்டது.




1951ஆம் ஆண்டு சனவரி 12ஆம் திகதி (தீர்மான இல 260 (111)) மூலம் இவ்விதிகள் நடைமுறைக்கு வந்தன. இதன் விதிகள் பல நாடுகளின் தேசிய குற்றவியல் சட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாகச் சருவதேசக் குற்றவியல் நீதிமன்றும் (ICC) தாபிக்கப்பட்டது. இவற்றின்படி பின்வருவன வற்றில் ஏதாவது ஒரு செயற்பாடு தேசியத்தின் இனக்குழுமத்தின், மதக்குழுவொன்றின் அல்லது இவை போன்றவற்றினை, முழுமை யாகவோ, பகுதியாகவோ அழிப்பதற்கான இலக்கைக்கொண்டு நிகழ்த்தப்படுமாயின் அது இனக்கொலையாகும். அவையாவன

(அ) இத்தகைய குழுவொன்றின் அங்கத்தவர்களைக் கொலைசெய்தல்.
(ஆ) இத்தகைய குழுவொன்றின் அங்கத்தவர்களுக்கு உடல் ரீதியான அல்லது மனரீதியான கடுமையான தீங்கினைச் செய்தல்.
(இ) இத்தகைய குழுவொன்றின் பௌதிக இருப்பினை முற்றாக, அல்லது பகுதியாக அழிப்பதற்காக இக்குழுவின் வாழ்நிலையில் வேண்டுமென்றே பெரும் பாதிப்பினை ஏற்படுத்தல்.
(ஈ) இக் குழுவினுள் குழந்தைகளின் பிறப்புக்களைத் தடுக்கும் நோக்குடன் செயற்படல்.
(உ) இத்தகைய குழுவொன்றின்குழந்தைகளை இன்னொரு குழுவிற்குக் கைமாற்றிவிடல்.

ஆகவே, தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் மீது நடத்தப்படுவது இனக்கொலையே. இனக்கொலை என ஒவ்வொரு முறையும் உலகால் உச்சரிக்கப்படும் பொழுது அது மீண்டும் நடந்துவிடக் கூடாதென்பதே உலகின் தியானம் எனப்பட்டாலும்
அது உண்மையில் அவ்வாறில்லை. நாசிகளிடமிருந்து கற்ற பாடம் உலகிற்கு எவ்வகையில் பயன்பட்டது? குறிப்பாக றுவண்டா வில் நடைபெற்ற 10 இலட்சம் மக்களின் படுகொலைகளை உலகம் நினைத்திருந்தால் தடுக்க முடிந்திருக்கும் என்பது பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது.





இனக்கொலை நடக்க
முன்னர் அதையுணர்ந்து தடுக்காமல், நடந்த பின் குற்றவியல் நீதிமன்றுகளை உருவாக்கி விசாரிப்பதால் என்ன பயன் என்பது அறிஞர் களால் முன் வைக்கப்படும் விவாதம். எனவே சிறிலங்காவில் கொலைவெறி பிடித்தாடும் குழுக்களுக்கு நேரடியாகத் துணைபுரியும் சிறிலங்கா அரசோடு நட்புப்பேணும் உலகம், அதைப் பலப்படுத்திட உதவும் உலகம் இன்னொரு றுவண்டாவாக, பொசுனியாவாக இத்தீவு மாறாமல் தடுத்திட முனையும் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதியென்பதன் பொருளென்ன? இது இனக்கொலைக்குத் தூண்டலாக அமைகிறதல்லவா? எனவேதான் மிகக் காத்திரமான,
தீர்மானமான முடிவொன்றைச் சர்வதேசத்தின் முன் புலிகள் இப்போது வைக்கின்றார்கள்.

தள்ளி நில்
பிய்த்துப் பிடுங்குவதற்கு
நகங்கொண்ட
பிசாசே உன் கையை எடு!
எம் உயிர் கொண்டபிணைப்பின் வலயத்துள்
ஏன் நுழைந்தாய்?
உந்திக் கமலத்தின்
உடனிருப்பை ஏன் பறித்தாய்?

குறு நகை மலர்க்களை
குழந்தைகளின் கழுத்தை
திருகியெறிந்ததென
காலடிக் கீழீழ் போட்ட்டாயே பாவி
பால் குடியின் மென் கதறல்
கேளாச் செவி படைத்த்தாய்!!




இத்தகைய நிலையிலே புலிகள் புதிய பரிமாணமொன்றினைப் புலப்படுத்து கின்றார்கள். சிங்களமும் சருவதேசமும் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகளைத் தாமே
நிறைவேற்றுகின்றனர். சிங்களத்தினை ஷஷசன நாயகப் படுத்தும் பொறுப்பு - போர்நிறுத்த உடன்பாட்டின் சிங்களத் தரப்பின் கடப்பாடுகளை நிறைவேற்றும் பொறுப்பு. (ஏன் சிங்களத்தினை பேச்சிற்கு அழைத்துவந்ததும் புலிகளேயல்லவா) இவை யாவற்றினையும் விட இன்னொரு இனக்கொலை இங்கே நிகழாமல் தடுத்திடும் இமாலயப்பணியும் புலிகளுக்கேயுரியது. இவ்வகையில் எமது தாயகம் வீரியரின் பூமியாக இப்போது திகழ்கின்றது.

வராலாறு தமிழரைப் பார்த்துச் சொல்கின்றது.
அறிக
உனதிருப்பில் இமயத்தின் வலுவேற்றம்
உச்சியிலே
விடுதலை ஞாயிற்றின் சிரசுதயம்
மீட்டெடு - மீட்டெடு
புவியெங்கும் உயிர்க்குருதிச் சுற்றோட்டம்
நிகழவிடு.


- க. வே. பாலகுமாரன


அல்லைப்ப்பிட்டிப் படுகொலை - 2006 (இங்கு கையாளப்பட்ட அனைத்து கவிதை வரிகளும் நன்றியுடன் கவிஞர் வில்வரத்தினத்தின் காலத்துயர் கவிதை நூலிருந்து பெறப்பட்டவை)

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.