அரசின் இராணுவ மேலாதிக்க கனவை தகர்த்த குண்டு



ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பில் தாஜ்சமுத்திரா ஆடம்பரவிடுதியின் மொட்டை மாடியில் காலிமுகத்திடல் வீதியை பார்த்தபடி இந்து சமுத்திரத்தின் அலைகளை தழுவிவந்த இதமான காற்றில் ஓய்வெடுத்து கொண்டு இருந்த ஒரு உல்லாசப்பயணியின் அனுபவம் இது.


“ஒரு கார் வந்துகொண்டிருந்தது அதன்பின்னால் வந்த இராணுவ ஜுப் காரில் வருவது ஒரு படை உயரதிகாரி என உணர்த்தியது. திடீரென பின்னால் இருந்து வந்த ஒரு மோட்டார் சைக்கிள் காருடன் மோதியது மறுகணம் பாரிய வெடியோசையுடன் கார் தூக்கி வீசப்பட்டது”. என்னால் என் கண்களையே நம்பமுடியவில்லை கொலிவுட் படங்களில் தான் இவ்வாறான காட்சிகளை பார்த்ததுண்டு. என விபரித்தார் அந்த உல்லாசப்பயணி.

அன்று (16.11.1992) பலியாகியது சிங்கள அரசின் கடற்படைத்தளபதி அட்மிரல் கிளான்சி பெர்னான்டோ. யார் இந்த கிளான்சி பெர்னாண்டோ? 1992 இல் கடற்படைத்தளபதியாக இருந்த போது தங்கள் அன்றாடதேவைகளுக்காக கிளாலி கடல் நீரேரியினூடு பயணித்த பெருமளவு அப்பாவி மக்களை படுகொலை செய்த பெருமைக்குரியவர். இறுதியில் அதற்குரிய விலையை கொடுத்திருந்தார்.

1992 இல் நிகழ்ந்தது போன்ற ஒரு தாக்குதலே ஆனி மாதம் 26 ஆம் நாள் பன்னிப்பிட்டியாவில் நடைபெற்றுள்ளது. 26.06.2006 அன்று காலை 7.30 மணிக்கு மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கா பன்னிப்பிட்டியாவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இராணுவத்தலைமையகம் நோக்கி பிக்கப் வாகனத்தில் பாதுகாவலர்கள் பின்தொடர தனது பிரான்ஸ் நாட்டு தயாரிப்பா பேஜோ (Peugeot 406) காரில் புறப்பட்டார். இத் தொடரணி சிறிது தூரம் சென்று தேவுராம்விகாரை வீதிக்கு திரும்ப முற்பட்ட போது பின்பக்கமாக இருந்து வந்த மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு பிரிவினரின் வாகனத்தை கடந்து சென்று ஜெனரலின் காருடன் மோதியது. பாரிய வெடியோசை கார் சின்னாபின்னமாகியதுடன் தீப்பற்றிக்கொண்டது.

குலதுங்காவும் அவரது மெய்பாதுகாவலரும் இராணுவ ஓட்டுனரும் அதே இடத்தில் பலியாக, பிக்கப் வாகனத்தில் சென்ற பாதுகாவலர்கள் படுகாயம் அடைந்தனர். இங்கு வெடித்த குண்டின் தன்மை இராணுவத்தையும் அரசையும் கதிகலங்க வைத்துள்ளது. சின்னாபின்னமாகி உருக்குலைந்து போன ஜெனரலின் காரை தகர்த்த குண்டு, குண்டு துளைக்காத காரையும் இலக்குவைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது புலனாகின்றது. அண்மையில் பொரும் செலவில் ஜேர்மனியில் இருந்து அரசில்வாதிகனதும், படையதிகாரிகளினதும் பிரத்தியோக பாதுகாப்பிற்கு என கொள்வனவு செய்யப்பட்ட குண்டுதுளைக்காத கார்களின் பாதுகாப்புத்தன்மை கேள்விக்குறியானதுடன் உயரதிகாரிகளிற்கும் கலக்கம் பிடித்துள்ளது.

மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கா இராணுவத்தின் சிறந்த தளபதி 35 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளதுடன். இராணுவத்தின் மூன்றாம் நிலை உயரதிகாரியுமாவார். குண்டுத்தாக்குதலின் பின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா பணியில் இருந்து அகற்றப்பட இரண்டம் நிலை அதிகாரியாக இவர் பணியாற்றினார். யாழ்குடா நாட்டு ஆக்கிரமிப்பு போருக்காக 1995 இல் பதக்கமும் பெற்றவர். அத்துடன் 1980 களின் பிற்பகுதிகளில் சிங்கள இராணுவத்தின் புலனாய்வுத்துறையில் பணியாற்றியதுடன் ஆனையிறவு யாழ்ப்பாணம், வரணிப்பகுதிகளிலும் பணியாற்றிய அனுபவமுள்ளவர்.





சிங்கள இராணுவத்தின் ஆழஊடுருவும் படையணியின் உருவாக்கத்திலும் அதன் தாக்குதல் நடவடிக்கைகளிலும் இவரின் பங்கு முக்கியமானது. புலனாய்வுத்துறையில் அதிக தேர்ச்சியுடைய குலதுங்கா தமிழ் தேசவிரோத குழுக்களின் உதவியுடன் 2001 ஆண்டில் இராணுவத்தின் ஆழஊடுருவும் படையணியை அமைத்தார். இவர் வன்னிக்கான தளபதியாக இருந்த 2001 ஆம் ஆண்டில் தான் வன்னியில் ஆழஊடுருவும் படையணியின் தாக்குதலில் கேணல் சங்கர் வீரச்சாவடைந்தார். அமைதிப் பேச்சிற்கு சென்ற தமிழ்ச்செல்வனும் இலக்கு வைக்கப்பட்டார் எனினும் அதிஸ்டவசமாக தாக்குதலில் இருந்து தப்பிக்கொண்டார்.

இந்த வருட ஆரம்பம் முதல் இன்று வரை (29.06.2006) விடுலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் 26 கிளைமோர் தாக்குதால்கள் நாடத்தப்பட்டுள்ளன. 42 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் இதில் பெரும்பாலானவர்கள் அப்பாவிப் பொதுமக்களாவார். புலிகளை பொறுத்தவரை இரண்டு தளபதிகளையும் இழந்துள்ளார்கள், இத்தாக்குதல்களில் குலதுங்காவின் பங்கு அதிகம் ஆனால் இதன் எதிர்வினை தான் இவர் மீதான தாக்குதல் என்றால் மிகையாகாது.



1981 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் லெப் சீலன் தான் யாழ்பாணத்தில் முதல் முதலாக சிங்கள இராணுவத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டவர். வெற்றிகரமான இத்தாக்குதலில் இரு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அன்றில் இருந்து இன்று வரையான 25 வருட போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட உயர்நிலை சிங்கள இராணுவ அதிகாரி குலதுங்கா ஆவார். 1992 ஆவணி மாதம் அராலித்துறையில் கொல்லப்பட்ட லெப். ஜெனரல் டென்சில் கொப்பேகடுவா கூட இறக்கும்போது இராணுத்தின் நான்காவது நிலையிலேயே இருந்தார்.

இரு மாதங்களில் அடுத்தடுத்து இராணுவத்தின் முதலாம் மூன்றாம் நிலை அதிகாரிகள் அவர்களின் கோட்டைக்குள் வைத்து தாக்கப்பட்டது இராணுவத்தின் போரிடும் மனோவலுவை சிதறடித்துள்ளது. சிங்கள அரசின் தலைநகரத்தின் பாதுகாப்பு அதன் புலனாய்வுத்துறையின் இயங்கு தன்மை பற்றி தெற்கில் கேள்வியை எழுப்பியுள்ளதுடன் இராணுவத்தை பொறுத்தவரை சிறந்த அதிகாரிகளுக்கான பாரிய வெற்றிடம் ஒன்று உருவாகியுள்ளது.

இராணுவத்தில் ஐ.தே.க சார்பானவர்கள், அரசு சார்பானவர்கள் என இரு பெரிய பிரிவினைகள் உண்டு. இப்பிரிவினைகள் கீழ்மட்ட சிப்பாய்கள் தொடக்கம் ஐந்து நட்சத்திர அதிகாரிகள் வரையிலும் உண்டு. தற்போது ஜே.வி.பி யின் ஊடுருவல்களும் அதிகம். இதனால் தான் இராணுவத்தளபதி சரத்பொன்செக்காவின் பதவிநியமனத்துடன் இராணுவத்தில் பாரிய கட்டமைப்பு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.

இது அதிகாரிகள் மட்டத்தில் எதிர்ப்பலைகளை உருவாக்கி இருந்தபோதும் மேஜர் ஜெனரல் வஜுர குனவர்த்தன கூட அரசியல் காரணங்களால் கொழும்புக்கான பாதுகாப்பு தலைமை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். பாதுகாப்பு செயலாளர் பொறுப்பில் மகிந்தாவின் இளைய சகோதரரும் முன்iனாள் இராணுவ கேணலுமான கோட்டபாய ராஜபக்சா நியமிக்கப்படார். மகிந்தாவை பொறுத்தவரை தனக்கு சார்பானவர்களையே உயர்பதவிகில் நியமித்துள்ளார். இது அவரின் நீண்டகால அரசியல் நலன்களுக்கு அவசியமானதுமாகும். ஆனால் இரு மாதத்தில் அவருக்கு விசுவாசமான இரு ஜெனரல்களின் மீதான தாக்குதல்கள் அவரது அரசியல் மற்றும் இராணுவ வியுகங்களுக்கு விழுந்த அடியாகும்.

தமிழீழ விடுதலைப் போரை பொறுத்தவரை மக்கள் படையணிகளின் கட்டுமான பயிற்சிகளும், புலிகளின் விசேட உந்துருளிப்படையணி, விமானப்படையணி என்பனவற்றின் தோற்றமும் புலிகளின் மரபுவழிப்படைக்கு மேலும் வலுச்சேர்த்துள்ளன. அத்துடன் இந்த மரபுவழிப்படையணியை பேணுவதற்குரிய அரசியல் முதிர்ச்சியை தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் மக்கள் அடைந்துள்ளதையே அண்மைய தாயகத்து, புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் போராட்டங்கள் காட்டுகின்றன.

இராணுவ போர்த்தந்திரங்கள் ஓடும் நீரை போன்றவை அதாவது உயர்ந்ந இடத்தைவிட தாழ்வான நிலத்தை நோக்கியே ஓடும். இராணுவ நடவடிக்கைகளும் பலவீனமான எதிரியை நோக்கியே முடுக்கிவிடப்படுவதுண்டு. இது 6ஆம் நூற்றாண்டின் சீன போரியல் மேதை சன்சூ (ளுரn-வுணர) கூறியது.

சிங்கள அரசின் தற்போதைய நகர்வுகளும் சன்சூ வின் கருத்தை அடிப்படையாக கொண்டதே. அதாவது புலிகளின் மரபுவழி போர்வலுவை உடைத்து இராணுவச்சமநிலையில் அரசு மேலோங்கினால் புலிகளின் மீது ஒரு போரை திணித்து இனப்பிரச்சனைக்கு இராணுவத்தீர்வை எட்டலாம் என்பதாகும். புலிகள் பலவீனமாகி விட்டார்கள் என கருதினால் அரசு உடனடியாக ஒரு வலிந்த போரை தமிழ் மக்களின் மீது தொடுக்கும் என்பதே உண்மை.

அதன் முதற்கட்டமாக தமிழ் மக்களின் மனோவலிமையை சிதைக்கும் நடவடிக்கைகளை அரசு ஆரம்பித்துள்ளது. சர்வதேச தடைகளை ஏற்படுத்துதல், தமிழர் தாயகத்தில் இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிகளில் இரகசியமாக படுகொலை செய்யும் குழுவை (ளுநஉசநவ முடைடiபெ ஆயஉhiநெ) ஏற்படுத்தி இதன் மூலம் தேசப்பற்றாளர்கள், ஊடகவியளாளர்கள், வர்த்தகர்கள் போன்றோரை படுகொலை செய்தல். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் அதிகளவு தாக்குதல்களை நிகழ்த்துதல் என்பன. இந்த நடவடிக்கைகளின் ஊடாக மக்கள் மத்தியில் அச்சத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தி அவர்களின் மனோவலிமையை குறைக்க அரசு முனைகின்றது.

இரண்டாவது கட்டமாக புலிகளின் தளபதிகளையும், முக்கிய தலைவர்களையும் படுகொலை செய்தல், சர்வதேசத்தில் தடைகளை ஏற்படுத்தி புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பொருளாதார உதவிகளை தடுத்தல், நோர்வேயை பேச்சுக்களில் இருந்து வெளியேற்றுதல். இவற்றின் மூலம் புலிகளின் இராணுவ அரசியல் பலத்தை சிதறடித்து இராணுவ சமநிலையையில் மேலோங்குவதே அரசின் கனவு. ஆனால் அண்மைக்காலத் தாக்குதல்களில் சிங்கள படைகளிற்கு ஏற்பட்ட இழப்புக்கள் அதன் இராணுவமும் கடற்படையும் போரில் செயலிழந்து வருவதை காட்டுவதுடன் பன்னிப்பிட்டியா குண்டு வெடிப்பும் அரசின் இராணுவ மேலாதிக்க கனவை முற்றாக தகர்த்துள்ளது.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.